PDA

View Full Version : டேர்ம் இன்ஷиரன்ஸ் எளிமையான விளக்கம்



роХрпЗроЪрпБро╡ро░рпН
21-06-2007, 11:20 AM
பொதுவாக எல்லலோருக்கு தெரிந்த விசயம் தான் , இருந்தாலும் புதிதாக டேர்ம் இன்ஷиரன்ஸ் பற்றி தெரிய விருப்புவோர்க்கு பயனுள்ளதாக இருக்கும் என்று இப்பதிவை வெட்டி ஓட்டினேன்.

டேர்ம் இன்ஷиரன்ஸ் பற்றி ?


சீட் பெல்ட் போடுகிறோம், ஹெல்மெட் போடுகி றோம், கவனமாக வண்டிகளைக் கையாளுகிறோம். எல்லாமே உயிரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளத் தானே..! அதேபோலத்தான் லைஃப் இன்ஷиரன்ஸзம்! எல்லோருமே ஓர் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டியது கட்டாயம். அந்த ஆயுள் காப்பீடு என்பது ஒருவருடைய இழப்பின்போது அவரைச் சார்ந்து இருப்பவர்களுக்குப் பொருளாதார ரீதியாகக் கைகொடுத்துக் காப்பதற்குத்தான்! அதில் லாப நோக்கம் தேவையில்லை. எனவே, ஆயுள் காப்பீட்டுக்கான பாலிசியாக எல்லோரும் தேர்வு செய்யவேண்டியது டேர்ம் இன்ஷиரன்ஸ் பாலிசிகளைத்தான்! மற்றவகை பாலிசிகள் இருந்தாலும், முக்கியமாக டேர்ம் இன்ஷиரன்ஸ் கையில் இருக்க வேண்டும்.

குறைவான பிரீமியத்தில் அதிக ரிஸ்க் கவர் தருபவை. ஆண்டு வருமானத்தைப் போல, ஏழு முதல் பத்து மடங்கு தொகைக்கான பாலிசி எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுப்பவரின் வயது, செலுத்தும் வருடங்கள், பாலிசித் தொகை போன்ற வற்றின் அடிப்படையில் பிரீமியம் இருக்கும்.

வயதின் அடிப்படையில் பார்க்கும்போது 18 வயது முதல் 55 வயதுள்ளவர் வரை எடுக்கலாம். இந்த வகை இன்ஷиரன்ஸ்கள் அதிகபட்சம் 60 வயது வரை காப்பீடு வழங்குகிறது.

பாலிசிதாரருக்கு உயிரிழப்பு நேராதபோது, கட்டிய பிரீமியம் திரும்பக் கிடைக்காது என்பதால், பலரும் இதைத் தேர்வு செய்வதில்லை. அதோடு பிரீமியம் குறைவாக இருப்பதால், கமிஷனும் அதிகமாகக் கிடைக்காது. எனவே, ஏஜென்ட்கள் பலரும் இதை சிபாரிசு செய்வதில்லை.

---
நன்றி : நாணயவிகடன்
---

роЪродрпНро░ро┐ропройрпН
21-06-2007, 11:21 AM
நல்ல தகவல் அண்ணா

ро╡рпЖро▒рпНро▒ро┐
21-06-2007, 01:20 PM
நானும் படித்தேன் ...தவறாக அச்சாகி விட்டது போலும் அது டேர்ம் இன்சுரண்ஸ் அல்ல...ஹோல் லைப் இண்சுரண்ஸ்...
இதை ஏனோ யாரும் எடுப்பதே இல்லை...
அதைபோல ஜென்ரல் இன்சுரண்சில் மருத்துவ,மற்றும் வீடு காப்பீடு பாலிசிகள் மிகவும் பயனுள்ளவை ஆனால் பீரிமியம் மீண்டும் வராது என்பதால் பலர் எடுப்பதே இல்லை....

aren
21-06-2007, 03:04 PM
இதன் பெயர் டேர்ம் இன்ஷீரன்ஸ் என்பதே சரி. காரணம் ஒரு குறிப்பிட்ட காலத்துடன் இது காலாவதியாகிவிடுவதால் இதற்கு அந்த பெயர் வைத்திருக்கிறார்கள்.

யாரும் டேர்ம் இன்ஷீரன்ஸ் மட்டும் எடுப்பதில்லை. லைஃப் இன்ஷுரன்ஸும் சேர்த்தே எடுக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, 100000 ரூபாய்க்கு லைஃப் பாலிஸி எடுத்தால் டேர்ம் பாலிஸி குறைந்தது 500000 முதல் 1000000 வரை எடுப்பார்கள். காரணம் டேர்ம் பாலிஸிக்கு பிரிமீயம் குறைவு ஆனால் 55 வயதிற்குள் ஏதாவது ஆகிவிட்டால் அடுத்த சந்ததியினருக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும். அப்படியில்லாமல் 55 வயதிற்கு மேலும் உயிருடன் இருந்தால் லைஃப் பாலிஸி காலாவதியாகி அதில் போட்ட பணம் கிடைக்கும். அதைக்கொண்டு காலத்தை ஓட்டமுடியும்.

இதைப் பற்றி நம் மன்ற வல்லுனர் கரிகாலன் அவர்கள் இன்னும் அழகாக எடுத்துச் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறேன்.


நன்றி வணக்கம்
ஆரென்

ро╡рпЖро▒рпНро▒ро┐
22-06-2007, 10:30 AM
இதன் பெயர் டேர்ம் இன்ஷீரன்ஸ் என்பதே சரி. காரணம் ஒரு குறிப்பிட்ட காலத்துடன் இது காலாவதியாகிவிடுவதால் இதற்கு அந்த பெயர் வைத்திருக்கிறார்கள்
ஆம் நீங்கள் சொன்னது சரிதான்..நான் தான் பிழையாக சொல்லிவிட்டேன்

namsec
22-06-2007, 10:57 AM
நல்ல தகவல் நன்றி