PDA

View Full Version : காத்திருப்பு



இனியவள்
18-06-2007, 04:19 PM
இணையத்தில் சந்த்தித்தோம்
இதயத்தைப் பரிமாறினோம்
நான் இங்கே நீ அங்கே

எமக்கு பாலமாக நாம்
பரிமாறிக்கொண்ட அன்புகள் மட்டுமே
நீ வருவாய் என நான் காத்திருக்கின்றேன்
நான் வருவேன் என நீ காத்திருக்கின்றாய்

காத்திருப்புக்களே எமது வாழ்வா ??
காத்திருப்புக்கள் கூட சுகமே
உன்னை நினைக்கையில்

உனக்காக நான் காத்திருக்கும்
இந்த நொடிப்பொழுதில்
இருந்து என் வாழ் நாள் வரை உள்ள
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
என் வாழ்வின் வசந்த காலம்

அமரன்
18-06-2007, 04:23 PM
இணையத்திற்கு அர்த்தம் இதுதானோ. என்னங்க அதிகமான உங்கள் கவிதைகள் சோககீதங்களாக இருக்கின்றன.

மனோஜ்
18-06-2007, 05:18 PM
காத்திருப்பு கடைசிவரை என்றால்
காதலன் கரம் உறுதியே
கவிதை அருமை வாழ்த்துக்கள் கரம் ஸ்திரமாக

அக்னி
18-06-2007, 05:42 PM
நீ வருவாய் என நான் காத்திருக்கின்றேன்
நான் வருவேன் என நீ காத்திருக்கின்றாய்

இருவரும் காத்திருந்தால்...
இருவரும் எதிர்பார்த்திருந்தால்...
எப்படி இணைவு சாத்தியம்...?
ஆனாலும், கவிதை நன்றே...

ஆதவா
19-06-2007, 11:54 AM
இனியவள்..

உங்களுக்கு நன்றாக கவிதை எழுத வருகிறது.. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.. கையில் ஏகப்பட்ட கவிதைகள் வைத்திருக்கிறீர்கள். நன்று. இணைய நண்பருக்கான கவிதை அர்த்தமற்றது. இன்றைய காலசூழ்நிலை அப்படிப்பட்டது. ஆனால் அதில் சுகம் காண்பது ஆழமான அழுத்தமான நட்பைக் குறிக்கிறது.. வாழ்த்துக்கள்..

இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை − உண்மைதான்.