PDA

View Full Version : அரிசியல்....



அமரன்
21-06-2007, 09:07 PM
பொங்கு பொங்கு என்றனர்
பொங்கினால்
அரிசியால் அடிக்கிறனர்

ஓவியன்
21-06-2007, 09:13 PM
பொங்கும் போதே
சரியாகப் பொங்கியிருப்பின்,
அரிசியிலும் அரசியல்
நடத்தியிருப்பார்களா?

பென்ஸ்
21-06-2007, 11:27 PM
பொங்கு பொங்கு என்றனர்
பொங்கினால்
அரிசியால் அடிக்கிறனர்


பொங்குவதேல்லாம்
தற்கொலை படையாய்
மூட்டிய தீயையும் அனைத்து
தன்னையும் அழித்து...

அமரன்
22-06-2007, 06:19 AM
நன்றி ஓவியன் மற்றும் பென்ஸண்ணா இந்தக்கவிதையில் மூன்று விடயங்கள் அடங்கி இருக்கிறது. முதாலாவது இது

அடிவயிற்றில் தீவைத்து
பொங்கு பொங்கு என்க
பொங்கியதும்
அரிசியால் அடித்தனர்
பொங்கலோ பொங்கல்

ananthu123
22-06-2007, 06:39 AM
ஏழ்மையை எகத்தாளமிட்ட இரண்டுரூபாய் அரிசி
பசிப்பிணியை பணியவைத்த பாம்ரனின் அரிசி

அமரன்
22-06-2007, 06:54 AM
ஏழ்மையை எகத்தாளமிட்ட இரண்டுரூபாய் அரிசி
பசிப்பிணியை பணியவைத்த பாம்ரனின் அரிசி

அடிவயிற்றில் ஈரத்துணி
கொதிக்கும் நெஞ்சுடன் பொங்க
அரியால் அடிக்கிறனர்
அரசியல்வாதிகள்

ஓவியா
22-06-2007, 04:58 PM
அரசியல்வாதியின்
வாய்க்கரிசியும்
பொன்னி, பாசுமதியாம்

எழையின் பொங்கலும்
இரெண்டு ரூபாய்
நொய்யரிசியாம்

− கலி முத்திபோச்சாம்.

அக்னி
22-06-2007, 05:08 PM
அரிசி இரண்டு ரூபாய்...
நன்று...
பானை இருவது ரூபாய்...
பரவாயில்லை...
எரிபொருள் இருநூறு ரூபாய்...
முன்னரே பரவாயில்லை...

ஓவியா
22-06-2007, 05:17 PM
அக்கினி, எரிபொருள் விலையேற்றத்தை கச்சிதமாக கவிதையில் சொரு(று)விட்டீக, படித்து சிரித்தேன், அஹஹ்ஹஹ.
************************************************************************

அனைவரின் அரிசி சிந்தனையும் அருமை.

பாராட்டுக்கள்

அக்னி
22-06-2007, 05:23 PM
ஒரு பொருளை இலவசமாவும் கொடுப்பார்கள்...
ஆனால், மற்றவற்றின் விலை எல்லாம் அற்லாண்டிஸ் ஏறி எங்கேயோ போய்விடும்...
அரசியல் விளையாட்டுக்களில் பாதிக்கப்படுவது என்னமோ, நடுத்தர வர்க்க மனிதர்கள்தான்...

அமரன்
22-06-2007, 08:35 PM
பொங்கென்றனர்
அநீதியை கண்டு
பொங்கையில்
போட்டனர்
வாயில் அரசி

அக்னி
22-06-2007, 08:37 PM
பொங்கென்றனர்
அநீதியை கண்டு
பொங்கையில்
போட்டனர்
வாயில் அரசி

உயிருடன் பிணமாக்கப் போவதை உனர்த்துவதற்காகவோ...?

அமரன்
22-06-2007, 08:39 PM
உயிருடன் பிணமாக்கப் போவதை உனர்த்துவதற்காகவோ...?

அக்னி அது ஒரு அரசியல் தொண்டனின் பார்வையில் படித்துப்பாருங்கள்.

ஓவியன்
22-06-2007, 08:41 PM
அரிசி இரண்டு ரூபாய்...
நன்று...
பானை இருவது ரூபாய்...
பரவாயில்லை...
எரிபொருள் இருநூறு ரூபாய்...
முன்னரே பரவாயில்லை...

அருமை அக்னி!:icon_good:

இரசித்தேன் மனமகிழ்ந்து.

பரிசாக ஐஸ் கிரீம் இந்தாங்கோ :food-smiley-011:

அமரன்
22-06-2007, 08:42 PM
பொங்கும் போதே
சரியாகப் பொங்கியிருப்பின்,
அரிசியிலும் அரசியல்
நடத்தியிருப்பார்களா?

