PDA

View Full Version : ஜாதகம் ஜோசியம் என்பது உன்மையா ?

balasubramanian
16-06-2007, 07:13 AM
எனக்கு ஜாதகம் ஜோசியம் என்பதில் நம்பிக்கை கிடையாது. எனது குடும்பத்திற்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் எப்போது பிரச்சனை என்று சொன்னலும் என் அம்மா உனக்கு அச்டமத்து சனி நடக்கிறது என்று சொல்கிறார்கள் என்னால் நம்ப முடிய வில்லை. நடக்கும் பல விசயங்கள் அவ்வாறே உள்ளது. எனக்கு ஜக்கி வாசுதெவ் அவர்கள் சொல்லும் கோட்பாடு மிகவும் பிடிக்கும். உடம்பை நன்றாக வைத்தால் 20% வாழ்க்கை வசப்படும். மனது நன்றாக வைத்தால் 40 % ( மொத்தம் 60%) வாழ்க்கை வசப்படும். உயிர் சக்தி கையாள தெரிந்தால் 100% வாழ்க்கை வசப்படும்.
மன்றத்தினரின் கருத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு..
பாலா.ரா

periyavaa
16-06-2007, 07:50 AM
ஜாதகம் என்பது புத்தகத்துக்கு முன்னால் இருக்கும் இன்டெx போன்றது என நினைக்கிறேன்.உள்ளே பார்த்தால் விரிவாக பார்க்கும்போது தலைப்புக்கு எதிர்மறை நடப்புகளையும் உள்ளடக்கியிருக்கும்.

இருப்பினும் ஜாதகத்தாலோ ஜோசியத்தாலோ கடவுளாலோ எதையும் மாற்றமுடியாது.கடந்தவை விடுத்து நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் நம்முடைய முயற்சியால் நிச்சயம் மாற்றமுடியும்.இதை சரித்திரக்காலத்திலிருந்து பலபேர் மாற்றி இருக்கின்றனர்.

எனவே ஜாதகத்தின் அமைப்பு பார்த்து முயறிப்பதையோ முயற்சிக்காமையோ தவிர்த்து நம் யோசனைப்படி அதாவது அனுபவசாலிகளிடமும் கல்வியறிவு பெற்றவர்களிடமும் ஆலோசித்து அக்டில் உங்களுக்கு எவ்வளவு சாத்தியப்படுகிறதோ அதை செய்யுங்கள்.நிச்சயம் வெற்றி.

ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் கடவுள் பெயரைச்சொல்லி ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பன்.

lolluvathiyar
16-06-2007, 07:57 AM
உங்கள் கருத்து சரியானதே, ஜாதகத்திலும் ஜோசியத்திலும் வாஸ்து இவற்றில் நம்பிக்கை வைக்க வேண்டாம். மூட நம்பிக்கைகளையும் விட்டொழியுங்கள்.
உங்கள் விதி உங்கள் கையில் தான் இருகிறது. உங்கள் ஆரோக்கியம், உழைப்பு, திறமை, உங்களுக்கு கிடைக்கும் உதவிகள் இவற்றின் மூலம் மட்டும் நீங்கள் முன்னேற முடியும். உங்களூக்கு உண்டான பாதையை நீங்கள் தான் நிற்னயிக்க வேண்டும்.

ஆனால் நம்புகிறவர்களை திருத்த முயற்கிக்காதீர்கள். அது வீன் வேலை. தேவை இல்லாத குழப்பத்தை தான் கொண்டு வரும். வீட்டில் நம்பினால் அவர்கள் அப்படியே செயல்படட்டும். அதை திருத்துகிறேன் என்று அவர்களுடன் சண்டை போட வேண்டம்.

உங்கள் வாரிசுகள் சாதகம் ஜோசியம் இவற்றை நம்பாத வகையில் உருவாக்குங்கள்.

ஜாதகத்தை தான் நம்ப வேண்டாம், ஆனால் நான் பக்தியை நம்ப வேண்டாம் என்று கூறவில்லை. அதே சமயம் தமிழ் கலாசாரத்தையும் விட வேண்டாம்.
வியாபரம், திருமனம், வீடு புன்னியாச்சனை போண்ற சில நல்ல காரியம் செய்யுபோது தமிழில் நல்ல நாள் (முகூர்த்த நாள்) பார்த்து தொடங்குங்கள். நம்பிக்கை என்ற அடிபடையில் சொல்லவில்லை, அது நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட ஒரு சடங்குகள். அதில் தவறில்லையே.

இதயம்
16-06-2007, 08:03 AM
நம் மன்றம் இனி வரும் வழித்தோன்றல்களுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையை, எதிர்காலத்தை அமைத்து கொண்டிருக்கிறது என்பதற்கு வாத்தியார் உள்ளிட்ட அனைத்து நண்பர்களின் கருத்துக்களே சாட்சி..!

ஜோய்ஸ்
18-06-2007, 01:44 PM
வாத்தியார் கருத்தே என் கருத்தும்,ஆகையினால் மறுபடியும் அதையே நான் திரும்ப எழுத வேண்டாம் என நினைக்கிறேன்.
ஜாதகம் எல்லாம் சும்மா.தன்னம்பிக்கையை வளருங்கள்.

zha
19-06-2007, 01:43 PM
ஜோதிடம் என்பது உண்மை. அதுவும் அறிவியல் பூர்வமான உண்மை. ஜாதகத்தில் பணம் காசியை தேட வேண்டாம். கிடைக்காது. மூன்று காலங்களையும் ஒவ்வொருவரின் ஜாதகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இருட்டான இடங்களில் விளக்கு இருந்தால் எப்படி பயன்படுமோ அப்படியே ஜோதிடமும். பாவ புண்ணியங்களை அடிப்படையாக கொண்டதே இந்து மதம். அப்படியே ஜாதகமும். ஒரு நல்ல ஜோதிடரால் உங்களின் ஜாதகத்தை கையில் கொண்டு உங்கள் வாழ்க்கையை புட்டு புட்டு வைக்க முடியும். அதற்க்கு முதலில் தவறில்லாத பிறந்தநேரம்,பிறந்த தேதி, பிறந்த ஊர் தெரிய வேண்டும்.நல்ல நேரம் வந்தால் மட்டுமே நல்ல கருத்துக்கள் கண்ணில் படும். நன்றி.

lolluvathiyar
19-06-2007, 02:45 PM
ஜாதகம் எல்லாம் சும்மா.தன்னம்பிக்கையை வளருங்கள்.

ஜோதிடம் என்பது உண்மை. அதுவும் அறிவியல் பூர்வமான உண்மை.

நம்பினா முழுசா நம்பி ஜோசியத்துக்கு பின்னாலேயே போகனும்
நம்பிக்கை இல்லினா அது பத்தி நினைக்கவே கூடாது,

ஆனால் அரைகுரையாக இருக்க கூடாது. ஜோசிகாரன் கிட்ட போயி ஒரு வேல இவன் சொல்லரது தப்பா இருக்குமோனு குழப்ப கூடாது.
ஜோசியம் பாக்க மாட்டேன் வீராப்ப சொல்லிட்டு வந்து ஏதாவது பன்னிட்டு, அப்புறம் ஏதாவது நமக்க்கு ஆகிவிடுமோ பயந்து கொண்டிருக்க கூடாது

இதயம்
19-06-2007, 02:48 PM
நம் மன்றத்தில் யார் என்ன கருத்துவேண்டுமானாலும் அடுத்தவர்களை புண்படுத்தாத வகையில் சொல்லலாம் என்பதால் இது போன்ற கருத்துக்களையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திலும் ஜாதகம், ஜோசியம் ஆகியவற்றை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை விட அறிவார்ந்த நண்பர்கள் கூடும் நம் மன்றத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது. மூட நம்பிக்கைகளும், அறிவுக்கு பொருந்தாத விஷயங்களை வரிந்து கொண்டு செய்வதும் நமக்கு ஒன்றும் புதிதல்லவே..ஆறறிவு மனிதனின் எதிர்காலத்தை ஒன்றிரண்டறிவு கிளிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அறிவுஜூவிகள் அல்லவா நாம்..! நடக்கட்டும்.. நடக்கட்டும்.!!

நம்முடைய ஜாதக, ஜோசியங்கள் ஒரு வகையான கலை மட்டுமே. மனிதனின் பலவீனங்களை தெரிந்து வைத்துக்கொண்டு அவனை பல வகைகளிலும் திருப்திபடுத்தி அவனிடமிருந்து பொருள் பெற்று சம்பாதிக்க உண்டான தொழில் தான் ஜோசியம். சரியாகச்சொல்லவேண்டும் என்றால் இது ஒரு தெள்ளத்தெளிவான ஏமாற்றுக்கலை. ஆனால், பல ஏமாற்று வித்தைகளை நாம் கலைகள் என்று நினைத்துக்கொண்டிருப்பதால் இதுவும் கலையின் வடிவம் பெற்று, இன்று அவை மூலம் சொல்பவை எல்லாம் உண்மை என்பது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுப்போனது காலத்தின் கோலம் தான். நாம் எதிர்காலத்தை நினைத்து அச்சத்தில் எத்தனை வழிகளிலெல்லாம் அதை சரி செய்ய முயல்கிறோம். ஜோசியத்தில் எலி, கிளி, தேவாங்கு, குடுகுடுப்பை, கீரி, பாம்பு என்று எதை விட்டு வைத்தோம்.? ஜாதகத்திற்காக கட்டம் கட்டி, கட்டை எறிந்து, சோழிகளை உருட்டி, கிரங்கங்களின் நிலைகளை கணக்கிட்டு என்று நம் கற்பனைக்கு அளவில்லாமல் போய்விட்டது.

ஜாதக நம்பிக்கையை தகர்க்க ஒரு விஷயம் சொன்னால் போதும். பகுத்தறிவு உள்ளவர்கள் நிச்சயம் ஜாதகம், ஜோசியம் போன்றவற்றை நம்பமாட்டார்கள். நவக்கிரங்கள் எனப்படும் 9 கிரகங்களின் நிலைகளையும், அவற்றின் பயணத்தையும் வைத்து தான் ஜாதகங்களை சில அறிவு ஜூவிகள் கணித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சமீபத்திய கண்டுபிடிப்பில் ஒன்பது கிரகங்களில் ஒன்றான ப்ளூட்டோ என்ற கோள் அல்லது கிரகத்திற்கு கிரகங்களுக்கான அடிப்படை தகுதிகள் இல்லாததால் அது கிரகங்கள் பிரிவில் சேராது. எனவே, இனி சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கிரகங்கள் தான் என்று சொல்லி ஜோதிடம் என்ற ஏமாற்று தொழிலுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இதுவரை நம்பிய நம்பிக்கைகள், எடுத்த முடிவுகள் எல்லாம் தவறா..? இனியுமா கிரகங்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்..? நம்புங்கள்.. நம்புங்கள்.. அப்போது தானே உங்களை ஏமாற்றி பிழைக்க என்றே காத்துக்கொண்டிருக்கும் வழிப்பறி கொள்ளையர்களுக்கு வாழ வழி கிடைக்கும்...!!

leomohan
19-06-2007, 03:10 PM

இது உங்கள் அறியாமையை காட்டுகிறது நண்பரே. நவ கிரகங்களில் ப்ளூட்டோ இல்லவே இல்லை.

மேலும் நேற்று வரை விஞ்ஞானிகள் சொன்ன 9 கிரகங்கள் என்று நம்பிவந்தீர்கள் இன்று அவர்கள் இல்லை என்றதும் இல்லை என்கிறீர்கள். இப்படி நிலையில்லாது ஒரு விஷயத்தை எப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்வது.

9 கிரகங்கள் என்று விஞ்ஞான பாடத்தில் படித்த நாம் முட்டாளாகிவிட்டோம் நம் பிள்ளைகள் சரி − அப்படித்தானே.

leomohan
19-06-2007, 03:27 PM
நான் உங்களை 10 மணிக்கு நான் சந்திக்க வருகிறேன். நீங்களும் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் 10 மணிக்கு சரியாக வராவிட்டால் ஒரு லட்சம் எனக்கு தரவேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஏற்ப்பீர்களா?

சரி எப்படியோ ஒரு லட்சம் தோற்காமல் இருக்க நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து 6 மணிக்கு கிளம்புகிறீர்கள். வழியில் traffic jam, பிறகு ஒரு விபத்து, பிறகு உங்கள் வண்டி தகராறு செய்கிறது, பிறகு ஒருவருடன் சண்டை, அவர் உங்களை அடிக்க உங்களை மருத்துமனையில் சேர்க்கிறார்கள். அப்போது 10 மணி கடந்துவிடுகிறது. நீங்கள் தோற்றுவிடுகிறீர்கள்.

ஒரு காரியம் செய்ய external factors பல ஒத்து வந்தால் தான் நடக்கும். இதன் இடையில் உள்ள இடைவெளி தான் இறைவன், விதி, ஜாதகம், ஜோசியம் அனைத்தும் வருகிறது.

ஜாதகம், ஜோசியம் இவை அனைத்தும் ஒரு வகையான விஞ்ஞான படிப்புகள். கணிதத்தில் permutation and combination என்பார்கள். உதாரணமாக

A, B, C என்று மூன்று காரணிகள் இருந்தால் அதனுடைய impact ஒரு காரியத்தை நிகழ்த்த பல வழிகள் உண்டாக்கிவிடுகிறது.

ஜாதகம் - ஒரு கூறிப்பிட்ட நேரத்தில் பிறந்தவர்கள் இவ்வாறு இருப்பார்கள் என்று கணிப்பது.
கைரேகை - ஒரு கூறிப்பிட்ட அமைப்பை கொண்டவர்கள் இவ்வாறு இருப்பார்கள் என்று கணிப்பது.

இவை அனைத்தும் science.

அதை வைத்து இன்று விஷயம் தெரியாமல் காசு செய்பவர்கள் இருக்கிறார்கள். அது போன்ற உளறல் ஜோசியர்கள் சொல்லி தவறாகும் விஷயங்களால் அந்த விஞ்ஞானம் தவறாவதில்லை.

எல்லாவற்றையும் மக்கள் தமக்கு சாதகமாக்கி காசு செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள்.

நாளை இத்தனை மணிக்கு தான் இறப்பேன் என்று தமக்கே கணிப்புகள் சொன்னவர்களை பார்த்திருக்கிறேன். அதனால் எல்லாவற்றையும் பொதுப்படுத்தவேண்டாம்.

சொல்பவர்கள் - தவறானவர்கள். சரியாக கற்காதவர்கள்
நம்புபவர்கள் - முட்டாள்கள்
சரியாக சொல்பவர்கள் - காசுக்காக மட்டும் செய்ய மாட்டார்கள். சொல்லவரும் மாட்டார்கள். சொன்னால் தவறாகவும் ஆகாது. அதை விஞ்ஞானமாக கற்றவர்கள் அல்லது குரு மூலம் கற்றவர்கள்.

