PDA

View Full Version : தமிழில் நேரடி தட்டச்சு அறிமுகம்



இராசகுமாரன்
18-06-2007, 08:39 AM
நண்பர்களே,

இன்று முதல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யும் முறை இங்கே பரிசோதித்துப் பார்க்கப் படுகிறது.

இது புதிய திரிகள் துவங்கும் போதும் (Post Thread), பின்னூட்டம் இடும் போதும் (Post Reply), அவசர பின்னூட்டம் (quick reply) மற்றும் தனிமடல்களில் (PM) தட்டச்சு செய்யும் பெட்டியின் மேல் Phonetic Keyboard/English Keyboard என்று தோன்றும்.

இந்த வசதி மூலம் இ−கலப்பை இல்லாத இடங்களிலிருந்தும் நமது தளத்தில் நேரடியாகவே தமிழில் தட்டச்சு செய்து பதிக்கலாம்.

மேலும், இந்த வசதி விண்டோஸ்98, விண்டோஸ்Me போன்ற பழைய ஆப்ரேட்டிங்க் சிஸ்டங்களிலும் வேலை செய்யும்.

இதில் இன்னும் சில குறைபாடுகள் உள்ளன, அவற்றை களைய முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம், இருந்தாலும் அவை என்னென்ன என்று உங்களுக்கு இங்கே தெரிவித்து விடுகிறோம்.

கண்டு பிடிக்கப் பட்டுள்ள குறைபாடுகள் பின்வருமாறு:

1) உலாவிகளில் IE6, IE7, Firefox-ல் நன்றாக வெலை செய்கிறது. Opera-வில் வேலை செய்யவில்லை. Safari-யில் சோதிக்கவில்லை.

2) IE/WinOS உபயோகிப்பவர்களில் (சிலருக்கு மட்டும்) வெற்றிடங்களில், மற்றும் 'a' என முடியும் தமிழ் எழுத்துக்களில் * எனும் நட்சத்திரக் குறிகள் வருகின்றன.

3) அதிக வரிகள் தட்டச்சு செய்யும் போது ScrollBar தானாக கீழே செல்வது கிடையாது.

4) இது பெரிய பெட்டிகளில் மட்டுமே (TextArea Box) வேலை செய்யும், ஒரு வரி பதிக்கும் Title ஏரியா போன்ற இடங்களில் வேலை செய்யாது. அதனால், பெரிய பெட்டியில் தட்டச்சு செய்து அதை நகலெடுத்து Title போன்ற ஒரு வரி பகுதிகளில் பதிக்கலாம்.

5) Quote செய்து பதிக்கும் போது துவக்கத்தில் (Quote-க்கு மேல் பகுதியில்) பதிக்க முடியாது, அதன் கீழே தான் பதிக்க வேண்டும். மேலே பதித்தால் அது Editor Toolbar-ரினுள் பதிகிறது.

6) Quote செய்து பதிக்கும் போது அல்லது முன்பு தமிழ் தட்டச்சு செய்தவற்றுடன் மேலும் தொடரும் போது கடைசியாக ஆங்கில எழுத்துக்கள் இருந்தால், அவையும் தமிழ் எழுத்துக்களாக மாற்றுகிறது.

இதற்கு முதலில் ஆங்கில விசைப் பலகைக்கு மாறி, சிறிது இடைவெளி விட்டு பிறகு தமிழ் தட்டச்சுக்கு மாறி பிறகு தட்டச்சு செய்யவும்.

paarthiban
18-06-2007, 08:58 AM
எனக்கு ஒரே மகிழ்ச்சி. ஆஹா நல்லா வேலை செய்கிறதே. நன்றி நிர்வாகி அவர்களே. பிரவுசிங் சென்ட்டர்களில் மிகவும் உதவும் ஐயா.

சூரியன்
18-06-2007, 09:02 AM
இது மிகவும் உயயோகமாக உள்ளது.புதியவர்களுக்கு இது மிகவும் பயன்படும்.

ஷீ-நிசி
18-06-2007, 09:04 AM
மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி.. இது.. அருமை அருமை.. இகலப்பையே தேவையில்லை.... அருமை அருமை

ஷீ-நிசி
18-06-2007, 09:07 AM
நான் AVENT BROWSER உபயோகிக்கிறேன்... நன்றாகவே வேலை செய்கிறது.

அமரன்
18-06-2007, 10:11 AM
தலைவரே எனக்கு இது மிகவும் பயனுள்ளது. பிரான்சில் உள்ள எனது தட்டச்சுப்பிரச்சினை நீங்கள் அறிந்ததே. இப்போ எனக்கு தட்டச்சுவதில் பிரச்சினை இல்லை. அதிகம் சந்தோசப்படுபவன் நானாகத்தான் இருக்கும். நன்றி.

ஆதவா
18-06-2007, 10:13 AM
துரித பதில் (quick reply) யில் அதிகமாக அடித்தால் * வருகிறதே..... அது பிரச்சனையாகிறது...

மனோஜ்
18-06-2007, 10:27 AM
நான் உபயோகிப்பது 30 நாள் இ கலப்பை அதனால் தேதியை மாற்றி மாற்றி வைத்து தான் உயோகித்து வருகிறோன் இனி அது வேண்டி வராது என்று நினைக்கிறொன் நன்றி அண்ணா

praveen
18-06-2007, 10:47 AM
சோதனை தட்டச்சு safari browser for windoந்ச்லிருந்து.
(நான் வின்டோஸ்2000−ல் புது முயற்சியாக சபாரி பதிவிறக்கம் செய்து இதை பதிந்து பார்க்கிறேன்.)

praveen
18-06-2007, 10:55 AM
சோதனை தட்டச்சு safari browser for windoந்ச்லிருந்து.
(நான் வின்டோஸ்2000−ல் புது முயற்சியாக சபாரி பதிவிறக்கம் செய்து இதை பதிந்து பார்க்கிறேன்.)

சபாரி பிரவுசரில் சோதனை செய்து பார்க்கவில்லை என்று நிர்வாகி குறிப்பிட்டிருந்தார், அந்த குறை இருக்க வேண்டாம் என்று நான் முயன்று பார்த்தேன். இனையத்தில் தேடிய போது, அது மேக் ஓஎஸ் க்கானது என்று தெரிய வந்தது, தற்போது விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கும் என்று ஒரு பீட்டா பதிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

அதை பதிவிறக்கம் செய்து நான் தற்போது உலாவும் 2000 (சர்வீஸ் பேக்4) உள்ள கணினியில் பதிந்து இயக்கி பார்த்தேன். யுனிகோடில் உள்ள எழுத்துக்கள் சரியாக வரவில்லை, என்கோடிங்க் மாற்றினாலும் அது டிபால்ட் என்பதிலே தான் இருக்கிறது. சரி குழம்பிய இந்த நிலையிலே பதிந்து பார்ப்போம் என்று பதிந்து பார்த்தது தான் மேலே உள்ளது, சரியாகத்தான் வந்திருக்கிறது. நான் இதனி எக்ஸ்பியிலும் பதிந்து முயற்சித்து பார்க்கிறேன்.

அக்னி
18-06-2007, 11:06 AM
மன்றம் மேம்படுத்தப்படுவது சந்தோஷமாக உள்ளது.
விரைவில் குறைகள் களையப்பட்டு, இன்னும் பொலிவு பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
மேம்படுத்தும் நிர்வாகி அவர்களுக்கு, நன்றிகள்...

ஆனாலும், திஸ்கி பதிவுகளும் மன்றத்தில் இருப்பதால், தற்போதைக்கு மாற்றியை அகற்றிவிட வேண்டாம் என்று கோரிக்கை வைக்கின்றேன்...

வெற்றி
18-06-2007, 11:46 AM
சோதனை பதிப்பு: ஆஹா அருமையாக எளிதாக இருக்கிறது...

பாரதி
18-06-2007, 12:56 PM
மிக நன்றாக இருக்கிறது இராசகுமாரன். பலருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். பாராட்டுக்கள்.

மதி
18-06-2007, 01:01 PM
நல்ல முயற்சி இராசகுமாரன். எல்லோருக்கும் பயன் படக் கூடியது..

அறிஞர்
18-06-2007, 01:10 PM
மன்றத்தின் வளர்ச்சியில் ஒரு படி முன்னேற்றம்..

