PDA

View Full Version : பண டியூப் (money tube)



சுட்டிபையன்
22-06-2007, 02:09 PM
பண டியூப்

இணையம் வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.யூடியூப் (Youtube) எனும் வீடியோக்களை வழங்கும் தளம் பற்றி இணைய உலகில் தெரியாதோர் இருக்கமுடியாது.அதை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக இங்கே ஒரு சுவாசரஸ்ய தளம் உருவாக்கி இருக்கிறார்கள்.அது மணிடியூப்.காம் (Moneytube.com).இதில் அங்கம் வகிப்போர் பணம் பண்ணலாமாம். எப்படி?.இதில் மெம்பராகி பின், பிற வீடியோ தளங்களிலுள்ள (Like YouTube, Google Videos, Break etc) சூடான வீடியோக்களுக்கு சுட்டி கொடுக்க வேண்டும்.அந்த சுட்டி வழி வரும் டாலர்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி உங்களுக்கு பகுத்து வழங்கப்படுமாம்.இன்றைய நிலையில் User Earnings : $758.12 என்கிறது இத்தளம்.இது பற்றி மேலும் அறிய கீழே சொடுக்குங்கள்.
http://www.moneytube.com/?do=faq

இன்னொரு தளம் metacafe.com. இத்தளத்தில் நீங்கள் ஏற்றும் வீடியோ 20,000 தடவை பார்வையிடப்பட்டால் $100 கிடைக்கும்.2 மில்லியன் தடவை பார்வையிடப்பட்டால் $10,000 கிடைக்கும்.

இப்படி Reel Stunts என்பவர் இதுவரை அதிகபடசமாக $26,757 சம்பாதித்துள்ளாராம்.

ஓவியா
22-06-2007, 03:25 PM
நணபர்களே இந்த பதிவு, ஒரு வரிகூட மாறாமல் இருவரால் இருமுறை இங்கு பதியப்ட்டுள்ளது, ஆனல் இருவருமே இதை எங்கிருந்து எடுத்து இங்கு பதிதுள்ளீர்கள் என்று சுட்டி கொடுக்கவில்லையே.

மன்ற விதியை கடைப்பிடிங்கள்.

நன்றி.


பின் குறிப்பு
சஞ்சய்க்கு அக்கவிடமிருந்து செல்லமாக ஒரு குட்டு. சரி செய்பா.

சத்ரியன்
22-06-2007, 03:29 PM
இதை எங்கே எடுத்தீர்கள் அதற்கான சுட்டியை தாருங்கள்

நிரன்
22-06-2007, 03:30 PM
எமது ஈழமக்களின் www.yarl.com/forum3 இல் இருந்து

ஓவியா
22-06-2007, 03:34 PM
எமது ஈழமக்களின் www.yarl.com/forum3 இல் இருந்து

நிரஞ்சன்,
தாங்கள் மன்றதிற்க்கு மிகவும் புதிவர், அதனால் இதுபோல் நடப்பது சகஜம், வருந்த வேண்டாம் மீண்டும் இத்தவறு நடக்காமல் பார்த்துக் கொளுங்கள்.

உங்கள் சேவை மன்றத்திற்க்கு எப்பொழுதும் தேவை. சந்தோசமாக உலாவுங்கள்.

எப்பொழுதும் இணைந்திருங்கள்.

அன்புடம்
ஓவியா.

நிரன்
22-06-2007, 03:39 PM
நீங்கள் தளத்தை விளம்பர படுத்த வேண்டாம் என்பதால் தான் நான் தளத்தை குறிப்பிடவில்லை இதை விட வேறு ஒன்றும் எனக்கு இல்லை

ஓவியா
22-06-2007, 03:46 PM
நீங்கள் தளத்தை விளம்பர படுத்த வேண்டாம் என்பதால் தான் நான் தளத்தை குறிப்பிடவில்லை இதை விட வேறு ஒன்றும் எனக்கு இல்லை

நிரஞ்சன் அவர்களே,
மற்றவர்களின் பதிப்பை காப்பி செய்து இங்கு பதிக்கும் பொழுது எழுதியவருக்கு சேரவேண்டிய நன்றியை கீலே குறிப்பிட வேண்டும்.

உங்களுடைய பதிப்பை மற்றவர் 'நன்றி நிரஞ்சன்' என்று போடாமல் எங்கு பதித்தாலும் அது அவருடைய பதிப்பாகிவிடும்.


நன்றி