இப்போது இதை மனோதத்துவ ரீதியில் அணுகினால், இவ்வாறாக பல ஆயிரம் விஷயங்கள் மனிதனின் கட்டுபாட்டிற்கு அப்பால் இருப்பதால் தான் அவன் இது போன்ற விஷயங்களில் ஆறுதலும் அமைதியும் தேடுகிறான். பணத்தை இழப்பதன் மூலம் ஞானமும் பெறுகிறான் :-)

ஒரு கேள்வி- நீங்கள் இஸ்லாம் மார்க்கம் பற்றி எழுதிவருகிறீர்கள். நல்ல விஷயம். வாழ்த்துகள்.

கண்ணுக் தெரியாத கடவுள் வருவதும் அவர் ஒரு தேவதூதன் மூலம் புனித நூலை தருவதும் அதை முற்றிலும் படிப்பறிவில்லாதவர் கேட்டு சொல்வதும் நம்புவது பகுத்தறிவுக்கு எவ்வாறு சரியாக படுகிறது சொல்லுங்கள். இது நம்பிக்கை. இதில் பகுத்தறிவு வர சாத்தியமில்லை. இஸ்லாம் இளமையான மதம். பல விஞ்ஞான வெற்றிகளுக்கு பிறகு ஏற்பட்ட மதம். அதனால் அதில் விஞ்ஞான கருத்துகள் இருப்பது வியப்பில்லை. ஆனால் கடவுள் தான் இதனை சொன்னார் என்பதை எவ்வாறு ஏற்பது. பகுத்தறிவு ஏற்கவில்லையே

குறிப்பு - இதை உங்கள் மனம் புண்பட சொல்லிவில்லை.

leomohan
19-06-2007, 03:35 PM
வாஸ்துக்காக பணம் செலவு செய்பவர்கள் − முட்டாள்கள்
கட்டிய வீட்டை இடிப்பவர்கள் − வீணர்கள்
வாஸ்து வைத்து பணம் செய்பவர்கள் − தண்டிக்க படவேண்டியவர்கள்.

ஆனால் வாஸ்து என்பது விஞ்ஞானம்

மனிதனின் வெளியேற்றங்கள் உயிரை கொல்பவை. இதை நாம் பலமுறை செய்தி தாட்களில் படித்திருக்கிறோம். தொட்டியை சுத்தம் செய்ய செல்பவர்கள் இறந்துவிடுவதுண்டு. அத்தனை விஷம்.

அதுபோல நீங்கள் ஒரு இரவு முழுவதும் பல் விளக்காமல் இருந்தால் காலையில் உங்கள் உமிழ் நீர் விஷமாகிவிடுகிறது.

காற்றோட்டம் சரியாக இல்லாத இடத்தில் ஒரு நாள் முழுவதும் இருந்தால் உடல் நிலை பாதிக்க்படும்.

வெளிச்சம் இல்லாத அறையில் இருந்தால் கண் பாதிக்கப்படுகிறது. தலைவலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் வரும்.

இதனால் காற்று, வெளிச்சம், மற்றும் பொதுவான அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்வதே வாஸ்து விஞ்ஞானம்.

மலம் கழிக்கும் இடம் அடுப்பறையிலிருந்து எத்தனை தூரத்தில் இருக்க வேண்டும். வீட்டின் வாசல் எந்த பக்கம் பார்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

முன்னோர்களை முட்டாளாக நினைப்பது இப்போதைய fashion.

குறிப்பு - உங்களுக்கு புரியும் வகையில் சொல்கிறேன் இதயம் அவர்களே. எப்படி நீங்கள் பயங்கரவாதம் செய்யும் அனைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளும் நிஜமான இஸ்லாமியராக இருக்க முடியாது என்று சொல்கிறீர்களோ அதுபோலவே வாஸ்து சொல்பவர்கள் எல்லாம் வாஸ்து விஞ்ஞானம் கற்றவர்கள் இல்லை. எப்படி தீவிரவாதிகளால் இஸ்லாமுக்கு கெட்ட பெயரோ அதுபோலவே பொய் வாஸ்து கலைஞர்களால் வாஸ்துவுக்கு கெட்ட பெயர்.

இணையத்தில் வாஸ்து தகவல்கள் உள்ளன. யாருக்கும் காசு கொடுத்து ஏமாற வேண்டாம் நண்பர்களே.

leomohan
19-06-2007, 03:45 PM
இன்னும் தென்மாவட்டங்களில் இருப்பவர்களிடம் கேட்டால் பழைய வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்று சொல்வார்கள்.

எந்த வீட்டிலும் மின்சாரம் இருக்காது. ஆனால் முற்றம் என்று வீட்டின் நடுவே ஒரு பெரிய இடைவெளி மூலம் நாள் முழுவதும் வெளிச்சம் இருக்கும்.

பின்கட்டு என்பார்கள். வீட்டின் பின்னால் வெகு தூரத்தில் இருக்கும். நேராக சென்று கிணற்றடியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் சென்று திறந்தவெளியில் மலம் கழிப்பார்கள்.

வீட்டின் அடுப்பறையில் எந்த துர்நாற்றமும் அடிக்காது.

இரவு முழுவதும் மனித எச்சங்கள் நன்றாக காய்ந்து toxic வாயுக்கள் போன பிறகு அதை மறுநாள் வண்டியில் எடுத்து செல்வார்கள்.

ஆனால் இன்று வீட்டிற்கு நடுவில் தான் மலம் கழிக்கும் இடம். இரண்டு பேர் தொடர்ந்து சென்று வந்தால் மூன்றாவதாக செல்பவர் மூக்கை மூடிக்கொண்டு தான் போகவேண்டும்.

அதனால் மலம் கழிக்கும் இடம், ஹால், அடுப்பறை, தூங்கும் இடம் எந்த இடத்தில் இருக்க வேண்டும், வெளிச்சம் எவ்வாறு வந்தால் நல்லது. காலையில் காற்று எந்த பகுதியிலிருந்து வரவேண்டும் மாலையில் காற்று எந்த பகுதியில் இருந்து வரவேண்டும் இவ்வாறெல்லாம் பார்த்து வீடு கட்டுவது நமக்கும் நம் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்யமான வாழ்வை கொடுக்கும்.

lolluvathiyar
19-06-2007, 03:50 PM
சரியாக சொன்னீர்கள் இதயம், ஆனால் திடமாக நம்பும் மக்களை தாக்குவது வீன்.

இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திலும் ஜாதகம், ஜோசியம் ஆகியவற்றை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்
ஏதாவது ஒன்றை நம்பி அதன் மூலம் உற்சாக பெற்று முன்னேறினால் அதில் தவறில்லை.
அதுவே, அவனை தொய்வு ஏற்படுத்தினால் தான் தவறு.

ஆறறிவு மனிதனின் எதிர்காலத்தை ஒன்றிரண்டறிவு கிளிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அறிவுஜூவிகள் அல்லவா நாம்.
கோளாரே அந்த ஆறாவத் அறிவுதானே, அது சிலரை வாழ வைத்து சிலரை அழிக்கும் அறிவு அல்லவா.
ஒருவேலை கிளிக்கு தன்னை விட அறிவு அதிகம் என்று நினைத்திருப்பானோ என்னவோ
(ஆறு அறிவு அரைகுரையாக இருப்பதால் கிளிக்கு அந்த இரண்டு அறிவாவது ஒழுங்கா இருக்கே)

மனிதனின் பலவீனங்களை தெரிந்து வைத்துக்கொண்டு அவனை பல வகைகளிலும் திருப்திபடுத்தி அவனிடமிருந்து பொருள் பெற்று சம்பாதிக்க உண்டான தொழில் தான் ஜோசியம்.
திருப்தி அடைந்தால் பரவாயில்லையே. மனுசன் அப்படியும் திருப்திபட மாட்டானுங்கோ.

சரியாகச்சொல்லவேண்டும் என்றால் இது ஒரு தெள்ளத்தெளிவான ஏமாற்றுக்கலை.
திருட்டு, அரசியல் தொழுலுக்கு இது மோசமில்லையே. பாவம் ஏதோ சொல்லி பிளைக்கிறான், பிளைக்கட்டுமே

ஜோசியத்தில் எலி, கிளி, தேவாங்கு, குடுகுடுப்பை, கீரி, பாம்பு என்று எதை விட்டு வைத்தோம்.?
இதயம் நம் குழந்தைகளுக்கு அப்படியாவது இந்த விலங்குகளை பக்கத்தில் காட்டு குசிபடுத்தலாமே.
வேற எங்க போரது இந்த ஜந்துகளை பாக்க.
நான் கிளி ஜோசியர் வந்தால் வீட்டுக்கு அழைத்து அவர்கள் சொல்வதை நம்ப மாட்டேன். எல்லாரும் அவனுக்கு 5 ரூபா கொடுப்பார்கள்
ஆனா நான் பத்து ரூபா தருவேன். அவன் அந்த கிளியையும் எலியையும் குழந்தைகள் கையில் தருவான். குழந்தைகள் கிளிக்கும் எலிக்கும் அரிசி தருவார்கள்.
அவை சாப்பிடுவதை பார்க்கும் அழகே தனி. அன்னிக்கு அவர்கள் கொள்ளை சந்தோசம் அடைவார்கள்

ப்ளூட்டோ என்ற கோள் அல்லது கிரகத்திற்கு கிரகங்களுக்கான அடிப்படை தகுதிகள் இல்லாததால் அது கிரகங்கள் பிரிவில் சேராது.
இனியுமா கிரகங்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்..?

சீன நவகிரங்களில் தான் புளோட்டொ இருகிறது. இந்திய நவகிரகங்களில் புளோட்டோ கிடையாது.
புளோட்டோ சைன்ஸ் படி தான் கிரகம், ஜோசியபடி அவை நவ கிரகங்களில் முன்னமே இல்லை. அது தெரியுமா.
நம் பூமியும் கூட கிரங்களின் என்னிக்கையில் வராது. அவை நாம் இருக்கும் கிரகம்

கிரகங்கள் 7 தான் + 1 சூரியன் + 1 சந்திரன் (நிலா) சேர்ந்து நவ கிரங்கள்.

leomohan
19-06-2007, 03:57 PM
அருமை வாத்தியாரே. நீங்கள் ஒரு தகவல் சுரங்கம். வாழ்த்துகள்.

ஆதவா
19-06-2007, 04:03 PM
வாத்தியாரே! ஒரு வேண்டுகோள்... நீங்கள் எல்லா பதிவுகளிலும் மேற்கோளுக்குள்ளேயே பதில் எழுதிவிடுகிறீர்கள்>.. குழப்பமாய் இருக்கிறது... எனக்கு.... மேற்கோளை எடுத்துவிட்டு எழுதலாமே!!!

விகடன்
19-06-2007, 04:04 PM
ஜாதகம் சகுனம் எல்லாம் ஒரு போதை மாதிரி.
நம்பியோர் நல்லது நடந்தால் அதை அன்று எது நல்ல விடயம் நடந்ததோ அவற்றுடன் சேர்த்து பார்ப்பர்.
அதேபோல்,
தீயது நடந்தால் அன்று கண்ட தீயனவற்றுடன் பிணைத்துப் பார்ப்பர்.

இதயம்
20-06-2007, 05:01 AM
ஏதாவது ஒன்றை நம்பி அதன் மூலம் உற்சாக பெற்று முன்னேறினால் அதில் தவறில்லை.
அதுவே, அவனை தொய்வு ஏற்படுத்தினால் தான் தவறு.

பிரச்சினையே அது தானே வாத்தியார்..? ஜாதகத்தினாலும், ஜோசியத்தினாலும் அந்த தொழிலைச்செய்பவனைத்தவிர வேறு யாருக்கும் பயனில்லை. அவன் சொன்னதாக நடந்ததெல்லாம் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை தான்.

ஆறு அறிவு அரைகுரையாக இருப்பதால் கிளிக்கு அந்த இரண்டு அறிவாவது ஒழுங்கா இருக்கே

உண்மை தான். ஆறறிவு இருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டு வெறும் ஐந்தறிவை மட்டும் உபயோகப்படுத்தும் படித்த, நாகரீகம் கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மைப்போன்றவர்களுடன் ஒப்பிடும் போது கிளி மேல் தான்.

[
திருப்தி அடைந்தால் பரவாயில்லையே. மனுசன் அப்படியும் திருப்திபட மாட்டானுங்கோ.

நான் திருப்தி என்று சொன்னது அந்த நேரத்திற்கான தற்காலிக திருப்தி. அவ்வப்போது திருப்தி செய்ய தான் யானை, மாடு, பாம்பு, குரங்கு என்று நிறைய இராம. நாராயணன் விலங்குகள் இருக்கின்றனவே..!

திருட்டு, அரசியல் தொழுலுக்கு இது மோசமில்லையே. பாவம் ஏதோ சொல்லி பிளைக்கிறான், பிளைக்கட்டுமே

பிழைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், நம்மை ஏமாற்றிப்பிழைக்கக்கூடாது. ஒருவன் பசி என்று வந்தால் அவன் பசி போக்க பணம் கொடுக்க நான் தயார். ஆனால், அதே பசிக்காக அவன் என் பாக்கெட்டிலிருந்து அடித்தால் அவனை சும்மா விட முடியுமா..? கலைகள் பெரும்பாலும் ஆழ்ந்து நோக்கினால் சிறிய பெரிய ஏமாற்றுக்களை உள்ளடக்கியவை. ஆனால், அவர்கள் நம்மை திசைதிருப்பி தந்திரமாக ஏமாற்றுவதை ஒத்துக்கொள்வதால் என்னால் அவர்களை குற்றம் சாட்ட முடியாது. உதா. மேஜிக் கலை. இதில் பெரும்பாலும் தந்திரம் என்ற பெயரில் தான் செய்து நம்மை ஏமாற்றுகிறார்கள். அதை அவர்கள் நம்மில் ஒத்துக்கொள்கிறார்கள். இதில் தவறொன்றும் இல்லை.

