PDA

View Full Version : பூ வேடமிட்ட புயலும்.. காதல் சிறகுகளும்...rambal
20-05-2003, 04:39 PM
பூ வேடமிட்ட புயலும்.. சிறகுகளும்...

மன்றத்தின் காதல் கவிஞர் என்றால் அது பூவாகத்தான் இருக்கும்.. எழுதிய கவிதைகளில் முக்கால் பாகம்
காதல்.. காதல்.. மேலும் காதல்.. காதல் தந்த சிறகுகளாக..
அப்புறம் சமூகம்.. அதுவும் அதிக பட்ச கோபமாகவும்.. அளவுக்கதிகமான சாடலுடனும்.. பூ வேடமிட்ட புயலாக
எளிமையான கவிதைகள்.. மனவலி நிறைந்த வார்த்தைகள்.. நிதர்சண உண்மைகள்.. இதுதான் பூ...
மறுக்க முடியா உண்மைகள் நிறைந்த எளிமையான எதார்த்த கவிதைகளுக்குச்
சொந்தக் காரர் இந்தக் கவிஞர்...
சில இடங்களில் இவரது சாடல் முகத்தில் அறைந்த உண்மைகளாகவும்..
அனுபவித்து ரசிக்கக்கூடிய காதலாகவும் இருக்கும்.. (உண்மை வாழ்வில் கூட காதல் திருமணம் அல்லவா..)
இவர் கவிதைகள் நேச்சுரலிசம் எனும் வகையைச் சார்ந்தது..

முதலில் இவரது கவிதைகளில் நான் ரசித்த வரிகள்...


மனதில் சம்மனமிட்டு
அமர்ந்துள்ள சர்வாதிகாரி-
சலனங்கள் ...

உளறல்கள்!!


பிஞ்சிலேயே பழுக்கும்..
மொட்டிலேயே பூக்குமா?!!..
(அவ்வாறேயாயினும் அதன் பெயர் என்ன?!!)
(மீண்டும்?!!!) காதலித்து விடு!!!


கால்வயிறை நிரப்பிக் கொள்கிறோம்..
விறகாய் கலப்பை...
அரிசியாய் விதைநெல்!!!
விவசாயி!!!


முதலில் இவரது காதல் சார்ந்த கவிதைகளைப் பற்றி ஒரு அலசல்...


உன்னில் என்னை
தொலைத்துவிட்டு
என்னில் என்னைத் தேடும்
வித்தியாச வியாதி..

காதல்..காதல்..காதல் !!!...
***********
அறிவிலாதவனையும் அறிஞனாக்குகிறாய்..
அறிஞனையும் பித்தனாக்குவாயாமே?!!

காதல் கொடிதா ..
காதலி கொடிதா ??!!
**********
காதலே உனக்கொரு
கோரிக்கை..
இம்சிக்காத இரவொன்றை
இரவலாய் வாங்கி வா..
இரக்கமில்லா பிரம்மனிடம்!!!
************
இருபதில் இனித்தாய்..
காதல்...
நாற்பதில் மருத்துவன் சொன்னான்..
இனிப்பை சேர்க்காதேவென..
அவருக்கெப்படி தெரியும்
நமக்குள் கசந்து போன காதல்!!!
**************

உளறல்கள்!!!

எது காதல்? காதல் கொடிதா? இல்லை காதலி கொடிதா? இப்படியாக காதலின் பல பரிமாணாங்களை பல வித்யாசமான
கோணங்களில் பார்க்கும் இவரது காதல் கவிதைகள் உயிரோட்டமானவை.. மேலும், சில கவிதைகளில் இருந்து..

உன் தாக்கத்தால் உணர்வுகளில்
உயிரியல் மாற்றம்..
என் மூச்சுக் காற்றே நீ வெளியே வந்தால்தான்
நான் உயிர் வாழ்வேன்!!!..

வினாடியில் வந்த அந்த உணர்வுதான்
காதல் என சொல்லாமல் சொல்லியது
என் உணர்வுச் செல்கள்!!!
இதுதான் (இதுவும்) காதலா?!!!

