PDA

View Full Version : உடலுக்குள் ஒரு அற்புத தொழிற்சாலை



namsec
20-06-2007, 01:00 PM
உடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ எடையுடைய கல்லீரல் தான் 500க்கும் மேற்ப்பட்ட ரசாயன இயக்கங்களை நிகழ்த்துகிறது. இரும்பு, மெக்னீசியம், செம்பு, ஜிங்க், கோபால்ட் என்று ஏகப்பட்ட உலோகங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்தில் உள்ள தலைசிறந்த நிபுணர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும் உருவாக்க முடியாத ஓர் அற்புதமான தொழிற்சாலைத் தான் இந்த கல்லீரல்.


நாம் உண்ணும், உணவில் இருந்து இரைப்பை பிரித்தேடுக்கும் சக்தி இரத்தக்குழாய் மூலமாக முதலில் செல்லுமிடம் கல்லீரல். இந்தசக்தியை உடலில் இருக்கும் செல்களுக்கு தேவைப்படும் வகையில் மேலும் உடைத்து ரசாயன மாற்றம் நடத்தி இரத்தமூலமாக அனுப்பி வைப்பதும் கல்லீரல்தான்.

கல்லீரல் ஒரு ஸ்டோர் ரூம் மாதிரி. உணவிலிருந்த்து எடுக்கபடும் புரதம், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்களை தன்க்குள் சேகரித்து வைப்பதும் இதுதான். வேறுமனே சேகரித்து வைப்பதோடு நிறுத்திகொள்ளாமல், அதைபதப்படுத்தி சேகரித்து வைக்கிறது. தேவைப்படும் நேரங்களில் தேவைப்படும் சக்தியை தேவைப்படும் பகுதிக்கு இது அனுப்பிவைக்கும். கல்லீரல் இந்தசேமிப்பு வேலையை செய்யாவிட்டால் யாரும் உண்ணாவிரதம் இருக்க முடியாது. ஏனென்றால், சாப்பிடாமல் இருக்கும் போழுது ஏற்படும் சக்தி இழப்பை ஈடுகட்டுகிறது இது. வறட்சி, பஞ்சம் போன்ற காலங்களில் சில நாடுகளில் பலர் நாட்கணக்கில் சக்திகொடுக்கும் அளவுக்கு கல்லீரல் புரதம், கார்போஹைட்ரேட் இருக்காது. இது போன்ற சமயங்களில் உடலில் பல்வேறு பகுதிகளில் படிந்திருக்கும் கொழுப்பிலிருந்த்து உடலில் உள்ள செல்கள் சக்தியை உறிந்த்து எடுத்துக்கொள்ளும். இது மிகவும் ஆபத்தானது.

கல்லீரல் விசத்தை முறிக்கும் வேலையையும் செய்கிறது. போதை பொருட்கள், தவறுதலாக சாப்பிடும் உணவில் ஏற்ப்படும் விசத்தன்மையை நீக்குவதும் கல்லீரல் தான். போக்குவரத்து நெரிசலில் ஏற்ப்படும் புகையையும், தூசியையும் நாம் சுவாசிக்கும் போது அந்த நச்சுக்களை செயலிழக்கச் செய்வதும் கல்லீரல் தான். கல்லீரல் இந்த வேலையை செய்யாவிட்டால் வாகனங்கள் வெளிப்படுத்தும் புகையும், கிளப்பும் துசியுமே நம்மை சாகடித்துவிடும்.

நமது உடலில் எங்காவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள்ளாகவே இரத்தம் வருவது நின்று விடுகிறது. இதற்கு காரணம் வெட்டுகாயம் ஏற்ப்பட்ட இடத்தில் இரத்தம் கட்டிவிடுகிறது. இரத்தத்தை கட்டவைப்பது கல்லீரல் தயாரிக்கும் ஒரு இரசாயனம் தான். கல்லீரல் மட்டும் இதை செய்யாவிட்டால் உடலில் இருக்கும் இரத்தம் அத்தனையும் வெளியேறி இறந்து போவதற்க்கு நாம் 'சவரம்' (ஷேவ்) செய்யும் போது ஏற்ப்படும் வெட்டுக்காயமே போதுமானதாக இருக்கும்.

கல்லீரலில் ஏற்ப்படும் பாதிப்பு தற்காலிகமானது தான். தகுந்த சிகிச்சை கொடுத்தால் குணப்படுத்தி விடலாம். ஆனால், ஒருவர் பாட்டில், பாட்டிலாக மது குடித்து வந்தால் மதுவில் இருக்கும் விஷத்தை கல்லீரல் தொடர்ந்து முறித்துக்கொண்டேவரும். மது, தன்னை 75 சத வீதம் கெட்டு சீரழிக்கும்வரை கல்லீரல் மவுனமாக இருக்கும். அதன் பிறகு தான், ஐயோ, இனிமேல் என்னால் முடியாது என்று கல்லீரல் முதல் சமிக்ஞை கொடுக்கும். இதன் பிறகு அழிந்துவிட்ட 75 சதவீத கல்லீரலை குணப்படுத்த முடியாது. மெல்ல மரணத்தை தழுவ வேண்டியது தான்.

ந*ன்றி : தினத் த*ந்தி 20/06/2007

ஓவியா
20-06-2007, 02:54 PM
அருமையான பதிவு.

கல்லீரலினால் மரணத்தை தழுபுவர்கள் எங்கள் நாட்டில் அதிகம், காரணம் விலைக்குறைவான மதுவகைகள், அவை முதலில் உலை வைப்பதே கல்லீரலுக்குதான்.

நன்றி: தினத்தந்தி
நன்றி: நாம்செக் அண்ணா.