இதயம் நம் குழந்தைகளுக்கு அப்படியாவது இந்த விலங்குகளை பக்கத்தில் காட்டு குசிபடுத்தலாமே.
வேற எங்க போரது இந்த ஜந்துகளை பாக்க.
நான் கிளி ஜோசியர் வந்தால் வீட்டுக்கு அழைத்து அவர்கள் சொல்வதை நம்ப மாட்டேன். எல்லாரும் அவனுக்கு 5 ரூபா கொடுப்பார்கள்
ஆனா நான் பத்து ரூபா தருவேன். அவன் அந்த கிளியையும் எலியையும் குழந்தைகள் கையில் தருவான். குழந்தைகள் கிளிக்கும் எலிக்கும் அரிசி தருவார்கள்.
அவை சாப்பிடுவதை பார்க்கும் அழகே தனி. அன்னிக்கு அவர்கள் கொள்ளை சந்தோசம் அடைவார்கள்

உண்மை தான்.. விலங்குகள் அறுகிவிட்ட இந்த நிலையில் அவைகளை நம் குழந்தைகளுக்கு காட்ட இது ஒரு சந்தர்ப்பம். நான் கூட கிளி ஜோசியம் போன்றவர்கள் வரும் போது அவர்களை கூப்பிட்டு கிளியை எல்லாம் செய்யச் செய்து, குழந்தைகளுக்கு காட்டி பிறகு ஜோசியக்காரனிடம் இதை நம்பவேண்டிய அவசியமில்லாததன் காரணம் சொல்லி, குழந்தைகளுக்கும் ஒரு சிறிய வகுப்பெடுத்து அதன் பின் ஜோசியக்காரனுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைப்பேன். ஒரு நல்ல குடிமகனின், தந்தையின் கடமையாக இதை நான் நினைக்கிறேன். நாம் இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதல் என்பது நமக்கு நாமே தீங்கு செய்து கொள்வது போல்.

சீன நவகிரங்களில் தான் புளோட்டொ இருகிறது. இந்திய நவகிரகங்களில் புளோட்டோ கிடையாது.
புளோட்டோ சைன்ஸ் படி தான் கிரகம், ஜோசியபடி அவை நவ கிரகங்களில் முன்னமே இல்லை. அது தெரியுமா.
நம் பூமியும் கூட கிரங்களின் என்னிக்கையில் வராது. அவை நாம் இருக்கும் கிரகம்

கிரகங்கள் 7 தான் + 1 சூரியன் + 1 சந்திரன் (நிலா) சேர்ந்து நவ கிரங்கள்.

இதன் மூலம் சீனர்கள் முட்டாள்கள் நாம் அறிவாளிகள் என்று சொல்ல வருகிறீர்கள். கிரகங்களின் பட்டியலில் சூரியனை எப்படி சேர்த்தீர்கள்..? இது தான் கால கெரகம் என்பதா..??!! இதற்கான தெளிவான பதில் மோகனின் பதிவிற்கு நான் கொடுக்கப்போகும் பதிலில் கிடைக்கும்.

உங்களின் பதிவுகளை படித்தவகையில் நீங்கள் ஒரு நடுநிலைவாதி என்பது புரிகிறது. நாம் ஒரு விஷயம் பற்றி ஆராயும் போது அதில் பல நூறு தீமைகள் இருந்தாலும் அதில் ஒரு மறைமுக நன்மை இருந்தால் கூட அதை முன்னிறுத்தி பேசுகிறீர்கள். இது போன்ற பாசிடிவ் சிந்தனை நல்ல விஷயம் தான். ஆனால், நடுநிலை என்பது வெறும் காரணங்களை மட்டும் வைத்து தீர்மானிக்க வேண்டிய விஷயமல்ல. அதன் விளைவையும் வைத்து தீர்மானிக்க வேண்டியது. உதாரணத்திற்கு ஒரு பெண் ஒருவனால் பலவந்தப்படுத்துகிறான். அப்போது அவளும் அவனை தாக்குகிறாள். இந்த பிரச்சினை உங்கள் தீர்வுக்கு வந்தால் நீங்கள் சொல்லும் தீர்ப்பு "அவளும் தாக்கினாள், அவனும் பலவந்தப்படுத்தினான். அதனால் இருவரும் தவறு செய்ததால் யாருக்கும் தண்டனை இல்லை"என்பதாக இருக்கும். உங்களைப்பொறுத்தவரை இருதரப்பையும் திருப்திபடுத்த வேண்டும் என்பது மட்டும் தான். ஆனால், பெண்ணிற்கு அதன் பின் நடக்கும் விளைவுகள் பற்றி ஏன் யோசிக்கவில்லை. இந்த வழி எல்லா வகைகளிலும் எடுபடாது. சட்டம், நீதி, காவல்துறை, அரசியல் ஆகியவற்றில் இந்த கொள்கை இருந்தால் நாடே சீரழிந்து போகும். நீங்கள் சொல்லிக்கொடுப்பதை தான் உங்கள் மகன் பின்பற்றுவான். நமக்கு அந்த பொறுப்பு இருக்கிறது. உங்கள் மகன் மேற்சொன்ன ஏதேனும் ஒரு துறையில் பதவி வகிக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..? கொஞ்சம் யோசியுங்கள்.

lolluvathiyar
20-06-2007, 05:50 AM
இதன் மூலம் சீனர்கள் முட்டாள்கள் நாம் அறிவாளிகள் என்று சொல்ல வருகிறீர்கள். கிரகங்களின் பட்டியலில் சூரியனை எப்படி சேர்த்தீர்கள்..?

கிரகங்கள் என்பது இன்று அறிவியல் தமிழில் Planetory Object என்று மாற்றிவிட்டதுக்கு பஞ்சாங்கம் பொருப்பாகாது.
பஞ்சாங்கம் அடிபடையில் கிரகங்கள் என்பது பூமியிலிருந்து நோக்க படும் Celestial Objects.
இந்த விளக்கம் என் அறிவுக்கு எட்டி நானாக தந்தது, உன்மை ஜோசியம் தெரிந்த யாராவது விளக்க வேண்டும்.

சீனர்களை நான் முட்டாள் என்று சொல்லவில்லை, அவர்கள் கிரகங்களின் அவர்கள் விளக்க கூறபட்டிருக்கும்.
ஆனால் வெஸ்டன் ஜோசியர்கள் ஜோசிய கிரகங்கள் என்பது நாங்கள் தீர்மானிப்பத்து,
விஞ்ஞானிகள் தீர்மானிப்பது அல்ல என்று கூறுகிறார்கள். இரண்டும் பேரின் நோக்கம் வேறு அல்லவா.

உங்களின் பதிவுகளை படித்தவகையில் நீங்கள் ஒரு நடுநிலைவாதி என்பது புரிகிறது.

நடுநிலைவாதி என்று கூறவதை விட ஒருவர் உரிமையில் நம்பிக்கையில் மற்றவர் ஆலோசனை கூறலாம் தவறில்லை
ஆனால் வலுகட்டாயம் பன்ன கூடாது. தலையிட கூடாது. அதை தான் நான் வலியுருத்துகிறேன்.
நம்பாதவர்கள் தங்கள் வழியில் சொல்லட்டும், நம்புபவர்கள் அவர்கள் வழியில் செல்லட்டும்.
நான் ஜோசியம் வாஸ்து பார்பதில்லை, ஆனால் விசேசம் நல்லகாரியம் தொடங்கும் போது நல்ல நாளில் தான் தொடங்குவேன்.
அது என் நம்பிக்கை. மக்களுக்கு விழிப்புனரவு தர முடியாது. கனினி காலத்தில் கனினி ஜோசியம் வந்தது.
ஏன் ஹிந்துகளுக்கொ, இந்தியர்களின் கலாச்சாரத்திர்க்கு எந்த வித சம்மந்தமில்லாமல் நவின ஜோசியம் வந்து விட்டது.
அது நுயுமரோலாஜி. எத்தனை பேர் பெயரை கொலை செய்து விட்டார்கள். அவர்களை கேட்டால் அதுக்கும் ஒரு காரனம் தருவார்கள்.
யாரையும் திருத்த முடியாது என்பது என் என்னம்.

பெண் ஒருவனால் பலவந்தப்படுத்துகிறான். அப்போது அவளும் அவனை தாக்குகிறாள். இந்த பிரச்சினை உங்கள் தீர்வுக்கு வந்தால் நீங்கள் சொல்லும் தீர்ப்பு "அவளும் தாக்கினாள், அவனும் பலவந்தப்படுத்தினான். அதனால் இருவரும் தவறு செய்ததால் யாருக்கும் தண்டனை இல்லை"என்பதாக இருக்கும்.

நீங்கள் சம்மந்தமில்லாத விசயத்தில் ஒப்பிடுகிறீர்கள். பலவந்தம் உரிமை மீரல் சமாசாரம்.
ஆனால் ஜோசியம் உரிமை மீரல் விசயம் அல்ல.

namsec
20-06-2007, 05:51 AM
உண்மைத்தான் சரியாக கணிக்ககூடிய ஜோதிடரிடம்தான் செல்லவேண்டும். அவறால்தான் சரியாக சொல்லமுடியும் மற்றவர்கள் தவறாக கணித்து ஒரு யூகத்தில் சொல்லி உங்களையும் குழப்பிவிடுவாற்கள் .

ஒர் அளவுக்குத்தான் ஜோதிடம் பார்க்கவேண்டும்

இதயம்
20-06-2007, 06:03 AM
இது உங்கள் அறியாமையை காட்டுகிறது நண்பரே. நவ கிரகங்களில் ப்ளூட்டோ இல்லவே இல்லை.

இது என் அறியாமை அல்ல நண்பரே, உங்களுடையது..! நவக்கிரகங்கள் என்னென்ன என்று நீங்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறீர்கள். அதன் இடப்பெயர்ச்சி மூலம் ஒருவனின் எதிர்காலம், தலைவிதி நிர்ணயிக்கப்படுவதாக மோடி மஸ்தான் பாணியில் சொல்கிறீர்கள். அதை நான் எந்த காலத்திலும் நம்பியதில்லை. காரணம், ஜாதக, ஜோசியங்களால் சீரழிவு நிகழ்ந்தது தான் அதிகம். நான் விஞ்ஞானத்தை நம்புகிறேன். விஞ்ஞானிகள் சொல்வதை நம்புகிறேன். காரணம், அவர்கள் தான் எனக்கு உடை, உணவு, மின்சாரம், நல்ல நீர், வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தவர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் உண்மை கிடையாது. இறைவனே சொல்லிவிட்டான், மனிதன் தவறு செய்பவன் என்று. என்னைப்பொருத்தவரை கடவுள் மட்டுமே முழுமையானவன், சிறந்தவன். மனிதர்கள் முதலில் விமானம், மின்சார போன்ற பல கண்டுபிடிப்புகளை செய்யும் முன்பு அதைப்பற்றி சொன்ன போது இகழ்ந்தார்கள். ஆனால், கண்டுபிடித்து கொடுத்தபிறகு சொகுசாக அவற்றை அனுபவித்தார்கள். உண்மைகளை ஒத்துக்கொள்வதில் மனிதர்கள் இரண்டு வகை.

1. பகுத்தறிவு கொண்டு சிந்தித்து தன்னலம், தற்பெருமை இல்லாமல் ஒத்துக்கொள்வது.
2. பகுத்தறிவு கொண்டு சிந்திக்க இயலாத அல்லது அறிவு சொன்னாலும் ஏதோ சில அர்த்தமற்ற காரணங்களுக்காக அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது.

உங்கள் கருத்துக்களைக்கொண்டு நீங்கள் கூறிய கருத்துக்கள் எந்த பிரிவில் சேரும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் குழம்புபவர்களும், குழப்புபவர்களும் அதிகமாகிவிட்டதால் எந்த ஒரு கருத்தையும் நிரூபிக்க ஆதாரம் தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் ப்ளூட்டோவை ஒரு கோள் என்றார்கள், இப்போது இல்லை என்கிறார்கள். இரண்டையும் நான் நம்புகிறேன். காரணம், ஒரு விஷயம் பற்றிய கண்டுபிடிப்பு இருவகைப்படும்.

1. இல்லாததை கண்டுபிடித்தல் (Invention)
2. இருப்பதை கண்டுபிடித்தல் (Discovery)

மின்சாரம் என்பது முன்பு இல்லவே இல்லை. சில மூலங்களை பயன்படுத்தி அதை விஞ்ஞானத்தின் சில நிகழ்வுகளுக்கு உள்ளடக்கினால் மின்சாரம் உண்டாகும், அது ஒளிகொடுக்க, இயக்க என்று பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்தார்கள். அமெரிக்கா பல ஆயிரம் வருஷங்களாக அதே இடத்தில் தான் இருந்தது. ஆனால், அது கொலம்பஸுக்கு சில வருஷங்களுக்கு முன்பு தான் தெரிந்து கண்டுபிடிக்க முடிந்தது. இந்த கோள் விஷயம் இரண்டாவது நிலையில் வரும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து அந்த 8 கோள்களும் கோள்கள் அல்ல என்று கூட சொல்லலாம். அதையும் நாம் நம்ப வேண்டும். மனிதனின் அறிவு மிக, மிக சிறியது. அது கொஞ்சம் கூடும் போது அவன் சொன்னதையே இல்லை என்று சொல்லும் நிலை ஏற்படும். அவன் முழு அறிவுடன் இருந்தால் கடவுளாகிவிடுவானே.!!

தற்போதைய கணக்குப்படி மொத்த கோள்கள் 8. அவை

1.மெர்க்குரி
2. வீனஸ்
3. பூமி
4. மார்ஸ்
5. ஜூபிடர்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்

ஆகியவை தான். அவற்றில் முன்பு இருந்த ப்ளுட்டோ என்ற ஒன்பதாவது கிரகம் நீக்கப்பட்டுவிட்டது. வாத்தியார் சொன்னது போல் சூரியன் இதில் சேராது. காரணம் இந்த எல்லா கோள்களும் சூரியனை மையமாக கொண்டு தான் சுற்றிவருகின்றன. அதனால் தான் இந்த அமைப்பை சூரியக்குடும்பம் என்கிறோம். சூரியன் இவற்றுக்கு தலைவர் மாதிரி. கோள்கள் மந்திரி மாதிரி. ஆனால், அவர் தலைவரை மந்திரியாக்கிவிட்டார்..!! ப்ளூட்டோ நவக்கிரகங்களில் வராது என்று சொன்னீர்கள். சரி.. அப்படியென்றால் அந்த 9 கிரகங்கள் என்ன என்று சொல்லவேண்டியது தானே மோகன்..!! கிரகங்கள் என்ற தமிழ் பதம் விஞ்ஞானம் சொன்ன Planet என்ற வார்த்தையை கொண்டு தான் வந்தது. அப்படியென்றால் நீங்கள் சொல்லும் நவக்கிரகங்களும் விஞ்ஞானம் கண்டுபிடித்துச்சொன்ன 9 கோள்களைக்கொண்டது தான் என்பது என் கருத்து. ஆனால், நீங்களோ விஞ்ஞானம் சொன்ன ப்ளூட்டோ அந்த பட்டியலில் இல்லை என்கிறீர்கள். அப்படியென்றால் இன்னும் ஒன்பது கிரகங்கள் தான் இருக்கின்றன என்று சொல்கிறீர்களா..? அப்படியென்றால் அதன் அடிப்படை என்ன என்று கொஞ்சம் விளக்குவீர்களா..?

