PDA

View Full Version : வாடிய பயிரை ...



தாமரை
20-06-2007, 05:16 PM
வாடிய பயிரை கண்ட போதெல்லாம்..........நீரூற்றினேன்

எங்க ஊர்ல* த*ண்ணிய*த் தேட*ற*து பெரிய* வேலை..

அதனால வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்கறதுதாமன் பொருந்தும்..

இதன் உட்பொருள் என்ன தெரியுமா?

தாயுள்ளம் கொண்ட ஒரே தொழிலாளி விவசாயிதான். பயிர் வாடப் பொறுக்காமட்டான். கண்டிப்பாய் நீரூற்றுவான். வாய்க்கால் தகறாரில் தன் செந்நீர் பாய்ந்தாலும் தன் பயிருக்கு தண்ணீர் இல்லாமல் விடமாட்டான். அந்தத் தாய் போன்ற விவசாயி இருந்தும், பயிர்கள் வாடுகின்றதென்றால்...

தண்ணீர்ப் பஞ்சம் என்று பொருள். அதனால் தான் வள்ளலார் வாடுகிறார்.

ஓவியா
20-06-2007, 05:28 PM
எங்க ஊரில் நீருக்கு பஞ்சமில்லை, பயிர் துன்பப்படுமே இல்லை மடிந்து விடுமே என்று கருனைக்கொள்வோம். அதனால் பயிர்கள் வாடக்கூடாதென்று அக்கறையாக வாடும் முன்பே தினமும் தண்ணீர் ஊற்றுவோம்.

தாயுள்ளம் கொண்ட எந்த மனிதனும் செடிக்கொடியோ, புல்பூண்டோ, பயிரோ வாடுவயதை அல்லது வாடி இருப்பதை கண்டால் கருனைக் கொண்டு தண்ணீர் ஊற்றுவான்/ள்.


தாமரையண்ணாவின் கருத்துக்கு மிக்க நன்றி.

பென்ஸ்
20-06-2007, 05:35 PM
எங்க ஊரில் நீருக்கு பஞ்சமில்லை, பயிர் துன்பப்படுமே இல்லை மடிந்து விடுமே என்று கருனைக்கொள்வோம். அதனால் பயிர்கள் வாடக்கூடாதென்று அக்கறையாக வாடும் முன்பே தினமும் தண்ணீர் ஊற்றுவோம்.

தாயுள்ளம் கொண்ட எந்த மனிதனும் செடிக்கொடியோ, புல்பூண்டோ, பயிரோ வாடுவயதை அல்லது வாடி இருப்பதை கண்டால் கருனைக் கொண்டு தண்ணீர் ஊற்றுவான்/ள்.


தாமரையண்ணாவின் கருத்துக்கு மிக்க நன்றி.


மண்வாடிய பயிருக்கு
தண்ணீர் விடுவாய்
மனம் வாடிய பயிருக்கு
கண்ணீரோ...!!!

ஓவியா
20-06-2007, 05:44 PM
மண்வாடிய பயிருக்கு
தண்ணீர் விடுவாய்
மனம் வாடிய பயிருக்கு
கண்ணீரோ...!!!

அசத்தல், நன்றி பென்ஸ்



என் கண்ணீர்
உப்புநீர் − பயிரும்
விளையாதான்
விளைச்சலுக்கும்
ஆகாதாம்.

அக்னி
20-06-2007, 05:49 PM
என் கண்ணீர்
உப்புநீர் − பயிரும்
விளையாதான்
விளைச்சலுக்கும்
ஆகாதாம்.

என் முகத்தில்,
செழிப்பாய் பயிர்கள்,
வெட்ட வெட்டத் தளைக்குதே...
காரணம் கண்ணீர்
என்ற உப்புநீர்தானோ...

பென்ஸ்
20-06-2007, 05:50 PM
நிற்க...

தாமரை .. இதேபோல் ஒரு பதில்கவிதை தொடர் முன்பு செய்தோமே... நியாபகம் இருக்கா???

