PDA

View Full Version : பெருமூச்சு..!



அக்னி
18-06-2007, 06:29 PM
காத்திருந்து காத்திருந்து
நீ விரிந்தாய்...
காலம் என்னை
சேர்ந்திருக்க விடவில்லை...
உன் குரலின்
ரிதம் கேட்க
என் செவி தவம் கிடக்கும்...
உன் பெயர் சொல்லி,
என் நா இனிமை சுவைக்கும்...
ஆனால்,
சிரிப்பை மட்டுமே
மௌனமாகத் தருகின்றாயாம்...
அதுவும்,
பக்கத்திலிருப்பவர்
சொல்லித்தான் தெரிகிறது...
உனக்குப் புரியும் மொழி,
எனக்குத் தெரியவில்லை...
நான் பேசும் மொழி
உனக்குப் புரிகிறதா...
அதுவும் தெரியவில்லை...
ஆனாலும்,
என் மனதின் ஏக்கம்
சுமக்கத் தெரியாத
காற்று,
உன் குரலை சுமந்து வர
மட்டுமே தயாராக...
ஆனால்,
அதையாவது,
எப்போ எனக்குத் தருவாய்...
மழலையே..?
தொலைபேசி மட்டுமே
உணர்ந்திடும் என்
பெருமூச்சை...

எனது சகோதரியின் மழலை தந்த தாக்கம்...

ஓவியன்
18-06-2007, 06:37 PM
காற்று,
உன் குரலை சுமந்து வர
மட்டுமே தயாராக...
ஆனால்,
அதையாவது,
எப்போ எனக்குத் தருவாய்...
மழலையே..?
தொலைபேசி மட்டுமே
உணர்ந்திடும் என்
பெருமூச்சை...

புல*ம் பெயர்*ந்து வாழும் ஒருவ*ர் தான் இன்ன*மும் முக*ம் பாரா த*ன் ம*ழ*லையின் ஒரு சொல்லிற்காய் ஏங்குவ*தை த*ன் அக்னி வ*ரிக*ளில் தீட்டியுள்ளார் அக்னி!
அழகான கரு அதனை வெளிப்படுத்தும், வார்த்தைப் பிர*யோக*ங்க*ள் விய*க்க* வைக்கின்ற*ன!.

ந*ண்ப*ரே அக்னி ஒரு த*ந்தையின் ஏக்க*த்தைத் தெளிவாக* வெளிப்ப*டுத்திய*மை உங்க*ள் வ*ரிக*ளின் வெற்றி!

பாராட்டுக்க*ள் ந*ண்பா!

அன்புரசிகன்
18-06-2007, 06:39 PM
உனக்குப் புரியும் மொழி,
எனக்குத் தெரியவில்லை...
நான் பேசும் மொழி
உனக்குப் புரிகிறதா...
அதுவும் தெரியவில்லை...

புரிகிறது. நீங்கள் படும் அவஸ்த்தை

உன் குரலை சுமந்து வர
மட்டுமே தயாராக...
ஆனால்,
அதையாவது,
எப்போ எனக்குத் தருவாய்...
மழலையே..?
தொலைபேசி மட்டுமே
உணர்ந்திடும் என்
பெருமூச்சை...

அவளுக்கு புரிகிறதோ இல்லையோ எனக்குப்புரிகிறது உங்கள் பெருமூச்சு.

அழகான வரிகள் அக்னியாரே. வாழ்த்துக்கள்

அமரன்
18-06-2007, 06:39 PM
காகிதத்தில் கண்டோம்
அன்னையின் அன்பு
கடிதங்கள் தந்தன
சகோதர பாசம்

தொல்லைபேசிகள்
உறவுகளை இணைத்தன
தொலைபேசியாக
இடம்பிடித்தன

மழலை சத்தம்
அழுகையாய் இசைக்க
ஒத்திசைக்கிறதே
மாமனின் மனமும்

உறவுகளை இணைக்கும்
தொலைபேசிக்கு கூட
உணர்ச்சிகளையூட்டிய
அக்னியின் பெருமூச்சு
என் இதயத்தையும்தொட்டது

பாராட்டுகள் நண்பா

அக்னி
18-06-2007, 06:43 PM
நண்பர்களே! எனக்குத் திருமணமாகவில்லை...
அது எனது சகோதரியின் குழந்தை தந்த தாக்கம்...