தலைவனின் சொல்லால்
பொங்கிய தொண்டன்
வாயிலும் அரிசி
வாழ்க்கையிலும் அரிசி

ஓவியன்
22-06-2007, 08:44 PM
இந்த
ஒரு படி
அரிசிக்காகத் தானே
நித்தமும் ஏங்குகின்றன
ஏழைகளின்
உலைகளும் உதிரங்களும்.

அமரன்
22-06-2007, 08:46 PM
படித்தவன்னும்
கையேந்துகிறான்
படியளக்கும்
ஆண்டவனாய்
ஏழை விவசாயி

ஓவியன்
22-06-2007, 08:46 PM
தெருவோரக் குழந்தைகள்
ஏங்கின பசியால்,
அநியாயமாகப் போகும்
வாய்க்கரிசியைப் பார்த்து.

அமரன்
22-06-2007, 08:48 PM
பட்டிணி கிடந்து
செத்தவன் வாயில்
அரிசி

ஓவியன்
22-06-2007, 08:50 PM
தலைவனின் சொல்லால்
பொங்கிய தொண்டன்
வாயிலும் அரிசி
வாழ்க்கையிலும் அரிசி

தலைவனுக்காகப்
பொங்கிய தொண்டனிடம்
இல்லை அரிசி,
தன் குழந்தைகளுக்காகப்
பொங்க!

ஓவியன்
22-06-2007, 08:52 PM
பட்டிணி கிடந்து
செத்தவன் வாயில்
அரிசி

அமர் அருமையான முரண் கவிதை!

இதை பாரதி அண்ணா தொடக்கிய முரண் கவிதைத் திரியிலும் பதியுங்கள்.

நன்றாக இருக்கும்.:icon_good:

அமரன்
22-06-2007, 08:55 PM
அமர் அருமையான முரண் கவிதை!

இதை பாரதி அண்ணா தொடக்கிய முரண் கவிதைத் திரியிலும் பதியுங்கள்.

நன்றாக இருக்கும்.:icon_good:

அப்படியே செய்கின்றேன் ஓவியன்.நன்றி

அக்னி
22-06-2007, 11:46 PM
அக்னி அது ஒரு அரசியல் தொண்டனின் பார்வையில் படித்துப்பாருங்கள்.
அட... அருமை....


அருமை அக்னி!:icon_good:

இரசித்தேன் மனமகிழ்ந்து.

பரிசாக ஐஸ் கிரீம் இந்தாங்கோ :food-smiley-011:

ஐஸ்கீறீம்... நன்றி அதற்காக உங்களுக்கு, :food-smiley-015:

ஓவியா
23-06-2007, 12:35 AM
அரசியல்வாதியின்
வாய்க்கரிசியும்
பொன்னி, பாசுமதியாம்

எழையின் பொங்கலும்
இரெண்டு ரூபாய்
நொய்யரிசியாம்

− கலி முத்திபோச்சாம்.

நானும் இப்படி ஒரு கவிதை எழுதினேன், எனக்கு ஐஸ்கிரீம் இல்லையா???
************************************************************************************************************

வாழ்த்தவும் (அச்சதையும்) ஒரு பிடி
வாரிக் கொடுக்கவும் (வாய்க்கரிசியும்) ஒரு பிடி
− அரிசி

ஓவியன்
23-06-2007, 12:40 AM
நானும் இப்படி ஒரு கவிதை எழுதினேன், எனக்கு ஐஸ்கிரீம் இல்லையா???

உங்களுக்கு ஜலதோசமில்லையா அது தான் தரவில்லை. :D

ஓவியன்
23-06-2007, 12:42 AM
ஒரு பிடி
அரிசிக்காக
கையேந்திய
பிச்சைக்காரியை
ஒரு பிடி பிடித்த
வீட்டுக்காரி!,
ஒரு பிடி
சோறு போட்டாள்
தன் வீட்டு
அல்சேசன் நாய்க்கு.

அமரன்
23-06-2007, 07:49 AM
என்ன நண்பர்களே வார்த்தைகளில் அனல் பறக்குது. ஆகட்டும் ஆகட்டும்.

ஓவியா
23-06-2007, 01:01 PM
என்ன நண்பர்களே வார்த்தைகளில் அனல் பறக்குது. ஆகட்டும் ஆகட்டும்.

தீயில் வெந்த (கருகிய)
அரிசி − பூமிக்கு
உரமானது
வெண்ணீல் வெந்த
அரிசி − மனிதனுக்கு
உணவானது.

ஓவியன்
23-06-2007, 06:18 PM
அரசிக்குத்
தெரியுமா?
அரிசியின்
விலை.

