PDA

View Full Version : கலைவேந்தனின்...காதல் கதை! பகுதி-ஒன்று



கலைவேந்தன்
19-06-2007, 08:46 AM
அவன்....

கல்லூரியில் நுழையும்போது

வெள்ளைத்திரையாகத்தான்

உள்ளத்திரை ஒளிர்ந்தது...

மங்கிய ஓவியமாகத்தான் அந்த

மங்கை முதலில் நுழைந்தாள்...

தனது கவிதைகளை

உரசிப் பார்க்கும்படி

அந்தக் கவிஞன்

அவளிடம் வேண்டினான்...

காகிதத்தின் கவிதையை மட்டுமா

அவனது சோக முகவரிக்ளையும்

அவள் சோதனை செய்தாள்...

உள்ளத்தின் ஓரத்தில்

சற்றே இடம் பிடித்தாள்...

விடிந்தும் விலகாத

விடியல் பனி போல்--அவன்

வியர்த்தான்..

பின்னர் அவளது காதலின்

மொழி பெயர்த்தான்....

கவிதைகளைப் பற்றிய விமரிசனத்துடன்

அவனைப்பற்றிய கரிசனமும் வெளியிட்டாள்...

அப்போது

உண்மைக்காதலின்

தரிசனமும் வெளிப்பட்டது....

அமரன்
19-06-2007, 09:02 AM
வெள்ளைத்திரை நட்சத்திரம்
சேர்ந்து வெள்ளித்திரையாகியாகிவிட்டது.
மங்கிய ஓவியமாக* நுழைந்தவள்
சோகத்தை மங்கச்செய்து
காதல் காவியம் எழுத தொடங்கிவிட்டாள்
தொடருங்கள் கலை.

இளசு
22-06-2007, 06:47 AM
சம்பவங்களில் கோர்வை நேர்த்தி
சொற்களின் கோர்வை அழகு..

படிக்க எளிமை + இனிமை..

பாராட்டுகள் கலைவேந்தன்!

பாரதி
22-06-2007, 07:48 AM
உள்ளத்திரை படங்களை, உள்ள படியே வடிப்பதில் மகிழ்ச்சி.
ஒரு கதை கவிதையாகிறதே...!
வாழ்த்துக்கள் நண்பரே.

ஷீ-நிசி
24-06-2007, 12:50 PM
கவிதைகளை மட்டும் சுமந்தபடி நுழைந்தவன், மங்கையவளின் தரிசனத்திற்கு பிறகு காதலையும் சுமக்க ஆரம்பித்துவிட்டான்.. கவிதைகளை மட்டும் நேசித்தவள், கவிஞன் அவனின் காதலையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டாள்....

வார்த்தைகள் மிக அழகாக, எளிமையாக அமைந்திருக்கின்றன. வாழ்த்துக்கள் வேந்தரே!

சூரியன்
24-06-2007, 03:17 PM
கவிதைகளில் வார்த்தைகள் அருமை

அனுராகவன்
17-06-2008, 02:39 PM
அருமை கலை..
வாழ்த்துக்கள்!!

கலைவேந்தன்
17-06-2008, 02:56 PM
வெள்ளைத்திரை நட்சத்திரம்
சேர்ந்து வெள்ளித்திரையாகியாகிவிட்டது.
மங்கிய ஓவியமாக* நுழைந்தவள்
சோகத்தை மங்கச்செய்து
காதல் காவியம் எழுத தொடங்கிவிட்டாள்
தொடருங்கள் கலை.

நன்றி நண்பரே தொடர்ந்து வாசியுங்கள் நண்பரே!


சம்பவங்களில் கோர்வை நேர்த்தி
சொற்களின் கோர்வை அழகு..

படிக்க எளிமை + இனிமை..

பாராட்டுகள் கலைவேந்தன்!

நன்றி இளசு !


உள்ளத்திரை படங்களை, உள்ள படியே வடிப்பதில் மகிழ்ச்சி.
ஒரு கதை கவிதையாகிறதே...!
வாழ்த்துக்கள் நண்பரே.

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே!

கவிதைகளை மட்டும் சுமந்தபடி நுழைந்தவன், மங்கையவளின் தரிசனத்திற்கு பிறகு காதலையும் சுமக்க ஆரம்பித்துவிட்டான்.. கவிதைகளை மட்டும் நேசித்தவள், கவிஞன் அவனின் காதலையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டாள்....

வார்த்தைகள் மிக அழகாக, எளிமையாக அமைந்திருக்கின்றன. வாழ்த்துக்கள் வேந்தரே!

நன்றி ஷீ நிசி அவர்களே!


கவிதைகளில் வார்த்தைகள் அருமை

நன்றி நண்பரே!


அருமை கலை..
வாழ்த்துக்கள்!!

உங்கள் ஆதரவுதான் அனு! எல்லா பாகமும் படியுங்கள்!

அனுராகவன்
23-06-2008, 05:28 AM
மயங்கிய நாணம்
தொண்மை காதல்
சொன்ன வார்த்தை
என் கனவே!!

மீரா
27-06-2008, 08:47 AM
காதல் என்னவென்று அறியாத பருவத்தில் கவிதையாய் காதலை மனதில் படர செய்த விதம் அழகு..... நன்றி கலைவேந்தன்....

கலைவேந்தன்
18-07-2009, 04:09 PM
மிக்க நன்றி மீரா...!