PDA

View Full Version : கனவுக்காதலி 3



rocky
18-06-2007, 04:56 PM
போர்வையில் புதைந்திருந்த என்னை
தோண்டியெடுத்து துயில் களைத்தாள்
களைத்தவள் யாரென கண்திரந்தேன்
கணவில் வந்தவளென கண்டுனர்ந்தேன்
கண்ணால் எனை அழைத்தாள்
காதல் தனை உறைத்தாள்
கைகோர்த்து நடைக்கழைத்தாள்
கடல் அலைமுன்னே அமரவைத்தாள்
மவுனத்தால் எனை வதைத்தாள்
வெறும் பார்வையிலெனை சிதைத்தாள்
முத்தமொண்று நான் கேட்டதும்
முகத்தை மறைத்து சிரித்தால்
வெட்கத்தை காரணம் காட்டினால் ஆனால்
விழிகளில் ஏக்கத்தையும் ஏனோ காட்டினால்
அள்ளி அனைக்க கரம் குவித்தேன்
கள்ளி எனைஏய்த்து மறைந்தாள்
பதற்றத்துடன் கண்விழித்தேன், நான்
படுக்கையிலிருப்பதை பின் உணர்ந்தேன்.

மனோஜ்
18-06-2007, 05:05 PM
கணவு காதலி
கவிதை ஆனது
கணவுகள் நினைவுகள்
கவிதைகள் அதன் பெருமைகள்
அருமை நண்பரே

rocky
18-06-2007, 05:08 PM
கணவு காதலி
கவிதை ஆனது
கணவுகள் நினைவுகள்
கவிதைகள் அதன் பெருமைகள்
அருமை நண்பரே

நன்றி மனோஜ். அடுத்த கவிதையும் படித்து பாருங்கள்.

அக்னி
18-06-2007, 05:22 PM
நித்திரைக்குள், எழுப்பியவள்...
நித்திரையினின்றும் எழுப்பினாள்...
நீ திரைதான்...
ஆதலாலோ,
விழிகளுக்குள் வெளிச்சம் வந்தால்,
மறைந்து போகின்றாய்...

கனவுக்காதலி(கள்) அழகு...
கவிதையில் ரசித்தேன்...
உங்கள் கனவில் அல்ல...

அமரன்
18-06-2007, 06:06 PM
இதைத்தான் கனவு வாழ்க்கை என்கிறார்களோ?
பாராட்டுகள் ராக்கி

மலர்
05-01-2008, 03:32 PM
அட ஆமா...
உன்னுடனிருந்த நான் கவிதையும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்..
ம்ம் நல்லா எழுதுறீங்க ராக்கி..
நான் அவ்வளவாய் கவிதைபக்கம் வருவெதே இல்லை....
எளிய உரைநடையில் கூட கவிதை அழகுதான்....
பாராட்டுக்கள்....

rocky
06-01-2008, 06:30 AM
மிக்க நன்றி மலர் அவர்களே,

இத்தனை நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த கவிதைக்கு ஒரு பாராட்டை நான் எதிர்பார்க்கவில்லை, உங்களின் ஊக்கத்திற்கு என் நன்றிகள். பாராட்டுகளுக்காதத்தான் என்போன்றோர் காத்துக் கொண்டிருக்கிறோம் அது கிடைப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த ஆதரவை நான் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன், நன்றி.

சுகந்தப்ரீதன்
06-01-2008, 08:26 AM
ராக்கி.. மலர் சொன்னது போல்... நல்ல உரைநடை ஊற்று உங்கள் கவிதையில்... எழுத்துபிழையை தவிர்க்க முயலுங்கள்.. அது கவிதையின் அழகையும் ஆழத்தையும் இன்னும் அதிகப்படுத்தும்.. வாழ்த்துக்கள் நண்பரே.. தொடர்ந்து படையுங்கள்..!

ஆர்.ஈஸ்வரன்
06-01-2008, 09:06 AM
நல்ல வேளை காதலி தப்பித்தாளே.

அனுராகவன்
17-02-2008, 02:49 AM
நல்ல கனவு வாழ்க்கை!!
அதிலேயே இருங்கள் அப்பதான் அது நிஜத்திற்கு வந்தால் கலைந்துவிடுமே..!!
ம்ம் நல்ல முயற்சி தொடருங்கள்...!