PDA

View Full Version : கலைவேந்தனின்.....காதல் கதை! பகுதி-ஐந்து



கலைவேந்தன்
19-06-2007, 09:07 AM
கவிஞனின் துன்பத்திற்கு

புன்னகை மருந்து பூசினாள்..

மெல்ல மெல்ல இருவரது உள்ளமும்

ஒட்டி உறவாடியது...

ஆனால்

ஒருவரை ஒருவர்

மூச்சுக்காற்றால் கூடத்

தொட்டுக்கொள்ளவில்லை

இருவருக்கும் இடையில் பண்பாடு

கை கோர்த்து உலவியது...

அவனது அர்த்தமுள்ள பார்வையை

'' இந்தப் பிறவியில் மட்டுமல்ல

வரும் பிறவி தோறும்

இருவரும் கைகோர்த்து

உலாவரவேண்டும்.....''

என்று அவள் மொழி பெயர்த்தாள்....

கடவுளுக்குச் சூட்டக் கூட

பூ வாங்கியறியாத அவன்

அவளுக்கு அழகூட்ட

பூக்கடை தோறும் மலர்களின்

விலாசம் விசாரித்தான்...

அவள் கன்னங்களின் ஒப்புமையால்

ரோஜா மலர்

அவளால் அழகு பெற்றது....

முதல் முறையாக அவன் இதயம்

ஒருகணம் நின்றது!

இளசு
24-06-2007, 09:57 AM
பரிசுகள், பொருட்களால் காதலின்
திடம் கூட்டும் அடுத்த கட்டம்..

அடுத்து என்ன? தொடருங்கள்.

பாராட்டுகள் கலைவேந்தன்.

தமிழ் உங்கள் கைவந்த கலையாக பரிமளிப்பதைக் கண்டு
வாழ்த்தும் வியப்பும் ஊக்கமும் வரவேற்பும்..

கலைவேந்தன்
24-06-2007, 12:20 PM
பின்னூட்டம் அதிகம் இல்லையெனினும் உங்கள் ஒருவருக்காக வேயாயினும் நான் தொடர்ந்து தருகிறேன் நண்பரே!
தொடர்ந்து வாருங்கள்.

ஷீ-நிசி
24-06-2007, 01:08 PM
கடவுளுக்கு பூக்கள் வாங்கிட விருப்பமில்லாதவன் காதலிக்கு பூக்கள் வாங்க ஆரம்பித்தான். காதலின் சக்தி...

உள்ளம் ஒட்டிய காதல், மூச்சுக்காற்றாலும் கூட தொட்டுக்கொள்ளவில்லை என்பதிலேயே பண்பாடு இருவருக்குமிடையில் அமைதியாய் அமர்ந்திருக்கிறது. தெளிந்த நீர்போன்ற காதல்!

வாழ்த்துக்கள் வேந்தரே!

கலைவேந்தன்
24-06-2008, 09:19 AM
நன்றி நண்பர்களே!

மீரா
27-06-2008, 09:00 AM
இந்த அழகான காதல் க(வி)தைக்கு பின்னூட்டம் இல்லையென நினைக்காதீர் கலைவேந்தன்..... இதோ நானும் ஒருத்தியாய் உங்கள் வாசகியாய் தொடங்கிவிட்டேனே படிக்க... பின்னூட்டம் இட சமயம் இல்லாது போகலாம் ஒருசிலருக்கு... ஆனால் படிக்க படிக்க மிக மிக அழகான ஒரு காவியமாய் உருப்பெறுகிறது உங்கள் கைவண்ணத்தால் இந்த அழகிய காவியம்.... கவிஞனுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்வான்.. ஆனால் தன் படைப்புகளை பாராட்டியோ இல்லை விமர்சனம் செய்யவோ தொடங்கினால் உண்மை மகிழ்ச்சியில் மூழ்குவான்.. அது தான் அவனுக்கு கிடைத்த கோடி ரூபாயாய் நினைத்து மகிழ்வான்..... நன்றி கலைவேந்தன்....

கலைவேந்தன்
18-07-2009, 04:21 PM
மிக்க நன்றி மீரா..!