PDA

View Full Version : புரிகிறது!!!.



ஓவியன்
23-06-2007, 07:09 PM
புரியாது உன்
கோபமும் கொஞ்சலும்,
புரியாது உன்
தமிழும் ஆங்கிலமும்**,
புரியாது உன்
வேகமும் விவேகமும்
புரியாது உன்
அன்பும் ஆளுமையும்
இப்படிப் பல
புரியாதுகளிருந்தாலும்
புரிகிறது நீ என்னைக்
காதலிக்கவில்லையென்று.

**தமிழ் அவளுக்குத் தெரியாது, அவள் ஆங்கிலம் எனக்குப் புரியாது :D .

அமரன்
23-06-2007, 07:26 PM
முதலில் கவிதைக்கு பாராட்டுகள் ஓவியன். சிரிக்கவைத்தது கவிதை. இனி....


உனக்குப் புரியவில்லை
பூ மலரும்போது
சத்தம் கேட்பதில்லை
புரிந்திருந்தால் சொல்வாயா
ஆங்கிலம் புரியவில்லை
கிலமாகியது காதலென்று
எனக்குப் புரிகிறது
காதல் புரியவில்லை
உனக்கு....

ஓவியன்
23-06-2007, 07:30 PM
புரிந்திருந்தால்
என்னை
புரிந்திருப்பாய்
என் காதலையும்.

இனியவள்
23-06-2007, 07:32 PM
புரிந்திருந்தால்
என்னை
புரிந்திருப்பாய்
என் காதலையும்.

புரிந்தும் புரியாமலும் இருப்பது தான் காதலோ

கவிகள் அருமை வாழ்த்துக்கள்

ஓவியன்
23-06-2007, 07:35 PM
புரிந்தும் புரியாமலும் இருப்பது தான் காதலோ

கவிகள் அருமை வாழ்த்துக்கள்

புரிதலும்
புரியாமலிருப்பதும்
தெரிதலும்
தெரியாமலிருப்பதும்
காதலின் இலக்கணங்களோ?

நன்றி இனியவள்.

அமரன்
23-06-2007, 07:38 PM
புரிந்திருந்தால்
என்னை
புரிந்திருப்பாய்
என் காதலையும்.

பிரியும்போதே
காதல்
புரியப்படுகிறதாம்
என்னைப் பிரிந்து
காதலைப்புரி
காதல் புரி

ஓவியன்
23-06-2007, 07:41 PM
புரிதலும்
புரிந்து கொள்ளலும்
காதலிற்கு உரம்.

பிரிதலும் பின்னர்
சேர்தலும்
காதலிற்கு வரம்.

அமரன்
23-06-2007, 07:47 PM
புரிதலும்
புரிந்து கொள்ளலும்
காதலிற்கு உரம்.

பிரிதலும் பின்னர்
சேர்தலும்
காதலிற்கு வரம்.


வரம்தந்த காதல்
உரமில்லை
செப்பிய காதல்
சொதப்பியது
சிப்புகிறேன்
ரம்(யா)

ஓவியன்
23-06-2007, 07:54 PM
புரியாமல்
பிரிந்த ரம்யாவால்,
பிரியாமல் இருக்கிறேன்
பீரையும் ரம்மையும்.

ஓவியன்
24-06-2007, 06:48 AM
உன்னிடமிருந்த
புரிதலும் பிரிந்ததால்,
நீயும் என்னைப்
புரியாமல் பிரிந்துவிட்டாய்.

சூரியன்
24-06-2007, 07:15 AM
நல்ல காமெடியான கவிதை

இளசு
24-06-2007, 08:05 AM
முன்னர் ராம்பால், நண்பன் என்னும் ஜீவநதிகள்..
பின்னும் எண்ணற்ற கவி நதிகள்..
இன்னும் ஆதவா, தாமரை, ராகவன், ஷீ−நிசி, லெனின், ஓவியா, மோகன் ப்ரியன் உள்ளிட்ட புது வெள்ளம்..

இன்று மன்றமெங்கும் சொல்லமுதத்தால் நிறைத்து
இருக்கும் பக்கமெல்லாம் இனிக்க வைக்கும்
நால்நதிகள்.. தமிழ் நைல்நதிகள்
ஓவியன், அமரன், அக்னி, அன்புரசிகன்..