புல*ம் பெயர்*ந்து வாழும் ஒருவ*ர் தான் இன்ன*மும் முக*ம் பாரா த*ன் ம*ழ*லையின் ஒரு சொல்லிற்காய் ஏங்குவ*தை த*ன் அக்னி வ*ரிக*ளில் தீட்டியுள்ளார் அக்னி!
அழகான கரு அதனை வெளிப்படுத்தும், வார்த்தைப் பிர*யோக*ங்க*ள் விய*க்க* வைக்கின்ற*ன!.

ந*ண்ப*ரே அக்னி ஒரு த*ந்தையின் ஏக்க*த்தைத் தெளிவாக* வெளிப்ப*டுத்திய*மை உங்க*ள் வ*ரிக*ளின் வெற்றி!

பாராட்டுக்க*ள் ந*ண்பா!




மழலை சத்தம்
அழுகையாய் இசைக்க
ஒத்திசைக்கிறதே
அப்பனின் மனமும்

பாராட்டுகள் நண்பா

அக்னி
18-06-2007, 06:48 PM
பாராட்டுக்க*ள் ந*ண்பா!நன்றி நண்பா!


அவளுக்கு புரிகிறதோ இல்லையோ எனக்குப்புரிகிறது உங்கள் பெருமூச்சு.

அழகான வரிகள் அக்னியாரே. வாழ்த்துக்கள்
தன்நிலை இன்னும் உணராத அந்தக் குழந்தையும் ஒரு பெண்தான்..
நன்றி அன்புரசிகன்...

காகிதத்தில் கண்டோம்
அன்னையின் அன்பு
கடிதங்கள் தந்தன
சகோதர பாசம்


நன்றி அமரா...
மன்றத்தில் கூடுதலானோரின் உணர்வலைகள் இந்த ஏக்கத்தை உணர்ந்த அலைகள்...

ஓவியன்
18-06-2007, 06:49 PM
நண்பர்களே! எனக்குத் திருமணமாகவில்லை...
அது எனது சகோதரியின் குழந்தை தந்த தாக்கம்...

இது எதோ ஒரு விளம்பரம் மாதிரி இல்லே இருக்கு!:icon_shout:

அமரன்
18-06-2007, 06:51 PM
இது எதோ ஒரு விளம்பரம் மாதிரி இல்லே இருக்கு!:icon_shout:

ஹி...ஹி.....அக்கினியாரே....விரைவில் மாட்ட வாழ்த்துகள்

அன்புரசிகன்
18-06-2007, 06:51 PM
இது எதோ ஒரு விளம்பரம் மாதிரி இல்லே இருக்கு!:icon_shout:

அதே அதே...
உங்ககிட்ட யாராவதும் இருக்கா? :cool-smiley-016: :icon_give_rose: :medium-smiley-029:

அக்னியார் வெயிட்டிங்... :icon_08:

அக்னி
18-06-2007, 06:55 PM
இது எதோ ஒரு விளம்பரம் மாதிரி இல்லே இருக்கு!:icon_shout:


ஹி...ஹி.....அக்கினியாரே....விரைவில் மாட்ட வாழ்த்துகள்


அதே அதே...
உங்ககிட்ட யாராவதும் இருக்கா? :cool-smiley-016: :icon_give_rose: :medium-smiley-029:

அக்னியார் வெயிட்டிங்... :icon_08:
இது என்னைத் தனியாகவே வாழச் செய்யும் சதி...
இது நியாயமா? அடுக்குமா?
வேணாம்... அழுதுடுவேன்...:traurig001: :traurig001: :traurig001:

ஆதவா
19-06-2007, 11:35 AM
ஏதோ காதல் கவிதை என்று நினைத்தேன்.. மழலை என்று போட்டு ஏமாற்றிவிட்டீரே அக்னி.. சரி..

