PDA

View Full Version : இணையத்தின் முகப்பு தொற்றம்



namsec
20-06-2007, 04:07 PM
நண்பர்களே நம்முடைய தமிழ் மன்றத்தின் முகப்பு பகுதியில் தமிழ் ஆண்டு, தமிழ் மாதம், தேதி ஆகியவ*ற்றை வெளியிட்டால் நன்றாக இருக்குமா என்று தெரிவிக்கவும்.

தங்களின் கருத்துக்கள் கூடக் கூட இணைய நிர்வாகி இராசகுமரன் அவர்கள இதை பரிசிலனை செய்வார் என என் கருத்து

ஓவியா
20-06-2007, 04:08 PM
நல்ல கருத்து, இதை அடியேன் ஓடி வந்து வழிமொழிகிறேன்

நன்றி

namsec
20-06-2007, 04:11 PM
நல்ல கருத்து, இதை அடியேன் ஓடி வந்து வழிமொழிகிறேன்

நன்றி

சகோதரி முன்மொழிய ஒரு நபர் வேண்டும்

வழிமொழிந்தமைக்கு நன்றி

அன்புரசிகன்
20-06-2007, 04:13 PM
நல்லவிடையம் ஒன்று. ஆனால் அனைத்தையும் இடுதல் நன்று (தமிழ் ஆண்டை மட்டும் இடாது). காரணம் இது தமிழ் பேசும் அனைத்து நண்பர்களும் வந்து போகுமிடம். இது எனது கருத்து. ஒரு கூட்டத்தில் மூத்த அறிஞர் ஒருவர் கூறியிரந்தார். தமிழ் மக்களே என கூட்டத்தில் ஆரம்பிப்பதைத்ததவிர்த்து தமிழ் பேசும் மக்களே என ஆரம்பியுங்கள். நாடு செழிப்புறும் என்று.

namsec
20-06-2007, 04:17 PM
நல்லவிடையம் ஒன்று. ஆனால் அனைத்தையும் இடுதல் நன்று (தமிழ் ஆண்டை மட்டும் இடாது). காரணம் இது தமிழ் பேசும் அனைத்து நண்பர்களும் வந்து போகுமிடம். இது எனது கருத்து. ஒரு கூட்டத்தில் மூத்த அறிஞர் ஒருவர் கூறியிரந்தார். தமிழ் மக்களே என கூட்டத்தில் ஆரம்பிப்பதைத்ததவிர்த்து தமிழ் பேசும் மக்களே என ஆரம்பியுங்கள். நாடு செழிப்புறும் என்று.

தங்கள் கருத்துக்கு நன்றி, தமிழ் ஆண்டை தமிழ் பேசும் அனைவரும் அறிய ஏதுவாக இருக்கும் அல்லவா

அறிஞர்
20-06-2007, 04:21 PM
முன்புறம் ஆரம்பகாலத்தில் வடிவமைக்கப்பட்டது....... தங்களது கருத்துக்களையும்... நிர்வாகி கருத்தில் கொள்வார் என நம்புகிறேன்.

அக்னி
20-06-2007, 04:38 PM
முகப்புப் பக்கம் காலத்துக்குக் காலம் மாற்றம் பெறாமல் இருப்பது, தமிழ் மன்றத்திற்கு ஒரு தனித்துவ அடையாளமாக இருக்கும்.
வேண்டுமானால், தளத்தின் மேல் வலப் புறத்தில், உள்ள இடத்தில் வேண்டுமானால் சித்தரின் ஆலோசனை செயற்படுத்தப்படுதல், அழகூட்டுவதோடு, பயனும் பெறும்.
ஏனென்றால், பெரும்பாலானோர் முகப்புப் பக்கம் பார்த்துத்தான் உள்நுழைவார்கள் என்றில்லை.
அதனால், உள்ளேயே தென்படுவதே சிறப்பாயிருக்கும்.
ஆனாலும், இது எவ்வளவு தூரத்திற்குச் சாத்தியமான விடயம் என்பதை இராசகுமாரன் அவர்கள்தான் பரிசீலிக்கவேண்டும் என நினைக்கின்றேன்.
அப்படியான இணைப்பு சாத்தியம் எனில், உலக பொது வழக்கையும் சேர்த்து இணைப்பதே சிறப்பு...

நன்றி!

ஓவியன்
21-06-2007, 06:39 AM
மாற்றங்கள் உலக நியதிதானே, தமிழ் ஆண்டை தமிழ் மன்றில் காண எனக்கும் மகிச்சியே!, இதில் உள்ள தொழினுட்ப மற்றும் இதர வேறு பிரச்சினைகளைப் பற்றி நிர்வாகிதான் முடிவெடுக்கவேண்டும்.

