PDA

View Full Version : கலைவேந்தனின்.....காதல் கதை! பகுதி-நான்கு



கலைவேந்தன்
19-06-2007, 09:03 AM
அன்றுவரை

பிறர் கூறிய காதல் அனுபவங்களே

அந்தக் கவிஞனின்

கவிதைகளாய்க் கருத்தரித்தது..

வாழ்வில் உணர்ந்த போது அவனுக்கு

வார்த்தைகள் திணறின...

அந்தக் கவிஞனைச் சந்திக்கும்வரை

ஆண்களைப் பொறுத்து அவள்

ஊமையாகவே இருந்தாள்...

அவளது நாணப் போர்வை

அவனது கவிதை வாளால் கிழிந்தது...

புதுப் பெண்மையுடன் அவள்

புத்துயிர்த்தாள்...

தாயின் முகவரி கண்டிடாத அவன்

முதன்முதலில்

தாயுள்ளம் அறிந்தான்....

காதலின் அர்த்தத்தை

காதலியாய் விளக்கினாள்...

மனைவியின் மகத்துவத்தை

மனத்தளவில் உணர்த்தினாள்...

ஆம்...

தாயாய் காதலியாய் மனைவியாய்

பரிணமித்தாள்...

இருவரும் தததமக்குள்

குழந்தை ஆயினர்....

தமக்குள் சிறு குடில் கட்டினர்..

உறவுகளைத் தம்முடன் ஒட்டினர்..

மனத்தளவில் அந்தக் குழந்தைகள்

குழந்தைகளை ஏந்தினர்..

மகிழ்ச்சிக் கடலினுள் நீந்தினர்...

இளசு
24-06-2007, 09:53 AM
பரிணாமங்கள் மாறி மாறி − காதல்
பரிமாணங்கள் கூடிக் கூடி..

எதிர்பார்ப்புகள் அதிகமானால் − நிறைவேறா
ஏமாற்றங்களும் அதிகமாகுமே!!!

கொஞ்சம் பதைப்புடன் தொடர்கிறேன்.

பாராட்டுகள் கலைவேந்தன்.

ஷீ-நிசி
24-06-2007, 01:03 PM
அடுத்தவரின் காதலில் இவன் கவிதைகள் அரங்கேறின... அன்று எழுதியது விரல்கள்! இவன் காதல் கவிதை ஏறியபோது வார்த்தைகள் தடுமாறுகின்றன! இன்று கவிதை எழுதுவது அவன் மனம் அல்லவா!

அவளின் நாணம், அவனை சந்தித்தபின் அவளிடம் அவனிடம் மட்டும் காணவில்லை.

வளமான காட்சிகள்!

வாழ்த்துக்கள் வேந்தரே!

கலைவேந்தன்
24-06-2008, 09:14 AM
நன்றி நண்பர்களே!

மீரா
27-06-2008, 08:56 AM
அவளது நாணப் போர்வை
அவனது கவிதை வாளால் கிழிந்தது...

இத்தனை அழகாய் ஒரு கவிஞன் ரசித்து எழுதுவானா??? ஆஹா அருமையான வார்த்தை ப்ரயோகம்..... காதலியை மனைவியாய் தாயாய் அழகாய் மனதளவில் வரித்த கவிஞனே அடுத்து என்ன ஆயிற்று?? குழந்தைகளை மனதளவில் சுமந்தீர்கள் சரி.... கல்யாணம் எப்ப நடந்தது.... எதிர்ப்பார்ப்பில் நானும்.... நன்றி கலைவேநதன்...

கலைவேந்தன்
18-07-2009, 04:18 PM
மிக்க நன்றி மீரா..!