PDA

View Full Version : கனவின் தூது



கேசுவர்
17-06-2007, 03:59 PM
கனவே
நனவாக வேண்டும்
என்று செல்
மறவாமல் சொல்
அவனிடம்
"உனக்காக இரு விழிகள்
இமைக்காமல் இருப்பதை"

அமரன்
17-06-2007, 04:02 PM
இமைக்காமல் இருக்கிறனவோ
கண்மணையைச் சிறைப்பிடிக்க
கனவுகளில் வந்தவள்
நனவாவது எப்போது

இனியவள்
17-06-2007, 05:14 PM
கனவே
நனவாக வேண்டும்
என்று செல்
மறவாமல் சொல்
அவனிடம்
"உனக்காக இரு விழிகள்
இமைக்காமல் இருப்பதை"

உனக்காகவே ஒரு இதயம் துடித்துக் கொண்டு இருப்பதை

கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்

சிவா.ஜி
18-06-2007, 04:43 AM
அவள் வரவுக்காக இமைகள் இரண்டும் இமைக்காமல் இருக்கிறது. அவளைத்தவிர எதையும் இந்த விழிகள் பார்க்காது என்பதை கனவிடம் சொல்லி அனுப்பும் உத்தி நன்றாகவே இருக்கிறது.பாரட்டுக்கள் கேசுவர்.

கேசுவர்
18-06-2007, 01:07 PM
நன்றி அமரன்,இனியவள்,சிவாஜி
உங்களின் பின்னுட்டங்கள் தான் மேன்மேலும் எழுதுவதற்கு உந்துதலாக இருக்கிறது.இப்போது நான் கத்துக்குட்டி உங்களிடம் இருந்து பல விசயங்களை கற்றக முடிகிறது

இனியவள்
18-06-2007, 01:33 PM
நன்றி அமரன்,இனியவள்,சிவாஜி
உங்களின் பின்னுட்டங்கள் தான் மேன்மேலும் எழுதுவதற்கு உந்துதலாக இருக்கிறது.இப்போது நான் கத்துக்குட்டி உங்களிடம் இருந்து பல விசயங்களை கற்றக முடிகிறது


கேசுவர் உங்களைப் போலவே நானும் ஒரு கத்துக்குட்டி என்னால் முடிந்தளவு கற்க பார்க்கின்றேன் :)

ஜோய்ஸ்
18-06-2007, 01:50 PM
அடடடா,
புல்லரிக்குதப்பா கவிதை.
இதைத்தான் புதுக்கவிதை என்று சொல்லுவார்களோ!

கேசுவர்
18-06-2007, 01:54 PM
இனியவள்...ஆன நீங்க நிறைய எழுதுறிங்க ..எனக்கு நேரம் கிடைக்கமாட்டேங்குதுனு சொல்லறதோட கற்பனை சிக்கமாட்டேங்குது தான் கரக்ட்.
என்னமோ முயற்சி பண்றேன்.
பழக பழக கத்துக்கில்லாம்கிற நம்பிக்கை வருது.

அரசன்
25-06-2007, 05:03 AM
கனவே
நனவாக வேண்டும்
என்று செல்
மறவாமல் சொல்
அவனிடம்
"உனக்காக இரு விழிகள்
இமைக்காமல் இருப்பதை"


இமைக்கும் இரு விழிகள் இமைக்காமல் இருப்பதை அவளுக்கு உணர்த்திய விதம் அருமை நண்பரே!