காலத்திற்கு ஏற்ப மாறுதல்கள் மன்றத்தை இன்னும் சிறப்பிக்கட்டும்.

அறிஞர்
18-06-2007, 01:12 PM
ஆனாலும், திஸ்கி பதிவுகளும் மன்றத்தில் இருப்பதால், தற்போதைக்கு மாற்றியை அகற்றிவிட வேண்டாம் என்று கோரிக்கை வைக்கின்றேன்...

தாங்கள் சொல்லும் Unicode Converteர் மன்றத்தில் இருக்கும் நண்பரே..

அன்புரசிகன்
18-06-2007, 01:13 PM
புதுவடிவத்திற்கு வாழ்த்துக்கள்.
மன்னிக்கவும். என்னால் பதிக்கமுடியவில்லை. தமிழில் வருகிறது. ஆனால் எனக்கு தெரிந்தது பாமினி எழுத்துரு முறை. இதற்கும் ஏதாவது செய்யமுடியுமா? தயவுசெய்து எனக்கும் கருணைகாட்டமுடியாதா? (குறைகூறுவதாக நினைக்கவேண்டாம்) எனக்கு இதுவரை எழுத்துரு பிரச்சனை வரவில்லை.

ராஜா
18-06-2007, 02:34 PM
[ப்]புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..
ஆனால் வண்ண மாற்றும் வசதியை உபயோகிக்கும் போது குழப்பம் நேர்கிறது..

சீர் செய்ய முயலவும்..[/B]

சிவா.ஜி
18-06-2007, 02:49 PM
மிக நல்ல முன்னேற்றம். மன்றம் பொலிவடைந்து வருகிறது. மன்ற நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அறிஞர்
18-06-2007, 04:00 PM
ராஜா அண்ணா...

முதலில் டைப் பண்ணி முடித்து விட்டு.. கலர் மாற்றினால்.. சரியாக வருகிறது...

கலர் மாற்றிவிட்டு ஸ்பேஷ் கொடுக்கும்போது மாறுகிறது...

அறிஞர்
18-06-2007, 04:03 PM
புதுவடிவத்திற்கு வாழ்த்துக்கள்.
மன்னிக்கவும். என்னால் பதிக்கமுடியவில்லை. தமிழில் வருகிறது. ஆனால் எனக்கு தெரிந்தது பாமினி எழுத்துரு முறை. இதற்கும் ஏதாவது செய்யமுடியுமா? தயவுசெய்து எனக்கும் கருணைகாட்டமுடியாதா? (குறைகூறுவதாக நினைக்கவேண்டாம்) எனக்கு இதுவரை எழுத்துரு பிரச்சனை வரவில்லை.
எந்த keyboard உபயோகிக்கிறீர்கள்....

கீழ் உள்ளபடி செய்தால் நன்றாக வருமே..
http://www.tamilmantram.com/pic/anjalkbd.gif

அன்புரசிகன்
18-06-2007, 04:22 PM
எனக்கு பாமினி எழுத்துருவில் பழகிவிட்டேன். இனி மாறுவது கடினம். பரவாயில்லை அண்ணா...

நன்றி.

அறிஞர்
18-06-2007, 04:23 PM
எனக்கு பாமினி எழுத்துருவில் பழகிவிட்டேன். இனி மாறுவது கடினம். பரவாயில்லை அண்ணா...

நன்றி.
இது மிக* எளிது... இணைய* உல*கில் ப*ல*ர் உப*யோகிப்ப*து இது தான்....

அன்புரசிகன்
18-06-2007, 04:31 PM
உண்மைதான். ஆனால் இது எனக்கு பரீட்சயம் ஆகிவிட்டது. ஆனாலும் நண்பர்களின் வீடு சென்றால் ரொம்ப கஷ்டப்பட்டு ரொமனிஷ் ல் பதிப்பேன்.

பார்ப்போம். காலம் வழிவகுக்கும். இராசகுமாரன் அண்ணா விட்டுவிடுவாரா என்ன...

அக்னி
18-06-2007, 04:36 PM
[ப்]புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..
ஆனால் வண்ண மாற்றும் வசதியை உபயோகிக்கும் போது குழப்பம் நேர்கிறது..

