PDA

View Full Version : Sony நிறுவனத்தின் பெயரில் ஏமாற்று மோசடி..!



இதயம்
19-06-2007, 07:35 AM
Sony நிறுவனத்தின் Micro Vault என்ற பெயரில் போலியான 32 GB கொள்ளளவு கொண்ட ஃப்ளாஷ் மெமரி ஸ்டிக் சந்தைக்கு வந்துள்ளது. இதை என் நண்பர் 250 ரியால் கொடுத்து வாங்கி ஏமாந்துள்ளார். அதை வாங்கி 2 GBக்கு மேல் கோப்புகளை பதிவேற்றி அடுத்த கணிணியில் கொண்டு போய் பிரதி எடுக்க முயன்ற போது எந்த கோப்புகளும் திறக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அழிக்கவும் முடியவில்லை. இதனால் வெறுத்துப்போன நண்பர் என்னிடம் கொண்டு வந்தார். நான் முயற்சி செய்த போதும் அதே நிலை. இணையத்தில் இந்த பிரச்சினை பற்றி தேடிய போது இது போலியான பொருள் என தெரியவந்தது.

அது குறித்த ஒரு நண்பரின் கேள்வியும், அதற்கான பதிலும்:
http://sg.answers.yahoo.com/question/index?qid=20070613233444AAU33kp

இது சம்பந்தமாக அதில் உள்ள கோப்பை மீளப்பெறவும், அழிக்கவும் வேறு ஏதேனும் வழி இருந்தால் அறிந்தவர்கள் தெரிவியுங்கள். இதே போல் நண்பர்கள் யாருக்கேனும் இந்த அனுபவம் ஏற்பட்டிருந்தால் பகிர்ந்து கொள்ளவும். மற்ற நண்பர்கள் இது போன்ற ஏமாற்றுகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்கவும்.

அன்புரசிகன்
19-06-2007, 07:48 AM
சாதூர்யமாக செய்யப்படும் தப்புக்கள். என்னசெய்வது. நாம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதுதான். எனக்கு தெரிந்தால் கூறுகிறேன்.