இதயம்
20-06-2007, 06:04 AM
உங்களின் ஒரு கருத்திற்காக நிச்சயம் பாராட்ட வேண்டும். அது ஜோசியம், ஜாதகம் என்ற பெயரில் தில்லுமுல்லு நடக்கிறது என்று ஒத்துக்கொண்டீர்களே..! நீங்கள் சிலர் என்கிறீர்கள், நான் முழுவதும் ஏமாற்று வித்தை என்கிறேன். நீங்கள் சொன்னதை தான் நான் அமோதிக்கிறேன். ஒரு விஷயம் நிகழ்வதில் உள்ள வாய்ப்புகள் யாராலும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அது அந்த செயல் நடக்கும் நேரம், இடம், சூழ்நிலை ஆகியவை தான் தீர்மானிக்கின்றன. இந்த இடத்தில் தான் ஜோசியமும், ஜாதகமும் தலைகாட்டுகின்றன. மனிதனின் பலவீனத்தை பயன்படுத்திக்கொள்கின்றன. கைரேகை, ஜாதகம் என்பவை அறிவியல் என்று சொல்கிறீர்கள். அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. கைரேகைக்கு ஆதாரமாக விளங்கும் கையில் உள்ள ரேகைகள் எப்படி உண்டாகின்றன தெரியுமா..? ஒரு கரு உண்டாகி, உருவம் பெற்று வளரும் போது சிசுவின் கைகள் மூடிய நிலையில் இருக்கும் அந்த இறுக்கத்தின் விளைவால் அந்த கோடுகள் உருவாகின்றன. சிசுவின் தொடக்க வளர்ச்சி முதல் அதன் பிறப்பு என்று பத்துமாதம் வரை அந்த நிலையிலேயே இருப்பதால் அந்த வரிகள் நமக்கு காலத்துக்கும் நிலைத்துவிடுகின்றன. கால்களில் இது போன்ற மூடிய நிலை இல்லாததால் தான் அங்கு ரேகைகள் இல்லை. இல்லையென்றால் கால்ரேகை பார்க்க என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கும்..!!

மன திருப்திக்காக மனிதன் செலவு செய்வது என்பது பொதுவான விஷயம் தான். நான் மனம் திருப்தியடை சில நேரங்களில் அடுத்தவர்களின் உதவி தேவைப்படுகிறது. அதன் பிரதிபலனாக நாம் அவர்களுக்கு பொருள் கொடுக்கிறோம். அது மனமுவந்து கொடுப்பது. ஆனால், ஜாதகம், கைரேகை நம்மை ஏமாற்றுவது. அவர்கள் சொல்வது எதுவும் உண்மை இல்லை. எனவே நீங்கள் சொன்னதிற்கும் இதற்கும் அடிப்படையிலேயே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

இதயம்
20-06-2007, 06:05 AM
நான் எழுதும் ஆன்மீகப்பகுதியில் கேட்கவேண்டிய கேள்வியை இங்கு கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் பரவாயில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் அந்த பகுதியில் உள்ள பல திரிகள் வெறும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டவை. ஆனால், நான் எழுதும் திரி நம்பிக்கையின் அடிப்படை மட்டுமல்ல, அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு எழுதிவருகிறேன். அதை மறுக்கும் நண்பர்களுக்கு நான் ஆரோக்கிய அறைகூவல் விட்டிருக்கிறேன். நான் பின்பற்றும் மார்க்கம் எல்லா வகையிலும் நம்பித்தான் ஆக வேண்டிய மார்க்கம் என்பதால் தான் பகுத்தறிவு உள்ளவன் என்று சொல்லிக்கொள்ளும் நான் அந்த மார்க்கத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்லும் தன்னிலை விளக்கம் அது. அதில் முரண்படும்பட்சத்தில் நீங்கள் அங்கு விவாதிக்க வரலாம். அது மட்டுமல்ல, கேள்வி கேட்பவர் அந்த கேள்வியை கேட்பதற்கு முன் எதிராளியின் கருத்துக்கு உடன்பாடில்லாத கருத்தைப்பற்றிய தெளிவான விளக்கம் அவரிடம் இருக்க வேண்டும். நான் அது பற்றி அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். கேள்வி கேட்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல, அதற்கான பதில் தெரிந்தவர்கள் மட்டும் தான். தெரிந்துகொள்வதற்காக கேட்கப்படும் கேள்விகள் இதில் சேராது. வாத்தியாரின் கேள்விகளை நான் அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்.

உங்கள் இஸ்லாம் பற்றிய கேள்விக்கான இடம் இதுவல்ல என்பதால் உங்கள் கேள்வியை அங்கு இடுங்கள். பிறகு விவாதிப்போம். என் தரப்பு விவாதங்களில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன். ஆனால், நீங்கள் கேட்ட இடம் தான் தவறு.

இதயம்
20-06-2007, 06:06 AM
அடுத்து வாஸ்து. பணம் சம்பாதிக்க தெரிந்த ஒருவனுக்கு, அவன் வசதிக்கு தகுந்தவாறு வீடு கட்டவும் தெரியும். அப்படி தெரியாவிட்டாலும் தெரிந்து கொள்ள அனுபவமுள்ள பல நல்ல மனிதர்கள் சொல்லிக்கொடுக்க இருக்கிறார்கள். ஆனால், வாஸ்து என்ற பெயரில் அவன் வசதியைப்பற்றி கவலைப்படாமல், மனம் போன போக்கில் வாஸ்து பெயரில் செய்து பணத்தை இழந்தவர்களும், நிம்மதி போனவர்களும் தான் அதிகம். ஒருவனுடைய உயர்வு என்பது அவன் எண்ணங்கள், உழைப்பு, படிப்பு, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது தானே தவிர, ஒரு கழிவறையின் இடமாற்றம் அதை முடிவு செய்துவிடாது. இது போன்ற மூட நம்பிக்கைகள் மக்களை நான் மேற்சொன்னவற்றிலிருந்து விலக வைத்து அவர்கள் வாழ்க்கையை நாசமாக்குமே தவிர, வாழ வழி ஏற்படுத்தாது. தீவிரவாதிகளில் இஸ்லாமிய, இந்து தீவிரவாதிகள் என்று யாரும் கிடையாது. வன்முறையை கையில் எடுப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் தான். அப்படிப்பட்டவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை மத அடையாளம் கொண்டு காண்பது காண்பவர்களின் குறுகிய மனதை தான் காட்டுகிறது. வன்முறை செய்பவன் பிடிபட்டால் அவனுக்கு சட்டத்தில் தண்டனை உண்டு. மூடநம்பிக்கை என்ற பெயரில் மக்கள் மனதில் நஞ்சை விதைத்து அவர்களின் வாழ்க்கையை, நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அவர்களுக்கு இராஜ உபசாரம் அல்லவா கிடைக்கிறது.?

உங்கள் மனதை புண்படுத்த நான் எதையும் எழுதவில்லை. இந்தியாவின் எதிர்காலம் இளைய தலை முறை கையில் என்பதாலும், அவர்களின் போக்கு மாற வேண்டும் என்பதாலும் சொல்கிறேன்.

leomohan
20-06-2007, 06:16 AM
அப்படியென்றால் இன்னும் ஒன்பது கிரகங்கள் தான் இருக்கின்றன என்று சொல்கிறீர்களா..? அப்படியென்றால் அதன் அடிப்படை என்ன என்று கொஞ்சம் விளக்குவீர்களா..?

இதனால் தான் தாங்கள் அறியாமையில் சொல்கிறீர்கள் என்று சொன்னேன். முழுவதும் தெரியாமல் கண்டதையும் கேட்டதையும் வைத்து கருத்து சொல்கிறீர்கள். இதுபோலவே இஸ்லாம் பற்றிய திரியில் இந்து மதத்தை பற்றி சில கருத்துக்கள் கூறியிருக்கிறீர்கள். அதை பற்றி எழுதினால் நேரம் பற்றாது.

கிரகங்கள் என்பதற்கான அறிவியில் விளக்கத்தை வைத்து நீங்கள் நவகிரங்களை பார்த்தால் உங்களுக்கு ஒன்றும் புரியாது.

எந்த கிரகங்கள் மனிதனின் வாழ்வில் impact செய்யும் என்பதை பொருத்தே இவை இயற்றப்பட்டுள்ளது.

conclusive ஆக கருத்துக்களை வைப்பதற்கு முன் நன்கு ஆராய்ச்சி செய்யுங்கள் நண்பரே.

leomohan
20-06-2007, 06:24 AM
கைரேகை, ஜாதகம் என்பவை அறிவியல் என்று சொல்கிறீர்கள். அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

உங்களுக்கு எது வசதியோ அதை செய்யலாம்.

கைரேகைக்கு ஆதாரமாக விளங்கும் கையில் உள்ள ரேகைகள் எப்படி உண்டாகின்றன தெரியுமா..? ஒரு கரு உண்டாகி, உருவம் பெற்று வளரும் போது சிசுவின் கைகள் மூடிய நிலையில் இருக்கும் அந்த இறுக்கத்தின் விளைவால் அந்த கோடுகள் உருவாகின்றன.
புதிய கண்டுபிடிப்பு போல் நீங்கள் சொல்வது சிரிப்பு வரவழைக்கிறது. மேலும் நீங்கள் நான் எழுதியதை சரியாக படிக்கவில்லை. சரி வேறு ஒரு முறையில் விளக்குகிறேன்.

இன்று Artificial Intelligence என்பதை பற்றி உங்கள் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்.

மனிதன் தன்னுடயை வாழ்வின் பல சூழ்நிலைகளில் எடுத்த பல்வேறு முடிவுகளை கணினிக்குள் நுழைத்து அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு எடுக்கும் திறன் அமைக்கிறார்கள்

இது போலவே Behavioural Analysis. மேலை நாடுகளில் குறிப்பிட்ட நாளில் பிறந்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் கொலை செய்பவர்களின் உடலமைப்பு எப்படி இருக்கிறது அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன ஒருவேளை ஒரே நேரத்தில் பிறந்த இவர்கள் இவ்வாறு இருக்கிறார்களா என்று பலவகையாக மனிதருள் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை கொண்டு கற்றதை தொகுக்கிறார்கள். நீங்கள் இப்படி நினைத்து பாருங்கள். உங்களுடைய இருதய சிகிச்சை செய்யும் போது இருதயம் வலது பக்கத்தில் இருந்தால் என்னவாகும். ஆக மனிதனின் உடல் அமைப்பு இவ்வாறு தான் இருக்கிறது என்பதை 10 மனிதர்களை பார்த்து கண்டுபிடிக்கிறார்கள். அவ்வாறு கையின் நீளம் அகலம் மற்றும் கைரேகை அமைப்பு வைத்து தொகுத்திருக்கிறார்கள். நேரம் இருந்தால் Cheiro's Palmistry படியுங்கள்.

தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தால் படித்து நேரம் வீணடிக்காதீர்கள்.

leomohan
20-06-2007, 06:27 AM
நான் எழுதும் ஆன்மீகப்பகுதியில் கேட்கவேண்டிய கேள்வியை இங்கு கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் பரவாயில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் அந்த பகுதியில் உள்ள பல திரிகள் வெறும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டவை. ஆனால், நான் எழுதும் திரி நம்பிக்கையின் அடிப்படை மட்டுமல்ல, அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு எழுதிவருகிறேன். அதை மறுக்கும் நண்பர்களுக்கு நான் ஆரோக்கிய அறைகூவல் விட்டிருக்கிறேன். நான் பின்பற்றும் மார்க்கம் எல்லா வகையிலும் நம்பித்தான் ஆக வேண்டிய மார்க்கம் என்பதால் தான் பகுத்தறிவு உள்ளவன் என்று சொல்லிக்கொள்ளும் நான் அந்த மார்க்கத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்லும் தன்னிலை விளக்கம் அது. அதில் முரண்படும்பட்சத்தில் நீங்கள் அங்கு விவாதிக்க வரலாம். அது மட்டுமல்ல, கேள்வி கேட்பவர் அந்த கேள்வியை கேட்பதற்கு முன் எதிராளியின் கருத்துக்கு உடன்பாடில்லாத கருத்தைப்பற்றிய தெளிவான விளக்கம் அவரிடம் இருக்க வேண்டும். நான் அது பற்றி அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். கேள்வி கேட்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல, அதற்கான பதில் தெரிந்தவர்கள் மட்டும் தான். தெரிந்துகொள்வதற்காக கேட்கப்படும் கேள்விகள் இதில் சேராது. வாத்தியாரின் கேள்விகளை நான் அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்.

உங்கள் இஸ்லாம் பற்றிய கேள்விக்கான இடம் இதுவல்ல என்பதால் உங்கள் கேள்வியை அங்கு இடுங்கள். பிறகு விவாதிப்போம். என் தரப்பு விவாதங்களில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன். ஆனால், நீங்கள் கேட்ட இடம் தான் தவறு.

நான் விடுமுறையில் இருந்தேன். அதனால் கேள்விகள் இடவில்லை. அதற்குள் திரி வளர்ந்துவிட்டது. வாத்தியாரும் பல கேள்விகள் கேட்டுவிட்டார்.

அடிப்படையில் கடவுள் வந்து ஒருவருக்கு புனிதுநூல் தருவதை பகுத்தறிவு ஏற்காது. அதை நீங்கள் ஏற்கிறீர்கள் என்றால் நீங்கள் தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். பகுத்தறிவுள்ள நம்பிக்கை என்பது நகைச்சுவை மட்டுமே. அது சாத்தியமே இல்லை.

ஒன்று நீங்கள் மத நம்பிக்கை உள்ளவர். அல்லது பகுத்தறிவு உள்ளவர். நல்ல கருத்துக்கள் பல இருப்பதால் இஸ்லாம் பகுத்தறிவுள்ள மதம் என்று ஏற்க இயலாது.

நீங்கள் எழுப்பியிருக்கும் பல கேள்விகளுக்கு இந்து மதத்தில் பதில்கள் உள்ளன. தெரிந்துக் கொள்ள விருப்பம் இருந்தால் பதில் தருகிறேன். ஆனால் சில இடங்களில் நீங்கள் சமூக பழக்க−வழக்கங்களை மதத்துடன் கலந்து குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால மதம் அதன் கோட்பாடு சமூகம் அதன் வழக்கம் இதை நன்றாக ஆராய்ந்து வாருங்கள்.

இதயம்
20-06-2007, 06:36 AM
இதனால் தான் தாங்கள் அறியாமையில் சொல்கிறீர்கள் என்று சொன்னேன். முழுவதும் தெரியாமல் கண்டதையும் கேட்டதையும் வைத்து கருத்து சொல்கிறீர்கள்.