இன்பா
21-06-2007, 07:04 AM
நல்ல ஐடியாவாக இருக்கிறது தலைவர் கண்டிப்பாக செய்வார் என நினைக்கிறேன்.

இதயம்
21-06-2007, 07:16 AM
கால அட்டவணையை பொருத்தவரை எனக்கு தமிழ் மாத, ஆண்டுகளின் பயன் எதுவும் இல்லை. ஒரு தமிழனாக இருந்து கொண்டு அவற்றை நான் அறியாமல் இருப்பது சரியில்லை என்று கருதினால் இந்த ஆலோசனையை நான் வரவேற்கிறேன். இதனால் யாருக்கும் தீமை இருப்பதாக தெரியவில்லை. மன்ற நிர்வாகிகள் இது குறித்து மன்ற நிர்வாகிகள் தான் தெரிவிக்க வேண்டும். இந்த வேண்டுகோளை வெளியிட்ட namsec அவர்களுக்கு என் ஆதரவு உண்டு.

சுட்டிபையன்
21-06-2007, 07:49 AM
தமிழ் ஆண்டு மாதம் திகதி பாவிப்பவர்கள் இருக்கிறார்களா? பயனிருந்தால் இணைப்பதற்க்கு ஆதரவு தெரிவிக்கின்றேன்.

மதி
21-06-2007, 07:50 AM
நல்லதொரு விஷயம்...

lolluvathiyar
21-06-2007, 09:07 AM
ஆங்கில தேதி பற்றிய லாஜிக் அனைவரும் அறிந்த விசயமே.
ஆனால் தமிழ் தேதி அமைப்பு பற்றிய லாஜிக் கடினமான ஒன்றாச்சே.
அதுக்கு ஏதாவது லாஜிக் இருகிறதா. அல்லது அது பஞ்சாங்கத்தின் அடிபடையில் வருகிறதா.
அது பற்றிய லாஜிக்கையும் யாரவடு தந்தால் எனக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சத்ரியன்
21-06-2007, 09:19 AM
நான் முன் மொழிகிறேன் நண்பரே இது நல்ல யோசனை.தலைவர் இதை கண்டிப்பாக பரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன்.:icon_good:

ஷீ-நிசி
21-06-2007, 10:29 AM
வரவேற்க்கப்படவேண்டிய முயற்சிதான்... நன்றி நண்பரே!

அமரன்
21-06-2007, 10:37 AM
தமிழ் ஆண்டு பற்றி சரியான விபரங்கள் எனக்குத் தெரியாது. தமிழுக்கு தனி ஆண்டு இருந்தால் வரவேற்கத்தக்க விடயம்.

சுட்டிபையன்
21-06-2007, 10:41 AM
தமிழ் ஆண்டு பற்றி சரியான விபரங்கள் எனக்குத் தெரியாது. தமிழுக்கு தனி ஆண்டு இருந்தால் வரவேற்கத்தக்க விடயம்.

இன்றைய திகதி தமிழ்படி

திருவள்ளுவர் ஆண்டு: 2038 ஆனிமாதம் மூன்றாம் திகதி :D:D:D
யாராவது பாவிக்கின்றவர்களா இப்படி?

அமரன்
21-06-2007, 10:43 AM
இன்றைய திகதி தமிழ்படி

திருவள்ளுவர் ஆண்டு: 2038 ஆனிமாதம் மூன்றாம் திகதி :D:D:D
யாராவது பாவிக்கின்றவர்களா இப்படி?
ஓ இதுவா... அப்படியென்றால் வரவேற்கத்தக்க விடயம்

ananthu123
21-06-2007, 10:52 AM
பாவிக்கவைக்கவேண்டும் .தானே எந்த காலத்தில் பாவித்தார்கள்.தேசிய அரசு தொலைக்காட்சியில் வலுக்கட்டாயமாய் சமஸ்கிருத செய்திகளை வாசிப்பதில் தலைசெய்திவாசிப்பு யாருமே வழக்கில் இல்லாத மொழியை அவர்கள் எப்படி திணிக்கிறார்கள்....ஆனால் நாம் வழக்கில் பேசும் உலகம் முழுதும் இருக்கும் தமிழர்கள் பேசும் அதுவும் தமிழ் மன்றம் என தலைப்பு இருக்கும் தளத்தில் தமிழ் ஆண்டு கேட்பதில் என்ன தயக்கம்!.....அழுதால்தான் கிடைக்கும்!

pills11.com ;))

சூரியன்
21-06-2007, 01:10 PM
நல்ல யோசனை நண்பரே