PDA

View Full Version : பத்தினியா, பைத்தியமா



rocky
16-06-2007, 04:45 PM
நிதமும் குடித்துவிட்டு
நித்திரையில் படுத்துவிட்டு
கட்டிய மனைவியை
களையெடுக்க துரத்திவிட்டு
காடுவெட்டி மேடுவெட்டி
அவள் தரும் காசையெல்லாம்
கள்ளுக்கடையில் தொலைத்துவிட்டு
காலமெல்லாம் கொடுமைப்படுத்திய
கணவனுக்காக, கடவுளிடம்
வேண்டி விரதமிருக்க்கும்
என்குலப் பெண்களை
என்னவென்று சொல்வது, இவர்கள்
பத்தினிகளா, பைத்தியங்களா.

ஓவியன்
16-06-2007, 07:32 PM
சில கேள்விகளுக்கு விடை அளிப்பது சிரமம் ரொக்கி!

அவ்வாறே உங்கள் கவிதைக்கும்...............

இனியவள்
16-06-2007, 07:39 PM
நிதமும் குடித்துவிட்டு
நித்திரையில் படுத்துவிட்டு
கட்டிய மனைவியை
களையெடுக்க துரத்திவிட்டு
காடுவெட்டி மேடுவெட்டி
அவள் தரும் காசையெல்லாம்
கள்ளுக்கடையில் தொலைத்துவிட்டு
காலமெல்லாம் கொடுமைப்படுத்திய
கணவனுக்காக, கடவுளிடம்
வேண்டி விரதமிருக்க்கும்
என்குலப் பெண்களை
என்னவென்று சொல்வது, இவர்கள்
பத்தினிகளா, பைத்தியங்களா.

ரொக்கி அவர்கள் பைத்தியங்கள் அல்ல பத்தினிகள்..என்றாவது தனது கணவன் திருந்துவான் என்று பகல் கனவு காணும் அபலைப்பெண்கள் அக்கனவு ஒரு நாள் நிஜம் ஆகும் பொழுது அதுவரை அவர்கள் பெற்ற துன்பங்கள் எல்லம் அந்த ஒரு நொடிப் பொழுதில் இன்பங்களாக மாறி விடும்...நம்பிக்கை தானே வாழ்க்கை
உங்கள் கவி வரிகள் அருமை பாரட்டுக்கள்

கலைவேந்தன்
16-06-2007, 07:50 PM
நடைமுறைகள் பற்றிய நல்ல கவிதை!

rocky
18-06-2007, 04:04 PM
அனைவருக்கும் நன்றி. என்றாவது ஒருநாள் நன்றாக வாழ இன்று உழைப்பதற்கும், என்றாவது ஒருநாள் திருந்துவான் என்று இன்று பொருத்துக்கொள்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளதாக கருதுகிறேன். இவர்களை பொருத்துக்கொள்வதை விட வெறுத்து ஒதுக்குவது நல்ல்து என்பதே என் என்னம். இவர்களை பார்த்து குழந்தைகளும் கெட வாய்ப்பு உள்ளது என்பதே காரணம்.

அமரன்
18-06-2007, 04:11 PM
இவர்கள் பைத்தியங்கள்தான். அதே வேளை பத்தினிகளும்தான். பத்தினிகள் காதல் பைத்தியங்கள் தானே ராக்கி. கவிதைக்கு பாராட்டுகள்

rocky
18-06-2007, 04:30 PM
இவர்கள் பைத்தியங்கள்தான். அதே வேளை பத்தினிகளும்தான். பத்தினிகள் காதல் பைத்தியங்கள் தானே ராக்கி. கவிதைக்கு பாராட்டுகள்

மிக்க நன்றி அமரன் அவர்களே.

அன்புரசிகன்
18-06-2007, 04:36 PM
அவள் அவ்வாறு இருக்கும் வரைதான் அவள் பத்தினி. கிளர்ந்தெழுந்தால் நம் சமூகம் வேறுபெயர்களை வாய் கூசாமல் கூறுவர். என்ன செய்வது...

வரிகளுக்கு வாழ்த்துக்கள் றொக்கி

அக்னி
18-06-2007, 04:41 PM
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
என்பதை,
கள்ளானாலும் கணவன் புள்(full)ளானாலும் புருஷன்
என்று எல்லோரும் விளங்கிவிட்டனரோ...

சமுதாயத்தில், இப்படியான கணவன்மார், ஒழிக்கப்படவேண்டும்.
பாராட்டுக்கள்... றொக்கி...

மனோஜ்
18-06-2007, 04:55 PM
உண்மையில் இவை ஓழிக்க முடியாத நிதர்சன உண்மை
வரிகளாக்கியது அருமை

ஷீ-நிசி
18-06-2007, 04:58 PM
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
என்பதை,
கள்ளானாலும் கணவன் புள்(full)ளானாலும் புருஷன்
என்று எல்லோரும் விளங்கிவிட்டனரோ...

சமுதாயத்தில், இப்படியான கணவன்மார், ஒழிக்கப்படவேண்டும்.
பாராட்டுக்கள்... றொக்கி...

அடடா! கலக்கறீயே அக்னி!

rocky
18-06-2007, 04:59 PM
அவள் அவ்வாறு இருக்கும் வரைதான் அவள் பத்தினி. கிளர்ந்தெழுந்தால் நம் சமூகம் வேறுபெயர்களை வாய் கூசாமல் கூறுவர். என்ன செய்வது...

வரிகளுக்கு வாழ்த்துக்கள் றொக்கி


முதலில் இந்நிலையயே மாற்றவேண்டும். அதை அடுத்த தலைமுறையாவது நடத்த வேண்டும்.

ஆதவா
19-06-2007, 03:13 PM
நல்ல கவிதை ராக்கி. தலைப்பை கவனி

பத்தினிகள் என்ற பெயருக்கு நம் நாட்டில் அர்த்தம் காண்பிப்பது ஒருவனிடம் மட்டும் இழக்கும் கற்பு/அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் செக்ஸ்.. கடவுளூக்காக இவர்கள் செய்யும் பிரார்த்தனைகள் அவர்களின் எப்பேர்பட்ட குடிகார/கொடுமைக்கார கணவனாக இருந்தாலும் நீகேட்ட கேள்வி இங்கே சரியாக படவில்லை ராக்கி.

ஆனால் உனது கவிதை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது தெரிகிறது. பிழைகளைத் திருத்திக்கொள்.. கவிதையில் என்றுமே பிழை இருக்கக் கூடாது.

ஒரு சாதாரண மனித வாழ்வு..
கிராமத்தான் சிலர், குடிகார்கள் சிலர் (நேரடியாக கண்ட அனுபவம்)
இரண்டாம் வரி தணிக்கை.
நீ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். பத்தினியோ பைத்தியமோ, அந்த புருஷனுக்கு உண்மைப் பொண்டாட்டி..

இங்கே புருஷனுக்குச் செய்கிறாள் சேவை.
சதியிடம் சதி செய்து பணம் பிடுங்குகிறான் இவன்.

நிச்சயம் மூளைச்சலவை செய்யப்பட்ட பைத்தியங்கள் தான் இவர்கள்... வேறவழியற்றதால் இந்த நிலை....

பெண்ணாயிற்றே!!