PDA

View Full Version : அரங்கேற வேண்டும்!



theepa
24-06-2007, 02:07 AM
அரங்கேற வேண்டும்!

துள்ளித் துள்ளி ஓடும் நதியே
துளி பட்டு வாடுது என் விழியே
காரணத்தை நீ அறிவாயோ
காற்றை நீ தூது சொல்வாயோ
வீசும் காற்றின் மோகம் கொண்டு
விண்ணையும் நான் மண்ணில் கொண்டு
காதல் தூது சொல்லி விட்டேன்
என் ஆசையைக் கூறி விட்டேன்
மாலையிடும் மன்னன் யாறோ...?
காற்றுக் கூட அறியாதே
அவனைத் தாங்கும் பூமி நானே
என்னைக் காத்திடும் வானம் அவனே
என் நினைவுகள் நிஜமாக வேண்டும்
என் காதல் அறங்கேற வேண்டும்.....!!!!



அன்புடன்,
லதுஜா

இளசு
24-06-2007, 02:31 AM
காற்றும் அறியாத காதலனை
காலம் அறிந்திருக்கும் − தக்க
காலம் கனிந்துவரும்போது நினைத்த
கோலம் அமைந்துவிடும்..

அரங்கேற்றக் கவிதைக்கு வாழ்த்தும்
அடுத்தடுத்த கவிதைகளுக்கு வரவேற்பும்..

இன்னும் பலப்பலக் கருக்களில் கவிதைகள், பிற ஆக்கங்கள் தர
வாழ்த்துகள் லதுஜா!

மனோஜ்
24-06-2007, 09:16 AM
என் நினைவுகள் நிஜமாக வேண்டும்
என் காதல் அறங்கேற வேண்டும்.....!!!!
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
தொடர..........

விகடன்
24-06-2007, 09:35 AM
காதல் அரங்கேறும்.


பாராட்டுக்கள் கவிதைக்கு.

ஷீ-நிசி
24-06-2007, 09:55 AM
காதல் அரங்கேறும்.. கையில் வந்து சேரும்... கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

அமரன்
24-06-2007, 02:22 PM
லதுஜாவின் கவிதையும் அதற்கு இளசுஅண்ணன் கொடுத்த பின்னூட்டக் கவிதையும் அழகு. லதுஜா உங்கள் கவிதையைப் படிக்கும்போது ஒரு தென்றல் வருடுவதுபோன்ற உணர்வு. மென்மையான வரிகள் நதியை அழைத்து காற்றை சாட்சி வைத்து வானத்தை தூதனுப்பிய உங்கள் கவிதைக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.

அன்புரசிகன்
24-06-2007, 02:27 PM
அவன் எல்லையற்றவன். (வானம்)
நீங்கள் பொறுமையுடையவள். (பூமி)

பொறுப்பார் வானத்தையும் ஆள்வார். (உங்களுக்காக புதுசு :D)

சூரியன்
24-06-2007, 03:07 PM
அருமையான கவிதை லதுஜா

theepa
25-06-2007, 01:08 AM
வணக்கம் நன்பர்களே எனது கவிதைக்கு இவ்வளவு வரவேற்பூ கிடைக்கும் என்டு நான் எதிர் பார்க்கவே இல்லை உங்கல் அனைவருக்கும் எனது அன்புனிரைந்த பணிவான நன்றிகல்

theepa
25-06-2007, 01:44 AM
நட்பு


உடலின் அழகைப் பார்த்து வராது நட்பு
சொந்தம் பந்தம் பார்த்து வராது நட்பு
ஏலை பணக்காரன் பார்த்து வராது நட்பு
ஜாதி மதம் பார்த்து வராது நட்பு
அந்தஸ்து பார்த்து வராது நட்பு
ஒரு ஆத்மாவின் இன்னிசை கீதம் நட்பு......
நட்பின் இலக்கணம் என்றும் ஒரு நட்பு தான்....!!!!

aren
25-06-2007, 02:01 AM
அருமையான கவிதைகள் தீபா அவர்களே. அறங்கேற்றக் கவிதையில் காதலையும் பின்னர் நட்பையும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

ஒவ்வொரு கவிதையையும் தனியாக பதியுங்கள், உங்கள் அனைத்து கவிதைகளையும் படிக்க வசதியாக இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

வசீகரன்
25-06-2007, 04:46 AM
மிக அருமையான கவிதை... ஒவ்வொரு வரிகலும் இதயத்தை தொட்டு செல்கிரது....!

அரசன்
25-06-2007, 05:55 AM
காதல் அரங்கேறும், காலம் கூடிவரும்போது
காத்திரு கண்மணியே!

லதுஜாவின் கவிதை வரிகள் அவ்வளவும் இனிமை. வாழ்த்துக்கள் லதுஜா!