PDA

View Full Version : இந்தியப் பொருளாதாரம்கலைவேந்தன்
19-06-2007, 08:35 AM
இந்தியப் பொருளாதாரம்

இங்கே...
கலை மகளுக்குக்
கை விலங்கிட்டுவிட்டு
அலை மகளுக்கு
ஆரத்தி எடுக்கின்றனர்...

திருவோட்டைக் கூட
அரை விலைக்கு விற்றுவிட்டு
கையேந்துவதற்குத் தயாராய்
அரசாங்கம்....

வாய் கொள்ளும் உணவுக்காக
கரும்பு வயலையே


துவம்சம் செய்யும்
அதிகார யானைகள்...

என்றாவது விடியுமென்று
ஏற்றி வைத்த
நம்பிக்கை விளக்குடன்
திருவாளர் பொதுஜனம்....

கேசுவர்
19-06-2007, 08:43 AM
வாய் கொள்ளும் உணவுக்காக
கரும்பு வயலையே
துவம்சம் செய்யும்
அதிகார யானைகள்...
−−−−−−−−−−
நல்ல வரிகள், நீங்கள் சொல்லறது சரிதான் அதிகார யானைகளின் அட்டுழியம் என்று ஒழியுமோ .....

இப்படிக்கு
நம்பிக்கையுடன் காத்திருக்கும் ந*ல்ல யானைங்கோ

ஆதவா
19-06-2007, 03:05 PM
எளீமையாகவும் நேர்த்தியாகவும் தேசப்பற்றோடும் கலந்து இருக்கிறது
கவிதை,. ஒப்பீடு மிக அருமை வேந்தன்...

நம்பிக்கை இரண்டு முறை வந்திருக்கிறது.. வேண்டியதில்லையே??

தேசத்தின் நாசம் பற்றி சொல்லவேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே போகலாம். விடியும் என்று எண்ணை தீரும் விளக்கோடு செத்துப் போகிற திரிகளாய் நம் மக்கள் உழன்றுகொண்டிருக்கிறார்கள்>

அரசாங்கத்தின் அலட்சியம்
அரசியல் வாதிகளின் சொத்து சேர்க்கும் பண லட்சியம்..

பொதுஜனங்களைப் பொறுத்தவரை ஏமாளிகளாய் காட்சியளிக்கும் சர்கஸ் பொம்மை தான்.. இந்த தலைப்பில் முழுவிஷயமும் அடங்கவில்லை... வேறும் கலந்ந்துவருகிறது.. கவனிக்கவும்....

கலைமகளின் நிர்வாண கோலம்
பிறகு இந்திய பொருளாதாரம்
துஷ்பிரயோக யானைகள்
ஏமாளி ஜனங்கள்...

பலே

மனோஜ்
19-06-2007, 03:14 PM
நாட்டின் நடப்பு
நடுத்தெருவில் அம்பலம்
நடக்குமா நடிகர்களின் நயவஞ்சகம்

அருமையான கவிதை

அமரன்
19-06-2007, 05:01 PM
சிறந்த சமூகக்கவிதை கலைவேந்தன்.
என்ன செய்வது கலைகளை விலங்கிடுவோர் ஒரு பக்கம். கலைகளை விற்பனை செய்வோர் பக்கம்.
ஆதிகாலத்தில் விற்போர் செய்து சொத்துச் சேர்த்தனர்.
இப்போ பலவற்றை விற்போர் சொத்துச்சேர்க்கிறார்கள்.
அவர்கள் எதை வித்தாலும் பரவாயில்லை..
மக்களின் நம்பிக்கையையும் விற்க*த்தொடங்கிவிட்டனர்...
ஆணி அடித்த மாதிரியான வரிகள்....
பாராட்டுகள்....
சின்ன விண்ணப்பம் வெள்ளை வர்ணத்தை மாற்றமுடியுமா படிக்கும்போது கண்ணை என்னமோ செய்கிறது.

mgandhi
19-06-2007, 06:29 PM
வாய் கொள்ளும் உணவுக்காக
கரும்பு வயலையே
துவம்சம் செய்யும்
அதிகார யானைகள்...


நல்ல வரிகள்,

சிவா.ஜி
20-06-2007, 04:38 AM
அரசாங்க அவலத்தை அப்பட்டமாய் உரித்துக்காட்டிய கவிதை.நல்ல உவமை.நம்பிக்கையோடு கவிதையை முடித்த விதம் அருமை. ம்ம்ம்...எல்லாமே நம்பிக்கையில்தானே இருக்கிறது.

கலைவேந்தன்
07-09-2007, 06:12 PM
பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்!

இளசு
07-09-2007, 08:22 PM
தொழில் மயமாகுதல், உலகச்சந்தை − ஓர் அளவு வரை தவிர்க்கமுடியாதவை..

ஆனால் விவசாயத்திலும் மேலைநாடுபோல் ஓர் உயர்நிலையை எட்டிவிட்டு
பின்னர் மற்றதில் வளர்ந்தால் − சீராக இருக்கும்..