இதுதான் காதலா? என அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் இதுவும் காதலாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்
தொணிக்கும் வரிகள்..
<span style='color:blue'>
எப்போதாவது எதிர்ப்படும்
தருணத்தில் எதையோ
சொல்ல வந்து அவஸ்தையாய் ..

"இந்தக் குறிப்புகள் எல்லாம்
எனக்குப் புரியாமல் இல்லை"

பெண்ணே இப்போதுதான் நீ காதலிக்கும்
தகுதியடைந்துள்ளாய்....

ஆகவே..
இனக்கவர்ச்சியை காதலென
குழம்பி உன் கண்ணுக்கு தெரியாத
வாழ்க்கையைத் தேடாதே..

நமக்குள் பூக்கத்துடிக்கும்
பூவை நசுக்க முயலாதே...
</span>
(மீண்டும்?!!) காதலித்துவிடு!!!

இவ்வாறாக காதலை சிலாகித்தாலும் இந்தக் கவிதையில் இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வேறுபாடுகள்.. எது காதல்? என்ற விளக்கங்களை மறைமுகமாக (சிதம்பர ரகசியம்தானே காதல்..) அழகாய் எடுத்துரைத்துள்ளார்...

இயற்கை வயல்வெளியில்
மாராப்பு மடிப்பில் மறைத்து
மறுபடியும் மறுபடியும் படித்து
இனித்த சுகம்...

இயந்திர இ-மெயிலில் இல்லை..

கம்ப்யூட்டர் காலத்தைதானே வென்றது..
காதலையுமா?!!!

கிராமத்துக் காதலியின் ஏக்கம்..

காதல் கடிதங்கள் படிக்கும் சுகங்கள் கணிணியின் இ-மெயிலில் இல்லை என்றும்..
அந்த சுகங்களுக்காக வேதனைப் பட்டு ஒரு கிராமத்துக் காதலி கண்ணீர் வடிப்பது போலும்..
இந்தக் கவிதை கொஞ்சம் நிதர்சண உண்மைகளில் அழிந்து போன காதல் சுகங்களின் ஏக்கத்தின் வெளிப்பாடாய் அருமையாய் வடிக்கப் பட்டுள்ளது..

கணவன் - மனைவியென்ற
ஒரு பட்டம்தான் கொடுக்கப்பட்டது..
தோழன் - தோழி..
காதலன் - காதலி.. என பல பட்டங்களை
பலரால் சொல்லவைத்த பெருமை
யாரைச்சேரும்?!!
............
..............
................
ஆமாம் நம்மில்
உடல் யார்...
உயிர் யார்??!!

காதல்.. காதல்...

காதலித்துத் திருமணாம் செய்து கொண்ட இரு ஆத்மாக்களின் ராகம் இந்தக் கவிதை.. செம்புலப் பெயல் போல் கலந்த பின்
நம்மில் உடல் யார்? உயிர் யார்? காதலின் சத்திய வாக்குகள்.. அனுபவித்து எழுதியது இந்த வார்த்தைகளில் அப்பட்டமாய்
மறைக்க முடியா கண்ணாடி அறையாய் தெரிகிறது..

இப்போதெல்லாம்
என் பலம் இருமடங்காய்..
என்னில்(லும்) நீ இருப்பதால்..
........
.........
...........
........
சாகாத காதல்..
மரணமில்லா வாழ்க்கை...
வரம் வேண்டி தவம்-
காதலில் வென்றதால்!!!

காதல்..

இதுதான் நிதர்சண உண்மை.. சாகாத காதல். மரணமில்லா வாழ்க்கை.. இது மட்டும் அனைவருக்கும் கிடைத்துவிட்டால்..
இந்த பூமி ஏன் இப்படி சுற்றப் போகிறது.. அழகான ஏக்கங்கள்.. அதன் வெளிப்பாடாய் அருமையான கவிதை..

குறும்புப்பார்வை
குத்திய வினாடிகள்..
எண்ணுகையில் வியர்வையில்
குளிக்கிறது இதயம்!..
............
..........
பார்த்தவுடன் வந்ததே..
இது காதலா....
சாதலா??!!

