PDA

View Full Version : காண்பதெல்லாம் இன்பமப்பா



இனியவள்
16-06-2007, 06:37 PM
விதியென்னும் குழந்தை கையில்...
உலகந் தன்னை விளையாடக் கொடுத்து விட்டாள்
இயற்கை அன்னை - அது
விட்டெறியும் உருட்டும்
மனிதர் வாழ்வை
மேல் கிழாய்ப் புரட்டி விடும் ..
வியந்திடாதே

மதியுண்டு கற்புடைய
மனைவியுண்டு
வலிமையுண்டு
வெற்றி தரும் வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை எய்திவிட்டால்
காண்பதெல்லாம் இன்பமப்பா...

பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்

ஓவியன்
16-06-2007, 08:35 PM
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை எய்திவிட்டால்
காண்பதெல்லாம் இன்பமப்பா...[/B]

பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்

உண்மை தான்!

பாட்டுக் கோட்டையாரின் வரிகளென்றால் சும்மாவா!

பி.கு - மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு - பிறரது கவிதைகளை இந்தப் பகுதியில் (புதிய கவிதைகள்) பதிக்கலாமா?

அமரன்
29-10-2007, 09:03 PM
இனியவள் பகிர்ந்த பட்டுக்கோட்டை அவர்கள் பகர்ந்த இக்கவிதையை இலக்கியங்கள், புத்தகங்கள் பகுதிக்குமாற்றி உள்ளேன். கவனயீர்ப்புக்கு நன்றி இனியவள்.

யவனிகா
30-10-2007, 04:46 AM
நல்ல கவிதை..பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி இனியவள்.

பூமகள்
30-10-2007, 06:13 AM
பட்டுக்கோட்டையின் பட்டுப்போன்ற வரிகள்..!
பகிர்ந்த இனியவளுக்கு நன்றிகள்..!

அக்னி
30-10-2007, 09:53 PM
காண்பதெல்லாம் இன்பமப்பா... கண்டேன்...
கண்டதே இன்ப மப்பா... மயங்கிவிட்டேனே...

பகிர்தலுக்கு நன்றி...