PDA

View Full Version : வேறொரு(த்)தீ



ஓவியன்
17-06-2007, 11:36 AM
வேறொருத்தி வந்தால்
மறைந்திடுமா என்
துயரங்கள்?
வேறு ஒரு தீயென
இன்னமும் இதயத்தில்
கனலும் உன்
ஞாபகங்களை எப்படி
அழிப்பது?

ஓவியன்
17-06-2007, 11:40 AM
இது கவிச்சமரில் உதித்த ஒரு கவிதை, நன்றாக இருப்பதாகத் தென் பட்டதனால் இங்கே பதித்தேன்.

அமரன்
17-06-2007, 01:56 PM
ஓவியன் கவிதை நன்றாக இருக்கின்றது. என் திறமைக்கு எட்டிய வரை திருத்தி அமைக்கின்றேன். தப்பாக நினைக்கவேண்டாம். இரண்டு தலைப்பு தேவை இல்லை. வேறொரு(த்)தீ என்றவாறு தலைப்பிட்டால் நன்றாக இருக்குமென நினைக்கின்றேன்.

தாமரை
17-06-2007, 02:00 PM
அழிக்கும் தீக்கு
அழிக்கத் தெரியாமல்
போய்விடுமா!!!

இனியவள்
17-06-2007, 02:04 PM
வேறொருத்தி வந்தால்
மறைந்திடுமா என்
துயரங்கள்?
வேறு ஒரு தீயென
இன்னமும் இதயத்தில்
கனலும் உன்
ஞாபகங்களை எப்படி
அழிப்பது?

ஞாபகங்கள் அழிக்க முடியாதது..

கவி வரிகள் நன்று வாழ்த்துக்கள்

ஓவியன்
17-06-2007, 08:12 PM
ஓவியன் கவிதை நன்றாக இருக்கின்றது. என் திறமைக்கு எட்டிய வரை திருத்தி அமைக்கின்றேன். தப்பாக நினைக்கவேண்டாம். இரண்டு தலைப்பு தேவை இல்லை. வேறொரு(த்)தீ என்றவாறு தலைப்பிட்டால் நன்றாக இருக்குமென நினைக்கின்றேன்.

நன்றி அமர்!

உங்கள் தலைப்பு அசத்தல், மாற்றி விட்டேன் உங்கள் தலைப்பின் படியே..........

ஓவியன்
17-06-2007, 08:15 PM
அழிக்கும் தீக்கு
அழிக்கத் தெரியாமல்
போய்விடுமா!!!

அழிக்க வந்த தீ,
எல்லாவற்றையும் அளித்துவிட்டு
நிற்கிறது-காதல்.

ஓவியன்
17-06-2007, 08:15 PM
ஞாபகங்கள் அழிக்க முடியாதது..

கவி வரிகள் நன்று வாழ்த்துக்கள்
நன்றிகள் சகோதரி!

அக்னி
17-06-2007, 08:43 PM
ஒருத்தி தந்த கனலும்
ஒரு தீ தந்த கனலும்
ஒன்றாய் கனன்று
தீ மூட்டும்
கவிதை நன்று ஓவியா...!

அருமையான வார்த்தைப் பிரயோகங்கள்...

ஓவியன்
17-06-2007, 08:45 PM
ஒருத்தி தந்த கனலும்
ஒரு தீ தந்த கனலும்
ஒன்றாய் கனன்று
தீ மூட்டும்
கவிதை நன்று ஓவியா...!

அருமையான வார்த்தைப் பிரயோகங்கள்...

கவிக்கு இந்த தீ (அக்னி) தந்த பின்னூட்டம் இன்னமும் அழகு நண்பா!

இளசு
18-06-2007, 12:03 AM
நெருப்பை நெருப்பால்
அணைக்கும் வழி???

ஓவியனின் கவிதையும்
அமரனின் தலைப்புமாற்ற ஆலோசனையும்
அக்னியின் தீ-விமர்சனமும்
முக்கனிச்சுவை! ருசித்தேன்..நன்றி..

(ஆயிரம் பதிவுகள் தாண்டிய கவிச்சமரை
இன்னும் எட்டிப்பார்க்காமைக்கு மன்னிக்கவும் மக்களே..
விரைவில் அந்த சாகரத்தில் குதிக்கிறேன்..)