சீர் செய்ய முயலவும்..[/B]

வர்ணம் இட முன்னர், ஆங்கில தட்டச்சைத் தெரிவு செய்யுங்கள். அப்படித் செய்யும்போது, பிரச்சினை வரவில்லை.

விகடன்
18-06-2007, 04:53 PM
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறை மிகவும் வரவேற்கத்தக்கது.
ஈ கலப்பையில் தட்டச்சிற்கு உபயோகப்படுத்தப்பட்ட சில எழுத்துக்கள் வர மறுக்கின்றன. இருந்தாலும் அதிக சிரமமில்லை.

இளசு
18-06-2007, 07:37 PM
வெளியிடங்களில் தட்டச்ச எளிய வழி தந்த தலைவருக்கு நன்றி. எழுத்துகள் இடையில் தோன்றும் நட்சத்திரக்குறிகளை முன்பார்வை (ப்ரீவியூ) பார்த்து அகற்றிப் பதிப்பது − அரிசியில் கல் பொறுக்குவதுபோல் இருக்கிறது.

sns
19-06-2007, 04:51 AM
அஹா என்ன அருமயான முயட்ச்சி மேலும் வளார வழ்த்துக்கல்

இராசகுமாரன்
19-06-2007, 05:27 AM
உண்மைதான். ஆனால் இது எனக்கு பரீட்சயம் ஆகிவிட்டது. ஆனாலும் நண்பர்களின் வீடு சென்றால் ரொம்ப கஷ்டப்பட்டு ரொமனிஷ் ல் பதிப்பேன்.

பார்ப்போம். காலம் வழிவகுக்கும். இராசகுமாரன் அண்ணா விட்டுவிடுவாரா என்ன...

பாமினி எழுத்துரு உபயோகிப்பவர்கள் இங்கு அதிகம் இருந்தால் அதையும் கொடுக்கலாம். ஆனால் அதில் 3 எழுத்துக்களில் சிறிய மாற்றம் செய்து பதிக்க வேண்டும். தயாரா?

பொதுவாக பாமினி போன்ற டைப்ரைட்டர் முறையில் தட்டச்சு செய்பவர்கள், "கெ, கே" போன்ற எழுத்துக்களில் முதலில் "கொம்பை" தட்டச்சு செய்து விட்டு பிற "க" எழுத்தை தட்டச்சு செய்வார்கள், ஆனால் இந்த இணைய முறையில் முதலில் எழுத்தை தட்டச்சு செய்து விட்டு பிறகு கொம்பை தட்டச்சு செய்ய வேண்டும். பரவாயில்லையா?

அன்புரசிகன்
19-06-2007, 06:29 AM
நான் தயார். அது ஒன்றும் பெரியவிடையம் அல்ல. எழுத்திற்கு முன்னால் வரும் கொம்பை பின்னர் அழுத்துவது பிரச்சனை இல்லை.

ஆனால் அதிகம் பேர் இருப்பார்களோ தெரியாது. எனக்குத்தெரிந்த வகையில் மயூரேசன் மற்றும் அக்னி மட்டும் தான். இவர்களும் ரோமானிஷ்ற்கு மாறிவிட்டனரோ தெரியாது.

மாற்றுவதால் பிரச்சனை ஏற்படும் என்றால் தவிர்த்துவிடுங்கள். நன்றி அண்ணா.

aren
19-06-2007, 06:52 AM
நான் பல சமயங்களில் இந்தமாதிரியாக மாட்டிக்கொன்டு முழித்ததுண்டு. இனிமேல் அந்த பிரச்சனையிருக்காது என்பதைப் பார்க்கும்பொழுது சந்தோஷமாக உள்ளது.

நன்றி தலைவரே.

நன்றி வணக்கம்
ஆரென்

Mathu
19-06-2007, 07:13 AM
மிக நல்ல புதிய அறிமுகம். பல தடவை இந்த சிக்கலில் தவித்திருக்கிறேன். இந்த புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.

ஜோய்ஸ்
19-06-2007, 07:25 AM
நான் எத*ற்க்கும் முயன்று பார்க்கிறேன்.நல்ல ஒரு முன்னேற்றம் நிர்வாகி அவர்களே.
நெல்லை தந்த்த வல்லவருக்கு வாழ்த்துக்கள் கோடி.

