PDA

View Full Version : நான்.



sreeram
16-06-2007, 08:05 PM
நான்
அழிவில்லாதவன்.

என்னைக்
கடலிலே தூக்கிப் போடுங்கள்
தண்ணிராய் மாறிடுவேன்.

நெருப்பில் இடுங்கள்
நானே நெருப்பாவேன்.

காற்றினிலே வீசுங்கள்
புயலாவேன்.

பெண்ணின்
இதயத்தில் மட்டும்
இட்டு சிறையாக்கவேண்டாம்...

நான் -
அன்பினில் கரைந்து
காணாமல் போய்விடுவேன்.

நட்புடன்
ஸ்ரீராம்

ஓவியன்
16-06-2007, 08:12 PM
அன்பிலே கரைந்து காணாமல் போவதும் ஒரு சுகம் தானே அதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்????

sreeram
16-06-2007, 08:17 PM
அன்பிலே கரைந்து காணாமல் போவதும் ஒரு சுகம் தானே அதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்????

காதலி கிடைக்கவில்லை.... அதனால் தான்...

அமரன்
16-06-2007, 08:21 PM
ரொம்ப ஃபீலிங்கோட எழுதினீங்களோ. நல்லா இருக்குங்க. காற்ரில்வீசும்போது சுவாசமாக இருந்துவிடுங்கள். காதல் உங்களைக் காதலிக்கும்.

இளசு
16-06-2007, 08:31 PM
வாழ்த்துகள் ஸ்ரீராம்..

எடை அழிந்து காணாமல் போகத் துடிக்கும்
இதயங்கள் இறங்குவது காதல் கடலில்தான்..

பின்னாளில் சுயம் தேடி அகங்காரம் விழிக்கும்போதுதான்
பிரச்சினைகள் தொடங்கும்..!

பாராட்டுகள் நல்ல கவிதைக்கு!

சிவா.ஜி
17-06-2007, 04:40 AM
எதில் இடப்பட்டாலும் அதுவாகவே மாறும் அதிசய ஆடவனே, பெண்ணின் இதயத்தில் இட்டாலும் அவள் இதயமாகவே மாறி விடு அதன் சுகமே தனி.கூடிய சீக்கிரம் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவும் அழகான கவிதைக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

namsec
17-06-2007, 04:49 AM
கவிதை யேல்லாம் சரி அன்பு பெண்ணிடம் மட்டுமா உண்டு

உன் மீது பற்று கொண்ட அனைவரும் காட்டுவார் அன்பு

ஆதவா
19-06-2007, 03:35 PM
என்னங்க திடீர்னு..... இப்படி ஒரு அழகான கவிதை சொல்லிட்டீங்க....

பொதுவாக பெண்ணின் மனது ஆழம் என்பார்கள்>.. அதில் சிக்கியவர்கள் மீள்வதில்லை என்ற பெயரும் உண்டு.

எந்த ஒரு இடத்திற்கும் அதன் தன்மையாக மாறும் தன்மையுள்ள வாலிபன், காதலைக் கண்டு ஒதுங்குகிறானோ?

அழிவில்லாத காதலன்
அச்சம் தெரிவிக்கும் காதல்
இழையோடும் ரெள்த்திரம்
என்னவேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் பெண் வேண்டாம்..

பூவைக் கண்டு பயப்படுகிறது புயல்... சபாஷ்...

மனோஜ்
19-06-2007, 03:41 PM
சிறப்பான கவிதை
பூ வை கண்டு புயல் கலங்குவது வித்தியாசம் அருமை

தாமரை
19-06-2007, 03:54 PM
நான்
அழிவில்லாதவன்.

என்னைக்
கடலிலே தூக்கிப் போடுங்கள்
தண்ணிராய் மாறிடுவேன்.

நெருப்பில் இடுங்கள்
நானே நெருப்பாவேன்.

காற்றினிலே வீசுங்கள்
புயலாவேன்.

பெண்ணின்
இதயத்தில் மட்டும்
இட்டு சிறையாக்கவேண்டாம்...

நான் -
அன்பினில் கரைந்து
காணாமல் போய்விடுவேன்.

நட்புடன்
ஸ்ரீராம்

இல்லாததில் தூக்கிப் போட்டால்
இல்லாமல் தானே போவீர்கள்
தமிழகத்தில் இல்லாதவரே!

(ஆமாம் இது யாரு −− தமிழகத்தில் இல்லாதவர் − தண்ணீர்)

ஆதவா
19-06-2007, 03:56 PM
இல்லாததில் தூக்கிப் போட்டால்
இல்லாமல் தானே போவீர்கள்
தமிழகத்தில் இல்லாதவரே!

(ஆமாம் இது யாரு −− தமிழகத்தில் இல்லாதவர் − தண்ணீர்)


இல் ஆதலைப் பற்றி பேசினால்
நீர் இல்லாததைப் பற்றி சொல்கிறீரே அண்ணா>?

இல் ஆதவர் நான் தான்..... ஏனென்றால் இன்றைய தேதிக்கு இல்லாதவர் நாந்தான்.... ஹி ஹி..

தாமரை
19-06-2007, 04:15 PM
இல் ஆதலைப் பற்றி பேசினால்
நீர் இல்லாததைப் பற்றி சொல்கிறீரே அண்ணா>?

இல் ஆதவர் நான் தான்..... ஏனென்றால் இன்றைய தேதிக்கு இல்லாதவர் நாந்தான்.... ஹி ஹி..

இல்லாத இதயத்தில் தூக்கிப் போட்டால் இல்லாமல்தானே போவார் என்றேன்

புரிந்ததா இல்லை பின் தொடர்ந்து வந்த தண்ணீரில் மறந்திட்டீரா?

விகடன்
19-06-2007, 04:22 PM
காதலி கிடைக்கவில்லை.... அதனால் தான்...

காதலி கிடைக்காவிட்டால் இப்படியா?
கிடைப்பவரை காதலியாக்கிக் கொள்ளுங்கள்:lachen001:

தாமரை
19-06-2007, 04:29 PM
இல் ஆதலைப் பற்றி பேசினால்
நீர் இல்லாததைப் பற்றி சொல்கிறீரே அண்ணா>?

இல் ஆதவர் நான் தான்..... ஏனென்றால் இன்றைய தேதிக்கு இல்லாதவர் நாந்தான்.... ஹி ஹி..

இவர் எழுதிய கவிதையினைக் கண்டீரா உணர்ந்தீரா ஆராய்ந்தீரா?

நிரப்பபடும் பாத்திரத்தின் வடிவினைப் பெறுவது திரவம்.. திரவம் என்றாலே அதில் முதன்மையானது தண்ணீர்..

இவரும் நெருப்பில் போட்டால், நெருப்பாபவேன், நீரில் போட்டால் நீராவேன் அதில் போட்டால் அதாவேன் இதில் போட்டால் இதாவேன் என்றால் அப்புறம் அவரைத் தண்ணீரே என்று சொல்லாமல் என்ன சொல்வதாம்?