ஆதவா
18-06-2007, 03:06 AM
ஓவியரே! கவிதை நன்றாக இருக்கே!! சிலேடையில் போட்டு நீரும் அமரரும் கலக்குறீர்.... இதில் நானென்ன சொல்ல??... நல்ல காதற்கவி.

namsec
18-06-2007, 03:54 AM
ஒருத்தி தந்த கனலும்
ஒரு தீ தந்த கனலும்
ஒன்றாய் கனன்று
தீ மூட்டும்
கவிதை நன்று ஓவியா...!

அருமையான வார்த்தைப் பிரயோகங்கள்...

ஓவியா என பெண் பாலை குறிப்பிட்டுவிட்டீர் சகோதரி ஓவியா சண்டைக்கு வர்ப்போகிறார்

ஓவியன்
18-06-2007, 08:42 PM
நெருப்பை நெருப்பால்
அணைக்கும் வழி???

ஓவியனின் கவிதையும்
அமரனின் தலைப்புமாற்ற ஆலோசனையும்
அக்னியின் தீ-விமர்சனமும்
முக்கனிச்சுவை! ருசித்தேன்..நன்றி..

(ஆயிரம் பதிவுகள் தாண்டிய கவிச்சமரை
இன்னும் எட்டிப்பார்க்காமைக்கு மன்னிக்கவும் மக்களே..
விரைவில் அந்த சாகரத்தில் குதிக்கிறேன்..)
நன்றிகள் அண்ணா!

காத்திருக்கிறேன் நீங்கள் கவிச்சமரில் குதிக்கும் நாளை எதிர் பார்த்து......

ஓவியன்
18-06-2007, 08:43 PM
ஓவியரே! கவிதை நன்றாக இருக்கே!! சிலேடையில் போட்டு நீரும் அமரரும் கலக்குறீர்.... இதில் நானென்ன சொல்ல??... நல்ல காதற்கவி.

நன்றிகள் ஆதவா!

அக்னி
18-06-2007, 09:44 PM
ஓவியா என பெண் பாலை குறிப்பிட்டுவிட்டீர் சகோதரி ஓவியா சண்டைக்கு வர்ப்போகிறார்
இதென்ன சித்து விளையாட்டு...???
சித்தரே இப்படிக் கோர்த்து விடவெல்லாம் கூடாது...

ஓவியன்
19-06-2007, 06:53 PM
ஓவியா என பெண் பாலை குறிப்பிட்டுவிட்டீர் சகோதரி ஓவியா சண்டைக்கு வர்ப்போகிறார்

அவர் சண்டைக்கெல்லாம் வர மாட்டார்!:D

ஏன் என்றால் அவ*ர*து பூர*ண* ஆத*ர*வு என்றைக்கும் இந்த* ஓவிய*னுக்குண்டு.:D

அடுத்து,

ஆத*வ*னை ஆத*வா என்ப*து போல் ஓவிய*னை ஓவியா என்றும் அழைக்க*லாம்.:D

அக்னி
19-06-2007, 06:56 PM
அவர் சண்டைக்கெல்லாம் வர மாட்டார்!:D

ஏன் என்றால் அவ*ர*து பூர*ண* ஆத*ர*வு என்றைக்கும் இந்த* ஓவிய*னுக்குண்டு.:D

அடுத்து,

ஆத*வ*னை ஆத*வா என்ப*து போல் ஓவிய*னை ஓவியா என்றும் அழைக்க*லாம்.:D

நன்றி ஓவியா காப்பாற்றி விட்டதுக்கு...
இனி ஓவியா அவர்களையும் இதச்சொல்லியே சாடலாம்...

அமரன்
19-06-2007, 06:58 PM
அழிக்க வந்த தீ,
எல்லாவற்றையும் அளித்துவிட்டு
நிற்கிறது-காதல்.

அழிக்க வந்த தீ(யை)
அணைத்ததால் வந்ததோ
காதல்

ஓவியன்
19-06-2007, 07:00 PM
அழிக்க வந்த தீ(யை)
அணைத்ததால் வந்ததோ
காதல்

அணைக்க வேண்டிய
தீயைக் கைகளால்
கட்டி அணைத்ததால்
வந்த வில்லங்கம் அது.:D

அமரன்
19-06-2007, 07:05 PM
வில்லங்கம் ஆனபின்னும்
அணைக்கிறாயே காதலை
ஒரு(த்)தீ தந்த ரணம்
பத்தலையா உனக்கு

ஓவியன்
19-06-2007, 07:10 PM
வில்லங்கம் ஆனபின்னும்
அணைக்கிறாயே காதலை
ஒரு(த்)தீ தந்த ரணம்
பத்தலையா உனக்கு

எனக்குள்
பற்றிய தீ
ஏன் இன்னமும்
அந்த ஒரு(த்)தீக்குப்
பற்றவில்லை?