மயூ
19-06-2007, 05:37 PM
நன்றாக உள்ளது.. நம்ம பாமினி இல்லை என்பதுதூன் கவலை

namsec
20-06-2007, 05:36 AM
புதிய முறை நன்றாக உள்ளது எங்களுக்கு சிறமத்தை குறைத்த தலைவர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுல்ளேன்.

மற்றும் இந்த பின்னூட்டத்தை நான் புட்திய முறையில்தான் தட்டச்சு செய்தேன் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்

shivasevagan
20-06-2007, 06:39 AM
இது நன்றாக இருக்கிறது.

lolluvathiyar
21-06-2007, 09:10 AM
இதில் சில சமயம் எத்தனை என்டர் கீ அடித்தாலும் அடுத்த லைன் போக மாட்டிங்குது. ஏகலப்பையிலிருன்டு கொண்டுவந்து போட்டாலும் இந்த பிரச்சனை வருகிறது

சத்ரியன்
21-06-2007, 09:30 AM
இது உபயோகமாக இருக்கும் என் நம்புகிறேன்

ஓவியா
21-06-2007, 07:49 PM
அருமையாக இருகின்றது. மன்றதிற்க்கு எனது நன்றியும் பாராட்டும்.

ஒரு விசயம், ந் என்ற எழுத்து வர* ரொம்பவும் அடம்பிடிகின்றது,

மற்றும் எனது பதிவுகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றவைகள் போல் எழுத்துக்களின் நடுவே பல * * வந்து கண்சிமிட்டுகிறது.

எப்படி சமாளிக்க???

franklinraja
25-06-2007, 07:05 AM
சிறு சிறு சிரமங்கள் இருந்தாலும்,
மிகவும் நன்றாக இருக்கிறது...

நிர்வாகியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ! :)

ஓவியா
25-06-2007, 04:55 PM
அலோ அலோ அலோ

எனக்கு ந் வர மாட்டேங்கிறதே!! என்ன காரணம்?

அமரன்
25-06-2007, 04:56 PM
w அழுத்துங்க ....

ஓவியா
25-06-2007, 05:17 PM
ஆமாம் ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந் வருதே!!!

மிக்க நன்றி அமர்

பென்ஸ்
25-06-2007, 05:22 PM
அலோ அலோ அலோ

எனக்கு ந் வர மாட்டேங்கிறதே!! என்ன காரணம்?

ஓவி...
விளையாட்டு அரட்டை பகுதியில்...

ஓவியா
25-06-2007, 05:35 PM
அருமையாக இருகின்றது. மன்றதிற்க்கு எனது நன்றியும் பாராட்டும்.

ஒரு விசயம், ந் என்ற எழுத்து வர* ரொம்பவும் அடம்பிடிகின்றது,
மற்றும் எனது பதிவுகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றவைகள் போல் எழுத்துக்களின் நடுவே பல * * வந்து கண்சிமிட்டுகிறது.

எப்படி சமாளிக்க???

பென்சு,
இந்த புது நேரடி தட்டச்சு அறிமுகத்திலிருந்து எனக்கு ந் வரவில்லை, முன்பே கேட்டேன், தாங்கள் ஏன் எனக்கு அப்பொழுது விளக்கமளிக்கவில்லை?

மீண்டும் கேட்டேன். அமர் பதில் கூரினார். அதான் பின்னூட்டமிட்டேன்.

நான் இங்கே விளையாட மாட்டேன். அப்படி உங்களின் பார்வையில் இது விளையாட்டாக பட்டால், அடியேனை (சிரந்தாழ்த்தி) மன்னிக்கவும்.

பென்ஸ்
25-06-2007, 05:37 PM
அலோ அலோ அலோ

எனக்கு ந் வர மாட்டேங்கிறதே!! என்ன காரணம்?

ந் வரவில்லை என்றால் எப்படி பதித்தீர்கள்...
வெட்டி ஒட்டியதா...???

பிச்சி
08-07-2007, 08:16 AM
ஏன் அடிக்கடி * வருகிறது?, நேரடி தமிழ் தட்டச்சு சூப்பர்..

