PDA

View Full Version : அணுக்கதிர் வீச்சு அபாயம்



namsec
22-06-2007, 08:47 AM
அணுக்கதிர் வீச்சு அபாயம்

அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் மூன்று கோணங்களில்
பிடிக்கப்பட்ட சூரியனின் படங்களை வெளியிட்டது. நாஸா அனுப்பிய விண்வெளி ஆய்வுக் கலம்.ஒன்று சூரியனை பல பரிமாணங்களில் படம் எடுத்து அனுப்பி வைத்தது. சூரியனில் ஏற்படும் காந்தப் புலக் கிளர்வு, காந்தப் புயல் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு இந்தப் படங்கள் பேருதவியாக இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன. காந்தப் புயல்களும் மனநோய்களும் என்ற தலைப்பில் கடந்த இதழில் வெளியான கட்டுரையை மெய்ப்பிக்கும் வகையில் இந்தச் செய்தி அமைந்திருக்கின்றது.

மேலும், இதுபோன்ற காந்தப் புயல்களினால் ஏற்படும் கதிர்வீச்சுகள் மனிதர்களுக்கு பலவித
பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற அபாயத்தைக் கொண்டிருக்கின்றன என்றும் விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். புற்றுநோய், கண்நோய், தோல்நோய் என்று பலவிதமான நோய்கள் இந்தக் கதிர் வீச்சினால் ஏற்படக் கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் கதிர்வீச்சு வளையங்கள் இருக்கின்றன. இதற்கு வான் ஆலன் கதிர் வீச்சு வளையம் (Van Allen Radiation Belt) என்று பெயர். இதில் எலக்ட்ரான்களும் புரோட்டான்களும் அதிக அளவில் உள்ளன. அடுத்ததாக புரோட்டான்கள், ஆல்பா துகள்கள், கனமான அணுக்கருக்கள், அடர்ந்த சூரியக் கிளர்வுகள்.

மூன்றாவதாக அண்டவெளியில் இருந்து பூமியைத் தாக்குகின்ற பிரபஞ்சக் கதிர் வீச்சுகள்.
(Cosmic Radiation). இந்த மூன்று வகையான கதிர்வீச்சுகள் புவி மண்டலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி மனித உயிர்களுக்கு பாதகத்தை உண்டு பண்ணுகின்றன. இயற்கையே உண்டு பண்ணி மனித இனத்திற்கு எதிராக ஏவுகின்ற இந்தக் கதிர்வீச்சுகளுக்கு அப்பால் மனிதன் செய்கின்ற காரியங்களாலும் கதிர்வீச்சு அபாயம் உருவாகின்றது என்று கூறப்படுகிறது. ஆய்வுக்காக பூமியைச் சுற்றிவரும் துணைக் கோளங்களில் இருந்து ஏற்படும் பாதிப்புகள், விண்வெளியை சுற்றிவரும் கலங்களுக்கு உந்து சக்தியைத் தரும் அணுக்கரு உலைகள் ஆகியவை உண்டு பண்ணும் பாதிப்புகள் புவி மண்டலத்திற்கு அபாயத்தைக் கொண்டு வருபவையாகவே இருக்கின்றன.

இவற்றில், விண்வெளி வீரர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் கதிர்வீச்சுகளும் உள்ளன. இதன் அளவை ராட் (RAD) என்று விஞ்ஞானிகள் சுருக்கமாக அழைக்கிறார்கள். இதன் விரிவாக்கம் Radiation Absorbed Dose (கதிர் வீச்சு உறிஞ்சு அளவு) என்பதாகும். அதே நேரத்தில் கதிர்வீச்சுகளின் அளவு மாறுபடுவதால் அதை அளக்கப் பயன்படும் வகைகளும் மாறுபடுகின்றன. இந்த அளவு முறைகளில் ரெம் (REM) என்பதும் ஒன்றாகும். 100 கிராம் எர்க் (ERG) ஆற்றலை வெளியேற்றுகின்ற கதிர்வீச்சின் அளவைக் குறிப்பது ராட் ஆகும். 93 கிராம் எர்க் ஆற்றல் அணுக்கதிர் வீச்சின் அளவைக் குறிப்பது ரெம் ஆகும்.

ஒரு விண்வெளி வீரரின் வயதைப் பொறுத்து கதிர்வீச்சு தாக்குதலின் தாங்கும் சக்தி
நிர்ணயிக்கப்படுகிறது. 1973ஆம் ஆண்டின் ஆய்வுப்படி ஒரு விண்வெளி வீரர் 150 ரெம்
கதிர்வீச்சுக்கு உள்ளாகிறார் என்று தெரியவந்துள்ளது. இயற்கையே பல வேளைகளில் நமக்கு எதிராக இருக்கின்றபோது மனிதர்களும் இயற்கையோடு சேர்ந்து கதிர்வீச்சு அபாயம் ஏற்படக் காரணமாக இருக்கலாமா. சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்க வேண்டாமா?

நன்றி : வணக்கம் மலேசியா.காம்

சூரியன்
22-06-2007, 09:30 AM
பயனுள்ள தகவல் நன்றி namsec