PDA

View Full Version : கத்தி சண்டை போடுகிறோம்



அமரன்
18-06-2007, 07:14 AM
படித்தவனுக்கு வேலை இல்லை
பசித்தவனுக்கு உணவு இல்லை

சாலை மறியல்
வேலை நிறுத்தம்

கத்தி சண்டை போடுகிறோம்
புத்தி இல்லையா நமக்கு
மந்திக் கூட்டமா நாம்
சிந்திக்க தெரிந்தவர்கள்
மந்தைக்கூட்டமா நாம்
விந்தை மனிதர்கள்

சந்திக்கும்போது சிந்திப்பதில்லை
சிந்திக்கும்போது நிந்திக்கிறோம்

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு
சாக்கு போக்குகள் சொல்லிகொண்டு
வாக்குறுதிகள் அள்ளி வீசி
வாக்கு கேட்க வருகிறார்கள்
மூக்கை உடைப்பதில்லை

காடையர் குடைபிடிக்க
மேடை போட்டு
கடைவிரித்து
சாடையாகப் பேசுவர்
மடையர்கள் எனநினைத்து
பாடை கட்டுவதில்லை நாம்
வாடையை அழிப்பதில்லை

கத்தியை உறையிலிடுவோம்
புத்தி உறையாதிருப்போம்
புயலாகப் புறப்படுவோம்
புதுமைகள் படைத்திடுவொம்
வரலாறு படித்தவர்கள்
வரலாறு சமைத்திடுவோம்.

சிவா.ஜி
18-06-2007, 08:33 AM
சம்மட்டி அடி கவிதை. இன்னும் இன்னும் எத்தனை சம்மட்டிகள் சேர்ந்து அடித்தாலும் இந்த அரசியல்வாதிகளும் திருந்தமாட்டர்கள், இலவசமாய் எது கிடைத்தாலும் வாங்கிக்கொள்ளும் இந்த மதிகெட்ட மக்களும் திருந்தமாட்டார்கள்.

கத்தி சண்டை போடுகிறோம்
புத்தி இல்லையா நமக்கு

இந்த வரிகளில் மனம்கொதித்து திட்டிவிட்டு.....

கத்தியை உறையிலிடுவோம்
புத்தி உறையாதிருப்போம்

இந்த வரிகளில் கத்தி எடுத்தல் வேண்டாம் புத்தியை செலுத்து என்று புத்தி சொல்லி ஆதங்கத்தை காண்பித்திருக்கும் விதம் அருமை. எழுச்சிமிக்க கவிதை. பாராட்டுக்கள் அமரன்.

ஆதவா
18-06-2007, 10:11 AM
ரொம்ப கத்தியே சண்டை போடுறீங்க போல...

நல்ல கரு.. ஆனால் பழைய கரு... வித்தியாசமில்லாத நடை. ஒட்டாத எதுகைகள்.... நம்மை நாமே குறை சொல்லிவிட்டு அதை நிறை செய்ய வழிவகுக்கும் அதே கவிதை நடை (கொஞ்சம் லைனை மாத்துங்கப்பா)

இன்றும் எத்தனை கவிதைகள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள் க*வ*லை வேண்டாம் அம*ர*ன்.. நிச்ச*ய*ம் உங்க*ள் க*த்த*ல்க*ளுக்கு பிர*யோச*ன*ம் உண்டு. கால*ம் வெகுதூர*ம் போனாலும் ஒருநாள் நா வ*ர*ண்டுதானே போக*வேண்டும்.... பார்ப்போம். அந்த* நாளில் உங்க*ள் க*விதைக நிச்ச*ய*ம் புன்ன*கைக்கும்...

ந*ன்றி
ஆதவ*ன்

அக்னி
18-06-2007, 11:50 AM
சமுதாயத்தின் இன்றைய நிலைக்குச் சாட்டையடியான கவிதை...
மடமை உணர்ந்து மனிதன் மாறவேண்டும்.
கடமை உணர்ந்து செயலாற்றவேண்டும்.
ஜடங்களாய் காட்டிய திசையில்,
ஓட்டப்படும் மனிதர்கள்...
புதுப்பிக்கப்படவேண்டும்...
புதுமையாக வேண்டும்...

பாராட்டுக்கள் அமரன்...

lolluvathiyar
18-06-2007, 12:08 PM
அருமையான வரிகள், வரலாறு சிதைக்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
அந்த வரலாற்றையும் மெக்காலெ கல்வி திட்டத்தில் படித்து கொண்டிருந்தால்.
மக்கள் என்றுமே திருந்த முடியாது

வெற்றி
18-06-2007, 12:14 PM
[QUOTE]அந்த வரலாற்றையும் மெக்காலெ கல்வி திட்டத்தில் படித்து கொண்டிருந்தால்.
மக்கள் என்றுமே திருந்த முடியாது
[/QUஓடே]
மிக மிக சரியான கூற்று

வெற்றி
18-06-2007, 12:15 PM
[QUOTE]அருமையான வரிகள், வரலாறு சிதைக்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
அந்த வரலாற்றையும் மெக்காலெ கல்வி திட்டத்தில் படித்து கொண்டிருந்தால்.
மக்கள் என்றுமே திருந்த முடியாது[/QUஓடே]சரியாக சொன்னீர்கள்