அமரன்
19-06-2007, 07:13 PM
பற்றவில்லையோ
உன் காதல் தீ
அவளுக்கு
நாடுகிறளோ பிற மனம்
பற்றுகிறாளோ இன்னொரு கரம்

ஓவியன்
20-06-2007, 05:47 AM
மூட்டியவளே
அவள் தானே
அதை அணைக்கவும்
அவளே தான்
வரவேண்டும்.

ஓவியன்
20-06-2007, 06:06 PM
மூட்டியவளுக்குத் தெரியவில்லை
தான் என்னுள் மூட்டியது
என்னவென்று.
தெரிந்திருந்தால் இப்படிக்
கவி(தை) எழுதிப்
புலம்ப விட்டிருப்பாளா?

ஓவியன்
20-06-2007, 07:26 PM
அந்த ஒருத்தி
மூட்டிய தீ
என்னுள் கனன்று
கவியாய் எரிகிறதே!

அமரன்
21-06-2007, 12:57 PM
ஒரு(த்)தீ தந்தது
தமிழுக்கு ஒரு கவி
அழிக்க வந்த தீ
அளித்துவிட்டதோ

ஓவியன்
21-06-2007, 07:00 PM
ஒரு(த்)தீ தந்தது
தமிழுக்கு ஒரு கவி
அழிக்க வந்த தீ
அளித்துவிட்டதோ

கவி தந்த அந்த*
ஒரு(த்)தீக்குத்
தெரியவில்லை
தான் மூட்டிய தீயின்
விளைவுகள்

அமரன்
21-06-2007, 07:05 PM
ஒரு(த்)தீயின் புகையால்
கவி மழைபொழிகிறது
தமிழ் இங்கே செழிக்கிறது
அழிக்க வந்த தீ
வளர்க்கிறது...

அக்னி
21-06-2007, 07:08 PM
ஒரு(த்)தீயால்,
அழிக்கவும் முடியும்...
ஆக்கவும் முடியும்...

பென்ஸ்
21-06-2007, 07:12 PM
அடடா....

ஆக்னி, அமரன், ஓவியன்...
ஆரோக்கியமான வார்த்தைவிளையாடல்...
கவிதை கொட்டுதே....

எப்படி இது.. எப்படியப்பா...

ஓவியன்
21-06-2007, 07:19 PM
ஒரு(த்)தீயால்,
அழிக்கவும் முடியும்...
ஆக்கவும் முடியும்...

உண்மைதான்
எனை அழிக்கவந்ததும்
வந்து கவி வரம்
அள்ளித் தெளித்ததும்
அந்த ஒரு(த்)தீ தானே!

ஓவியன்
21-06-2007, 07:22 PM
அடடா....

ஆக்னி, அமரன், ஓவியன்...
ஆரோக்கியமான வார்த்தைவிளையாடல்...
கவிதை கொட்டுதே....

எப்படி இது.. எப்படியப்பா...

நன்றி அண்ணா!

இந்த மூன்று பேரும் செல்வன் அண்ணாவின் பட்டறையில் புடம் போடப் பட்டுக் கொண்டிருக்கின்ற கத்திகள்.

அக்னி
21-06-2007, 07:25 PM
நன்றி அண்ணா!

இந்த மூன்று பேரும் செல்வன் அண்ணாவின் பட்டறையில் புடம் போடப் பட்டுக் கொண்டிருக்கின்ற கத்திகள்.

ஆமாம்...
உண்மையான கூற்று...
அதனால்தான் கத்தி கத்தியே நாம் புடம்போடப்பட முயல்கின்றோம்...

பென்ஸ்
21-06-2007, 07:26 PM
நன்றி அண்ணா!

இந்த மூன்று பேரும் செல்வன் அண்ணாவின் பட்டறையில் புடம் போடப் பட்டுக் கொண்டிருக்கின்ற கத்திகள்.

மன்ற*த்தில் பதில் கவிதைகள் இருந்தது, கொஞ்சமாக..
பிரியன், நண்பன், நான், இளசு, கவிதா.... இப்படி

ஆனால் பதிகவிதைகளை மாற்றுகருத்து, பின்னூட்டம் இதற்க்காக பயன்படுத்திய பெருமை தாமரையை மட்டுமே சேரும்....

இன்று எனக்கு உங்களை எல்லாம் பாக்கும் போது பொறாமையா இருக்கு... அதிலையும் ஓவியனை... வந்த போது அரட்டையை தவிர வேறு ஒன்னும் தெரியாதோ என்று நினைத்திருக்கிறென்...
இன்று எனக்கு குருவாய்....

அக்னி
21-06-2007, 07:27 PM
உண்மைதான்
எனை அழிக்கவந்ததும்
வந்து கவி வரம்
அள்ளித் தெளித்ததும்
அந்த ஒரு(த்)தீ தானே!

ஒருத்(தீ)யால்
கவி அள்ளித் தெளித்(தீ)ரோ..?
நன்று...
கவித்தீ சுடரட்டும்...

அமரன்
21-06-2007, 07:32 PM
இருவர் சொல்வதையும் நான் ஏற்றுகொள்கின்றேன். பலர் கவிதைகளைப் படித்துப் பழகினாலும் வார்த்தைகளால் ஓரளவு விளையாட காரணம் செல்வரே...

ஓவியன்
21-06-2007, 07:33 PM
மன்ற*த்தில் பதில் கவிதைகள் இருந்தது, கொஞ்சமாக..
பிரியன், நண்பன், நான், இளசு, கவிதா.... இப்படி

ஆனால் பதிகவிதைகளை மாற்றுகருத்து, பின்னூட்டம் இதற்க்காக பயன்படுத்திய பெருமை தாமரையை மட்டுமே சேரும்....

இன்று எனக்கு உங்களை எல்லாம் பாக்கும் போது பொறாமையா இருக்கு... அதிலையும் ஓவியனை... வந்த போது அரட்டையை தவிர வேறு ஒன்னும் தெரியாதோ என்று நினைத்திருக்கிறென்...
இன்று எனக்கு குருவாய்....

நன்றிகள் அண்ணா!

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே, மன்றம் வந்த போது நான் செய்த வேலை(அரட்டை) அது ஒன்று தானே. ஆனால் இன்று என்னை மாற்றியது இங்கே இருந்த உறவுகளும் அவர்களின் வழி நடத்தலுமே என்றால் அது மிகையில்லை.
ஆரம்பித்து வைத்தது அண்ணாவின் ஆசியுடன் ஆதவனும் ஷீ-நிசியும், பிறகு உங்கள் பின்னூட்டங்களின் மீதான ஈர்ப்பு இப்போது செல்வன் அண்ணாவின் கவிப் பட்டறை என்று நான் நன்றாகவே ஆசிர்வதிக்கப் பட்டிருக்கின்றேன்.

அமரன்
21-06-2007, 07:33 PM
ஒருத்(தீ)யால்
கவி அள்ளித் தெளித்(தீ)ரோ..?
நன்று...
கவித்தீ சுடரட்டும்...

அழிக்க வந்த ஒரு(த்)தீ
அளித்தது உனக்கு
புது வாழ்க்கை
நீயும் கவிஞனாய்...

ஓவியா
21-06-2007, 07:35 PM
அடடா சொல்ல வார்த்தை வரவில்லை மக்களே,
ஒவ்வொரு குட்டி கவிதையும் அருமயோ அருமை.

செல்வன் அண்ணா செதுக்கிய சிற்ப்பங்கள் அருமையாக மின்னுகின்றன.


− ஆனந்தத்தில்
ஓவியா

அக்னி
21-06-2007, 07:35 PM
வேறொருத்தி
மூட்டினாள்....
எங்கள்
வேரில் ஒரு தீ... காதல்...
வேறொருத்தி
முட்டினாள்...
எங்கள்
உடலில் ஒரு தீ... காமம்...

அமரன்
21-06-2007, 07:37 PM
அடடா சொல்ல வார்த்தை வரவில்லை மக்களே,
ஒவ்வொரு குட்டி கவிதையும் அருமயோ அருமை.

செல்வன் அண்ணா செதுக்கிய சிற்ப்பங்கள் அருமையாக மின்னுகின்றன.


− ஆனந்தத்தில்
ஓவியா


ஒரு(த்)தீ சொன்ன வாழ்த்து
தீந்தமிழாய் என்காதில்...
நினைக்கிறேன் செல்வமாய்
சொல்லின் செல்வரை...

அக்னி
21-06-2007, 07:37 PM
− ஆனந்தத்தீல்
ஓவியா

இங்கும் ஒரு தீ...

அமரன்
21-06-2007, 07:40 PM
வேறொருத்தி
மூட்டினாள்....
எங்கள்
வேரில் ஒரு தீ... காதல்...
வேறொருத்தி
முட்டினாள்...
எங்கள்
உடலில் ஒரு தீ... காமம்...

உற்றவள் ஒரு(த்)தீ
பற்றவைத்தாள் தீ
குலவிளக்காய்
மற்றவள் ஒரு(த்)தீ
பத்தவைத்தாள்
தெரு விளகாய்
முன்னது அளித்தது
ஆனந்த தீ
பின்னது அழித்தது
ஆனந்த தீ

ஓவியன்
21-06-2007, 07:47 PM
ஒருத்திக்கும்
ஒரு தீக்கும்
இலக்ணம் காண
காதலன் கவிஞன்
ஆக வேண்டுமோ?

ஓவியன்
21-06-2007, 07:48 PM
அடடா சொல்ல வார்த்தை வரவில்லை மக்களே,
ஒவ்வொரு குட்டி கவிதையும் அருமயோ அருமை.

செல்வன் அண்ணா செதுக்கிய சிற்ப்பங்கள் அருமையாக மின்னுகின்றன.


− ஆனந்தத்தில்
ஓவியா

நன்றிகள் அக்கா!

ஓவியன்
21-06-2007, 07:50 PM
உற்றவள் ஒரு(த்)தீ
பற்றவைத்தாள் தீ
குலவிளக்காய்
மற்றவள் ஒரு(த்)தீ
பத்தவைத்தாள்
தெரு விளகாய்
முன்னது அளித்தது
ஆனந்த தீ
பின்னது அழித்தது
ஆனந்த தீ

ஒருத்தியோ
ஒரு தீயோ
கட்டுப்பாடிருப்பின்
அணையா ஒருபோதும்
ஆனந்த தீ!

அமரன்
21-06-2007, 09:04 PM
ஒருத்தியோ
ஒரு தீயோ
கட்டுப்பாடிருப்பின்
அணையா ஒருபோதும்
ஆனந்த தீ!

ஒரு(த்)தீ மூட்டிய தீ
அணைந்தது
இன்னொரு(த்)தீயின்
அணைப்பில்
அணையும் தீயாய்
இப்போது நான்

ஓவியன்
21-06-2007, 09:09 PM
ஒரு(த்)தீ மூட்டிய தீ
அணைந்தது
இன்னொரு(த்)தீயின்
அணைப்பில்

ஓரு(த்)தீ
போதாதா உமக்கு?
சுட்டால் தான்
புத்தி வருமோ?

அமரன்
21-06-2007, 09:11 PM
இரு(த்)தீ சுட்ட புண்ணில்
வருடியது இன்னொரு(த்)தீ
மயிலிறகாய்...

ஓவியன்
21-06-2007, 09:19 PM
ஒரு(த்)தீ
இரு தீயாகி
போதாதென்று
மயிலிறகுடன்
இன்னொரு(த்)தீயா?
இரு இரு
காமத் தீயடங்க
வருந்தி வருவாய்
திருந்தி!

பென்ஸ்
21-06-2007, 11:29 PM
இரு(த்)தீ சுட்ட புண்ணில்
வருடியது இன்னொரு(த்)தீ
மயிலிறகாய்...

யதாத்தம்...


ஒரு(த்)தீ
இரு தீயாகி
போதாதென்று
மயிலிறகுடன்
இன்னொரு(த்)தீயா?
இரு இரு
காமத் தீயடங்க
வருந்தி வருவாய்
திருந்தி!

யதாற்த்ததின் மறுபக்கம்

அமரன்
22-06-2007, 06:01 AM
ஒரு(த்)தீ பற்றி
வருத்தியது
இன்னொரு(த்)தீ
அணைத்தது
அணையா தீபமாய்
நான்...

ஓவியா
22-06-2007, 04:43 PM
அணையா தீபமாய்
அணைக்கிறாய்
உன்
மூச்சுகாற்றில்
இன்னொரு(த்)தீயை


...

ஓவியன்
22-06-2007, 07:43 PM
அணைக்க நினைத்தேன்
ஒரு தீயை,
ஆனால்
அணைத்து விட்டேன்
ஒரு(த்)தீயை.

அமரன்
22-06-2007, 08:32 PM
ஒரு(த்)தீ உட்புறத்திலே
இன்னொரு(த்)தீ
என் அந்தப்புரத்திலே
தீயிலிட்ட
புழுவாய் நான்..

ஓவியன்
22-06-2007, 08:37 PM
என் மனதின்
ஓரத்தின் உட்காரும்
ஒரு(த்)தீக்குத்
தெரியவில்லை!
தான் மூட்டிய
தீக்கு தானே
மருந்தென்று.

ஓவியா
23-06-2007, 12:27 AM
கொளுத்தினான்
கண்ணால் − ஒத்தி(தீ)யை
கொழுந்து விட்டு
எரிகிறது − அவனின்
அம்மாவாசை இர*வு

ஓவியன்
23-06-2007, 12:38 AM
கொளுத்தினான்
கண்ணால் − ஒத்தி(தீ)யை
கொழுந்து விட்டு
எரிகிறது − அவனின்
அம்மாவாசை இர*வு

அந்த அமாவாசை
இருட்டை
இல்லாமற் செய்த
ஒரு(த்)தீ
இன்னமும்
அணையாமல்
என்னை
அணைத்தபடி!.

ஓவியா
23-06-2007, 12:41 AM
என்னை
அணைத்தபடி!.
நீ
அவனை
அனைத்தபடி
நான்

− கர்ப்பினி தாய்

ஓவியன்
23-06-2007, 12:46 AM
என்னை
அணைத்த
ஒரு(த்)தீக்குத்
தெரியவில்லை
அந்த ஒரு தீ
அணைக்க அணைக்க
இன்னும் பற்றுமென்று.

ஓவியன்
23-06-2007, 12:52 AM
அணைக்க
அணைக்க
அணையாமல்
பற்றியது
அந்த ஒருத்திமேல்
என் காதல் தீ!

ஓவியன்
23-06-2007, 12:54 AM
அணைக்க
அணைக்க இன்னும்
அணைக்கச் சொல்லியது
அந்த ஒருத்தி மேல்
நான் கொண்ட காதல் தீ!.

ஓவியா
23-06-2007, 12:57 AM
அணைக்க அணைக்க
இன்னும் பற்றுமென்று
அவசரமாக அணைத்தேன்
தண்ணீர் வற்ற − கண்ணிரிலும்
அணைத்தேன்
அனலின் உஷணத்தில்
அந்த ஒரு(த்தி)தீயில்
நானே உருகி
பின் கருகினேன்

ஓவியன்
23-06-2007, 12:59 AM
அருமை அக்கா!

அட்டகாசமாக அமர்களப்படுத்துகிறது, உங்கள் வரிகள்.

ஓவியா
23-06-2007, 01:22 AM
எல்லாம் உங்க கிட்ட கத்து(ற்று) கொண்டதுதான்.....ஆனாலும் சில* வ*ரிகளில் பல நிஜங்கள் அடங்கியுல்லன.

நீங்கள் அனைவரும் ரொம்ப அற்புதமா கவிச்சமர் எழுதுகின்றீர்கள்.
படித்து படித்து வியந்துப்போகிறேன்.

சபாஷ் தம்பீகளா.

அமரன்
23-06-2007, 07:47 AM
எல்லாம் உங்க கிட்ட கத்து(ற்று) கொண்டதுதான்.....ஆனாலும் சில* வ*ரிகளில் பல நிஜங்கள் அடங்கியுல்லன.

நீங்கள் அனைவரும் ரொம்ப அற்புதமா கவிச்சமர் எழுதுகின்றீர்கள்.
படித்து படித்து வியந்துப்போகிறேன்.

சபாஷ் தம்பீகளா.

ஹி...ஹி...நாங்களே கத்துக்குட்டிங்க எங்ககிட்ட நீங்க ......சரி சரி....
பத்திய தீயை
அணைக்கவந்தோரின்
கண்ணில் தீ
ஊருக்கே மணிஅடிக்கும்
இவர்களுக்குப்
புரியவில்லை
வதந்தீ

ஓவியன்
23-06-2007, 09:11 AM
வதந்தீயும்
காதல்தீயும் ஒன்றுதான்
இரண்டும் பற்றிக்கொண்டால்
அணைப்பது சிரமம்.

அமரன்
23-06-2007, 09:13 AM
வதந்தீ பற்றியதால்
பற்றிய ஒரு(த்)தீ
விட்டது உயிரை

ஓவியன்
23-06-2007, 09:19 AM
காதல் தீயென்ற*
வதந்தீயால்
எரிந்தது
ஒரு(த்)தீ!

அமரன்
23-06-2007, 09:22 AM
வந்தந்தீ பற்றிய
பற்றிய ஒருத்தீயின்
மனதில் தீ
அணைக்க வந்தவள்
தீயாய் எரிறாள்
அழிக்க நினைக்கிறாள்
மனத்தீயை அழிக்காமல்

ஓவியன்
23-06-2007, 09:24 AM
என்ன அமர் இந்த் திரி!, கவிச்சமர் போலவே ஆகிட்டுது!!!

ஆகட்டும் ஆகட்டும் நானும் பின்வாங்குவதாக இல்லை. :sport-smiley-018:

ஓவியன்
23-06-2007, 09:26 AM
வதந்தீ
எரித்தது
அந்த ஒரு(த்)தீயை
மடுமல்ல − அவள்
காதலையும் தான்.

அமரன்
23-06-2007, 09:26 AM
என்ன அமர் இந்த் திரி!, கவிச்சமர் போலவே ஆகிட்டுது!!!

ஆகட்டும் ஆகட்டும் நானும் பின்வாங்குவதாக இல்லை. :sport-smiley-018:

ஓவியன் இது ஒரு களம். ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு சொல்லாடலை வளர்ப்பதற்கு உதவும் ஒரு களமாக இருக்கட்டும். கொஞ்ச நாட்களுக்கு இக்களம் அடுத்து இன்னொரு களம். களம் மாறும். சொல்லும் மாறும். ஆடுவோம். வளர்வோம்.

அமரன்
23-06-2007, 09:27 AM
சிந்தையில் பற்றிய
வதந்தீயால்
பற்றிய ஒருத்தி
சிதையில்..

ஓவியன்
23-06-2007, 09:35 AM
ஒருத்திக்கும்
ஒரு தீக்குமிடையில்
வதந்தீ!!!

ஓவியன்
23-06-2007, 09:36 AM
ஓவியன் இது ஒரு களம். ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு சொல்லாடலை வளர்ப்பதற்கு உதவும் ஒரு களமாக இருக்கட்டும். கொஞ்ச நாட்களுக்கு இக்களம் அடுத்து இன்னொரு களம். களம் மாறும். சொல்லும் மாறும். ஆடுவோம். வளர்வோம்.

உண்மைதான் அமர்!

இது மிகுந்த ஆரோக்கியமான சொல்லாடலாகத் தெரிகிறது, தொடரட்டும்.

அமரன்
23-06-2007, 09:38 AM
ஒருத்திக்கும்
ஒரு தீக்குமிடையில்
வதந்தீ!!!

ஒருத்தி ஆனால்
ஒரு(த்)தீயாக*
−வதந்தீ

ஓவியனின் கவிதையில் உதித்தது.

விகடன்
23-06-2007, 09:39 AM
வேறொருத்தி வந்தால்
மறைந்திடுமா என்
துயரங்கள்?
வேறு ஒரு தீயென
இன்னமும் இதயத்தில்
கனலும் உன்
ஞாபகங்களை எப்படி
அழிப்பது?

கவிதை கருத்தாழம் மிக்கதாக இருக்கிறது போலுள்ளதே.
ஏன் ஓவியரே. ஏதாச்சும் கலியாணம் கிலியாணம் பேசுறாங்களோ???

ஓவியன்
23-06-2007, 09:49 AM
கவிதை கருத்தாழம் மிக்கதாக இருக்கிறது போலுள்ளதே.
ஏன் ஓவியரே. ஏதாச்சும் கலியாணம் கிலியாணம் பேசுறாங்களோ???

ஏம்பா நான் சந்தோசமா இருப்பது உமக்குப் பிடிக்கவில்லையா? :icon_shok:

அமரன்
23-06-2007, 09:52 AM
ஏம்பா நான் சந்தோசமா இருப்பது உமக்குப் பிடிக்கவில்லையா? :icon_shok:

விராடன் பத்தவைக்கிறாப்போல இருக்கு

மனோஜ்
23-06-2007, 10:23 AM
தீக்கு தீஇட்டு
தீவளர்த்து
தீது தீர்ந்து
தீத்திக்கும்
தீர்வை

ஓவியன்
23-06-2007, 11:20 AM
ஒரு(த்)தீக்கு
தீர்வு கண்டு
வதந்தீயை
நிறுத்துகையில்
அவலக் குரலாய்
இன்னுமொரு(த்)தீ
என் தங்கை.

அமரன்
23-06-2007, 12:47 PM
என் தங்கை
வசந்தியின்
வசந்தத்தில் தீ
வதந்தீயால்...

ஓவியா
23-06-2007, 01:14 PM
தீ தந்தி
ஒருத்தி(தீ)
வாந்தி

−கர்ப்பம்

அமரன்
23-06-2007, 01:18 PM
அணைக்க வந்த
ஒரு(த்)தீயின்
பந்தியில் நான்
யாரோடென்றாலும்
வாழ்க

ஓவியன்
23-06-2007, 06:15 PM
பந்தியில்
பரிமாறிய பாயாசமாய்
வதந்தீயில் எரிந்தது
ஒரு(த்)தீயின்
காதல் தீ!

அமரன்
23-06-2007, 06:22 PM
ஒருத்தி பிரிகையில்
வந்தது ஆயாசம்
மணவீட்டுப் பந்தியில்
சூடான பாயாசம்
எனக்கில்லாத சுரணை
என் நாவில்....

ஓவியன்
23-06-2007, 06:43 PM
நாவாலே
சுட்ட தீ
வெகுமதியாய்
தந்தது − வதந்தீ

அமரன்
23-06-2007, 06:47 PM
தந்தியைவிட
வெகத்தில்
முந்துது
வதந்தீ
நம்பகத்தன்மையிலும்

ஓவியன்
23-06-2007, 07:19 PM
சுமதிக்கும்
பசுபதிக்கும்
என்னவோ ஏதோ
என்று வாய்கூசா
வதந்தீகள்
எரித்தது ஒரு(த்)தீயின்
வாழ்க்கையை.

வசந்தி - பசுபதியின்
காதல் தீ!.

அமரன்
23-06-2007, 07:32 PM
வசந்திக்கு சொல்லவில்லை
சுமதி சுந்தரி
நீ என் சுந்தரி
மதியில்லா பசுபதி

ஓவியன்
24-06-2007, 05:12 PM
மதியில்லா பசுபதி
பதி இல்லா
சுந்தரி இப்படிப்
பரவுகிறது வதந்தீ
அவர் நட்பின்
தெய்வீகம் தெரியாமல்.

அமரன்
24-06-2007, 05:18 PM
தெய்வாதீனமாய்
பார்த்தவர் சொல்வார்
ஈனமாய்
தெய்வீக காதல்
நம்புகிறதே
ஈனமாக இல்லை

ஓவியன்
24-06-2007, 05:23 PM
தங்கையின் கல்யாணம்
பெற்றோரின் வைத்தியம்
என்று தொடரும்
தேவைகளின்
தேடலில்,
தெய்வீகக் காதலும்
தீக்கிரையாகத்தான்
செய்கிறது.

அமரன்
24-06-2007, 05:27 PM
தேடலில் காதல்
அழிகிறது..
தேடலில் வாழ்க்கை
செழிக்கிறது..
காதல் அழிவில்
செழிக்கிறது வாழ்க்கை

ஓவியன்
24-06-2007, 05:46 PM
காதலின்
தேடலில் பற்றிய - தீ!
காதலையும்
எரித்துவிட்டுத்தான்
ஓய்ந்தது.

அமரன்
24-06-2007, 05:48 PM
ஓய்ந்துவிட்ட தீயை
தென்றலாய் புகுந்து
புயலாய் வீசி
பத்த வைத்தாளே
இன்னொருத்தி...

ஓவியன்
25-06-2007, 07:02 PM
இன்னொருத்தி,
இன்னொரு தீ,
இரண்டாம் முறை
நாடமாட்டான்
ஒருமுறை சூடு
கண்டவன்.

அமரன்
25-06-2007, 07:06 PM
சூடு கண்டவன்
நாடுகின்றான்
ஒருத்தி மடியை
குட்டிக்கு மடிதானே
சொர்க்கம்

ஓவியன்
25-06-2007, 07:08 PM
ஒருத்தீ
ஒரு தீயாகி
நூறு வரை
வந்து விட்டதே!

பி.கு − இது 100 வது பின்னூட்டம்.

அமரன்
25-06-2007, 07:18 PM
ஒருத்தி தீயாகி
என்னை தியாகியாக்கி
நூறாண்டு வாழ்கவென
வாழ்த்தச் சொல்கிறாளே..
ஓவியரே...

ஓவியன்
25-06-2007, 07:25 PM
தீயும்
தியாகியும்
ஒன்றாகிறது தாம்
எரிந்து மற்றவருக்கு
வெளிச்சம் தருகையில்.