PDA

View Full Version : கலைவேந்தனின்.....காதல் கதை! பகுதி-மூன்று



கலைவேந்தன்
19-06-2007, 08:56 AM
இரண்டு நாட்கள் சந்திக்கவில்லை எனில்

இருவருமே இறந்து பிழைத்தனர்...

கண்கள் சந்திக்கும்போது

கண்ணீர்தான் சாட்சியாய்

உள்ளக்கூண்டில் ஏறி நின்றது....


அவள் வியந்தாள் இப்படி:

'' என் இதயக் கோயிலில்

இத்துனை விரைவில்

இவ்வளவு அழகாக

அன்புநீர் தெளித்து

அழகிய கவிக்கோலம்

போட்டது யார்?''


எப்போதாவது அவன் முகத்தில்

துன்பரேகை மின்னலிட்டால்

துடித்துப்போனாள் அவள்!

'' என் உள்ளக் கண்ணாடியை

உன்னிடம் ஒப்படைத்தேன்..

எச்சரிக்கைக் குறைவால்

உடைத்து விடாதே ''

கவிஞனின் இந்த வேண்டுகொள்

'' நான் உடைந்தாலும் என்றும் உடையாது

எந்தன் கண்ணாடி ''

என்ற பதிலுடன் முத்தமிட்டது!

இளசு
24-06-2007, 09:50 AM
மெல்லப் பிடித்தால் நழுவிவிடும்
இறுக்கப் பிடித்தால் அழுத்தம் வரும்..

இடையினப்பிடி தேவைப்படும் சில உள்ளன −
புறா, கண்ணாடி, காதல் இதயம், அரச உறவு இப்படி..

காலக்கண்ணாடி காட்டும் இக்
காதல் கண்ணாடியின் பின்னிலையை..

தொடர்கிறேன்.

பாராட்டுகள் கலைவேந்தன்.

ஷீ-நிசி
24-06-2007, 12:58 PM
இதயங்கள் இறுகிய பின்பு இரண்டு தினங்களும், வறண்ட தினங்கள்தான்.

நேருக்கு நேர் சந்திக்கும்பொழுது அவளை விட அவளின் கண்ணீருக்குதான் அக்காதலனை பார்த்திட அத்தனை காதல்...

எளிமையில் தவழ்கிறது கவிதை! வாழ்த்துக்கள்!

கலைவேந்தன்
24-06-2008, 09:12 AM
நன்றி இளசு அவர்களே!

நன்றி ஷீநிசி அவர்களே!

மீரா
27-06-2008, 08:53 AM
காதல் துளிர் விட ஆரம்பித்த தருணங்களில் சின்ன சின்ன பிரிவு கூட மலையளவு துன்பம் தருவது போல் இருந்தாலும் காணும் நேரத்தில் பேச மறப்பர்..... உண்மையே.... உணர்பவருக்கு புரியும் இந்த அழகான காதல் படுத்தும் பாடு... காதல் அழகிய வேலைப்பாடு நிறைந்த கத்தி போல..... காட்சி பொருளாகவும் வைக்கலாம்... ரசிக்கலாம்.... கொஞ்சம் அசந்தாலும் ஆளையே கொன்று விடும்... இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம்....

மிக அற்புதமாய் கொண்டு செல்கிறீர்கள் கலைவேந்தன்.....காதலிக்கு கவிதையாலே ஆபரணம் சூட்டும் பேறு எல்லோருக்குமே கிடைப்பதில்லை... அதே கவிஞன் நல்ல ரசிகனா இருப்பதால் மட்டுமே இந்த அதிர்ஷ்டம் வாய்த்துவிடுகிறது ஒரு சிலருக்கு... அந்த ஒரு சிலரில் உங்கள் காதலியும் ஒருவர்....

கலைவேந்தன்
18-07-2009, 04:14 PM
மிக்க நன்றி மீரா..!