PDA

View Full Version : இல்லறம்



அமரன்
16-06-2007, 08:16 PM
கண்களில் புகுந்தாள்
உதடுகள் சேர்ந்தன
'ம்' பிறந்தது

இளசு
16-06-2007, 08:28 PM
பாதிப்பாதியாய் படைத்து இயற்கை இணையச் சொன்னது .
பண்பான நெறியோடு அதைச் செய்ய சமூகம் இல்லறம் கண்டது..

அதை முத்தமான ..மன்னிக்கவும் முத்தான மூன்று வரிகளில் சொன்ன
அமரனுக்கு வாழ்த்து முத்தங்கள்!

சிவா.ஜி
17-06-2007, 04:33 AM
கண்களில் புகுந்தாள்
உதடுகள் சேர்ந்தன
'ம்' பிறந்தது

இரண்டு 'ன்' கள் இணந்து ஒரே 'ம்' ஆனதை அழகாய் வடித்த அமரனுக்கு என்ன சொல்லி பாராட்ட. அவர் பாணியிலேயே 'ம்' நன்று

namsec
17-06-2007, 04:53 AM
இணையத்தில் இல்லறத்தை இனிமயாய் இட்டமைக்கு இனிய வாழ்த்துக்கள்

ஓவியன்
17-06-2007, 09:05 AM
கண்களில் புகுந்தாள்
உதடுகள் சேர்ந்தன
'ம்' பிறந்தது

அமரனின் நச் வரிகளும் அதற்கு அண்ணாவின்
பாதிப்பாதியாய் படைத்து இயற்கை இணையச் சொன்னது .
பண்பான நெறியோடு அதைச் செய்ய சமூகம் இல்லறம் கண்டது..

அதை முத்தமான ..மன்னிக்கவும் முத்தான மூன்று வரிகளில் சொன்ன
அமரனுக்கு வாழ்த்து முத்தங்கள்!

அழகு விமர்சனமும் அருமை.

அமரன்
17-06-2007, 01:47 PM
நன்றிகள் அனைவருக்கும்

அக்னி
17-06-2007, 01:50 PM
"இச்" வருமோ என்று பார்த்தால், "ம்" வந்து கவர்ந்து போனது கவிதை.
அழகு அமரன்...

தாமரை
17-06-2007, 01:56 PM
இன்னும் அழலை பிறக்க என்ன செய்வது அமரா?

அமரன்
17-06-2007, 02:19 PM
இன்னும் அழலை பிறக்க என்ன செய்வது அமரா?
:confused: :confused: :confused: :confused:

தாமரை
17-06-2007, 02:25 PM
ம்+அ+ழ்+அ+ல்+ஐ = மழலை. இப்பத்தானே ம் பிறந்திருக்கு. :icon_hmm: :icon_hmm: :icon_hmm:

அமரன்
17-06-2007, 02:26 PM
ம்+அ+ழ்+அ+ல்+ஐ = மழலை. இப்பத்தானே ம் பிறந்திருக்கு. :icon_hmm: :icon_hmm: :icon_hmm:
சிந்திக்கவே இல்லை.

தாமரை
17-06-2007, 02:32 PM
சிந்தித்து இருந்தால் திருமணம் செய்வீரா???

அக்னி
17-06-2007, 02:35 PM
சிந்திக்கவே இல்லை.


சிந்தித்து இருந்தால் திருமணம் செய்வீரா???
தித்திக்கவே இல்லை என்கிறீர்களோ...?

தாமரை
17-06-2007, 02:37 PM
ம்ம்ம்.... தித்தித்தால் திகட்டுமே!

அமரன்
17-06-2007, 02:39 PM
ம்ம்ம்.... தித்தித்தால் திகட்டுமே!
சரிங்க

மனோஜ்
17-06-2007, 02:46 PM
இல்லரம அது நல்லரம்
சென்னது கின்னரம்
விளைவித்தது அமரம்

அமரன்
11-07-2007, 09:44 AM
சிந்தித்து இருந்தால் திருமணம் செய்வீரா???

அதுதான் செய்யலையே....

பிச்சி
11-07-2007, 09:50 AM
அமரன் அண்ணாவின் கவிதை மறைந்து அழகான பொருள்.... நல்லறம்.
தாமரை அண்ணா பதில் சிறப்பு..

அமரன்
11-07-2007, 09:51 AM
பிச்சி...கற்றுக்கொடுத்ததே....தாமரை அண்ணாதான்...நன்றி..