ஓவியா
20-06-2007, 05:52 PM
ஆமாம் பென்ஸ், மீராவுடன் சேர்ந்து பதித்தோம்.........

தாமரை அண்ணாவும், மீராவும் கலகினார்கள்.

ஓவியா
20-06-2007, 05:55 PM
என் முகத்தில்,
செழிப்பாய் பயிர்கள்,
வெட்ட வெட்டத் தளைக்குதே...
காரணம் கண்ணீர்
என்ற உப்புநீர்தானோ...



முத்ததின் பரிசு
எச்சில்
எச்சிலின் பரிசு
உரம்
உரத்தின் பரிசு − உம்
தாடி

கலைவேந்தன்
20-06-2007, 05:57 PM
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்....ஓடினேன் தண்ணீர்லாரியை நோக்கி!
−−−தில்லிவாசி

அக்னி
20-06-2007, 05:59 PM
முத்ததின் பரிசு
எச்சில்
எச்சிலின் பரிசு
உரம்
உரத்தின் பரிசு − உம்
தாடி

என்னிடம் முத்தம்
வாங்கியவள் முகத்தில்
ஏன் இல்லை தாடி?

ஆணுக்குத் தாடி என்றால்,
பெண்ணுக்கிருப்பின் தாடா என்றாகுமா?

தாமரை
20-06-2007, 06:03 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294

ஓவியன்
20-06-2007, 06:09 PM
என் கண்ணீர்
உப்புநீர் − பயிரும்
விளையாதான்
விளைச்சலுக்கும்
ஆகாதாம்.

உப்பு நீரென
இளக்கமாய்க் கூறிவிட்டீர்
விளக்கத்திற்கு வேண்டுமெனின்
செல்வரை நாடவும்.

ஓவியா
20-06-2007, 06:09 PM
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்....ஓடினேன் தண்ணீர்லாரியை நோக்கி!
−−−தில்லிவாசி

:D :D :D





என்னிடம் முத்தம்
வாங்கியவள் முகத்தில்
ஏன் இல்லை தாடி?

ஆணுக்குத் தாடி என்றால்,
பெண்ணுக்கிருப்பின் தாடா என்றாகுமா?


இதை படித்து நன்கு சிரித்தேன் :D

தாமரை
20-06-2007, 06:13 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6648&paகெ=7

இங்கிருந்து படிங்க ஓவியா!

ஓவியன்
20-06-2007, 06:15 PM
உப்பு நீரென
இளக்கமாய்க் கூறிவிட்டீர்
விளக்கத்திற்கு வேண்டுமெனின்
செல்வரை நாடவும்.

மன்றத்திலே சில நாட்களின் முன்னர் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6648&page=9)ஒரு உப்பு ஆராய்ட்சி நடைபெற்றது.

பென்ஸ்
20-06-2007, 06:48 PM
என்னிடம் முத்தம்
வாங்கியவள் முகத்தில்
ஏன் இல்லை தாடி?

ஆணுக்குத் தாடி என்றால்,
பெண்ணுக்கிருப்பின் தாடா என்றாகுமா?

தாடா என்றாள்
முத்தம் கொடுத்தீர்
தாடி என்றீர்
கேட்டதை கொடுத்து சென்றாள்..

ஓவியன்
20-06-2007, 06:49 PM
தாடா என்றாள்
முத்தம் கொடுத்தீர்
தாடி என்றீர்
கேட்டதை கொடுத்து சென்றாள்..

தாடி என்றேன்
அவள் தரவில்லை.
தாடிதான் முளைத்தது.

ஓவியா
20-06-2007, 06:50 PM
தாடா என்றாள்
முத்தம் கொடுத்தீர்
தாடி என்றீர்
கேட்டதை கொடுத்து சென்றாள்..

சூப்பர். :musik010:

உங்க அனுபவம்தானே!!!