பார்த்ததும் கா(சா)தல்!!...

பார்த்ததும் காதல்..காதலா? இல்லை சாதலா? பட்டிமன்றம் நடத்தி இருக்கும் இந்தப் பதிப்பு முத்தானது..

உன்னை கண்ணில்
படமெடுத்த நான்
மண்ணில் மறைந்தால்தான்
மறுபதிப்புக்கு வாய்ப்புண்டு..
வலிகள் ஒருநாளென்றாலும்
வரலாறுகள் ஒரு யுகம்வரை
தொடரும்போல..

உன் உருவம் மட்டுமே
உன் விலாசமாய்..
விசனத்தில் தூங்கிப் போனேன்..
கனவில் மீண்டும்
இம்சிப்பாயென்ற
நம்பிக்கையோடு...

முதல் நாள்......

காதலியைக் கண்ட முதல்நாள்.. அவர அனுபவித்த வேதனைகள்.. இன்பமாகத்தான்.. இந்தக் கவிதை முடிந்த விதம் மிக அருமை..
கனவில் மீண்டும் இம்சிப்பாயென்ற நம்பிக்கையோடு...

என் தலையணைகள்
கதறியழுகின்றன...
கனக்கிறதாம் கண்ணீர்த் திவலைகள்
தலைச்சுமையைக் காட்டிலும்...

ஒரு தலைக் காதலனின் உளறல்கள்..

காதல் படுத்தும் பாடு சொல்லி மாளாது.. அதுவும் ஒருதலைக் காதல் இருக்கிறதே..
அது கண்ணாடித்துண்டுகள் கலந்த பழரசம்..
ராஜதிராவகம் கலந்த டானிக்...
கொடுமையான வேதனை...
அனுபவித்து எழுதியது மேலே குறிப்பிட்ட வரிகளில் நன்றாகத் தெரிகிறது...

இப்படியாக இவர் பல கோணங்களில்.. பல சந்தர்ப்பங்களில்.. காதலை அணு அணுவாக காதலிக்க மட்டும் இல்லை..
அனேகமாக இவர் சுவாசிப்பது காதலாகத்தான் இருக்கக்கூடும்...
காதல் தந்த சிறகுகளோடு பயணிக்கிறார்...

இவரின் காதல் கவிதைகள் இவ்வாறிருக்க..
இவரது சமூகப்பார்வை கொஞ்சம் காரசாரமானது...
கொப்பளிக்கும் எரிமலையாக பொங்கி எழுந்து எழுதிய கவிதைகள்..
இந்தப் பூ நெஞ்சில் இவ்வளவு கனலா? என எண்ணும் அளவிற்கு..

இயற்கைக்கும்
செயற்கைக்கும் இடையே
நடந்த போராட்டத்தில் ஜெயித்தது..
ஸ்டிக்கர் பொட்டும் காகிதப் பூவும்!!..

அமிலமாய்...

எல்லாம் செயற்கையாகிப் போனதில் இவருக்குக் கொஞ்சம் வருத்தம்.. அதன் வெளிப்பாடே இந்தக் கவிதை..
தொலைந்து போன கிராமிய ஏக்கம் திகழும் மற்றுமொரு கவிதை...

குட்டிசைக்கிளை
எட்டணா வாடகைக்கு
எடுத்து..
தள்ளிக்கொண்டும்
தத்திக்கொண்டும்
கடந்த காலங்கள்..

மறந்திடவா முடிகிறது..
பச்சை கிராமத்து
பசுமை நினைவுகளை?!..

நிழல்கள்.. நினைவுகள்...


இவ்வரிகளைப்படிக்கும் யாருக்கும் பழைய பால்ய நினைவுகளில் அந்தப் பசுமை நிறைந்த நினைவுகள் வரும்..

அவள் ஒரு தாய்.. அவள் பருவத்தில் செய்த விளையாட்டுகளை அவள் மகள் செய்யக் கண்டு கலங்குகிறாள்..
தாயைப் போல் சேய்.. நூலைப் போல் சேலை.. இதைத்தான் பின்வரும் வரிகளில் நெய்துள்ளார் கவிஞர்..

