PDA

View Full Version : முரண்பாடு....!



வசீகரன்
20-06-2007, 12:21 PM
முரண்பாடு....!


நிலவு
பூமியில் இருந்து பார்க்கையில்
அழகாகத் தெரியும் − அதே நிலவுதான்
கிட்டப்போய்ப் பார்த்தால்
கரடுமுரடய் கிடக்கிறது என்கிறது... விஞ்ஞானம்...!

விஞ்ஞானம் சொன்ன... அதே நிலவைத்தான்
சர்க்கரைநிலவு.... தங்கநிலவு....
வெள்ளிநிலவு... வட்டநிலவு...
வண்ணநிலவு ...என்கிறது... கவிதை...!

விஞ்ஞானமும் கவிதையும்
அப்படிச்சொன்ன... அதே நிலவுதான்
ஆலகால விஷம் தின்ற
நீலகண்டன் தலைக்குமேல்
வளர்கின்ற பிறையாகவும்....!



முரண்பாடு....!

சூரியன்
20-06-2007, 12:24 PM
சற்று தெளிவாக எழுதியிருக்கலாம்

இருப்பினும் அருமை

ஷீ-நிசி
20-06-2007, 12:31 PM
என்ன சொல்ல வருகிறீர்கள் வசீகரன்.....

இளசு
20-06-2007, 06:48 PM
நிலவும் பல முரண்பாடுகளைச் சுட்ட
நிலவை வைத்து சொன்ன கவிதை நன்றே

பாராட்டுகள் வசீகரன்..

இங்கேயும் பல முரண்களைக் காணலாம் நீங்கள்:


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8044

பென்ஸ்
20-06-2007, 06:54 PM
ஆம் இளசு... முரண்கவிதை என்றது பாரதியின் நினைவுதான் வந்தது...

வசீகரன்... தொடருங்கள் வாசிக்கா காத்திருக்கிறோம்.

அரசன்
25-06-2007, 05:01 AM
எதையும் இருக்கும் இடத்தில் வைத்து ரசித்தால்தான் அழகு!

அமரன்
17-07-2007, 09:15 AM
விஞ்ஞானம் சொல்லும் முரண் அழகு..ஆனாலும் அந்த முரணில் கருத்துச் சொல்லவில்லையோ என நினைத்தேன்...முதல் பந்தியை கீழே போட்டால் அர்த்தம் கிடைக்கும் என நினைகின்றேன். எதையும் ஆராய்ந்து பாருங்கள் என்ற கருத்துடன் கூடிய முரண் கவிதை கிடைத்திருக்கும்.



சர்க்கரைநிலவு.... தங்கநிலவு....
வெள்ளிநிலவு... வட்டநிலவு...
வண்ணநிலவு ...என்கிறது... கவிதை...!

அதே நிலவுதான்
ஆலகால விஷம் தின்ற
நீலகண்டன் தலைக்குமேல்
வளர்கின்ற பிறையாகவும்....!

பூமியில் இருந்து பார்க்கையில்
அழகாகத் தெரியும் − அதே நிலவுதான்
கிட்டப்போய்ப் பார்த்தால்
கரடுமுரடய் கிடக்கிறது என்கிறது... விஞ்ஞானம்...!


தப்பென்றால் மன்னித்து விடுங்கள் வசீகரன்...