கவிதை நன்றாக இருக்கிறது என்றாலும் இன்னும் கொஞ்சம் முயற்சிக்கவேண்டும். அக்னி ரொம்ப கடலை போடுவார் என்று கடைசி வரிகள் சொல்கிறது. மழலையை தன் நாயகியாக கவிதை வடித்திருப்பது சிறப்பு... அந்த சுகம் சிக்காத பெருமூச்சு பலபேருக்கு உண்டு..

உங்கள் சகோதரி குழந்தையின் தாக்கம் கவிதை எழுத வைத்திருக்கிறது என்றால் அந்த குழந்தைக்கு இருபது வயது இருக்குமோ? :D

நல்ல கவிதைக்கான வரிகள்.. கொஞ்சம் முயற்சியோடு,,, பாராட்டுக்கள்..........

அக்னி
19-06-2007, 12:52 PM
உங்கள் சகோதரி குழந்தையின் தாக்கம் கவிதை எழுத வைத்திருக்கிறது என்றால் அந்த குழந்தைக்கு இருபது வயது இருக்குமோ? :D

நல்ல கவிதைக்கான வரிகள்.. கொஞ்சம் முயற்சியோடு,,, பாராட்டுக்கள்..........

20 ஆக இன்னும் 19 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ஆதவா...:icon_rollout: :food-smiley-012:
தவிர ஈழத்தில் சகோதரி மகளை மணம் முடிப்பது வழக்கில் இல்லை...
தொலைபேசியில் குடும்பத்தினருடன் உரையாடினேன்...
ஒரு அழுத்தத்துடன் மனதில் வந்ததை அப்படியே தமிழ்மன்றில் கொட்டிவிட்டேன்...

சிவா.ஜி
20-06-2007, 04:35 AM
காதலிக்கு கவிதை எழுத நேரம் தேவையில்லை. இது போல மனதை பாதிக்கும் வரிகளை படைக்க உணர்தல் மிக அவசியம். தனித்து வாடும் மனதின் ஏக்கம் புலப்படுகிறது. யாழினிது,குழலினிது அதைவிட இனிது மழலை.அதை தொலைபேசியில கேட்கும்போது இப்போதே நேரில் பார்க்கமாட்டோமா என தோன்றும். சகோதரியின் குழந்தை மேல் இத்தனை பாசம் வைத்திருக்கும் உங்கள் மழலைகள் கொடுத்து வைத்தவர்கள். ஆடம்பரமில்லா அழகான வரிகள். பாராட்டுக்கள் அக்னி.

அக்னி
20-06-2007, 08:28 AM
ஆடம்பரமில்லா அழகான வரிகள். பாராட்டுக்கள் அக்னி.

நன்றி சிவா.ஜி.
உங்கள் பதிவு, எனது உணர்வுக்கு ஆறுதலளிக்கின்றது.

பென்ஸ்
21-06-2007, 11:52 PM
அக்னி...

உங்கள் கவிதைகளை வாசித்து வந்தாலும் உங்கள் கவிதைகளுக்கு விமர்சனம் இடாமல் இருந்ததற்க்கு "நாளைக்கு விரிவா போடலாம்" என்ற ஒரு கொடிய நோய் எனக்கு தற்சமயம் இருப்பதால்...


இது அப்படியே ஒரு பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுக்கள், மருமகள் மேல் எத்தனை அன்பூ வைத்திருந்திர் என்று அது சொல்லும்.

உங்கள் வலியை நானும் உணர்கிறேன் அக்னி...
ஒரே நிலையில் இருப்பவர்கள் ஒரே உணர்வுகளை புரிவதில் அதிசயம் இல்லையே...