அமரன்
23-06-2007, 06:30 PM
ரேஷன் கடையில்
துட்டுக்கு அரிசி
தேர்தலின் போது
ஓட்டுக்கு அரிசி
அரிசிக்குத் தெரியாது
அதன் விலை

ஷீ-நிசி
24-06-2007, 01:39 PM
பொங்கு பொங்கு என்றனர்
பொங்கினால்
அரிசியால் அடிக்கிறனர்

கொஞ்சம் விளக்க முடியுமா அமரன்???

அமரன்
24-06-2007, 01:47 PM
கொஞ்சம் விளக்க முடியுமா அமரன்???

பொங்கலன்று நெருப்பு வைத்து பால் பொஙவைப்பர். பால் பொங்கும்போது பொங்கலோ பொங்கலென்பர். அதேநேரம் அரிசியைபோட்டுவிடுவர்.

ஒருசாரார் அரசியல் அவலங்களைகண்டு பொங்கி எழச்சொல்வர். பொஙெ எழமுன்னே அரிசி விலைகுறைத்து அரசியல் செய்வர்.

இல்லையெனில் கொன்று வாய்க்கரிசி போடுவர்.


கருத்து தெளிவுபடுத்தி கவிதை எழுதத் தவறிவிட்டேன் என்பது பதித்த பின்னர் புரிந்தது. ஓவியன் பின்னூட்டமிட்டதால் மாற்றாது விட்டுவிட்டேன்.

ஷீ-நிசி
24-06-2007, 01:56 PM
ஒருசாரார் அரசியல் அவலங்களைகண்டு பொங்கி எழச்சொல்வர். பொஙெ எழமுன்னே அரிசி விலைகுறைத்து அரசியல் செய்வர்.


இந்த வரிகளை அனுமானித்தேன்.. இதுதானோவென்று தயக்கம் ஏற்பட்டது...


பொங்க பானையை வைத்து மக்களின் மனசையும் அதிகார வர்க்கத்தின் தந்திரத்தினையும் இணைத்து மூன்றே வரிகளில் செதுக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள் அமரன்.

அன்புரசிகன்
24-06-2007, 01:58 PM
அரிசி பொங்கினால் உணவு
மனம் பொங்கினால் உணர்வு
அலை பொங்கினால் சுனாமி
நான் பொங்கினால் நீ காலி. :D

அமரன்
24-06-2007, 02:03 PM
நிஷீ கருத்துகளைச்சொல்வதற்கு தயக்கம் ஏன். நீங்கள் சொல்லும் கருத்துகளே எனது அடுத்த படைப்புகளின் கரு. தயங்காது சொல்லுங்கள். நிறைவிருந்தால் பாராட்டுங்கள். குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நன்றி.
****************************************************************************************************
நன்ரி அன்பு ரசிகன். தயவுசெய்து பொங்கிடாதீங்க. நான் காலியாகிடுவேன். உங்கள் கவிதையில் ஒரு கரு கிடைத்தது அதை வைத்து ஒரு கிறுக்கல்.
************************************************************************************************
அலை பொங்கியது
காலி காலியானது
பொங்க அரியின்றி
உணர்வுகள் பொங்க
மக்கள் வீதிகளில்...

அன்புரசிகன்
24-06-2007, 02:10 PM
அரியின் பொங்கல் குடியில்
புலியின் பொங்கல் குகையில்

நரியின் பொங்கல் நாலு சுவற்றிளுன்
நாம் பொங்குவோமா அவர்களின் வாயினுள்.

அமரன்
24-06-2007, 02:13 PM
நரித்தனம் செய்யும்
அரியாசனங்கள்
புலியெனப் பாயும்
பொங்கிடும் மக்கள்
காண்பது எப்போது..

அன்புரசிகன்
24-06-2007, 02:20 PM
பொங்கிக்கொண்டிருப்பது அரி
பதுங்கி பொங்குவது புலி

சூரியன்
24-06-2007, 03:10 PM
அருமையான கவிதை

அமரன்
24-06-2007, 03:15 PM
அருமையான கவிதை

நன்றி சூரியன். ஒரு சின்ன திருத்தம் கவிதை அல்ல கவிதைகள்.

ஓவியன்
24-06-2007, 05:08 PM
நரித்தனம் செய்யும்
அரியாசனங்கள்
புலியெனப் பாயும்
பொங்கிடும் மக்கள்
காண்பது எப்போது..

அரியிலிருந்தாலும்
நரி நரிதான்.
பதுங்கி இருந்தாலும்
புலி புலி தான்.

அரசியல் செய்ததால்
நரி அரியணையில்
அதே அரசியலால்
புலி பதுங்குகிறது
பாய்வதற்காக.

அமரன்
24-06-2007, 05:31 PM
தூங்கும்போதும்
தூங்காதிருப்பது
அறிவு
புலி நரியாகிறது
தேசத்தில்...

ஓவியன்
24-06-2007, 05:37 PM
அரசியல்
நரிகளுக்கு
அரியணைக்கும்
தேவைப்படுகிறது
அரிசி!.
அர(ரி)சியல் செய்ய!!!.

