PDA

View Full Version : மொபைலில் யூடியூப்



சுட்டிபையன்
22-06-2007, 02:06 PM
இனிமேல் நீங்கள் தினமும் சென்று பார்க்கும் Youtube தளத்தினை உங்கள் கைப்பேசியிலேயே கண்டு களிக்கலாம். அத்தோடு உங்களுக்கு விரும்பிய வீடியோக்களை 3g வடிவில் தரவிறக்கியும் கொள்ளளலாம். முகவரி : http://m.youtube.com. உடனே அவசரப்பட்டு செல்லாமல் உங்கள் data plan இனை unlimited ஆக மாற்றி விட்டு செல்லுங்கள் இல்லையேல் வீட்டை விற்றுத்தான் கைப்பேசி பில் கட்ட வேண்டி வரும். இதனை அவர்களே அவர்களது முற்பக்கத்தில் சொல்கின்றார்கள்.


http://bp3.blogger.com/_g-dxetjOqY0/RnTUw0R2ELI/AAAAAAAAAag/n9gkABA4i5M/s1600-h/youtubemobile.png

சூரியன்
22-06-2007, 02:10 PM
உபயோகமான தகவல் சுட்டி

ஓவியா
22-06-2007, 06:35 PM
நல்ல தகவல்.

நன்றி சஞ்சய்.

********************************************************************
வீட்டை காப்பாற்றிய தம்பி வாழ்க.

அக்னி
22-06-2007, 06:40 PM
தகவலையும் தந்து.., வெருட்டியும் வைக்கலாமோ சுட்டி..?
ஆமாம் வீடு இல்லாவிட்டால் துணிந்து இறங்கலாமா தரவிறக்க...

தகவலுக்கு நன்றி...

பென்ஸ்
22-06-2007, 06:41 PM
நல்ல தகவல்.

நன்றி சஞ்சய்.

********************************************************************
வீட்டை காப்பாற்றிய தம்பி வாழ்க.

சுட்டி தகவலை அப்படியே வெட்டி ஒட்டாமல் , வாசித்ததை உன் நடையில் அழகாக, நகைசுவையாக கொடுக்கிறயோ.. பாராட்டுகள்....

நண்பர்களே செய்திகள் கொடுப்பவர்கள் தகவலை இவ்வாறு கொடுக்கலாமே...