PDA

View Full Version : கனவுகளைச் சுமந்து....



அமரன்
21-06-2007, 11:43 AM
பனிப்புலத்தின் பாதைகளில்
கண்ணீர்ப்பூக்களைச் சொரிந்தபடி
நினைவுகள் துணையுடன்
கனவுகளைச் சுமந்து
நடந்துகொண்டிருக்கிறேன்....

உன்னுடன் இருந்த
பசுமையான நாட்களின்
பாசக்கோடுகள்
கண்ணீர்கோடுகளாக
என்முகத்தில்.....

கண்ணீரைச் சுண்டிய
ரேகையில்லா விரலில்
தெரிகிறது அடையாளம்..

தாய்மண்ணை ஏடாக்கி
சுட்டு விரலை கோலாக்கி
அன்பெனும் மையிட்டு
அகரம் பழக்கினாயே....


உறவோடு இல்லாவிடினும்
உயிரோடாவது இரு
காதோரம் நீ சொன்ன
அதே வார்த்தைகளை
காதுகளில் கிசுகிசுக்கிறன
கண்ணீர் துளிகள்...

சிந்திய துளிகளில்
ஒளிர்கிறது...
முழுநிலவாய் உன்முகம்

அழுதபோது நீ தந்த
வெண்ரத்தம் என்நினைவில்..
இப்போதும் அழுகின்றேன்..
தாயே நான்...

அக்னி
21-06-2007, 12:17 PM
இருதடவை பதியப்பட்டதால், நீக்குகின்றேன்...

அக்னி
21-06-2007, 12:19 PM
வாசிக்கும்போது உள்மனம் சிலிர்க்கிறது...
நேசித்த தாய்மனம் தினமும் அழுவது தெரிகிறது...
எனது உணர்வோடும், நினையோடும்
மனதுக்குள் துடிக்கும் துடிப்புக்கள்,
வரிகளாய் தருகின்றது பெரும் அழுத்தம்...

கண்ணீரை வெண்ரத்தம் ஆக கொடுத்த உவமானம்,
பாசம்,
அந்த பாசத்தினால் பிரிவில் வரும் சோகம்,
அந்த சோகம் கொண்ட, தாய்மையின் தனித்துவ பாசத்தின் அடையாளம்
என்று ஆயிரம் உணர்வுகளை அடக்கி
ஆயிரம் கவிதைகளாய்ப் போன வார்த்தை...
வெண்ரத்தம்


கண்ணீரைச் சுண்டிய
ரேகையில்லா விரலில்
தெரிகிறது அடையாளம்

இது புரியவில்லை...

உணர்ச்சி தந்த கவிதைக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்...

அமரன்
21-06-2007, 12:23 PM
கண்ணீரைச் சுண்டிய
ரேகையில்லா விரலில்
தெரிகிறது அடையாளம்
இது புரியவில்லை...



நம்ம மண்ணைப்பற்றி உங்களுக்குத் தெரியும் அக்னி. வைரமான மண். அதில் அ எழுதப்பழக்கியதை கொஞ்சம் அதிகமாக சொன்னேன்.

அக்னி
21-06-2007, 12:34 PM
கண்ணீரைச் சுண்டிய
ரேகையில்லா விரலில்
தெரிகிறது அடையாளம்
இது புரியவில்லை...



நம்ம மண்ணைப்பற்றி உங்களுக்குத் தெரியும் அக்னி. வைரமான மண். அதில் அ எழுதப்பழக்கியதை கொஞ்சம் அதிகமாக சொன்னேன்.

தாய் கல்வியை கடுமையாய் புகட்டியதாய் நினைத்து எழுதினீர்களோ என்று நினைத்துவிட்டேன்...
கற்பனையின் ஆழம் வரை சென்று கவி தருகின்றீர்கள்...

மதி
21-06-2007, 01:10 PM
அற்புதமான கவிதை அமரன். தாயின் அன்பும் அரவணைப்பும் அவளைப் பிரிந்து இருக்க நேர்கையில் தான் புரிய வரும். உணர்ந்தோரில் நானும் ஒருவன்.

கவிதைக்கு நன்றி அமர்.

அமரன்
21-06-2007, 02:20 PM
நன்றி மதி..ஒவ்வொருவரும் தாயைப்பிரியும்போது அடையும் வேத்னை அதிகமே

கலைவேந்தன்
21-06-2007, 02:42 PM
பனிப்புலத்தின் பாதைகளில்
கண்ணீர்ப்பூக்களைச் சொரிந்தபடி
நினைவுகள் துணையுடன்
கனவுகளைச் சுமந்து
நடந்துகொண்டிருக்கிறேன்....

எத்தனை சுமைகள்...கண்ணீர்ப்பூக்கள், நினைவுகள், கனவுகள்....

