PDA

View Full Version : சமஸ்கிருதம் - இன்று சில வார்த்தைகள்



leomohan
20-06-2007, 06:02 AM
இந்த பகுதியில் தினமும் சில வார்த்தைகள் இட முயல்கிறேன்.

நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் பதங்களை தமிழில் இட்டால் அதற்கான சமஸ்கிருத வார்த்தையும் தர முயற்சிக்கிறேன்.

பல வார்த்தைகள் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதால் இது மிகவும் சுலபமாகிவிடும்

देवः - தேவஹ - கடவுள்
देवी - தேவி - பெண் கடவுள்
मित्रम् - மித்ரம் - நண்பர்
पिता - பிதா - தந்தை
माता - மாதா - தாய்

பாரதி
20-06-2007, 12:33 PM
நன்றி மோகன்.

பென்ஸ்
20-06-2007, 12:59 PM
நன்றி மோகன்...
நல்ல பணி, கற்பியுங்கள்.. கற்றுகொள்கிறேன்

aren
20-06-2007, 01:47 PM
சம்ஸ்கிரதம் இப்பொழுது பேச்சு மொழியில் இல்லை. அதற்கு பதிலாக ஹிந்தி கற்றுக்கொடுத்தால் நம் மக்கள் வடமாநிலங்களுக்குச் சென்றால் பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

leomohan
20-06-2007, 02:14 PM
நன்றி பாரதி, பென்ஸ், ஆரேன்.

ஹிந்தி பாடமும் ஆரம்பிக்கிறேன் ஆரேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

இணையத்தில் சமஸ்கிருத ஸ்லோகங்களின் அர்த்தங்களை கொண்டு பல்வேறு கருத்து இருப்பதாலும் சமஸ்கிருதம் என்ன என்றே அறியாமல் பலர் கருத்துக்கள் கூறியதாலும் அதை தொடங்கினேன். மக்களே கற்று படித்து பிறகு அந்த ஸ்லோகங்கள் வெறும் பிதற்றலா அல்லது உபயோகமானவையா என்ற முடிவுக்கு வரட்டுமே என்று தான்.

காரணம் இப்போதெல்லாம் இணையத்தில் சமஸ்கிருதத்தை படிக்காமல் புரி்ந்துக் கொள்ளாமல் கேவலப்படுத்தவது மிகவும் fashion ஆகிவிட்டது.

நன்றி

shivasevagan
20-06-2007, 02:31 PM
அரென் நண்பரே! சமஸ்கிருதம் படித்தால் இந்தி எளிதாக கற்றுக் கொள்ளலாம். அதைப் போல இந்தி படித்தாலும் சமஸ்கிருதம் எளிதாக கற்றுக் கொள்ளலாம்.

namsec
20-06-2007, 03:21 PM
ஹ்ருஷ்யாமி

leomohan
21-06-2007, 04:52 AM
नाम - நாம - பெயர்
पुत्रः - புத்திரஹ - மகன்
पुत्री - புத்ரி - மகள்
वाहनम् - வாஹனம் - வாகனம்
मम - மம - என்



வியப்பாக இருக்கிறது அல்லவா. இந்த வார்த்தைகளை நாம் ஏற்கனவே அறிவோம். அதனால் தான் சொல்கிறேன் எழுத படிக்க தெரிந்துவிட்டால் நம்மிடம் உள்ள vocabulary வைத்து சுலபமாக கற்கலாம்.

தொடரும்

leomohan
23-06-2007, 05:20 AM
भ्राता - சகோதரன் - ப்ராதா
स्वसा - சகோதரி - ஸ்வசா
भर्ता - கணவன் - பர்தா
भार्या - மனைவி - பார்யா
नरः - நரஹ - மனிதன்

பாரதி
23-06-2007, 01:09 PM
नाम - நாம - பெயர்
पुत्रः - புத்திரஹ - மகன்
पुत्री - புத்ரி - மகள்
वाहनम् - வாஹனம் - வாகனம்
मम - மம - என்


நன்றி மோகன்.

இதில் "புத்ர" என்று மட்டும் சொல்வது சரியானதா..? 'ஹ' என்பதை கூற வேண்டுமா..?

ஜோய்ஸ்
23-06-2007, 02:35 PM
மோகன் ஐயாவே,
லங்கணம் பரம ஒவ்ஷதம்,என்றால் என்ன ஐயா?

leomohan
23-06-2007, 05:13 PM
நன்றி மோகன்.

இதில் "புத்ர" என்று மட்டும் சொல்வது சரியானதா..? 'ஹ' என்பதை கூற வேண்டுமா..?

ஹ எழுதும் போது பயன்படுத்தலாம். பேசும் போது தவிர்க்கலாம்.

leomohan
23-06-2007, 05:14 PM
மோகன் ஐயாவே,
லங்கணம் பரம ஒவ்ஷதம்,என்றால் என்ன ஐயா?

பரம என்றால் அதி சிறந்த

ஔஷதம் என்றால் மருந்து


முதல் வார்த்தை சரியாத புரியவில்லையே. சமஸ்கிருத மூலம் தர முடியுமா அல்லது எந்த இடத்தில் வந்தது என்று சொல்ல முடியுமா. இணையத்தில் கண்டிருந்தால் அதன் தொடுப்பை தாருங்களேன்.

leomohan
11-07-2007, 04:36 PM
மன்னிக்க வேண்டும் நேரமின்மையால் தாமதம். இன்னும் சில நாட்களில் ரொட்டீன் சரியாகிவிடும்.

இன்று சில வார்த்தைகள்

ஆண்பால் வார்த்தைகள்
मयूरः - மயூரஹ - மயில்
वानरः - வானரஹ - வானரம், குரங்கு
गजः - கஜஹ - யானை
मार्जारः - மார்ஜாரஹ - பூனை
अश्वः - அஸ்வஹ - அஸ்வம், குதிரை