இவ்வுலகில் எல்லாம் அறிந்தவர்கள் யாரும் இல்லை. எனவே என் கருத்திலும் அறியாமை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன். இல்லாவிட்டால் கேள்விக்கான அவசியம் வந்திருக்காது. உங்களுடைய நவக்கிரகங்கள் பற்றிய விளக்கம் ஆதாரமற்ற, விஞ்ஞானம் கொண்டு விளக்கமுடியாத ஒரு விஷயம் என்றால் அது எனக்கு தேவை இல்லை. மனிதன் தன் வெற்று நம்பிக்கைகளை கொண்டு ஏற்படுத்திய பல மூட பழக்க வழக்கங்கள் உலகில் இருக்கின்றன. அதை தெரிந்து எனக்கோ, மற்றவர்களுக்கோ பயனொன்றும் இருக்கப்போவதில்லை. நான் தான் உலகில் மிக உயர்ந்தவன் என்று நானாக ஒரு சிறு வட்டத்திற்குள் இருந்து கொண்டு சொல்வதற்கு ஈடாகிவிடும். உலகம் மிகப்பெரியது. கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன. ஆனால், அதற்கான கால அவகாசம் ரொம்ப குறைவு. எனவே மூடநம்பிக்கை, அறியாமை ஆகியவற்றிலிருந்து விலக வேண்டியது மிக, மிக அவசியம்.

நான் எழுதும் திரியில் இந்து மதம் பற்றி சில கருத்துக்கள் எழுதியிருப்பதாக சொன்னீர்கள். நான் எழுதியது, சரியா தவறா என்று சொல்லவில்லையே..! நேரம் கிடைப்பது என்பது ஒரு சமாளிப்பாகத்தான் தோன்றுகிறது. நேரமில்லாத உங்களுக்கு கேள்விகள் கேட்க நேரம் கிடைக்கிறதே..!! காரணம் கேள்வி கேட்பது சுலபம் என்பதால் தானே..? இனி, கேள்வி கேட்க மட்டுமல்ல, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் போதுமான நேரத்தோடு வாருங்கள். அது வரை காத்திருக்கிறேன்.

இஸ்லாம் பற்றிய என் திரியை ஊக்கம், உற்சாகம் கொடுத்து அரவணைப்பது, கேள்விகள் கேட்டு என்னை புத்துணர்ச்சி ஏற்படுத்துவது அனைவரும் என் மாற்றுமத நண்பர்கள் தான். அவர்களுக்கு தோன்றாத விஷயம் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அவசியம் நீங்கள் அங்கு வந்து உங்கள் கேள்விகளை கேட்க வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள். வருவீர்களா..?

நான் உங்களைப்போல் ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை. பகுத்தறிவு சொல்வதை செய்கிறேன். ஆனால், நீங்கள் ஆராய்ச்சி செய்வதால் என்னை விட உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் ஆராய்ச்சி முடிவுகளை உங்களுக்குள்ளேயே புதைத்து கொள்ளாமல் அனைவரும் பயன்பெறும் வழியில் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய ஆராய்ச்சிக்கே அர்த்தமில்லாமல் போய் விடும்.

சிவா.ஜி
20-06-2007, 06:37 AM
மோகன் உங்கள் தெளிந்த அறிவு எனக்கு வியப்பளிக்கிறது. மிக அழகான பதில்கள். தான் சொல்லும் கருத்துக்கள்தான் சரியென்று சில பேர் விதண்டாவாதம் செய்வார்கள். அவர்கள் எதையும் முழுமையாக தெரிந்துகொள்ளாமல் அதே சமயம் தனக்கு எல்லாம் தெரியும் என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள். பகுத்தறிவு எதையும் கேள்விகேட்க்காமல் ஒத்துக்கொள்வதில்லை ஆனால் மதம் என்பது கேள்விக்கேட்காமல் ஒத்துக்கொள்ளவேண்டியது. எனவே பகுத்தறிவுள்ள மதம் என்பது இல்லை. தொடருங்கள் உங்கள் வலுவான விளக்கக்கங்களை.

இதயம்
20-06-2007, 06:54 AM
பகுத்தறிவு எதையும் கேள்விகேட்க்காமல் ஒத்துக்கொள்வதில்லை ஆனால் மதம் என்பது கேள்விக்கேட்காமல் ஒத்துக்கொள்ளவேண்டியது. எனவே பகுத்தறிவுள்ள மதம் என்பது இல்லை. தொடருங்கள் உங்கள் வலுவான விளக்கக்கங்களை.

தெரியாத ஊருக்கு முகவரி இல்லாம போய் விட்டு குழம்பி போய், சரியான முகவரிக்கும் போக முடியாமல், புறப்பட்ட இடத்திற்கும் திரும்பி வரமுடியாமல் ஒரு நிலையில் இருந்து கொண்டு "எல்லோரும் இப்படித்தான் போய், இப்படி ஆகியிருப்பார்கள்" என்று சொல்வது போல் உள்ளது உங்கள் கருத்து. எல்லோரும் அப்படி அல்ல. அந்த ஊருக்கு போவதற்கு முன் அதனைப்பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு, தெளிவான முகவரியோடு பகுத்தறிவு கொண்டு சிந்தித்து போகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சொல்வது சரி தான்..! பகுத்தறிவு கொண்டு யோசிக்காமல் ஒத்துக்கொள்வதை தான் மதம் என்று நீங்கள் சொல்வதையும், பகுத்தறிவுள்ள மதம் என்பது இல்லை என்பதையும் நான் முழுவதும் ஒத்துக்கொள்கிறேன். அதனால் தான் இஸ்லாம் தன்னை மதம் என்று சொல்லாமல் மார்க்கம் (வழி) என்று சொல்கிறது. வழி தேடி போகிறவன் பகுத்தறிவில்லாமல் போனால் அவன் நிலை என்னாகும் என்பது தெரியும் தானே..?

அறிவியல் என்ற பகுதியில் ஜோசியம், ஜாதகம் போன்றவற்றை விவாதிக்க சொன்னதால் தான் நான் இங்கு விவாதிக்கிறேன். இதை நீங்கள் ஆன்மீகப்பகுதியில் இட்டிருந்தால் சும்மா இருந்திருப்பேன். ஆனால், இந்த விவாதத்தில் சம்பந்தமில்லாமல் ஆன்மீகத்தை இழுப்பது சரியில்லை. அதைப்பற்றி விவாதிக்க ஆன்மீக பகுதி என்று ஒன்று இருக்கிறது.

அறிவியல் பகுதியில் ஜோசியம், ஜாதகம் ஆகியவற்றைப்பற்றி நண்பர் இட்டதும், மோகன் இவற்றை விஞ்ஞானத்திற்கும், இதற்கும் தொடர்பில்லை என்று சொல்வதும் முன்னுப்பின் முரண் என்பதை விட வேறென்ன சொல்ல..?

leomohan
20-06-2007, 06:57 AM
இவ்வுலகில் எல்லாம் அறிந்தவர்கள் யாரும் இல்லை. எனவே என் கருத்திலும் அறியாமை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன். இல்லாவிட்டால் கேள்விக்கான அவசியம் வந்திருக்காது. உங்களுடைய நவக்கிரகங்கள் பற்றிய விளக்கம் ஆதாரமற்ற, விஞ்ஞானம் கொண்டு விளக்கமுடியாத ஒரு விஷயம் என்றால் அது எனக்கு தேவை இல்லை.

நீங்கள் விஞ்ஞானம் என்று சொல்வது வெறும் மேலை நாட்டு புத்தகங்கள் என்றால் அவற்றோடு ஒப்பிடவது வீண். ஏனென்றால் வளர்ந்து நாகரீகம் நம்முடையது. இதைவிட அதிகமாக விஷயங்கள் நம்மிடம் உள்ளது. மேலும் பல விஞ்ஞான கூற்றுகள் அவர்களே ஒப்புக் கொள்ளாமல் அடித்துக் கொள்கின்றனர். பிறகு மாற்றிவிடுகின்றனர். இவ்வாறு நிலையற்ற ஒன்றை ஆதாரமாக எப்படி கொள்வது. அனைத்து விஞ்ஞானிகளும் சேர்ந்து ஒரு மாநாடு அமைக்கிறார்கள் அதில் கிரகம் என்பதற்கான விளக்கம் மாற்றப்படுகிறது. அதனால் ப்ளூட்டோ தன் கிரக அந்தஸ்தை இழக்கிறது. வேடிக்கையாக இல்லை உங்களுக்கு. நாளை அவர்கள் மீண்டும் கூட ஆணுக்கான விளக்கம் மாறிவிட்டது. இனி அவன் பெண் என்றால்?

விஞ்ஞானம் ஞானம் ஆகாது. அது ஞானம் தேடும் பாதை தான். தவறுகள் நிறைந்த பாதை.

மனிதன் தன் வெற்று நம்பிக்கைகளை கொண்டு ஏற்படுத்திய பல மூட பழக்க வழக்கங்கள் உலகில் இருக்கின்ற

மூடநம்பிக்கைகள் கட்டாயம் எதிர்க்கப்படவேண்டும். ஆனால் தனக்கு ஒவ்வாத அனைத்தும் மூடநம்பிக்கை என்பதோ அல்லது பழைமை அனைத்தும் மூடநம்பிக்கை என்பதோ முட்டாள்த்தனம்..

நான் எழுதும் திரியில் இந்து மதம் பற்றி சில கருத்துக்கள் எழுதியிருப்பதாக சொன்னீர்கள். நான் எழுதியது, சரியா தவறா என்று சொல்லவில்லையே..! நேரம் கிடைப்பது என்பது ஒரு சமாளிப்பாகத்தான் தோன்றுகிறது.

அவ்வாறு நினைப்பது தங்கள் சுகந்திரம்.

நேரமில்லாத உங்களுக்கு கேள்விகள் கேட்க நேரம் கிடைக்கிறதே..!!
காரணம் கேள்வி கேட்பது சுலபம் என்பதால் தானே..? இனி, கேள்வி கேட்க மட்டுமல்ல, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் போதுமான நேரத்தோடு வாருங்கள். அது வரை காத்திருக்கிறேன்.

நீங்கள் எழுதிய தலைப்புகள் பல பேசி ஓய்ந்தாகிவிட்டது நண்பரே. நீங்கள் புதியவர் என்பதால் அறிந்திருக்க நியாமில்லை. எழுதியதையே மீண்டும் எழுத பொறுமை மட்டுமல்ல நிறைய நேரம் வேண்டும். வேண்டுமானால் நீங்கள் ஞானி கட்டுரைகளின் மூன்று பாகங்களையும் மெய்யுலக அந்தாதியையும் படித்து வாருங்கள் பிறகு பேசலாம்.

இஸ்லாம் பற்றிய என் திரியை ஊக்கம், உற்சாகம் கொடுத்து அரவணைப்பது, கேள்விகள் கேட்டு என்னை புத்துணர்ச்சி ஏற்படுத்துவது அனைவரும் என் மாற்றுமத நண்பர்கள் தான். அவர்களுக்கு தோன்றாத விஷயம் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அவசியம் நீங்கள் அங்கு வந்து உங்கள் கேள்விகளை கேட்க வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள். வருவீர்களா..?

அவசியம் வருவேன். கேள்விகளை வைக்கிறேன் நீங்கள் பதில் தேடித்தாருங்கள்

1. விஞ்ஞான மதம் கடவுள் இருப்பதை எவ்வாறு நிரூபிக்கிறது.

2. முகமது நபி நிலாவை உடைத்துக் காட்டினார் என்பதை பகுத்தறிவு எவ்வாறு ஏற்கிறது

3. புனித நூல் அனைத்தும் இறைவன் தந்ததாகவே கொண்டோமானால் கடைசியாக ஒரு வரி தான் தான் கடைசி தூதன் என்று முகமது நபி சேர்த்துக் கொண்டிருந்தார் என்று சொன்னால் அதை எவ்வாறு மறுப்பீர்கள். அவர் சேர்த்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் சொன்னால் அருகிலிருந்து பார்க்காது ஒன்றை நீங்கள் நம்புகிறீர்கள் என்று பொருள். அவ்வாறு நம்பிக்கை என்று ஒன்று வந்துவிட்டால் − பகுத்தறிவு இல்லை என்று பொருள்.

நான் உங்களைப்போல் ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை. பகுத்தறிவு சொல்வதை செய்கிறேன். ஆனால், நீங்கள் ஆராய்ச்சி செய்வதால் என்னை விட உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறத

படிப்பதை எல்லாம் சாண்ட்பாக்ஸ் முறையில் சிந்தித்து பார்க்கிறேன். அவ்வளவே..
உங்கள் ஆராய்ச்சி முடிவுகளை உங்களுக்குள்ளேயே புதைத்து கொள்ளாமல் அனைவரும் பயன்பெறும் வழியில் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய ஆராய்ச்சிக்கே அர்த்தமில்லாமல் போய் விடும்.

அவ்வாறு என் உள்ளே ஒளித்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை. பலவற்றை இணையத்தில் இட்டுவிட்டேன். தங்களுக்கு நேரம் கிடைத்தால் என் கையொப்பத்தில் இருக்கும் திரியை தட்டி அதில் உள்ளவற்றை படியுங்கள். மீண்டும் எழுதவது என்பது சிரமமான காரியம்.

நன்றி

குறிப்பு − நான் அனைத்து மதங்களை ஏற்பவன். மதிப்பவன். மதங்கள் தேவை என்று நினைப்பவன். ஆனால் ஒருவர் தன் மதம் தான் சிறந்தது என்று வாதிடுவதை முட்டாள்த்தனம் என்றும் வீண் வேலை என்று நினைப்பவன். மதங்கள் எந்த சூழ்நிலையில் உருவாகின என்பதை பற்றி என் கருத்தை ஒரு ஞானி கட்டுரையில் இட்டிருக்கிறேன். நேரம் இருந்தால் படியுங்கள்.

leomohan
20-06-2007, 07:02 AM
அறிவியல் என்ற பகுதியில் ஜோசியம், ஜாதகம் போன்றவற்றை விவாதிக்க சொன்னதால் தான் நான் இங்கு விவாதிக்கிறேன். இதை நீங்கள் ஆன்மீகப்பகுதியில் இட்டிருந்தால் சும்மா இருந்திருப்பேன். ஆனால், இந்த விவாதத்தில் சம்பந்தமில்லாமல் ஆன்மீகத்தை இழுப்பது சரியில்லை. அதைப்பற்றி விவாதிக்க ஆன்மீக பகுதி என்று ஒன்று இருக்கிறது.

அறிவியல் பகுதியில் ஜோசியம், ஜாதகம் ஆகியவற்றைப்பற்றி நண்பர் இட்டதும், மோகன் இவற்றை விஞ்ஞானத்திற்கும், இதற்கும் தொடர்பில்லை என்று சொல்வதும் முன்னுப்பின் முரண் என்பதை விட வேறென்ன சொல்ல..?