தமிழ்பித்தன்
18-07-2007, 05:48 PM
என்போன்ற பாமினி ரசிகர்களுக்காகவும் ஏதும் செய்யலாமே

அன்புரசிகன்
18-07-2007, 05:56 PM
ஆம் தலைவரே... அத்துடன் ஒரு பிரச்சனை. மற்றவர்களுக்கு பிரச்சனை என்றால் விட்டுவிடுங்கள். இந்த English Keyboard ஐ default ஆக விடமுடியாதா. சிலவேளை நாம் format செய்யும் போது அது தமிழில் வந்துவிடுகிறது. இது எனக்கு வந்த பிரச்சனை. மற்றப்படி முடியாது என்றால் பரவாயில்லை.

karikaalan
10-08-2007, 02:18 PM
மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், முரசு அஞ்சலில் எழுதி (புதிய திரி) வெட்டி ஒட்ட முடியவில்லையே, என்ன செய்வது. ஸப்−ப்ரைமால் விளைந்துள்ள களேபரங்களைப் பற்றி ஒரு திரி எழுதிவிட்டு பதிய முயன்றால் தமிழ் எழுத்து வரவில்லை. தயவுசெய்து யாராவது உதவினால் மகிழ்வேன்.

===கரிகாலன்

அன்புரசிகன்
10-08-2007, 04:33 PM
அண்ணா... கீழே உள்ள Unicode Converter மூலம் முயன்று பாருங்கள்.... அதில் உள்ள 8 Unicode Converter களில் ஒன்றாவது உதவும் என்று நம்புகிறேன்.பரீட்ச்சீத்துப்பார்க்க முடியவில்லை. காரணம் எனக்கு முரசு பற்றி விளக்கம் தெரியாது...

இளசு
10-08-2007, 06:37 PM
முரசு அஞ்சலில் எழுதி (புதிய திரி) வெட்டி ஒட்ட முடியவில்லையே,

===கரிகாலன்

அண்ணலே

அன்பு சொல்வதுபோல் கீழே உள்ள யூனிகோட் கன்வர்ட்டரில் இடது பக்கம் காப்பி&பேஸ்ட் செய்து நடுவில் உள்ள திஸ்கி2 −ஐ அழுத்தினால் வலதுபக்கம் யூனிகோடில் வரும். அதை காப்பி என மேலே உள்ளதை அழுத்தி மன்றப்பக்கத்தில் பதியுங்கள்..

சிக்கல் தொடர்ந்தால் சொல்லுங்கள் அண்ணலே!

karikaalan
11-08-2007, 12:34 AM
அன்புஜி + இளவல்ஜி

அவ்வாறுதான் செய்தேன். ஸ்டாக் மார்க்கெட் களேபரம் தேவலை என்றாகி விட்டது!! இந்த பாக்ஸின் மேலே phonetic keyboard or English Keyboaர்ட் இவைகளில் தட்டச்சு செய்தவைதான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

−−−கரிகாலன்

aren
11-08-2007, 02:44 AM
இ−கலப்பையை உபயோகித்துப் பாருங்களேன். நான் அதைத்தான் உபயோக்கிறேன் நன்றாகவே வேலை செய்கிறது எனக்கு.

இளசு
11-08-2007, 06:24 AM
அண்ணலுக்கு

நானும் பதியும்போது வரிகளை நகர்த்த, வண்ணம் தீட்ட, ஆங்கிலச்சொல் இடையில் தர சிரமப்படுகிறேன். அப்படி ஒரு அழிச்சாட்டியம் பண்ணுகிறது சில நேரங்களில்!

உங்கள் பதிவை தனிமடலில் அனுப்புங்கள். பதியும்போது என்ன சிக்கல் என பரிசோதித்துப் பார்க்கிறேன். நன்றி.

ஓவியா
11-08-2007, 04:42 PM
அன்புஜி + இளவல்ஜி

அவ்வாறுதான் செய்தேன். ஸ்டாக் மார்க்கெட் களேபரம் தேவலை என்றாகி விட்டது!! இந்த பாக்ஸின் மேலே phonetic keyboard or English Keyboaர்ட் இவைகளில் தட்டச்சு செய்தவைதான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

−−−கரிகாலன்

அண்ணா உங்க சைகில் கேப் ஜோக்கை நன்றாகவே ரசித்து சிரித்தேன்,

srimariselvam
22-08-2007, 11:15 AM
சூப்பர் மா