கன்னிதான் நான்..
கற்பழித்துப் போ கண்களால் மட்டுமென
கட்டுக்கடங்காமல்
நாகரீக மோகத்தால்
நகர்வலம் வந்த நாட்கள்...

அன்று நான் போட்ட கோலங்கள்
மாசு படிந்தவைகளென மனம் உணர்த்தவில்லை..
...........
.............
..............
காலைவேளையில்
கட்டுடல் காட்டி
இறுக்கமான கால்சட்டையில்
அந்தரங்ககளை அப்பட்டமாய் ஆட்டி ஓடும்
என் செல்லப் பெண்ணைப் பார்க்கையில்
மனதில் குற்ற உணர்ச்சிகள்
குத்தூசிகளாய்..

முற்பகல் செய்யின்...

முகத்தில் அறையும் உண்மைகளை படமாக்கியுள்ளார் கவிஞர்..

அவலங்களாஇப் படமாக்கும் விதம் அலாதியானது.. கொஞ்சம் வருத்தமான விடயம்தான்.. ஆனால்,
கவிஞன் என்பவன் சமூகத்தின் கண்ணாடியாய் இருக்கவேண்டும்..
அப்படி வடித்த ஒரு கண்ணீர் சிந்த வைக்கும் கவிதை..

இன்று..
கலப்பைகள்
கால்நீட்டியபடி..
களங்கள் கண்ணீர்விட்டபடி..
ஏர்பூட்டிட ஏற்றம் இறைத்திட
ஏக்கமாய் நாங்கள்..

கால்வயிறை நிரப்பிக் கொள்கிறோம்..
விறகாய் கலப்பை...
அரிசியாய் விதைநெல்!!!

நாளை..
இல்லாத இரத்தத்தை
சுரண்டி சுரண்டி
தானம் செய்யப் போகிறேன்..

சுரண்டலால் வறண்டுபோன
எங்கள் வயிற்றில் பால்(லிடாயில்)
வார்க்க!!!

விவசாயி...

இப்படி ஒரு கொடுமை.. நம் கண்முன்.. இருப்பது புண்ணிய பூமியிலா.. இல்லை வேறு எங்குமா?
(இந்த விவாதத்தை அப்புறம் வேறு ஒரு சமயம் பார்ப்போம்)

சிக்னலில் சிக்கலான
வாகனக்கூட்டமிடையில்
சிறகு விரிக்கும் சின்னச்சிட்டு...
ஆளாய்ப் பறக்கிறது
அரைவயிற்றுக்கு
அரைஞான் கயிறறுந்த
அஞ்சு வயசு பிஞ்சு..
நேருவின் ரோஜா -இதழ்களை
உதிர்த்துக் கொண்டு!!..

அவலம்!!!?


சீக்கியத் தீவிரவாதி
சுட்டதில் இருவர் பலி...
இரத்தம் கொதிப்பதாய்
புகைவிட்டான் குடிமகன்..
மிச்சம்போட்ட
சிகரெட் துண்டால்
துடிதுடித்து இறந்தன
இருபது உயிர்கள்.....
.........
...........
..........
.........
சாதனை இந்தியாவிற்கு
கனவு காண்கிறோம்..
சத்தமில்லா வாழ்க்கையை
தொலைத்துவிட்டு..
.........
.........

இனிய இந்தியா????!!!

மேற்கூரிய அவலங்கள் நிதர்சண உண்மை.. மறுக்கவோ மறைக்கவோ முடியாத அப்பட்டமான உண்மை..
இதை தன் குரலாய் இருந்து குமுறியிருக்கிறார் கவிஞர்...

விபத்தொன்றில்
விலகிப்போனாய்
விதியின் விளையாட்டால்
விதவையானேன்.!!!..
............
............
.............
..........
விதவைகளை
விரசமாய் பார்க்கும்
விகற்பவாதிகள்
வீதியெங்கும்
இறைந்துகிடக்கும்வரை
இறக்கும் பெண்கள்
குறையப்போவதில்லை...