உன்னுடன் இருந்த
பசுமையான நாட்களின்
பாசக்கோடுகள்
கண்ணீர்கோடுகளாக
என்முகத்தில்.....

பாசம் என்பது நம்மை பரிதவிக்கச் செய்யும்...கண்னீர் சிந்த வைக்கும்...

கண்ணீரைச் சுண்டிய
ரேகையில்லா விரலில்
தெரிகிறது அடையாளம்
தாய்மண்ணை ஏடாக்கி
சுட்டு விரலை கோலாக்கி
அன்பெனும் மையிட்டு
அகரம் பழக்கினாயே....

பெற்றதாய் தான் முதல் ஆசிரியை...அவளால் தான் நமது புரிதல்கள் தொடங்குகின்றன...


உறவோடு இல்லாவிடினும்
உயிரோடாவது இரு
காதோரம் நீ சொன்ன
அதே வார்த்தைகளை
காதுகளில் கிசுகிசுக்கிறன
கண்ணீர் துளிகள்...


தாயின் அன்பில் எந்த* எதிர் பார்ப்பும் இருப்பதில்லை..

சிந்திய துளிகளில்
ஒளிர்கிறது...
முழுநிலவாய் உன்முகம்
அழுதபோது நீ தந்த
வெண்ரத்தம் என்நினைவில்..
இப்போதும் அழுகின்றேன்..
தாயே நான்...


நீண்ட நாட்களுக்குப்பிறகு நல்லதொரு தாய்மைக்கவிதை!

அமரன்
21-06-2007, 04:45 PM
நீண்ட நாட்களுக்குப்பிறகு நல்லதொரு தாய்மைக்கவிதை!

நன்றி கலைவேந்தன். கருத்தூன்றிப்படித்ததற்கு

மனோஜ்
21-06-2007, 05:04 PM
சிறப்பான கவிதை நண்பா
உண்மையில் தாயின் அன்புக்கு இடாய் எதும் இல்லை
ஆனால் சூழ்நிலை கைய்திகள் நாம் கண்ணீர்மட்டும் கவிதைகளாய்

ஓவியன்
22-06-2007, 09:30 PM
அழகாக அருமையாக தாயின் பெருமை சொல்லும் ஒரு கவிதை!.

அசத்தலாக இருக்கிறது அமர்! − பாராட்டுக்கள்.

அமரன்
23-06-2007, 08:13 AM
பாராட்டுகளுக்கு நன்றி மனோஜ் மற்றும் ஓவியன். சென்ற வாரம் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒருவிதமான உணர்வே இக்கவிக்கு காரணம்

ஷீ-நிசி
24-06-2007, 01:42 PM
தாய்மைக்கு ஒரு அழகிய கவி அமரனிடமிருந்து...

வெண்ரத்தம் வார்த்தை அழகு! கவிஞனுக்கு வேலையே அழகிய வார்த்தைகளை தேடியிடுவதுதான். அருமைப்பா!

அமரன்
11-07-2007, 09:41 AM
ஆமாம் ஷீ....வார்த்தைகளும் கருவும் தேடுவதுதான் கவிஞனுக்கு வேலை. நன்றி..

பிச்சி
11-07-2007, 09:53 AM
மனதைப் பிய்த்தெறிகிறது கவிதை.. உணர்ச்சிகளில் பந்தலிட்டு எழுதியிருகிறீர்கள். சூப்பர் கவிதை..

அமரன்
11-07-2007, 09:59 AM
நன்றி பிச்சி....

அரசன்
11-07-2007, 02:36 PM
கவிதை அற்புதமாக இருக்கிறது. பிரிவு துயரமானதுதான்.

அமரன்
11-07-2007, 03:36 PM
உண்மைதான் மூர்த்தி...சிலவேளைகளில் பிரிந்து இருக்கும்போதுதான் அன்பின் ஆழம் தெரிகின்றது..நன்றி மூர்த்தி.

இனியவள்
11-07-2007, 03:43 PM
இதுவரை உணர்ந்ததில்லை
தாய்ப் பாசம் உங்கள்
கவியில் உணர்ந்தேன்
தாய்ப் பாசம் இப்படியா
இருக்கும் என்று

வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள் அமர்

lolluvathiyar
12-07-2007, 10:25 AM
கடைசி வரியை படிக்கும் வரை இது காதலியை பற்றிய கவிதை என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்து தாய் பாசம் என.
வாழ்த்துகள் 10 இபணத்துடன்

அமரன்
12-07-2007, 11:43 AM
நன்றி இனியவள். உணராத ஒன்றினை உணர்த்தியதில் மகிழ்ச்சி.
******************************************************************************************
நன்றி வாத்தியாரே!. உங்கள் வாழ்த்துக்கும் பரிசுக்கும்.