PDA

View Full Version : இலங்கை செல்கிறார் த்ரிஷா



இணைய நண்பன்
22-06-2007, 01:18 PM
நாளை ஒரு நல்லெண்ண நோக்கத்தில் த்ரிஷா இலங்கை செல்கிறார் . . கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பரிவு காட்டி வருபவர் த்ரிஷா. இவர் நேரடியாகவும், தனது ரசிகர் மன்றம் வாயிலாகவும் பல்வேறு உதவிகளைஇக்குழந்தைகளுக்கு செய்து வருகிறார். வாழ்வை தொலைத்த கேன்சர் நோயாளிகளுக்கு இந்த உதவிகள்தான் வசந்தம்!

தனது பிறந்தநாள் அன்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தார் த்ரிஷா. அங்குள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் அளித்தார். அவர்களுடன் உணவருந்தினார். பிறகு அக்குழந்தைகளுடன் அமர்ந்து 'கில்லி' திரைப்படத்தை ரசித்தார்.

தங்களது பிறந்த நாளை கேன்சர் பாதித்த குழந்தைகளுடன் செலவிட பெரிய மனது வேண்டும். இலங்கையில் கேன்சர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இலங்கை செல்கிறார் த்ரிஷா. நாளை அங்கு கிளம்பிச் செல்லும் அவர் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்திக்கிறார்.

அக்னி
22-06-2007, 01:24 PM
புற்றுநோய் மருத்துவமனையை (மகரகம), சிறிய வயதில், இலங்கையில் பார்வையிட்டிருக்கின்றேன்...
மனம் கனத்துப்போகும்... அழுத்தங்கள்...
வயது வித்தியாசமின்றி மரணத்தை எதிர்பார்த்திருக்கும் அந்த மனிதர்களின்
விம்பங்கள், மறக்கமுடியாதவை...
யாராக இருந்தாலும், இப்படியானவர்களுக்கு, ஒரு நாளேனும் ஆறுதல் அளிப்பவர்கள், மேன்மை பெறவேண்டும்.

ஓவியா
22-06-2007, 05:42 PM
நல்ல சேவை, பாராட்ட வேண்டும்.

சும்மா விளம்பரதிற்க்காக இருக்ககூடாது.

பலர் இது போல் பல விசயங்களை திரையின் பின்னும் இலைமறைக்கா போல் செய்து கொண்டுதான் இருகின்றனர். ஆனால் யாருக்கும் சொல்வதில்லை.

அமரன்
22-06-2007, 08:55 PM
இலங்கை அணியின் தற்போதைய தலைவர் ஜயவர்த்தனவும் கான்சர் விழிப்புணர்வு குழுவுக்கு ஆதரவாக இருக்கின்றார். அவரது தனிப்பட்ட பணத்திலி நோயாளிகளுக்கு உதவி வருவதுடன் விளம்பரதார மூலமும் உதவுகின்றார். அவருடன் இணைந்து திரிஷாவும் சேவை புரிவது மகிழ்ச்சியைத் தருகின்றது. பாராட்டப்படவேண்டியவர்கள்

ஓவியன்
22-06-2007, 08:58 PM
உண்மைதான் மகேலா ஜெயவர்த்தனா தன் சகோதரர் ஒருவரை புற்று நோயால் இழந்தவர், இன்று குழந்தைகளுக்காக கட்டப்படும் புற்று நோய் வைத்திய சாலையின் கட்டடப் பணிகளில் முக்கிய பங்கெடுத்து வருகிறார்.

திரிசாவின் நற் பணி சிறக்கட்டும்.

அமரன்
22-06-2007, 09:01 PM
2002/2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககிண்ணப்போட்டியின் போது ஒரு நிறுவனம்அவர் அடிக்கும் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் ஆயிரம் ரூபாய் என கான்சர் விழிப்புணர்வுக்கு கொடுப்பது என ஒப்பந்தமிட்டது. ஆனால் அந்த தொடரில் ஜெயவர்தன மொத்தமாக 21 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். 21000 ரூபாவே கிடைத்தது.

ஓவியன்
22-06-2007, 09:06 PM
புற்றுநோய் மருத்துவமனையை (மகரகம), சிறிய வயதில், இலங்கையில் பார்வையிட்டிருக்கின்றேன்...
மனம் கனத்துப்போகும்... அழுத்தங்கள்...
வயது வித்தியாசமின்றி மரணத்தை எதிர்பார்த்திருக்கும் அந்த மனிதர்களின்
விம்பங்கள், மறக்கமுடியாதவை...
யாராக இருந்தாலும், இப்படியானவர்களுக்கு, ஒரு நாளேனும் ஆறுதல் அளிப்பவர்கள், மேன்மை பெறவேண்டும்.