இப்போது சேற்றுப்புண் பாதங்கள், சப்பாணி கால்கள், நிர்வாண இடுப்புடன்
''புஷ்'' கோட்டு மார்பிலும், லண்டன் தொப்பி தலையிலும் அணிந்த'
வினோத நிலையில் நம் தேசம்..

எல்லா தலைவர்களும் − விவசாய/கிராமப் பொருளாதார முன்னேற்றமின்றி
உண்மையான வளர்ச்சி இல்லை.. வெறும் வீக்கம் எனச் சொல்லத்தான் செய்கிறார்கள்.. (அண்மையில் பிரதீபா பாட்டில் திருப்பெரும்புதூர் உரையிலும் இதைச் சொன்னார்..)

நிதர்சனம்?

சிவகங்கைச் சீமை சிதம்பரனார்க்கே தரிச்னம்!!

பாராட்டுகள் கலைவேந்தன்..

அறிஞர்
07-09-2007, 08:26 PM
அன்பரே.. இந்திய நிலை பற்றிய அலசல் கவிதை அருமை....

திருவாளர் பொதுஜனத்திற்கு என்றுதான் உண்மையான விடிவு கிடைக்குமோ..

aren
07-09-2007, 11:31 PM
இந்தக் கவிதையின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இது பத்து வருடங்களுக்கு முன்பாக வந்திருந்தால் நிச்சயம் சரியாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இப்பொழுது கல்வியில் பல மடங்கு வளர்ந்துவிட்டது. மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே கல்வி என்று இருந்த நிலை இப்பொழுது மாறி அனைத்து தரப்பினருக்கும் ஏதுவானதாக மாறிவிட்டது. பொறியியல் பட்டப்படிப்பு என்பது ஏட்டுக்கனியாக இருந்த காலம் மாறி அனைவரும் படிக்கும் வகையில் இருக்கிறது இன்றைய நிலமை. கிராமத்தில் இருப்பவர்களும் இன்று பட்டதாரியாக வேண்டும் என்று நினைத்தால் அது நிச்சயம் எளிதாக நடைபெறும் வகையில் இப்பொழுது நாடு இருக்கிறது.

யாரிடமும் இன்று இந்தியா கையேந்தும் நிலையில் இல்லை. அதற்கு மாறாக இந்தியா மற்ற ஏழை நாடுகளுக்கு எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பார்க்காமல் உதவும் வகையில் இந்தியாவின் பொருளாதார நிலை இன்று இந்தியாவிற்கு உள்ளது.

அரசியல்வாதிகளும் மாறிக்கொண்டுதான் வருகிறார்கள். தயாநிதி மாறன் கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை மக்கள் இப்பொழுது பேசுகிறார்கள். பிரஃவுல் படேல் இந்தியாவின் விமானநிலையங்களை மாற்றிவிட புறப்பட்டிருக்கிறார். டி.என்.பாலு தரமான ரோடுகளை கொடுக்க முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். லல்லுபிரசாத் யாதவ் (நம்பமுடிகிறதா?) ரயில்வேயை லாபகரமான நிறுவனமாக மாற்றிக்காட்டியிருக்கிறார். கமல்நாத் இந்தியாவின் வர்த்தகத்தை பெருக்க என்னென்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் செய்கிறோம் என்று வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை பிச்சு புடுங்குகிறார். ஒரு டாடாவும், ஒரு மிட்டலும் ஐரோப்பாவில் இருக்கும் பெரிய நிறுவனங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

இது இந்தியாவை அடுத்த நிலைமைக்கு மேம்படுத்தும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

உங்களுடைய அடுத்த கவிதை இந்த மாதிரி சில நல்ல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என்றே நம்புகிறேன்.

உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
08-09-2007, 05:40 AM
அன்பான கலை!
உங்கள் பல கவிதைகளுக்கு நான் பின்னூட்டமிடவில்லை, அதற்கு பிரதான காரணம் உங்கள் கவிதைகள் ஆழ்ந்து பின்னூட்டமிடப்பட வேண்டிய கருக்களைத் தாங்கி நிற்பதே.......

அவ்வளவு ஆழமாக கருவைக் கையாளும் திறமை உங்களது.....
அப்படியே இந்தக் கவிதையும்..........
அலை மகளும் தேவைதான், ஆனால் அலை மகளுக்காக கலை மகளைக் கைவிலங்கிடும் நிலை கொடுமையிலும் கொடுமை..........
அப்படிக் கைவிலங்கிட்ட அரசியல்வாதிகளைக் கைவிலங்கிட வேண்டுமென்ற எண்ணத்தை கட்டுப்படுத்த இயலவில்லை, உங்கள் கவிதையைப் பார்த்த பின்னர்.........
பாராட்டுக்கள் கலை........
தொடர்ந்து உங்கள் கவிக்குழந்தைகளை இங்கே தவழ விடுங்க........!