PDA

View Full Version : ஹைக் கூ கவிதைகள்....



இனியவள்
16-06-2007, 07:35 PM
தோல்வி

போர்க் களத்தின் கருவறை
சுமக்கப் பழகினால்
வெற்றி நிச்சயம்..

இனிமை ...

உன் பேச்சு
பாடுவதை நிறுத்தி
கேட்கிறது குயில்

இருட்டு...

நிலவின்
வேலை நிறுத்தம்..
அம்மாவாசை


காதல் தோல்வி...

இலையுதிர் கால நிலவு
அண்டை வீட்டார் புல்லாங்குழல்,
சுரம் தவறி ஒலிக்கிறது

ஓவியன்
16-06-2007, 08:44 PM
எனக்கு ஹைக்கூவா இல்லையா என்றெல்லாம் தெரியாது ஆனால் உங்கள் வரிகள் அழகாக அழகாக இருக்கின்றன. அனால் இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம் போலுள்ளதே கொஞ்சம் முயற்சி செய்யுங்களேன் - ஏனென்றால் உங்களால் நிற்சயமாக முடியும்.

சிவா.ஜி
17-06-2007, 05:54 AM
தோல்வி

போர்க் களத்தின் கருவறை
சுமக்கப் பழகினால்
வெற்றி நிச்சயம்..

இனிமை ...

உன் பேச்சு
பாடுவதை நிறுத்தி
கேட்கிறது குயில்

இருட்டு...

நிலவின்
வேலை நிறுத்தம்..
அம்மாவாசை


காதல் தோல்வி...

இலையுதிர் கால நிலவு
அண்டை வீட்டார் புல்லாங்குழல்,
சுரம் தவறி ஒழிக்கிறது
இனியவள் அழகான ஐகூக்கள் ஆனால் அதை சிறப்பாக்க எழுத்துப்பிழை நீங்க வேண்டும்.
கடைசி கவிதையை பாருங்கள். 'ஒலிக்கிறது' என்பது எப்படி இருக்கிறது என்று.

namsec
17-06-2007, 06:04 AM
இருட்டு...

நிலவின்
வேலை நிறுத்தம்..
அம்மாவாசை



வேலை நிருத்தம் நிலவுக்கும் சென்றுவிட்டது. ஏன் என்றால் நிலவிலும் ரஸ்யன் கால்பதித்ததால்

ஆதவா
19-06-2007, 04:32 PM
அனைத்தும் அருமையான குறுங்கவிதைகள்... ஆனால் ஹைக்கூ இருட்டு மட்டுமே என்று நினைக்கிறேன்... கடைசி கவிதை மட்டும் மனதில் வட்டமிட மறுக்கிறது... இருந்தாலும் பாராட்டுக்கள் இனியவள். (ஹைக்கூல்லாம் எழுதுவீங்களா? ஆதவா !! நீ ஒருத்தந்தாண்டா தண்டம்..)

மேலும் எழுதுங்கள் நிறைய...

இனியவள்
20-06-2007, 08:40 AM
எனக்கு ஹைக்கூவா இல்லையா என்றெல்லாம் தெரியாது ஆனால் உங்கள் வரிகள் அழகாக அழகாக இருக்கின்றன. அனால் இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம் போலுள்ளதே கொஞ்சம் முயற்சி செய்யுங்களேன் - ஏனென்றால் உங்களால் நிற்சயமாக முடியும்.

நன்றி ஒவியன் ...
என்னால் இயன்றளவு மெருகேற்ற முயற்ச்சிக்கின்றேன்

இனியவள்
20-06-2007, 08:41 AM
இனியவள் அழகான ஐகூக்கள் ஆனால் அதை சிறப்பாக்க எழுத்துப்பிழை நீங்க வேண்டும்.
கடைசி கவிதையை பாருங்கள். 'ஒலிக்கிறது' என்பது எப்படி இருக்கிறது என்று.

நன்றி சிவா.ஜீ... அவசரத்தில் கவனிக்க மறந்துவிட்டேன்..எனி கவனமாக இருக்கின்றேன்..

இனியவள்
20-06-2007, 08:42 AM
அனைத்தும் அருமையான குறுங்கவிதைகள்... ஆனால் ஹைக்கூ இருட்டு மட்டுமே என்று நினைக்கிறேன்... கடைசி கவிதை மட்டும் மனதில் வட்டமிட மறுக்கிறது... இருந்தாலும் பாராட்டுக்கள் இனியவள். (ஹைக்கூல்லாம் எழுதுவீங்களா? ஆதவா !! நீ ஒருத்தந்தாண்டா தண்டம்..)
மேலும் எழுதுங்கள் நிறைய...

நன்றி ஆதவா...

பென்ஸ்
20-06-2007, 04:05 PM
இனியவள்...

அருமையான ஹைட்கூ (நன்றி: பிரதிப்) கொடுத்தமைக்கு நன்றி....

கரு அனைத்தும் அருமை , சொல்லிய விதமும் அருமையாக இருக்கிறது, ஆணால் இவை ஹைக்கு இலக்கனதில் இல்லையே தோழி....

மன்றத்தில் ஹைக்கு பற்றிய சில கட்டுரைகள் இருக்கு... கொடுக்கிறென், உங்களுக்கு உதவும்.

ஹைகூ - தோற்றம், வளர்ச்சி, இலக்கணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=1066)


என் இனிய ஹைக்கூவே .... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8285)

ஷீ-நிசி
20-06-2007, 04:39 PM
ஹைக்கூ முயற்சியில் பிறந்த கவிதைகள் அழகாகவே உள்ளன...


அம்மாவாசை − அமாவாசை

ஒழிக்கிறது − ஒலிக்கிறது...


எழுத்துப்பிழைகளை கவனம் கொள்ளுங்கள்!