பரிதாபம்.. (அன்றும்.. அவன் போன பின்னும்!!!)

பெண்களின் நிலையை, இந்த என்று இந்த நிலை மாறும்? எனக் கேட்க வைக்கும் இந்தக் கொடுமையை
தனது புயல் வரிகளால் சாடியுள்ளார்..

இவரது பிறக் கவிதைகள்..
ஆடாத ஆட்டமெல்லாம் (எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கவிதை), வேலைக்குப் போகும் என் மனைவி,
என்னைத் தெரிகிறதா?(இதை மட்டும் விவரிப்பதென்றால் இந்த ஒரு பக்கம் போதாது) மற்றும் பல...

மொத்தத்தில் பூ என்பவர் பூ அல்ல..
இந்தத் தமிழ்மன்றக்கடலில் மையம் கொண்டிருப்பது பூ வேடமிட்ட புயலும்.. காதல் சிறகுகளும்தான்...

prabha_friend
20-05-2003, 06:03 PM
இதை படித்தவுடன் எனக்கு இந்த பாடல்தான் நினைவிற்கு வருகிறது .
"பூப் பூவாய் புன்னைக்கும் இவன் , எங்கள் வீட்டு கைக்குழந்தை ;
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை , இவன் எங்கள் புதுக்கவிதை ."

anushajasmin
21-05-2003, 01:04 AM
அருமை ராம்பால்ஜி.... என்ன பாராட்டினாலும் தகும் இந்த மற்றவரை பாராட்டி நல்லன உரைப்பதற்கு

madhuraikumaran
21-05-2003, 04:27 AM
புரட்சிப் பூ... புன்னகைப் பூ... புயல் பூ... புதுமைப் பூ...
ராம்பால் ஒரு நல்ல தொகுப்பாளராக பரிமாணம் பெறுகிறார்... இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் !!!

(அந்த அதிர்ச்சி செய்தி இது தானா?)

Narathar
21-05-2003, 04:31 AM
பூ........... உண்மையிலேயே புயல்தான்!
வழி மொழிகிறேன்!!!

karikaalan
21-05-2003, 01:09 PM
ராம்பால்ஜி!

எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்.

சில சமயம், ஆக்கங்கள் கொடுக்கும் சுவை, ஆய்வுகளால் மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. தங்களது ஆய்வுகள் அப்படிப்பட்டவை.

===கரிகாலன்

Nanban
21-05-2003, 03:46 PM
மிக அரியதொரு பணியை ராம்பால் செய்கிறார். பூவின் கவிதைகள் அனைத்தையும் ஒரே தொகுதியாக ஓரிடத்தில் பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கிறது.

அப்படியே கன்ஸ், லாவண்யா, கவிதா........ என்று தொடருங்கள்.... பாராட்டுகள்.. மற்றும் வாழ்த்துகள்.....

Nanban
21-05-2003, 04:03 PM
மிக அரியதொரு பணியை ராம்பால் செய்கிறார். பூவின் கவிதைகள் அனைத்தையும் ஒரே தொகுதியாக ஓரிடத்தில் பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கிறது.

அப்படியே கன்ஸ், லாவண்யா, கவிதா, இளசு, மனோ.G மற்றும் நண்பர்கள் என்று தொடருங்கள்........ என்று தொடருங்கள்.... பாராட்டுகள்.. மற்றும் வாழ்த்துகள்..... :icon_b:

gankrish
22-05-2003, 05:51 AM
ராம்... நீஙகள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. அலசி .. ஆராய்ந்து எழுதியவை. என் நண்பன் பூவுக்கு இதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும்.

rambal
07-04-2004, 04:21 PM
நண்பன் பூவின் கவிதைகளை
திறனாய ஆசைப்படுகிறேன்..

வழக்கம் போல் நேரம்..

இன்றுதான் சில பல பணிகளிலிருந்து ஓய்வு பெற்று
மன்றம் வர முடிந்தது..

இது போன்ற தருணம் வாய்த்தால் கண்டிப்பாக
இதை விட சிறப்பாக எழுதுவேன் என்ற நம்பிக்கையில்..