அக்னி
22-06-2007, 12:03 AM
ஒரே நிலையில் இருப்பவர்கள் ஒரே உணர்வுகளை புரிவதில் அதிசயம் இல்லையே...

இயந்திர வாழ்க்கையாய் வெளிநாட்டில் இயக்கம்..,
தொடர்கின்ற உறவுகள் தொலைபேசியில் மட்டும்...
எனக்கும் உங்களுக்கும் மட்டுமா ஏக்கம்..?
இல்லை...
நாடுகள் மாறிய எங்களுக்கும்,
நாட்டிலேயே வாழும் நெஞ்சங்களுக்கும்,
பொதுவான,
உணர்வுகள் பெற்ற, விதியின் புதிய கோட்பாடு...
கால ஓட்டத்தில், இணைவுகள் சாத்தியமாகும்போது,
துயரங்கள் மறைந்துபோகும்...

அதுவரை ஏக்கங்களுடன்,
நாங்களும், எங்கள் உறவுகளும்...

உங்கள் உணர்வுப் பகிர்வுக்கும் நன்றி... பென்ஸ் அவர்களே...

lolluvathiyar
22-06-2007, 08:41 AM
காதல் கவிதை கொட்டி கிடக்கும் இந்த இடத்தில், குடும்ப கவிதை, தேச கவிதை கூட சுலபமாக கிடைக்கும்
ஆனால் ஒரு மழழையின் தாய் மாமன் எழுதிய கவிதை உன்மையில் கிடைக்காத ஒரு புதையல் போல எனக்கு கிடைத்தது

அக்னி
22-06-2007, 12:41 PM
காதல் கவிதை கொட்டி கிடக்கும் இந்த இடத்தில், குடும்ப கவிதை, தேச கவிதை கூட சுலபமாக கிடைக்கும்
ஆனால் ஒரு மழழையின் தாய் மாமன் எழுதிய கவிதை உன்மையில் கிடைக்காத ஒரு புதையல் போல எனக்கு கிடைத்தது

நன்றி வாத்தியார்...
உங்கள் வித்தியாசமான கருத்துப் பதிவுகளை எதிர்பார்ப்போரில் நானும் ஒருவன்...

ஷீ-நிசி
22-06-2007, 03:48 PM
நல்ல ஏக்கம் தொனிக்கின்ற கவி அக்னி!

மனோஜ்
22-06-2007, 04:05 PM
நன்றி அக்னி
நீங்கள் எந்நிலையோ அந்நிலை தான் நானும் என் ஒரே சகோதரி குழுந்தையை பார்கவில்லை கைபொசியை கையில் கொடுத்து பொசும் போது எற்பட்ட சுகம் உங்கள் கவிதையில் உணர்ந்தேன்
எனக்கு எழுத தோனவில்லை நிங்கள் எழதி விட்டிர்கள்
நானும் உங்களுடன் கவிதையில் ஒரு மனமாய் நன்றி நண்பாரே

அக்னி
30-06-2007, 02:16 AM
நல்ல ஏக்கம் தொனிக்கின்ற கவி அக்னி!
நன்றி ஷீ−நிசி... ஏக்கத்துடன்தான் கொட்டினேன்... கொட்டியதும் கொஞ்சம் ஆறுதல்...


நன்றி அக்னி
நீங்கள் எந்நிலையோ அந்நிலை தான் நானும் என் ஒரே சகோதரி குழுந்தையை பார்கவில்லை கைபொசியை கையில் கொடுத்து பொசும் போது எற்பட்ட சுகம் உங்கள் கவிதையில் உணர்ந்தேன்
எனக்கு எழுத தோனவில்லை நிங்கள் எழதி விட்டிர்கள்
நானும் உங்களுடன் கவிதையில் ஒரு மனமாய் நன்றி நண்பாரே
எனது கவிதையில் இணைந்து கொள்வதாய்க் கூறுவது,
எனது எழுத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரமாய் சந்தோஷம் தருகின்றது...
நன்றி!