உண்மைதான் அக்னி!

அந்த வைத்திய சாலையின் சிறுவர் பகுதியப் பார்த்தால் கல்லிலும் நீர் கசியும். ஆண்டவன் இவ்வளவு கொடுரமானவனா?, இந்த பிஞ்சுகளைக் கூட விட்டு வைக்கவில்லயே என்று நான் அங்கலாய்த்துள்ளேன்.

gragavan
22-06-2007, 09:14 PM
இறைவன் அனைவருக்கும் அமைதியை வழங்கட்டும். த்ரிஷாவுக்கு நன்றி. உதவும் மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

Mano.G.
23-06-2007, 01:23 AM
மனித நேயம்

தன்னலம் கருதா சேவை
இயன்றவரை செய்ய ஆசை

எதிர்பார்ப்புகளுடன் செய்யும் தொண்டு
நிச்சயம் ஏமாற்றம் உண்டு

பேருக்கும் புகழுக்கும் ஆசை?
தொண்டு செய்வதில் புண்ணியம் இல்லை

தொடரட்டும் உனது மனித நேய சேவை
திரிஷா, உன்னால் பலர் சிலர் சிறிது நேரம்
நோவை மறப்பர்

வாழ்த்துக்கள்


மனோ.ஜி

aren
23-06-2007, 04:36 AM
இந்த நோக்கம் நிச்சயம் அனைவராலும் வரவேற்க்கபடவேண்டும். இதுமாதிரி பிரபலமானவர்கள் சிலர் செய்தாலே அது மற்றவர்களை ஈர்த்து இந்த மாதிரியான நல்ல காரியங்களை செய்ய வழியமைக்கும்.

இது ஒரு விளம்பர ஸ்டண்டாக இல்லாமல் இருந்தால் நல்லது.

நன்றி வணக்கம்
ஆரென்

Gobalan
24-06-2007, 09:42 AM
திரிஷா நல்லதொரு எண்ணத்துடன் கென்சருடன் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு ஊக்குவிக்க இலங்கை செல்வது வரவேர்க்கதக்கது. சின்ன வயதானாலும் நற்பணி செய்யும் எண்ணம் வந்தது இந்த பெண்ணின் நல்ல சிந்தனையை காண்பிக்கிறது. திரிஷாவிர்க்கு என் வாழ்த்துக்கள். நன்றி.

இணைய நண்பன்
29-06-2007, 07:21 PM
ஜூன் 29:

இலங்கையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதற்காக விபா&சமர்பணம் என்ற அமைப்பு சார்பில் வித்யா, மாலதி ஆகியோர் இணைந்து கொழும்பில் நட்சத்திர இரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

அதில் சிம்ரன், த்ரிஷா பங்கேற்றனர். தாரிகா பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி, பின்னணி பாடகிகள் ஸ்ரீலேகா, சுசித்ரா, ஹரிச்சரண் ஆகியோர் பங்கேற்ற பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற த்ரிஷா மேடையில் பேசினார்.

விழா நடந்த கீழ் தள அரங்கிலும் மற்றும் பால்கனியிலும் 5 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். நிகழ்ச்சி மூலம் திரண்ட நிதியை கேன்சர் குழந்தைகள் அமைப்புக்கு வழங்குவதற்காக சிம்ரன், த்ரிஷா ஜோடியாக மேடைக்கு வந்தனர்.

அப்போது பால்கனியில் இருந்த ரசிகர்கள் சிலர் ஆர்வமிகுதியால் கீழே குதித்து மேடையை நோக்கி பாய்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் ரசிகர்களை மடக்கி பிடித்து கட்டுப்படுத்தினார்கள். அதன்பிறகு அரங்கில் அமைதி ஏற்பட்டது.

அமரன்
29-06-2007, 07:32 PM
இக்ராம் சிம்ரனும் இலங்கையிலா? இருவரும் ஒரே மேடைய்ல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். இருவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.
அன்புடன்

இணைய நண்பன்
29-06-2007, 07:36 PM
இக்ராம் சிம்ரனும் இலங்கையிலா? இருவரும் ஒரே மேடைய்ல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். இருவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.
அன்புடன்

ஆமாம்.இருவரும் ஒரே மேடையில் ஓர் நல்ல சேவையை செய்திருக்கிறார்கள்.பாராட்டவேண்டிய விடயம்.அதே போல நீங்கள் சொன்னது போல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.