ஜோசியம் சாதகம் கைரேகை − இவை ஆன்மீக தலைப்புகள் அல்ல. இது மதம் சம்பந்தப்பட்டவையும் அல்ல. பல புத்தகங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால் இவற்றை இந்து மதம் சம்பந்தப்பட்டது என்று எடுத்துக் கொள்வது சரியல்ல. பிரபல கைரேகை புத்தகங்கள் எழுதியது மேலை நாட்டுக்காரர்களே. ஆகையால் இது விஞ்ஞான பகுதியில் வந்தது சரியே.

இதயம் அவர்களே தங்களுடைய எழுத்து சாமர்த்தியத்தால் எதையும் முன்னுக்கு பின் முரண் என்றோ எழுதியவர் குழம்பியவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறீர்கள். இங்கு மன்றத்தில் அனைவரும் தெளிவாக இருக்கிறோம். நீங்கள் குழம்பாமல் குழப்பாமல் இருந்தால் சரியே

ஓவியன்
20-06-2007, 07:33 AM
தலைப்புக்கு பொருத்தமான விவாதங்கள் மட்டும் இந்த திரிக்கு நலமாக இருக்குமே நண்பர்களே!?

உண்மையில் எனக்கு இந்த ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை, ஆனால் வீட்டில் எனது தாயார் பூரணமாக நம்புவார். அது அது அவரவர் நம்பிக்கையையும் அனுபவத்தையும் பொறுத்தவிடயம் அதாவது நான் எப்போவாவது அனுபவப் பட நேர்ந்தால் நான் கூட ஜோதிடத்தை நம்பக் கூடும்.

அத்துடன் நான் அறிந்த வரை ஜோதிடம் இந்தியருக்கோ இந்துக்களுக்கோ மட்டும் உரிய ஒரு துறை அல்ல, பண்டைய கால உரோம, கிரேக்க நாகரீகங்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஜோதிடத்தை நம்பி வானவியலை அடிப்படையாகக் கொண்டு ஜோதிடத்தைக் கணித்தார்கள் என்று அறியலாம். அதாவது ஜோதிடம் என்பது கணிதம் விஞ்ஞானம் போல ஒரு துறையாகவே உள்ளது அதாவது யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் யாருக்கும் கணிக்கலாம், இங்கே நம்பிக்கை என்பது கணிக்கப் பட்டவை பலிக்குமா என்பதிலேயே?, அது அவரவரைப் பொறுத்தது, அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது.

இதயம்
20-06-2007, 08:06 AM
[B]அவசியம் வருவேன். கேள்விகளை வைக்கிறேன் நீங்கள் பதில் தேடித்தாருங்கள்

உங்கள் கேள்விகளை அதற்கான திரியில் மட்டுமே கொடுங்கள் மோகன். இந்த கேள்வி இந்த திரிக்கு ஏற்றதல்ல. நீங்கள் அங்கு கொடுப்பதன் மூலம் உங்களைப்போன்றவர்களுக்கும் அது பயனுடையதாக இருக்கும். எனவே அங்கு வந்து உங்கள் கேள்விகளை கேளுங்கள். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி..!!

lolluvathiyar
20-06-2007, 08:51 AM
நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதில் பல நன்மைகள் இருகிறது.
சாதகம்
இது முக்கியமாக அண் பெண் பொருத்தம் பார்க்க பயன்படுத்த படுகிறது. இதில் உன்மை இருகிறதா, இல்லையா என்ற சர்சைக்கு நான் வரவில்லை.
ஆனால் ஒரு வரன் பார்கிறோம். அந்த வரன் விட்டில் உள்ள பெருயவர்களுக்கும் பிடிக்க வேண்டும். ஒரு வேலை வரன் பிடிக்காத பட்சத்தில் எப்ப்டி காத்திருக்கும் விட்டில் பெண் அல்லது பையன் பிடிக்கவில்லை என்று கூறுவது. அது சங்கடமாக இருக்கும் அல்லவா?
ஆகையால் இலைமரை காய் போல சாதகம் ஒத்து வரவில்லை, என்று கூறி விடுவார்கள்.
மாமன் மகளை கொடு என்று நச்சரித்தால், முடியாது என்று முகத்தில் அடித்தார் போல சொல்வதற்க்கு பதில் இப்ப குருதிசை இல்ல அதனால கட்ட முடியாது நாசுக்காக சொல்வார்கள்.
95 % மக்கள் இன்று சாதகத்தை இப்படி தான் பயன் படுத்துகிறார்கள்.
சாதக பொருத்தம் பார்த்து கல்யானம் பன்னுவது என்பது என் தாத்தா அப்பா காலத்தில் இல்லை, அவை இந்த 20 வருடங்களில் வந்ததாக என் அப்பா சொன்னார்.
என் நன்பன் ஒருவன் தான் தொடங்க போகும் தொழிலுக்கு என்னை பங்குதாரர் ஆகும் படி கோரினான். அவன் ஒரு விடாகொண்டன், விருப்பமில்லை என்றாலும் விடமாட்டான், நச்சிகிட்டே இருப்பான். இப்ப என் சாதகத்தில எனக்கு தொழில் ராசி இல்ல, அதனால தொழில் பன்னினா பனவிரயம் ஆகும் என்று கூறிவிட்டேன். அதிலிருந்து அவன் என்னை நச்சரதே இல்ல.
குடும்பத்தில் ஏதாவது நலக்கம், சிக்கல், பிரச்சனை என்றால் மனிதர்கள் அதிலிருந்து மீள தங்கள் முயற்ச்சியை செய்வார்கள். அதே சமயம் ஜோசியரிடம் சென்று கேட்டால், முக்காவாசி என்ன சொல்கிறார்கள். இப்ப கொஞ்சம் டைம் சரியல்ல. ஆனால் விரைவில் உங்கள் அனைத்து பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று தான் கூறுகிறார்கள். மனகலக்கம் உள்ளவர்களுக்கு இந்த ஒரு சொல் தான் ஆறுதல்.
அனைத்து பிரச்சனையும் விதியின் தலையில் சுமத்தி விட்டு ஏதோ பரிகாரம் பன்னி விட்டு, சிறிது நிதானித்து ஊக்கத்துடன் அவனை அடுத்த காரியத்தில் ஈடுபடுவான். ஆகையால் அதை நம்புகிறவனை அவன் வழியில் விட்டு விடுவது நல்லது.

இதயம்
20-06-2007, 12:21 PM
நீங்கள் விஞ்ஞானம் என்று சொல்வது வெறும் மேலை நாட்டு புத்தகங்கள் என்றால் அவற்றோடு ஒப்பிடவது வீண். ஏனென்றால் வளர்ந்து நாகரீகம் நம்முடையது. இதைவிட அதிகமாக விஷயங்கள் நம்மிடம் உள்ளது. மேலும் பல விஞ்ஞான கூற்றுகள் அவர்களே ஒப்புக் கொள்ளாமல் அடித்துக் கொள்கின்றனர். பிறகு மாற்றிவிடுகின்றனர்.

எங்கெல்லாம் திறமைகள் இருக்கிறதோ அதை மதிக்கவேண்டியது ஒரு மனிதனின் கடமை. காரணம், அந்த திறமைகளின் பலன்களை நாம் பல்வேறு வழிகளில் அடையப்போகிறோம். இன்றைய சூழ்நிலையில் இந்தியா பல வகைகளில் முன்னேறியிருந்தாலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டு கற்பனையில் நினைக்க கூட முடியாத அளவுக்கு தான் இருக்கின்றது. காரணம், இந்தியாவின் ஆராய்ச்சிகள் "கிளி ஜோசியத்தில் ஆரம்பித்து இன்று கம்ப்யூட்டர் ஜோசியம் வரை" போன்ற வழிகளில் தான் இருக்கிறது. நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. என் நாட்டை நானே கிண்டல் செய்து கொள்ளமாட்டேன். மன ஆதங்கத்தில் எழுதுகிறேன். பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து உண்மை கண்டுபிடிக்கும் உங்களுக்கு இந்த உண்மை தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.

விஞ்ஞானம் என்பது பகுத்தறிவின் அடுத்தடுத்த நிலைகள் தான். ஆரம்பத்தில் அவன் பகுத்தறிவால் சக்கரம் தான் செய்ய முடிந்தது, அந்த அறிவு தான் பரிமாணம் அடைந்து இன்று விமானமாக இருக்கிறது. எனவே அதன் முடிவுகளும், உண்மைகளும் காலத்திற்கேற்றார் போல் மாறுவதில் தவறில்லை. என்ன மாறினாலும் விளைவு நன்மை தானே..!! நம்மை விட அறிவில் திறமையில் உயர்ந்தவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில் தவறில்லை. யாரோ அனுபவிக்க போகும் வசதிக்காக தன்னை வருத்தி கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தும் விஞ்ஞானி சிறந்தவரா அல்லது தான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜோசியம், ஜாதகம், கைரேகை என்ற பெயரில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் பேர்வழி சிறந்தவரா..?

நீங்கள் விஞ்ஞானம் என்று சொல்வது வெறும் மேலை நாட்டு புத்தகங்கள் என்றால் அவற்றோடு ஒப்பிடவது வீண்.

உங்கள் பதிவில் மேற்சொன்ன கருத்தை வெளியிட்ட அதே நீங்கள், இன்னொரு பதிவில்

நேரம் இருந்தால் Cheiro's Palmistry படியுங்கள்.

என்று எழுதி அதே மேலை (அயர்லாந்து) நாட்டவர் எழுதிய கைரேகை சம்பந்தமான புத்தகத்தை என்னை படிக்க சொல்லி எழுதியிருக்கிறீர்கள். அது எப்படி உங்கள் கருத்தை சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்கிறீர்கள்.? இது முரண்பாடாக தெரியவில்லையா..? Cheiro's Palmistry சொல்வது போல் கைரேகை விஞ்ஞானம் என்கிறீர்களா..? அல்லது மேலைநாட்டவர் எழுதுவதெல்லாம் குப்பை என்கிறீர்களா..? முதலில் நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்..!!

ஜோசியம் சாதகம் கைரேகை − இவை ஆன்மீக தலைப்புகள் அல்ல. இது மதம் சம்பந்தப்பட்டவையும் அல்ல. பல புத்தகங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால் இவற்றை இந்து மதம் சம்பந்தப்பட்டது என்று எடுத்துக் கொள்வது சரியல்ல. பிரபல கைரேகை புத்தகங்கள் எழுதியது மேலை நாட்டுக்காரர்களே. ஆகையால் இது விஞ்ஞான பகுதியில் வந்தது சரியே.

அறிவிலிகள் எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அதில் மேலை நாடு மட்டும் விதிவிலக்கா என்ன..? மேலை நாட்டவர் எழுதுபவை எல்லாம் வீண் என்றுவிட்டு பிறகு மீண்டும் அவர்கள் எழுதியதெல்லாம் விஞ்ஞானம் தான் என்கிறீர்கள்..!! சரியாக குழம்பிப்போய் இருக்கிறீர்கள். இந்த திரியில் ஆன்மீகத்தை நீங்கள் தான் இஸ்லாம் சம்பந்தமான கேள்வியை சம்பந்தமே இல்லாமல் கொண்டு வந்தீர்கள். அதனால் தான் நான் அப்படி சொன்னேன். ஆனால், இந்த திரிக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டு போல் ஒரு எண்ணம் எனக்கு உள்ளது காரணம். இந்த தொழில் செய்பவர்கள், இதை ஊக்குவிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் துறவிகளாக, சாமியார்களாக இருக்கிறார்கள். ஜாதகம் கணிப்பது கூட ஆன்மீகவாதியைப்போன்ற ஒருவர் தான் செய்கிறார். அப்படியா..? அது மட்டுமல்ல இதைச்செய்பவர்களும், பயன்படுத்துபவர்களும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த, சீக்கியர்கள் யாரும் கிடையாது. அப்படியென்றால் இது ஒரு குறிப்பிட்ட மதத்தோடு தொடர்புடையது போல் தெரியவில்லை..? இந்த காரணம் கூட நீங்கள் ஜாதகத்தை, ஜோசியத்தை, கைரேகையை கண்மூடித்தனமாக ஆதரிக்க காரணமாக இருக்கலாம். ஆனால், அனைவரும் உங்களைப்போல் இல்லை. மக்கள் நிறைய மாறிவிட்டார்கள். கிளி ஜோசியம், கைரேகை, ஜோதிட தொழில்காரர்கள் பிழைப்பு மிகவும் கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறது. முதல் இரண்டு தொழில்கள் ஏறக்குறைய அழிந்து விட்டது என்றே சொல்லலாம். ஜோதிட தொழில் அழியாமல் இருக்க காரணம் அது திருமணம், அரசியல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஏறக்குறைய எல்லா திருமணங்களும் ஜாதகம் பார்த்து, ஏகப்பட்ட பொருத்தங்கள் பார்த்து தான் செய்யப்படுகின்றன. இருந்தும் தம்பதியருக்குள் சண்டை, சச்சரவு, விவாகரத்து ஆகியவை ஏன்.? தம்பதிகள் இருவருக்குமிடையே உள்ள புரிதல் செய்ய வேண்டியதை இந்த வித்தைகள் எப்படி செய்ய முடியும்..? மகிழ்ச்சியாக இணைந்து வாழ தேவை மனப்பொருத்தம் தான், மணப்பொருத்தம் அல்ல..!!

leomohan
20-06-2007, 12:37 PM
ஜாபர் நீங்கள் பேச்சு சாதுர்யம் மற்றும் எழுத்து சாதுர்யம் படைத்தவர். அது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரமாக இருக்கலாம். ஆனால் அதை அரசியல் செய்ய பயன்படுத்தாதீர்கள்.

சுற்றி வளைத்து பேசுவதில் எந்த பயனும் இல்லை. நீங்கள் இந்த வாதத்தில் வென்று விட்டால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் மூத்த உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறேன்.

உண்மையாக விஷயம் தெரிய ஆர்வம் இருந்தால் வாருங்கள். பேசலாம்.

1. நான் உங்கள் விஞ்ஞானம், உங்கள் விஞ்ஞானி என்று கூறுவது, நீங்கள் reference ஆக கொள்ளும் விஞ்ஞான கூற்றுகளை. ஜெர்மானிய விஞ்ஞானி சொல்வதை அமெரிக்க விஞ்ஞானி ஏற்றுக் கொள்ளாவிட்டால் எந்த விஞ்ஞானி சொல்வதை சரி என்பீர்கள்.

2. மேலை நாடு பகுத்தறிவில் சிறந்தது என்றும் விஞ்ஞானா ரீதியாக மேம்பட்டது என்றும் நீங்கள் சொன்னதால் தான் Cheiro's Palmistry படிக்க சொன்னேன்.