அமரன்
24-06-2007, 05:42 PM
எடை போடத்தெரிந்த
அரசியல் நரிகள்
அரியிலும் செய்கிறன
அரசியல்...

ஓவியன்
24-06-2007, 05:55 PM
அரசியல் சந்தையில்
அரிமட்டுமல்ல
அரசியும்
விலை போவாள்
தேவையென்றால்.

அமரன்
24-06-2007, 05:57 PM
அரசியல் சந்தையில்
அரசிவிலை போகையில்
சேர்ந்தே போகிறது
அரசியல் புனிதம்..

ஓவியன்
24-06-2007, 06:08 PM
அரசியல் புனிதம்
அது
அரசியலில் புதினம்.

அமரன்
24-06-2007, 06:13 PM
தினம் தினம் மாறும்
புதின அரசியலில்
புனிதம் தேடியது
என் குற்றமே..

ஓவியன்
25-06-2007, 07:17 PM
புனிதம்
தேடி எங்கெங்கோ
போனேன்!
புதினமாகக்
கிடைத்தது
மலிவு விலையில்
ஒரு கிலோ அரிசி!.

அமரன்
25-06-2007, 07:21 PM
புதினமாக அரிசி
தரமாக கிடைக்க
கிடைத்த புதினாவோ
புனிதமாக இல்லை
சுயேட்சையாய் அரிசி...

ஓவியன்
25-06-2007, 07:27 PM
தரிசு நிலத்தில்
விளைந்ததால்
அரிசி என்ன
சந்தைக்குத் தான்
வாராதோ?
கஞ்சிக்குத் தன்
ஆகாதோ?

lolluvathiyar
26-06-2007, 11:39 AM
அடேங்கப்ப அரிசி வைத்து
எல்லாரும் சோரு தான் ஆக்குவாங்க*
சிலர் பொங்கல் பொங்குங்க*
சிலரோ கஞ்சி மட்டும் வடிப்பாங்க*

ஆனாக் இங்க* என்னடானா கவிதை கலக்கராங்க*

ஓவியன்
26-06-2007, 11:43 AM
அடேங்கப்ப அரிசி வைத்து
எல்லாரும் சோரு தான் ஆக்குவாங்க*
சிலர் பொங்கல் பொங்குங்க*
சிலரோ கஞ்சி மட்டும் வடிப்பாங்க*

ஆனாக் இங்க* என்னடானா கவிதை கலக்கராங்க*

நன்றி நண்பரே!

அமர் தொடக்கிய திரி இது!, நான் ஒன்று பதிக்க அவர் ஒன்று பதிக்க என்று ஆரோக்கியமான சொல்லாடல்கள் தொடர இங்கே கவிதைகள் குவிந்துவிட்டன.

ஓவியா
26-06-2007, 01:06 PM
நேற்று இரவு நான் இங்கு ஒரு கவிதை படைத்தேன்?? எங்கே அதை காணவில்லையே!!!

மேற்ப்பார்வையாளர்களே கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்.

அமரன்
26-06-2007, 01:14 PM
நேற்று இரவு நான் இங்கு ஒரு கவிதை படைத்தேன்?? எங்கே அதை காணவில்லையே!!!

மேற்ப்பார்வையாளர்களே கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்.
விடுங்க அக்கா யாராவது சாப்பிட்டு இருப்பாங்க.

ஓவியா
26-06-2007, 01:32 PM
சரி தானமா கொடுக்கலாம்,

ஆனாலும் அப்படியே அட்மீன் டீம் நீக்கியிருந்தால் எனக்கு தனி மடல் போடனுமே!!! அதுவும் வரலே!!! இங்க என்னதான் நடக்குது!!!.

ஓவியன்
21-04-2008, 06:59 AM
அரிசியலில் மட்டுமில்லை
அரசியலிலும் தான்
- வண்டுகளின் தொல்லை...!!

எண்ணம்
21-04-2008, 08:03 PM
அரிசியில் கல் கலப்பது பார்த்திருக்கிறேன்
அரிசியில் அரசியலும் கலக்கப்படுகிறதே

ஓவியா
21-04-2008, 08:51 PM
அரிசியில் கல்லை கலந்தால்
தராசில் எடை கூடும் - என்
உணவில் அரிசியை கலந்தால்
உடலில் எடை கூடும் :D:D:D


எதிர்கால மாமீசமலை
- ஓவிகுட்டி

அமரன்
21-04-2008, 09:10 PM
ம்ம்... பழைய காலம் திரும்பிய தோற்றம்.:)


அரிசியலில் மட்டுமில்லை
அரசியலிலும் தான்
- வண்டுகளின் தொல்லை...!!

அரசியலில் இரட்டைவேடம்.
காரணம் வண்டுகள்!!