PDA

View Full Version : கீரையின் மருத்துவ குணங்கள்



namsec
22-06-2007, 08:34 AM
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_mint-plant.jpg


வல்லாரை(Centella asiatica): நினைவாற்றலை அதிகமாக்கும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கண்ணி: இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை(Fenugreek): இருமல்குணமாகும்
புதினா கீரை(Mint): மசக்கை மயக்கம்,வாந்தி குணமாகும்.
அறுகீரை : சளிக்காய்ச்சல்,டைபாய்டு குணமாகும்

sujeendran
23-06-2007, 11:34 AM
அருமையான பதிவு. நன்றி நன்பரே!

அமரன்
23-06-2007, 01:06 PM
நல்ல பதிவு சித்தரே. ஆனால் இவற்றை வாங்கும்போது கவனமாக இருக்கவேண்டும். சுத்தம் முக்கியமல்லவா?

ஜோய்ஸ்
23-06-2007, 02:20 PM
மிகவும் நன்றி சித்தரே.தங்கள் பதிவு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

சரி செங்கீரையில் என்ன இருக்கிறதாம்.முழுவதும் மனிதனின் செரிமானத்துக்கு தகுந்த வரையில் இரும்புச் சத்து இருக்கிறதாம்.அப்படியா?