மழை நீராகி, ஆவியாகி, மேகமாகி
மன்றமண்மேல் பெய்துகொண்டே இருக்கும்
புவியியலான கவியியல் எனக்கும்
புரிகிறது..

இந்த மன்றத்தில் வற்றாமல் ஓடிவரும்
தமிழ் வெள்ளத்தில் திளைக்கின்றேன்!

நன்றிகள் நதிகள் அனைத்துக்கும்...

ஷீ-நிசி
24-06-2007, 08:08 AM
மழை நீராகி, ஆவியாகி, மேகமாகி
மன்றமண்மேல் பெய்துகொண்டே இருக்கும்
புவியியலான கவியியல் எனக்கும்
புரிகிறது..

அருமை, புவியியல், கவியியல்....


−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

நன்றாக உள்ளது ஓவியரே!

ஓவியன்
24-06-2007, 08:47 AM
முன்னர் ராம்பால், நண்பன் என்னும் ஜீவநதிகள்..
பின்னும் எண்ணற்ற கவி நதிகள்..
இன்னும் ஆதவா, தாமரை, ராகவன், ஷீ−நிசி, லெனின், ஓவியா, மோகன் ப்ரியன் உள்ளிட்ட புது வெள்ளம்..

இன்று மன்றமெங்கும் சொல்லமுதத்தால் நிறைத்து
இருக்கும் பக்கமெல்லாம் இனிக்க வைக்கும்
நால்நதிகள்.. தமிழ் நைல்நதிகள்
ஓவியன், அமரன், அக்னி, அன்புரசிகன்..


மழை நீராகி, ஆவியாகி, மேகமாகி
மன்றமண்மேல் பெய்துகொண்டே இருக்கும்
புவியியலான கவியியல் எனக்கும்
புரிகிறது..

இந்த மன்றத்தில் வற்றாமல் ஓடிவரும்
தமிழ் வெள்ளத்தில் திளைக்கின்றேன்!

நன்றிகள் நதிகள் அனைத்துக்கும்...
ஒரு திரியில் ஓவியன் நீங்களும் கவி எழுதலாமென்று முதலில் ஊக்கப்படுத்தியது தாங்கள் தான், பின்னர் ஆதவனின் கவிதை எழுதுவது எப்படி என்ற திரியில் ஆதவனும் ஷீயும் கவி எழுதத் தூண்டினார்கள், பின்னர் பூ அண்ணா எனது 2000 வது பதிவின் பின் மன்றத்தில் தனி அடையாளத்தைப் பதிக்குமாறு ஆர்வமூட்டினார், உடனே என் முதல் கவியைப் பதித்தேன்.

ஆயினும் வசனங்கள் சரளமாக வரவில்லை தட்டித் தடுமாறிய என்னை செல்வன் அண்ணா செதுக்கத் தொடங்கினார், அவர் செதுக்கலில் கவிச்சமரில் அவருடன் களமாடியபின் எனக்குள்ளும் ஒரு நம்பிக்கை என்னாலும் முடியுமென்று, இப்போது தொடர்ந்து முயன்று கொண்டிருக்கின்றேன்.

இத்தனை மன்ற உறவுகளைத் தந்து என்னையும் கவி எழுத வைத்து அழகு பார்கிறது இந்த மன்றம். இந்த உறவுகளைத் தந்த மன்றத்திற்கு நான் என்றுமே கடமைப் பட்டவனாகி விட்டேன்.

ஓவியன்
24-06-2007, 09:15 AM
நல்ல காமெடியான கவிதை

ஹீ!

சீரிஸா எழுதப் போய் இப்படிக் காமெடி ஆகி விட்டது.:icon_hmm:

ஓவியன்
24-06-2007, 09:15 AM
நன்றாக உள்ளது ஓவியரே!

உங்கள் அன்புக்கு நன்றிகள் ஷீ!

மனோஜ்
24-06-2007, 09:20 AM
புரிதல் என்பது இதயத்தின் பாஷை
அதை கவிதையாக வடித்தது அருமை ஓவியரே

ஓவியன்
24-06-2007, 09:42 AM
புரிதல் என்பது இதயத்தின் பாஷை
அதை கவிதையாக வடித்தது அருமை ஓவியரே

இதயங்கள்
புரிந்து கொண்டால்
இதயங்களுக்குள்
பிரி(ள)வு இல்லை.

நன்றி மனோஜ்!

