PDA

View Full Version : கலைவேந்தனின்.....காதல் கதை! பகுதி-இரண்டு



கலைவேந்தன்
19-06-2007, 08:53 AM
அந்தக் கவிஞனின் கவிதை வேள்வி

அவளது

ஆர்வ நெய்யால் வளரத் தொடங்கியது...

இருவரரின் இடைவெளியும்

தளரத் தொடங்கியது...


அவளது முக விசாலம்

அவளது அக விலாசத்துடன்

அரவணைந்த ஒன்று...

கவிதைகளாலேயே அவளுக்கு

ஆபரணங்கள் அணிவித்தான்...

அகத்தில் மட்டுமல்ல

முகத்திலும் அவள் குழந்தையே!

அவளுக்குச் சிரிப்பைப் புகட்டினான்..

தனது சோகத்தை அகற்றினான்..

தனது பெருமைகளை மட்டுமல்ல

வறுமைகளையும் அவளுக்கு

அறிமுகப்படுத்தினான்...

அன்பு வார்த்தைகள் மட்டுமல்ல..

ஏழ்மை வாழ்க்கையும் எடுத்துக்கூறினான்..

அந்த

வெள்ளைச் சிரிப்புக்காரி...

உள்ளத்தை மட்டுமே வேண்டினாள்

உள்ளதை ஏற்றுக்கொண்டாள்...

இளசு
24-06-2007, 09:47 AM
காதலும் தமிழும் கைகோர்த்து வளர்வது
கண்ணுக்கும் மனதுக்கும் குளுமை அளிக்கிறது..

தொடர்கிறேன்..

பாராட்டுகள் கலைவேந்தன்.

ஷீ-நிசி
24-06-2007, 12:54 PM
கவிதைகள் என்னும் பாலத்தின் வழியே அவர்கள் காதல் வளர ஆரம்பித்தாகிற்று!


உள்ளத்தை மட்டுமே வேண்டினாள்

உள்ளதை ஏற்றுக்கொண்டாள்...


அழகிய வரிகள்!

கலைவேந்தன்
24-06-2008, 09:10 AM
நன்றி நண்பர்களே!

மீரா
27-06-2008, 08:49 AM
கவிதைகளாலேயே அவளுக்கு
ஆபரணங்கள் அணிவித்தான்...

உள்ளத்தை மட்டுமே வேண்டினாள்
உள்ளதை ஏற்றுக்கொண்டாள்...

வார்த்தை நயம் மிக அழகு..... நன்றி கலைவேந்தன்....

கலைவேந்தன்
18-07-2009, 04:13 PM
மிக்க நன்றி மீரா..!