ஓவியா
20-06-2007, 06:51 PM
தாடி என்றேன்
அவள் தரவில்லை.
தாடிதான் முளைத்தது.

கலக்கல் :icon_good:

ஓவியன்
20-06-2007, 07:55 PM
கலக்கல் :icon_good:

நன்றி அக்கா!:party009: :party009:

அக்னி
20-06-2007, 08:37 PM
தாடி என்றேன்
அவள் தரவில்லை.
தாடிதான் முளைத்தது.

வாடி என்றேன்
அவள் வரவில்லை
வாடிப் போனேன்....

ஓவியன்
21-06-2007, 08:13 PM
வாடி என்றேன்
அவள் வரவில்லை
வாடிப் போனேன்....

வாடி வந்து
தாடி என்றேன்.
வராது விட்டதால்
நான் வாடி வந்தது
தாடி!.

பென்ஸ்
21-06-2007, 08:18 PM
வாடி வந்து
தாடி என்றேன்.
வராது விட்டதால்
நான் வாடி வந்தது
தாடி!.

கேடி நீ
"லேடி"யை
நாடி போயிருக்கவேண்டும்
வாடிவிட்டாய்
அவள் அதனால்
ஓடிவிட்டாள்

அன்புரசிகன்
21-06-2007, 08:27 PM
கேடி லேடியிடமென்றால்
லேடி வாடிவிடுமே...

ஓவியா
21-06-2007, 08:44 PM
அடியே லேடி
நீ வாடி
நீ வந்தா (திருமணதிற்க்கு)
நான் டாடி
இல்லயேன்றால் போடி

ஹி ஹி ஹி

அமரன்
21-06-2007, 08:59 PM
சீடியில் பாத்து
நாடிய லேடி
வாடி நிற்கையில்
நாடி பிடித்தார்
டாடி சிரித்தேன்

ஓவியன்
21-06-2007, 09:44 PM
நாடிய லேடி
கை கூடி வராததால்
கை கூடி வந்தது
தாடியும் பீடியும்.

அன்புரசிகன்
21-06-2007, 10:09 PM
தாடியும்
பீடியும்
தலைவிதிப்படி

ஓவியன்
21-06-2007, 10:21 PM
தாடியும் பீடியும்
நாடி வந்த பீடையன்றி
தேடிப் பெற்ற பாடை.

பென்ஸ்
21-06-2007, 11:57 PM
அட என்னமோ போங்கப்பா... எல்லோரும் கலக்குறிங்க....

அக்னி
22-06-2007, 12:27 AM
நாடியிலே காதல் துடித்தது...
அவள் தந்த
இடியிலே நாடி வெடித்தது...
நாடியில் பிளந்த வெடிப்பை,
சோடித்தது தாடி,
என் முகத்தை மூடி...
கூடவே என் காதலையும் மூடி...
மீண்டும் கண்டேன் என் லேடியை...
சோடியாய் கூடி ஆடி பாடினாள்...
ஓடினேன் நான் சாவை நாடி...

ஓவியன்
22-06-2007, 12:38 AM
காதலை மூடவென்று
தாடி வளர்த்தேன்.
திருமணத்தில் கேட்டாள்
மனைவி
ஏங்க நீங்க
லவ் பெயிலியரா?

ஓவியா
22-06-2007, 04:02 PM
எல்லா கவிதைகளும் அசத்தல். கலக்க்றீக மக்கா. நன்றி.

ஓவியன்
23-06-2007, 01:01 AM
பாடி வளர்த்த
காதல்
தாடி வளர்க்க
வைக்கிறதே?.

ஓவியா
23-06-2007, 01:16 AM
போடி லேடி என்று
சொன்ன மாடி வீட்டு கேடியே
நீ தாடி வச்சு
ஓடி தேடி ஆடி பாடி
நாடி வந்தாலும்
என் நாடி இறக்கும் வரை
நீ என் ஜோடி இல்லையே