விகடன்
24-06-2007, 09:55 AM
கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. அனைவரும் பலகாலமாக உழைத்திருப்பது நன்கு புலனாகிறது.
கவிதை எழுதுவதற்கல்ல!!
கவிதையின் கருவை பெறுவதற்கு!!!

மேலும்,


இது
மேதைகள் சமரிடும்
கவிஷேத்திரம்.

நன்றி,
வணக்கம்

ஓவியன்
24-06-2007, 09:59 AM
கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. அனைவரும் பலகாலமாக உழைத்திருப்பது நன்கு புலனாகிறது.
கவிதை எழுதுவதற்கல்ல!!
கவிதையின் கருவை பெறுவதற்கு!!!


ஹீ!,ஹீ!

நன்றி நண்பா!

அப்படியெல்லாம் இல்லங்கோ, சும்மா வார்த்தைப் பிரயோகங்களுக்காக எழுதப்பட்டவை அவை.:spudnikbackflip:

இளசு
24-06-2007, 10:00 AM
இத்தனை மன்ற உறவுகளைத் தந்து என்னையும் கவி எழுத வைத்து அழகு பார்கிறது இந்த மன்றம். இந்த உறவுகளைத் தந்த மன்றத்திற்கு நான் என்றுமே கடமைப் பட்டவனாகி விட்டேன்.


இமயம் முழுதும் பனி சுமந்தாலும்
இரண்டோ மூன்றோதான் ஜீவநதிகள்..

மன்ற தமிழ்நைல்நதிகள் நான்கிற்கும்
நாளும் நீந்தும் ரசிகனின் வாழ்த்தும் நன்றியும்..

ஓவியன்
24-06-2007, 10:05 AM
இமயம் முழுதும் பனி சுமந்தாலும்
இரண்டோ மூன்றோதான் ஜீவநதிகள்..

மன்ற தமிழ்நைல்நதிகள் நான்கிற்கும்
நாளும் நீந்தும் ரசிகனின் வாழ்த்தும் நன்றியும்..

மிக்க நன்றிகள் அண்ணா உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்.

அன்புரசிகன்
24-06-2007, 10:06 AM
இன்று மன்றமெங்கும் சொல்லமுதத்தால் நிறைத்து
இருக்கும் பக்கமெல்லாம் இனிக்க வைக்கும்
நால்நதிகள்.. தமிழ் நைல்நதிகள்
ஓவியன், அமரன், அக்னி, அன்புரசிகன்..


எனக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் என்னைப்பற்றிக்கதைத்துள்ளீர்கள். நான் இப்பகுதிக்கு வருவது குறைவு. இருந்தாலும் உங்கள் உவமானத்திற்கு நன்றிகள் அண்ணா.

இளசு
24-06-2007, 10:10 AM
எனக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் என்னைப்பற்றிக்கதைத்துள்ளீர்கள். நான் இப்பகுதிக்கு வருவது குறைவு. இருந்தாலும் உங்கள் உவமானத்திற்கு நன்றிகள் அண்ணா.


சிலர் கவிதை எழுதுவார்கள்
சிலர் எழுதுவது எல்லாமே கவிதையாய் இருக்கும்.

மிக ரசிக்க வைக்கும் பின்னூட்டம் இடுவதில்
அன்பு ரசிகன் குழுவினரின் ரசிகன் நான்!

அன்புரசிகன்
24-06-2007, 10:15 AM
நானே ரசிகன்.
நீங்கள் எனது ரசிகனா?
உங்களின் ரசனைகளுக்கு நான் ரசிகன்.

theepa
26-06-2007, 01:15 AM
முதலில் உங்கல் கவிதைக்கு வல்த்துக்கல்
நன்பரே காதல் என்றாலே ஒரு புரியாத புதிர் என்ரு நான் புரிந்து விட்டேன் அதை நீங்கலும் புரிந்துகொண்டல் நல்லது

ஓவியன்
26-06-2007, 06:42 PM
முதலில் உங்கல் கவிதைக்கு வல்த்துக்கல்
நன்பரே காதல் என்றாலே ஒரு புரியாத புதிர் என்ரு நான் புரிந்து விட்டேன் அதை நீங்கலும் புரிந்துகொண்டல் நல்லது

நன்றி தீபா உங்களது ஆர்வத்திற்கும் ஆக்கத்திற்கும்.