PDA

View Full Version : கண்மூடா(து) காதல்!.

ஓவியன்
23-06-2007, 07:13 PM
வாழ்க்கைச் சதுரங்கத்தில்
நான் மாட்டி முளிக்கையில்
ஒளிக்கீற்றாய் வந்த
என் சதுரங்க ராணியே!

இன்று நீயின்றி
நான் நாடுகடத்தப்பட்ட
முன்னாள் ராஜாவாக!

உன்
ஞாபகங்களை மட்டும்
அனிச்சையாகச் சுமந்து,

என் கவிதைகளுக்கு
உன்னைக் கருவாக்கி,
உன் நினைவுகளுக்குள்
வலிகளையும் பூட்டி

ஒற்றையடிப்
பாதையில் ஒற்றையாக
மண்மூடினாலும்
கண்மூடா விதையாக
என் காதலைச்
சுமந்துகொண்டு

மீண்டும் ஒரு
வசந்தத்திற்காகக்
காத்திருக்கிறேன்
நீ கொண்டு சென்ற
வர்ணங்களுடன் மீள
வருவாயென்று.

அமரன்
23-06-2007, 07:42 PM
சதுரங்கம், விதை,ஓவியம் உவமானக்கள் பிரமாதம். காதல் கவிதைகளில் உமது புலமை அதிகம் வெளிப்படுகின்றது ஓவியன். வழ்த்துகள். மண்மூடினாலும் கண்மூடா விதைகள். வரிகளை ரசித்தேன்

ஓவியன்
23-06-2007, 07:45 PM
சதுரங்கம், விதை,ஓவியம் உவமானக்கள் பிரமாதம். காதல் கவிதைகளில் உமது புலமை அதிகம் வெளிப்படுகின்றது ஓவியன். வழ்த்துகள். மண்மூடினாலும் கண்மூடா விதைகள். வரிகளை ரசித்தேன்

நன்றிகள் அமர்!

தேடல்கள் தானே கவிதைகள், இந்த தேடல் எனக்குள்ளே நானே தேடியது. :D

இளசு
24-06-2007, 02:47 AM
மண்மூடினாலும் கீறி முளத்தால்தான் விதை..
இல்லையெனில் அது வெறும் தாவரச்சதை..!

தொலைதூரம் வந்தாலும்
நினைவாலயம் நின்றால்தான் காதல்!

அழகுத் தமிழில் காதல் ஆலயத்தில்
ஓதிய கவிதை அருமை!
ஓவியன் தூரிகையின் வளமை!

வாழ்த்துகள் ஓவியனுக்கு!
வர்ணங்கள் மங்காமல் வந்து சேர்வதற்கு!

ஓவியன்
24-06-2007, 03:26 AM
மண்மூடினாலும் கீறி முளத்தால்தான் விதை..
இல்லையெனில் அது வெறும் தாவரச்சதை..!

தொலைதூரம் வந்தாலும்
நினைவாலயம் நின்றால்தான் காதல்!

அழகுத் தமிழில் காதல் ஆலயத்தில்
ஓதிய கவிதை அருமை!
ஓவியன் தூரிகையின் வளமை!

வாழ்த்துகள் ஓவியனுக்கு!
வர்ணங்கள் மங்காமல் வந்து சேர்வதற்கு!

ஆகா!, மிக்க நன்றிகள் அண்ணா!:icon_08:

வர்ணம்
மங்காமலும்
எங்கும் இடையே
தங்காமலும்
வரவேண்டுமென்பதே
என்
அங்கலாய்ப்பும்
அவாவும்..

விகடன்
24-06-2007, 03:32 AM
மன்னிக்க வேண்டும் ஓவியன்.
எல்லோருக்கும் இது ஒர் கவிதை. ஆதலால் சகலரும் தங்களது சொற் பிரயோகங்களை பாராட்டுகின்றனர். ஆனால் இது தங்களின் புலம்பல் என்று தெரிந்து கொண்டும் என்னால் எப்படி???

இருந்தாலும் மனச் சுமைகளை அப்படியே கவிதை வடிவில் வடித்திருக்கிறீர்கள். உங்களின் கவிதை எழுதும் புலமைக்கு பாராட்டுக்கள்.

ஓவியன்
24-06-2007, 03:36 AM

அது தானே ஏற்கனவே சொல்லி இருந்தேன் அது எனக்குள் தேடியதென்று.......:icon_hmm:

நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு........

அன்புரசிகன்
24-06-2007, 06:43 AM
இன்னொரு வர்ணமற்ற ஓவியமா இது?

வரிகள் நன்றாகவே உள்ளன. ஆனாலும் இந்த தருணத்தில் பாராட்டுவதிலும் வாழ்த்து தெரிவிப்பதே மேல். வாழ்த்துக்கள்.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றால்; நீங்கள் வைத்திருக்கும் ஓவியங்கள் உண்மை என்றால்... உங்கள் அங்கலாய்ப்பு நிஙைவேறும்.

திறமை சாலியிலும் புத்திசாலிக்கே மவுசு ஜாஸ்தி. .தை நான் சொல்லி புரியும் அவசியம் உங்களுக்கு புரியவேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் வாழ்க்கை வர்ணமயமாக ஜொலிக்க வாழ்த்துகிறேன் அன்பரே...

ஷீ-நிசி
24-06-2007, 07:53 AM
மிக அருமையாக உள்ளது ஓவியன்.. வாழ்த்துக்கள்!

ஓவியன்
24-06-2007, 12:22 PM
மிக அருமையாக உள்ளது ஓவியன்.. வாழ்த்துக்கள்!

மிக்க நன்றிகள் ஷீ!

அமரன்
24-06-2007, 01:58 PM
மண்மூடினாலும்
கண்மூடா விதையாக
என் காதலைச்
சுமந்துகொண்டு

.

மண்மூடினாலும் கண்மூடா
விதை நீ
நினைவுகள் கீறிட
காதலை எருவாக்கி
அவளைக் கருவாக்கி
கவி விதைக்கிறாய்.

ஓவியன்
24-06-2007, 04:50 PM
மண்மூடினாலும் கண்மூடா
விதை நீ
நினைவுகள் கீறிட
காதலை எருவாக்கி
அவளைக் கருவாக்கி
கவி விதைக்கிறாய்.

அமர் இந்தக் கவி எனக்காகவா?

அப்படினா மிக்க நன்றி!:nature-smiley-008:

அமரன்
24-06-2007, 04:51 PM
அமர் இந்தக் கவி எனக்காகவா?

அப்படினா மிக்க நன்றி!:nature-smiley-008:

உமக்கே உமக்காக நான் கிறுக்கியது..:music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010:

ஓவியன்
24-06-2007, 05:00 PM
உமக்கே உமக்காக நான் கிறுக்கியது..:music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010:

மிக்க நன்றி அமர்!!! :nature-smiley-007:

theepa
26-06-2007, 12:46 AM
ஓவியன் உங்கல் கவிதை மிகவிம் அழகாகவிம் அற்புதமாகவிம் உல்லது தொடர்ந்து என்னும் கண்கலுக்கு அழகான கவிதைகல் தர வேண்டும் நன்பரே

ஓவியன்
26-06-2007, 03:27 AM
ஓவியன் உங்கல் கவிதை மிகவிம் அழகாகவிம் அற்புதமாகவிம் உல்லது தொடர்ந்து என்னும் கண்கலுக்கு அழகான கவிதைகல் தர வேண்டும் நன்பரே

நன்றிகள் தீபா!

உங்கள், ஆர்வத்திற்குத் தலை வணங்குகிறேன்.