PDA

View Full Version : வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்&



நிரன்
22-06-2007, 02:00 PM
ஜெர்மனி சாதனை
ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது.

பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும்.

அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும்.

இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஆனால் இதற்கும் தாத்தா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறது. அதன் செயல்திறன் விநாடிக்கு 367 டெராஃபிளாப்.




--------------------

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடா முயற்சியினால்தான்.

நட்புடன்
நிரஞ்சன்......

சத்ரியன்
22-06-2007, 03:27 PM
அற்புதமான தகவல் நிரஞ்சன்

மனோஜ்
22-06-2007, 03:33 PM
சிற்ப்பான தகவல்

ஓவியா
22-06-2007, 06:31 PM
நல்ல தகவல் நிரஞ்சன்.

நன்றி.

**********************************************
எழுதி படைத்தவர்களுக்கும் நன்றி.

அக்னி
22-06-2007, 06:33 PM
அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடா முயற்சியினால்தான்.

உங்கள் தகவலை விட சிறப்பாயுள்ளது.. இந்த வரிகள்...
தகவலுக்கும், சிறப்புவரிகளுக்கும் நன்றி!

ஓவியா
22-06-2007, 06:46 PM
அட ஆமாம் அக்கினி, நானும் இதை கவனித்தேன்.

ரஞ்சன், தங்களுக்கு நல்ல எழுத்து வளம் இருக்கின்றது, உங்கள் பதிவுகளை இங்கே அள்ளி வீசுங்கள். நன்றி.

சுபன்
23-06-2007, 12:54 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6259

இதை சென்ற ஆண்டு பங்குனி மாதமே சொல்லி இருந்தேன்! :)

நிரன்
30-06-2007, 11:39 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6259

இதை சென்ற ஆண்டு பங்குனி மாதமே சொல்லி இருந்தேன்! :)

பளசாக இருந்தாலும் பாதி வாசிட்டீங்கள்தானே

namsec
30-06-2007, 11:49 AM
இதற்கும் தாத்தா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறது. அதன் செயல்திறன் விநாடிக்கு 367 டெராஃபிளாப்.


அப்பாட 3,67,000 இதுதான் அசுரவேகம் தாங்கள் இதைப்பற்றி விளக்கியிருக்களாம்