3. மேலை நாட்டவர் எது செய்தாலும் சரி, நாம் எது செய்தாலும் மட்டம் என்று பேசுவதை தவிருங்கள்.

4. ஜோசியம், கைரேகை இவை அனைத்தும் கணித முறைப்படி ஒற்றுமைகளை தேடிக் குவித்து 9 முறை நடந்தால் 10வது முறையும் நடக்கலாம் என்ற probability கணிப்பே. எல்லாமே கணிக்கப்பட்டுவிட்டால் human error இருக்காது. அப்படி மனித பிழை சதவீதம் இல்லாவிட்டால் நாம் செய்வதெல்லாம் வெற்றியடையும். ராக்கெட் விட்டவுடன் சரியாக பறக்கும். கடலில் விழாது. ஆக எங்கெல்லாம் பிழை இருக்கிறது என்று வாதிடுவது வீண்.

நீங்கள் என்னை குழப்ப முயல்வது வீண் வேலை. நீங்கள் அவற்றை விஞ்ஞானமாக ஏற்காவிட்டால் சந்தோஷம். ஏற்றுக் கொண்டாலும் சந்தோஷம்.

வணக்கம்

leomohan
20-06-2007, 12:42 PM
அது மட்டுமல்ல இதைச்செய்பவர்களும், பயன்படுத்துபவர்களும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த, சீக்கியர்கள் யாரும் கிடையாது. அப்படியென்றால் இது ஒரு குறிப்பிட்ட மதத்தோடு தொடர்புடையது போல் தெரியவில்லை..? ..!!

மீண்டும் உங்கள் அறியாமை. வெளிநாட்டு செய்திதாட்களை பாருங்கள். கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் எல்லாவிதமான கணிப்பு முறைகள் உள்ளன. டாரெட் சிஸ்டம், விட்ச்கிரஃப்ட் இன்னும பல முறைகள்.

விஷயம் தெரியாமல் பேசுவதை நிறுத்த முயற்சி செய்யுங்களேன்.

நம்மை விட இன்னும் பிற்போக்கு பழக்கங்கள் மேலை நாட்டவரிடம் உள்ளது. மூடநம்பிக்கைகள் மலிந்து கிடைக்கின்றன. நேரம் கிடைக்கும் போது அமெரிக்க தொலைகாட்சிகளையும் அமெரிக்க செய்திதாட்களை இணையத்திலும் படியுங்கள்.

ஆங்கிலேயர்கள் ஒரு கிராமத்தையே விட்ச்கிராஃப்ட் செய்ததால் எரித்திருகிறார்கள்.

lolluvathiyar
20-06-2007, 12:50 PM
இந்த தொழில் செய்பவர்கள், இதை ஊக்குவிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் துறவிகளாக, சாமியார்களாக இருக்கிறார்கள். ஜாதகம் கணிப்பது கூட ஆன்மீகவாதியைப்போன்ற ஒருவர் தான் செய்கிறார்.

ஆண்மீகவாதி துறவி இவர்கள் முற்றும் துறந்தவர்கள், அவர்கள் நிச்சயம் இந்த தொழிலுக்கு வருவதில்லை.
இந்த தொழிலுக்கும் ஆண்மீகவாதிகளுக்கும் சுத்தமாக சம்மந்தம் இல்லை.
அது போல இந்த தொழிலுக்கும் குறிபிட்ட சாதியினருக்கும் கூட சம்மந்தம் இல்லை.
முன்பு பிராமர்கள் தான் ஜோசியராக இருந்தனர். ஆனால் இன்று பல சாதி மக்கள் ஜோசியராக இருகின்றனர்.
ஏன் தாழ்ந்த சாதி பிரிவினரும் கூட பிரபலமான ஜோசியராக இருகின்றனர்.

பயன்படுத்துபவர்களும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த,
சீக்கியர்கள் யாரும் கிடையாது. அப்படியென்றால் இது ஒரு குறிப்பிட்ட மதத்தோடு தொடர்புடையது போல் தெரியவில்லை..?
சந்தேகமே இல்லை இது முழுக்க முழுக்க இந்து மதம் சம்மந்தமுடையதுதான். ஆனால் ஆண்மீக தலைப்பின் கீழ் வராது.
கல்வி ,அறிவியல் தலைப்பின் கீழும் வர கூடாது. பொது விவாதம் அலசல்கள் கீழ் வரலாம் என்பது என் கருத்து

ஏறக்குறைய எல்லா திருமணங்களும் ஜாதகம் பார்த்து, ஏகப்பட்ட பொருத்தங்கள் பார்த்து தான் செய்யப்படுகின்றன. இருந்தும் தம்பதியருக்குள் சண்டை, சச்சரவு, விவாகரத்து ஆகியவை ஏன்.?

கருத்து பரிமாற்றம் என்பது குடுபத்தில் வருவது சகஜம். ஊடல் இல்லாத கூடல் இன்பமாக இருக்காது.
சாதகம் பார்காமல் செய்த திருமனம் மட்டும் சச்சரவு இல்லாம இருகிறதா?
வீட்டுவீடு வாசல்படி. என் தங்கை எங்கள் உறவினர் ஒருவரையே காதலித்து விட்டால். இரு வீட்டிலும் எதிர்பு இல்லை.
ஆனால் இருவீட்டாருக்கு பயம் ஜாதகத்தை தூக்கி பிரபல ஜோசியரிடம் ஆலோசனை கேட்டனர்.
அந்த ஜோசியகாரனும் இந்த சாதகம் அவ்வளவாக பொருந்தாது என்று கூறினான்.
ஆனால் இருவரும் காதலிகிறார்கள் என்ற விவரத்தை ஜோசியரிடம் கூறினார் என் தங்கை மாமனார்.
அவர்களை எப்படி சொல்லி புரியவைக்க வில்லை என்றும் கூறினார்.
அதுக்கு அந்த ஜோசியர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்?
"ஐயா, பழக்கமே இல்லாத அண் பெண்னுக்கு தான் சாதக பொருத்தம் பார்க்க வேண்டும்,
ஆனால் காதலிப்பவர்களின் சாதக பொருத்தம் பார்க்க தேவை இல்லை.
மனபொருத்தம் ஏற்பட்டுவிட்டால், மற்ற பொருத்தங்கள் பின்னாளில் தானாக வந்து சேரும்,
ஆகையால தாரளமாக அவர்களுக்கு தடை சொல்லாமல் திருமணம் செய்து வையுங்கள்" என்று அறிவுரை கூறினார்.
அதன் படியே என் தங்கைக்கு திருமனம் செய்து வைத்தோம்.

இதயம்
20-06-2007, 01:10 PM
ஜாபர் நீங்கள் பேச்சு சாதுர்யம் மற்றும் எழுத்து சாதுர்யம் படைத்தவர். அது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரமாக இருக்கலாம். ஆனால் அதை அரசியல் செய்ய பயன்படுத்தாதீர்கள்.

அன்பு மோகன்....எனக்கு பேச்சு சாதுர்யம், எழுத்து சாதுர்யம் இருப்பதாக சொன்னதற்காக உங்களுக்கு நன்றிகள். அது நிச்சயம் கடவுளின் வரம் தான். பேச்சு, எழுத்தும் ஆகியவை மூளை என்ற எஜமானனின் வெளிப்பாடுகள் தான். அங்கு தான் பகுத்தறிவு பட்டறையும் வேலை செய்கிறது. ஆக கூடி, எனக்கு பகுத்தறிவு இருக்கிறது என்று மறைமுகமாக சொல்லிவிட்டீர்கள். நீங்கள் சொன்னது போல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் மூட நம்பிக்கைகள், மோசடி வித்தைகள் எனக்கு தீமைகளாக தெரிகிறது.!!

சுற்றி வளைத்து பேசுவது எனக்கு தெரியாத கலை. அதை நீங்கள் என் பதிவுகளை படித்தாலே புரிந்து கொள்வீர்கள். என்னைப்பொருத்தவரை நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்வது என் வழக்கம். அதற்கு முன் ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை வரவிடமாட்டேன்.

1. நான் உங்கள் விஞ்ஞானம், உங்கள் விஞ்ஞானி என்று கூறுவது, நீங்கள் reference ஆக கொள்ளும் விஞ்ஞான கூற்றுகளை. ஜெர்மானிய விஞ்ஞானி சொல்வதை அமெரிக்க விஞ்ஞானி ஏற்றுக் கொள்ளாவிட்டால் எந்த விஞ்ஞானி சொல்வதை சரி என்பீர்கள்.

1. எந்த விஞ்ஞானி சொல்வதையும் ஏற்றுக்கொள்வது உண்மையாகாது. தான் சொல்வதை தன் கண்டுபிடிப்பின் மூலம் உலகத்திற்கு நிரூபித்து காட்ட வேண்டும். அதை உலகுக்கு தெரிவிக்க ஊடகம் இருக்கிறது. எனவே அந்த குழப்பம் எனக்கு இல்லை.

2. மேலை நாடு பகுத்தறிவில் சிறந்தது என்றும் விஞ்ஞானா ரீதியாக மேம்பட்டது என்றும் நீங்கள் சொன்னதால் தான் Cheiro's Palmistry படிக்க சொன்னேன்.

2. உங்கள் வாதங்களை உங்களின் சிந்தனையை அடிப்படையாக கொண்டு எடுத்துவைக்கிறீர்களா..? அல்லது எதிராளியின் கருத்தின் அடிப்படையிலா..? ரொம்பவே குழம்பி, மற்றவர்களையும் குழப்ப முயற்சிக்கிறீர்கள்.

3. மேலை நாட்டவர் எது செய்தாலும் சரி, நாம் எது செய்தாலும் மட்டம் என்று பேசுவதை தவிருங்கள்.

3. உங்களைக்காட்டிலும் எனக்கு தேசபக்தி அதிகம். அதற்காக இல்லாததை இருப்பதாக சொல்ல என் தேசபக்தியை நான் பயன்படுத்த விரும்பவில்லை. அது என் தேசத்தை இழிவுபடுத்துவதற்கு சமம். என் தேசத்தில் பெருமைப்பட்டுக்கொள்ள பல விஷயங்கள் உண்டு. ஆனால், நாம் விவாதித்தவற்றில் என் தேசம் குறையுடன் இருப்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். காரணம், அது உண்மை.!

4. ஜோசியம், கைரேகை இவை அனைத்தும் கணித முறைப்படி ஒற்றுமைகளை தேடிக் குவித்து 9 முறை நடந்தால் 10வது முறையும் நடக்கலாம் என்ற probability கணிப்பை. எல்லாமே கணிக்கப்பட்டுவிட்டால் human error இருக்காது. அப்படி மனித பிழை சதவீதம் இல்லாவிட்டால் நாம் செய்வதெல்லாம் வெற்றியடையும். ராக்கெட் விட்டவுடன் சரியாக பறக்கும். கடலில் விழாது. ஆக எங்கெல்லாம் பிழை இருக்கிறது என்று வாதிடுவது வீண்.

4. உங்களுடைய கருத்துப்படியே நீங்கள் சொன்ன அனைத்தும் 10-வது முறையும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று probability கணிப்பை சொல்வது தான் என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால், அதை 99.99% உறுதித்தன்மையுள்ள விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டது மிகப்பெரிய முரண்பாடு. விஞ்ஞானம் கொடுத்த சுவிட்ச் போட்டால் லைட் எரிவது 99.99% வாய்ப்புள்ள ஒரு நிலையை 0.001% வாய்ப்பிற்கும் குறைவாக உள்ள ஜோசிய, ஜாதகத்தோடு ஒப்பிடுவது யாராலும் ஏற்க முடியாது. இதில் விஞ்ஞானத்தின் பகுதியான 00.01% என்பது மனித குறைபாடு.

நீங்கள் விஞ்ஞானமற்ற விஞ்ஞானத்தில் மிகத்தெளிவாக இருக்கும் போது நானல்ல, யாரும் உங்களை குழப்பமுடியாது. கவலைப்படாதீர்கள். ஒரு விவாதத்திற்காக தான் இத்தனை சொற்போர். மற்றபடி உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

நீங்கள் இந்த வாதத்தில் வென்று விட்டால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் மூத்த உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறேன்.

வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கு இடமில்லை. நம் திறமைகளுக்கு இடையேயான போட்டி இதுவென்றால் நம் இருவருக்குள் ஒருவர் வெற்றி பெற வாய்ப்புண்டு. அந்த விளையாட்டல்ல அது. என் தேசத்தை செல்லாக அரித்துக்கொண்டிருக்கும் தீமைகளை பற்றிய என்னுடைய குமுறல் இவை. நன்மை தீமைகள் எது என்று விரைவில் விளங்கும். அது வரை பொறுத்திருப்போம். நன்றி..!

இதயம்
20-06-2007, 01:15 PM
சந்தேகமே இல்லை இது முழுக்க முழுக்க இந்து மதம் சம்மந்தமுடையதுதான்.

இப்படி மோகனை கவிழ்த்துவிட்டீர்களே வாத்தியார்..!

இதயம்
20-06-2007, 01:18 PM
நேரம் கிடைக்கும் போது அமெரிக்க தொலைகாட்சிகளையும் அமெரிக்க செய்திதாட்களை இணையத்திலும் படியுங்கள்.
நீங்கள் இந்தியாவில் நடப்பவற்றை அதே தொலைக்காட்சி, பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தால் கூட என்னிடமே குறை இருக்கும் போது நான் எப்படி அமெரிக்ககாரனை திருந்த சொல்வேன்.? முதலில் என் வீட்டை சுத்தம் செய்து கொள்கிறேன். பிறகு தெருவுக்கு வருகிறேன். இது தான் என் கொள்கை.

நான் அடுத்தவர்களை குறை கூறும் முன் என்னை பார்க்கிறேன்.!!!

ஜோய்ஸ்
20-06-2007, 01:22 PM
இப்படி புத்திக்கூர்மையுள்ல பலர் ஒன்று கூடி விவாதிப்பது மிகவும் அருமை.பங்கெடுத்த அணைவருக்கும் பாராட்டுக்கள்.
சப்ஷ் சரியான போட்டிதான்.
(நமக்கு ஜாதகமாவது வெங்காயமாவது எல்லாம் மூட நம்பிக்கை)

leomohan
20-06-2007, 02:09 PM
இதயம் அவர்களே இந்த திரியில் இதுவே என் கடைசி பதிவு.

இதுவரையில் எந்த திரியிலும் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொன்னவர்களை குழம்பி போயிருக்கிறீர்கள் என்று முடிவு கட்டிவிட்டீர்கள். இது ஆரோக்யமானது இல்லை.

நான் சொல்ல வந்ததை புல்லட் லிஸ்டில் சொல்லிவிடுகிறேன். நீங்கள் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம். மேலும் வாதம் செய்து நேரம் வீணடிக்க விரும்பவில்லை.

