PDA

View Full Version : பெண்ணுரிமை



அமரன்
17-06-2007, 05:53 PM
கேட்கிறீர்கள்
மூன்றில் ஒரு பங்கு
கொடுத்துவிட்டோம்
எப்போதோ
உரியை எடுத்தோம்
மையைக் கொடுத்தோம்

விகடன்
17-06-2007, 06:04 PM
33 சதவீதத்துள்
ஒடுங்க துடிக்கும்
100 சதவீதம்

அமரன்
17-06-2007, 06:13 PM
33 சதவீதத்துள்
ஒடுங்க துடிக்கும்
100 சதவீதம்
நன்றி ஜாவா சின்னதாக அழகான ஒரு கவிதை.

சிவா.ஜி
18-06-2007, 04:40 AM
அழகான மூண்றில் ஒருபங்கான மையைக்கொடுத்து she is my என ஆக்கிக்கொண்டோம்.உரிமை என்று வரும்போது நம்மகிட்ட இருக்கிறதை தாராளமா அவங்க எடுத்துக்கிறாங்க. நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள் அமரன்.

praveen
18-06-2007, 06:50 AM
நல்ல கற்பனை அமரன்.
சிவாஜியின் பின்னுட்டமும் அருமை.

ஓவியன்
26-06-2007, 07:01 PM
அடடே அமரா!

இந்த உரி மை கண்ணில் படவில்லையே!

பாராட்டுக்களூம் வாழ்த்துகளும்.

அமரன்
26-06-2007, 07:03 PM
ஹி...ஹி......பெண்னுரிமை போலவே அதுவும் தூங்கி விட்டது...

ஓவியன்
26-06-2007, 07:06 PM
உரிமை கேட்டுப் பெறுவதல்ல நாமாகவே எடுத்துக் கொள்வது என்று தாயகத்தில் சொல்வார்களே?

அமரன்
26-06-2007, 07:07 PM
அதுதான் எடுத்துவிட்டீரே திரியை மேலே....

ஓவியன்
26-06-2007, 07:11 PM
தாமாக
எடுத்துக் கொள்வதுதான்
உரிமையாய் இருக்க
இன்னமும் 33 சதவீதம்
கேட்டுக் கொண்டிருப்பது
மட்டும் என்ன நியாயம்?

அமரன்
26-06-2007, 07:21 PM
நியாயமில்லைத்தான்
திறக்காதெனத் தெரிந்தும்
தட்டிக்கொண்டே இருப்பது
நியாயம் இல்லைத்தான்
உடைக்க முடியவில்லையே
சமுதாய வேலிகளை..

அன்புரசிகன்
26-06-2007, 07:25 PM
உரிமை கேட்க்கிறார்கள்
எம் தோலை உரிக்கவா?:D :D :D

ஓவியன்
26-06-2007, 07:27 PM
வேண்டுமென்று
முடிவெடுத்தால் தகர்த்துவிடு
சமுதாய வேலிகளையும்.
தேவையென்றால்
சொல்லி விடு
தந்துவிடுகிறேன்
என் தோளையும்.

ஓவியன்
26-06-2007, 07:29 PM
உரிமை கேட்க்கிறார்கள்
எம் தோலை உரிக்கவா?:D :D :D

அதைக் கேட்டுச் செய்வதில்லை அவர்கள், தாமாகவே உரிப்பார்கள்!. :icon_shout: