PDA

View Full Version : நீண்டநேரம் எடுக்கிறது



அன்புரசிகன்
17-06-2007, 06:44 AM
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நமது மன்றம் தோன்றுவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. கடந்த காலங்களில் இப்படி ஏற்ப்பட்டதில்லை... முதலில் மன்றம் தோன்றுவதற்கே 5 நிமிடநேரம் எடுக்கிறது. பின்னர் ஒரு திரியை சொடுக்கினால் மீண்டும் நேரம் எடுக்கிறது. சிலவேளை வருவதே இல்லை.

இந்த திரியை நான் தொடுக்க இதுவரை 25 நிமிடத்திற்கு மேலாக செலவு செய்துவிட்டேன்.
அலுவலக-வீட்டு - நண்பர்கள் கணிணி என 6 வெவ்வேறு இடத்தில் உள்ள கணிணிகளில் முயற்ச்சித்துவிட்டேன். ஒரே பதில் தான் கிடைக்கிறது. மற்றய இணையங்களுக்கு மிகவிரைவாக செல்கிறது...
கத்தாரில் உள்ள வேறு யாருக்காவது இதே பிரச்சனை உள்ளதா? அல்லது வேறுயாருக்காவது இதே பிரச்சனை உள்ளதா?

விடை தெரிந்தவர்கள் கூறுங்கள்.

ஓவியன்
17-06-2007, 06:49 AM
அட எனக்கும் இந்த நிலை வந்தது, நான் என் கணினியிலும் இணைய இணைப்பிலுமுள்ள பிரச்சினை என்று நினைத்திருந்தேன்.

சுட்டிபையன்
17-06-2007, 06:59 AM
ஹீ ஹீ ஆனால் எனக்கு இந்த பிரச்சினை இல்லை :D:D

மனோஜ்
17-06-2007, 08:48 AM
அப்படி ஒன்றும் இல்லையே
தங்கள் பகுதியில் பிரச்சனை இருக்கலாம்

namsec
17-06-2007, 09:02 AM
இன்று காலை எனக்கு இருந்தது என்னுடைய்ய நணினியில் ஏதோ கொளாறு என்று நினைத்தேன் இப்போது சரியாகிவிட்டது

அன்புரசிகன்
17-06-2007, 09:17 AM
இது டோஹாவில் மட்டும் உள்ள பிரச்சனை அல்ல. கத்தாரின் பலபகுதியில் உள்ள பிரச்சனை. Industrial Area எனப்படும் டோஹாவில் இருந்து சற்று தொலைவில் உள்ளபகுதியிலும் இதே பிரச்சனை. சிலவேளை மன்றத்தின் கீழ்ப்பகுதி (What's Going On? Currently Active Users பகுதி யுனிக்கோட் கன்வேட்டர் பகுதி) தோன்றுவதே இல்லை.
சாதாரணமாக hotmail போன்ற தளங்கள் நீண்டநேரம் எடுக்கும். இப்போதெல்லாம் dialog box தோன்றுவது போல் சொடுக்க சொடுக்க விரைவாக வருகிறது.

இளசு
17-06-2007, 10:04 AM
எனக்கு அந்த பிரச்சினை இல்லையே அன்புரசிகன்..

ஒரு கணினியில் தாமதம் என்றால் Cache - clear செய்துபார்க்கலாம்.

பல கணினிகளிலும் என்றால் - அந்தப்பகுதி இணையத் தொடர்பு சிக்கலாய் இருக்கலாம் என எண்ணுகிறேன்!

அன்புரசிகன்
17-06-2007, 10:47 AM
இருக்கலாம் இளசுஅண்ணா... அனால் மற்றய இணையங்கள் மிகவிரைவாக தோன்றுகிறதே. அது தான் என்ன மாயம் என்று தெரியவில்லை. cache - cookies அனைத்தையும் நீக்கியாகிவிட்டது.

இராசகுமாரன்
18-06-2007, 09:30 AM
வளை குடாவில் பல இடங்களில் கடந்த சில வாரங்களாக இப்படித் தான் உள்ளது. என்னாலும் பல நேரங்களில் நமது தளத்திற்கும், மற்ற சில தளங்களுக்கும் செல்ல முடியவில்லை. ஆனால், இன்று நல்ல வேகமாக செல்ல முடிகிறது.

சமீபத்தில் வளைகுடாவின் ஓமான் நாட்டில் அடித்த புயலின் தாக்கமோ, என்னவோ தெரியவில்லை!

அறிஞர்
18-06-2007, 01:07 PM
இராசகுமாரன் விளக்கத்துக்கு நன்றி...

எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.

அன்புரசிகன்
18-06-2007, 01:19 PM
சூப்பர். இப்போ தூள் பறக்கிறது. கடைசி 4 நாட்க்களாக மண்டையே வெடித்துவிடும் போல் இருந்தது. அதுவும் நேற்றும் இன்று மதியம் வரையும் உச்சக்கட்டம்.

தற்போது மிகவும் நேர்த்தியாக வேலைசெய்கிறது.

ananthu123
22-06-2007, 05:22 AM
தற்போது பரவாயில்லை.மூன்று நாட்களுக்கு முன்னர் சற்று சிரமம்தான்.