PDA

View Full Version : இணையம் வழி பணம் பண்ணநிரன்
22-06-2007, 02:48 PM
பண டியூப்

இணையம் வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.யூட༢r />?யூப் (Youtube) எனும் வீடியோக்களை வழங்கும் தளம் பற்றி இணைய உலகில் தெரியாதோர் இருக்கமுடியாது.அதை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக இங்கே ஒரு சுவாசரஸ்ய தளம் உருவாக்கி இருக்கிறார்கள்.அது மணிடியூப்.காம் (Moneytube.com).இதில் அங்கம் வகிப்போர் பணம் பண்ணலாமாம். எப்படி?.இதில் மெம்பராகி பின், பிற வீடியோ தளங்களிலுள்ள (Like YouTube, Google Videos, Break etc) சூடான வீடியோக்களுக்கு சுட்டி கொடுக்க வேண்டும்.அந்த சுட்டி வழி வரும் டாலர்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி உங்களுக்கு பகுத்து வழங்கப்படுமாம்.இன்றைய நிலையில் User Earnings : $758.12 என்கிறது இத்தளம்.இது பற்றி மேலும் அறிய கீழே சொடுக்குங்கள்.
http://www.moneytube.com/?do=faq


இன்னொரு தளம் metacafe.com. இத்தளத்தில் நீங்கள் ஏற்றும் வீடியோ 20,000 தடவை பார்வையிடப்பட்டால் $100 கிடைக்கும்.2 மில்லியன் தடவை பார்வையிடப்பட்டால் $10,000 கிடைக்கும்.இப்படி Reel Stunts என்பவர் இதுவரை அதிகபடசமாக $26,757 சம்பாதித்துள்ளாராம்.

சுட்டிபையன்
22-06-2007, 02:50 PM
நண்பரே இந்த தகவல் முன்னமே இங்கே உள்ளது

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10326

மனோஜ்
22-06-2007, 02:53 PM
சில காலங்கள் ஆனதும் இவை மறந்து விடுவார்கள் நண்பரே
நாமும் பணம் வரும என்று வாய்பெளந்து இருப்பொம் ஆனால் கடைசியல் காலவதிஆகிவிட்டது என்பார்கள்
இது இனைய வாடிக்கைதான்

சூரியன்
22-06-2007, 02:54 PM
சில காலங்கள் ஆனதும் இவை மறந்து விடுவார்கள் நண்பரே
நாமும் பணம் வரும என்று வாய்பெளந்து இருப்பொம் ஆனால் கடைசியல் காலவதிஆகிவிட்டது என்பார்கள்
இது இனைய வாடிக்கைதான்

சரியாக சொன்னீர்

நிரன்
22-06-2007, 02:58 PM
ம்ம்ம்

ஓவியா
22-06-2007, 03:24 PM
நணபர்களே இந்த பதிவு, ஒரு வரிகூட மாறாமல் இருவரால் இருமுறை இங்கு பதியப்ட்டுள்ளது, ஆனல் இருவருமே இதை எங்கிருந்து எடுத்து இங்கு பதிதுள்ளீர்கள் என்று சுட்டி கொடுக்கவில்லையே.

மன்ற விதியை கடைப்பிடிங்கள்.

நன்றி.


பின் குறிப்பு
சஞ்சய்க்கு அக்கவிடமிருந்து செல்லமாக ஒரு குட்டு. இது சரியா :violent-smiley-010: இது சரியா.....சரி செய்பா.

விகடன்
23-06-2007, 03:43 PM
இப்படிப்பட்ட விளாம்பரங்களால் கண்ட கண்ட வீடியோக்களெல்லாம் பதிவேற்றப்படுகின்றன. எல்லை மீறிய வீடியோக்களும் உருவாக ஊக்குவிக்கின்றன.

மயூ
26-06-2007, 03:08 PM
இதெல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்...
கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கும் வழி இந்த உலகில் இல்லை.. குறுக்கு வழியைத் தவிர.. அது என்னைப் போன்ற ஜென்டில் மானுக்குச் சரிவராது!!!

ஓவியா
26-06-2007, 03:15 PM
இதெல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்...
கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கும் வழி இந்த உலகில் இல்லை.. குறுக்கு வழியைத் தவிர.. அது என்னைப் போன்ற ஜென்டில் மானுக்குச் சரிவராது!!!

நெத்தியடி பின்னூட்டம்.


ஜென்டில் மானுக்கு வாழ்த்துக்கள். :verkleidung021:

மயூ
26-06-2007, 03:18 PM
நெத்தியடி பின்னூட்டம்.


ஜென்டில் மானுக்கு வாழ்த்துக்கள். :verkleidung021:

மானால்தான் எல்லா இடத்திலையும் பிரச்சனை... நான் பெண்களை இதில் உள்குத்து வைத்து சாடவில்லை...!!!!!:sport-smiley-019:

ஓவியா
26-06-2007, 03:21 PM
இதுவும் தூள்.

sarcharan
29-06-2007, 05:10 PM
http://adbux.org இதுவும் ஒன்று

மயூ
30-06-2007, 02:51 AM
கூகள் அட்சென்ஸ் உங்கள் தளத்தில் விளம்பரம் இட்டு பணம் சம்பாதிக்கலாம்.. ஆனாலும் அதில் அவ்வளவாக உழைக்க முடியாது... கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில் என்னுடைய வலைப்பதிவால் 21 டாலரே எடுக்க முடிந்தது.