1. நம் நாடு பண்பாடு கலாச்சாரம் அறிவியல் மருத்துவம் இலக்கியம் இவற்றில் மற்ற நாடுகளை விடவும் அல்லது சிறந்து நாடுகளுக்கு இணையாகவும் உள்ளது.

2. சரியான முறையில் டாக்குமென்டேஷன் செய்யாததாலும் பல முறை படையெடுப்புகளினாலும் பொக்கிஷங்கள் அழிந்து போய்விட்டன.

3. சாதகம், கைரேகை கட்ட அமைப்பு-வாஸ்து போன்று இன்னும் பல கணிப்பு பாடங்கள் முறையாக மக்கள் கற்று பிராக்டிஸ் செய்து வந்தனர்.

4. இன்று அவற்றை வைத்து காசு செய்பவர்கள் மாத்திரம் வியாபாரிகளே. அவர்களிடம் ஏமாறுபவர்கள் முட்டாள்களே. அவ்வாறு ஏமாற்றுவதும் மருத்துவதுறையிலும் நடக்கிறது. அதாவது தான் கற்ற வித்தையை மக்களுக்கு பயன்படுத்த காசு வாங்கி பணம் சம்பாதிக்கும் எண்ணம் மக்களிடையே பெருமளவு பெருகிவிட்டது.

5. மூட நம்பிக்கை என்று எடுத்துக் கொண்டால் இறைவனை நம்புவதும், அவனுக்காக நாம் செய்யும் பிராத்தனை முறைகளும் எல்லாமே மூட நம்பிக்கை தான். ஆக ஒருவன் ஜோசியன் சொன்னான் என்று சொந்த பிள்ளையை பலி கொடுத்தால் அவன் முட்டாளே.

6. மேலை நாட்டு விஞ்ஞானம் பழக்கத்தில் உள்ளது. செல்போன் காதுக்கு தீங்கு என்று ஒரு சாராரும் தீங்கு இல்லை என்று இன்னொரு சாராரும் சொல்கிறார்கள். இதுபோல காபி உடலுக்கு கெடுதி, இல்லை நல்லது என்று சுமார் 10 முறை தீர்ப்பு மாறி மாறி வந்துவிட்டது.

7. Astrology, Numerology, Palmistry போன்ற ஆங்கில வார்த்தைகள் மேலை நாட்டவரும் இதை கற்கிறார்கள் என்பதற்கு சான்று.

8. பலி கொடுப்பது, வேண்டாதவர்களுக்கு சூன்யம் வைப்பது, செத்தவர்களை பிழைக்க வைப்பது, கூட்டு பிராத்தனை, எதிர்காலத்தை கணிப்பது, ஆவிகளுடன் பேசுவது இது போன்றவை உலகம் முழுக்க நடக்கின்றன. நடந்துக் கொண்டிருக்கும்.

9. இவை அனைத்திற்கும் காரணம் மனிதனுக்கும் அவனை சுற்றி நிகழும் விஷயங்களில் அவனுடைய கட்டுபாடு முற்றிலும் இல்லாததே காரணம்.

10. மத நம்பிக்கை பகுத்தறிவாகாது. நீங்கள் மதத்தை நம்பினாலே நீங்கள் பகுத்தறிவாதி இல்லை என்று ஆகிறது. காரணம் மதத்தில் பல மிராக்ள்ஸ் உண்டு. மனிதன் இறைவனிடம் கட்டுபட இறைவன் ஒருவன் மேலே இருந்து ஆட்டிபடைப்பது போன்று கூற்றுகள் உருவாகிறது.

கடைசி முறையாக சொல்கிறேன், சற்று அலுத்துபோய்விட்டேன்.

1. நீங்கள் ஜோசியம் படித்து வாருங்கள். அதை வைத்து சில கணிப்புகள் செய்து பாருங்கள். பிறகு அது உபயோகமற்றது என்ற முடிவுக்கு வாருங்கள். காசுக்காக வெட்டி வேலை செய்யும் ஜோசியர்கள் போலி மருத்துவர்களுக்கு சமம். அதை வைத்து மருத்துவம் போலி என்றால் சிரிப்பார்கள்.

2. நீங்கள் ஜோசியம் சாதகம் கைரேகை போலி என்று நம்பும் பட்சத்தில் உங்களால் முடிந்த வரையில் மக்களுக்கு அதை பரப்புங்கள். இந்த மன்றத்தில் அனைவரும் சுயமாக சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்கள். இங்கு ஒருவருக்கு ஒருவர் கருத்து சொல்லி மாற்றுவது கடினம்

3. வாத்தியார் சில கருத்துக்கள் என்னுடம் ஒன்றி போகிறார் என்பதால் அவர் சொல்லும் விஷயங்களில் எனக்கு மாற்று கருத்து இல்லாமல் இருக்கும் என்று நீங்கள் முடிவுக்கு வருவது வேடிக்கை.

4. எல்லா கருத்திலும் ஒன்றோ அல்லது மேற்பட்ட பார்வைகள் பாயின்ட் ஆப் வ்யூ இருக்கும். அது சகஜம்.

இனியும் நீங்கள் ஜோசியம் பாமிஸ்டிரி போன்ற புத்தகங்களை படிக்காமல் அதை பற்றி நுனிப்புல் மேய்ந்தால் பதில் அளிக்க நான் தயாராக இல்லை.

ஒரு வாரம் எடுத்துக் கொண்டாலும் படித்துவிட்டு வாருங்கள், பிறகு அவர்கள் எதை கொண்டு கணிக்க முயல்கிறார்கள் என்ற பன்டமென்டல் கருத்தையாவது அறிவீர்கள். இப்போது அந்த அடிப்படை கல்வி கூட இல்லை தங்களிடம்.

நன்றி.

வணக்கம்.

இதயம்
20-06-2007, 02:55 PM
ஐயா மோகன் அவர்களே..! உங்களுடைய பதிவுகளில் என் கருத்துக்களை பலவீனப்படுத்தும் எதிர்க்கருத்துக்களை விட தனிமனித சாடல் தான் அதிகம் தெரிகிறது. உதாரணத்திற்கு அமெரிக்காவை பாருங்கள், அந்த புத்தகம் படியுங்கள், அடிப்படை கல்வி இல்லை இப்படி பல. எனக்கு ஏற்படும் கெட்ட நிகழ்வுகளை புரிந்து அதன் வழி போகாமல் என்னை காத்துக்கொள்ள உங்களைப்போன்ற அதிபுத்திசாலித்தனம் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

சில நேரங்களில் அதிபுத்திசாலித்தனம் கூட அர்த்தமற்றுபோய் விடுகிறது. அதற்கு உதாரணமாக உங்களைக்கூட சொல்ல முடியும். எனவே இத்துடன் இந்த திரியின் உங்களுடனான பதிவை நிறுத்திக்கொள்வதே சரி என்று படுகிறது. உங்கள் மேல் வருத்தத்தில் இல்லை. என் கருத்தை உங்களிடம் சொல்வதில் பயனில்லை என்பதால். உங்கள் கருத்து சரியில்லை என்று என்னிடம் நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் உங்கள் அடிமனதில் அந்த எண்ணம் உங்களுக்கு எழுந்தாலும் அது என் கருத்துக்கு கிடைத்த வெற்றியே..!! நம்மில் பலர் இங்கு விவாதிக்காவிட்டாலும் நம் விவாதத்தை மிக உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அவர்கள் முடிவு செய்வார்கள் எது சரி என்று..! உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம். நீங்கள் புத்தகத்தை படித்தவர். நான் வாழ்க்கையை படித்தவன்.

நன்றி..!!

leomohan
20-06-2007, 03:08 PM
உங்கள் கருத்து சரியில்லை என்று என்னிடம் நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் உங்கள் அடிமனதில் அந்த எண்ணம் உங்களுக்கு எழுந்தாலும் அது என் கருத்துக்கு கிடைத்த வெற்றியே..!!

ஆஹா. உங்கள் வாத திறமையை மெச்சி இந்தாருங்கள் ஒரு நூறு ரூபாய். வாழ்த்துக்கள்.

குறிப்பு - அடிப்படை கல்வி இல்லை என்று சொன்னது ஜோசியத்தில் மட்டுமே.

இதயம்
20-06-2007, 03:12 PM
ஆஹா. உங்கள் வாத திறமையை மெச்சி இந்தாருங்கள் ஒரு நூறு ரூபாய். வாழ்த்துக்கள்.

குறிப்பு - அடிப்படை கல்வி இல்லை என்று சொன்னது ஜோசியத்தில் மட்டுமே.

உங்கள் பரிசை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன். நன்றி..!

lolluvathiyar
20-06-2007, 03:16 PM
1. நீங்கள் ஜோசியம் படித்து வாருங்கள். அதை வைத்து சில கணிப்புகள் செய்து பாருங்கள்.

போலி ஜோசிகார*ர்க*ள் நிரைந்திருக்கும் இந்த* கால*த்தில் ஜோசிய*ம் சொல்லித*ருப*வ*ரும் போலியாக* இருக்கும் வாய்ப்பு இருகிற*த*ல்ல*வா?

leomohan
20-06-2007, 03:19 PM
போலி ஜோசிகார*ர்க*ள் நிரைந்திருக்கும் இந்த* கால*த்தில் ஜோசிய*ம் சொல்லித*ருப*வ*ரும் போலியாக* இருக்கும் வாய்ப்பு இருகிற*த*ல்ல*வா?

விருப்பம் இருந்தால் பல மூலங்களை தருகிறேன்.

lolluvathiyar
20-06-2007, 03:31 PM
சுட்டி தாருங்களேன் படிக்க முயற்சிகிறேன். முழுசா இல்லாட்டியும் கொஞ்சம் பேசிக்காவாது தெரிந்து கொள்ளலாமல்லவா?

மோகன் சிம்பிளா இருக்கிற தளங்களை தாருங்கள். இந்த விசயத்தில நான் ஜீரோ

sreeram
20-06-2007, 03:53 PM
ஒரு காரியம் செய்ய external factors பல ஒத்து வந்தால் தான் நடக்கும். இதன் இடையில் உள்ள இடைவெளி தான் இறைவன், விதி, ஜாதகம், ஜோசியம் அனைத்தும் வருகிறது.

ஜாதகம், ஜோசியம் இவை அனைத்தும் ஒரு வகையான விஞ்ஞான படிப்புகள். கணிதத்தில் permutation and combination என்பார்கள்.

லியோவின் க*ருத்துக்க*ளில் உட*ன்ப*டுகின்றேன்.... "எல்லாம் மூட* ந*ம்பிக்கை...இதையெல்லாம் ஆராயாம*ல் எதிர்ப்ப*து ம*ட்டுமே ப*குத்த*றிவு..." என* நாம் ந*ம்பிக்கொண்டிருப்ப*துவே ந*ம*து ப*குத்த*றிவாகும்.

ப*டித்த*வன்(பட்டம் வாங்கி ஆராய்ச்சி செய்து) பொய் சொல்வது விஞ்ஞான*ம் ஆகிவிட்ட*து;

ப*ட்ட*ம் வாங்காம*ல் த*வ*த்தில் ஆராய்ச்சி செய்து அரிய* க*ண்டுபிடிப்புக்க*ளைச் சொன்னால் மூட* ந*ம்பிக்கை.... ஆஹா ந*ல்ல* ப*குத்த*றிவு....!

நேற்று கிர*க*மாய் நீங்க*ள் ந*ம்பிய*து இன்று கிர*க*ம*ல்லாத* ஒன்று என* நீங்க*ள் ந*ம்புவ*துவும் உங்க*ளின் ப*குத்த*றிவே....!

முத*லில் ஜோதிட*த்தில் நீங்க*ள் சொல்லும் நெப்டியூன் புளுட்டோ இல்லை. விஞ்ஞான*த்தில் இல்லாத* ராகு கேது உள்ள*ன*. இத*ய*ம் அவ*ர்க*ளே எதையும் தெளிவாய் தெரிந்து கொண்டு ப*தியுங்க*ள்.

எல்லாம் என் கையில் உள்ளது என்பது வெறும் அகம்பாவம் மட்டுமே....

இறைவ*ன் மிக*ப்பெரிய*வ*ன்.

ஜோதிட*ம் ஒரு ம*க*த்தான* விஞ்ஞான*மே... அதில் அனைத்தையும் கூற*முடியும்...ஒரு உண்மையான* ஜோதிட*க்கார*னால் ம*ட்டுமே அது சாத்திய*ம்...

இதயம்
21-06-2007, 05:17 AM
லியோவின் க*ருத்துக்க*ளில் உட*ன்ப*டுகின்றேன்.... "எல்லாம் மூட* ந*ம்பிக்கை...இதையெல்லாம் ஆராயாம*ல் எதிர்ப்ப*து ம*ட்டுமே ப*குத்த*றிவு..." என* நாம் ந*ம்பிக்கொண்டிருப்ப*துவே ந*ம*து ப*குத்த*றிவாகும்.

இப்படி நடக்கலாம் என்று சொல்லி கணித்து அது நடக்காமல் போக அதிக வாய்ப்புள்ளது விஞ்ஞானம் அல்ல. நடக்கும் என்று சொல்லி அது போலவே நடத்திக்காட்டுவது தான் விஞ்ஞானம். அப்படி நடத்தி காட்டியதனால் தான் ஏஸி அறையில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நீங்கள் எங்கோ இருக்கும் என்னிடம் தொடர்பு கொள்ள முடிகிறது. சொல்லிவிட்டு அதை செய்தும் காட்டுகிறது விஞ்ஞானம். சொல்வதை செய்வதில்லை ஜோ.ஜாதகம் ஆகியவை.

ப*டித்த*வன்(பட்டம் வாங்கி ஆராய்ச்சி செய்து) பொய் சொல்வது விஞ்ஞான*ம் ஆகிவிட்ட*து;

ப*ட்ட*ம் வாங்காம*ல் த*வ*த்தில் ஆராய்ச்சி செய்து அரிய* க*ண்டுபிடிப்புக்க*ளைச் சொன்னால் மூட* ந*ம்பிக்கை.... ஆஹா ந*ல்ல* ப*குத்த*றிவு....!

நமக்கு நன்மை செய்பவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். நன்றியுணர்ச்சி இல்லாதவன் நல்ல மனிதனாக இருக்க முடியாது. அதனால் தான் தாமஸ் ஆல்வா எடிசன் எல்லோர் மனதிலும் மறக்கப்படாமல் இருக்கிறார். எனக்கு தெரிந்து தவமிருந்து கண்டுபிடித்து நாம் உபயோகப்படுத்தும் எதுவும் இந்த காலகட்டத்தில் இல்லை (எனக்கு தெரியாத காலகட்டத்தில் நடந்ததாக சொல்லப்படுவதை நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை)

நேற்று கிர*க*மாய் நீங்க*ள் ந*ம்பிய*து இன்று கிர*க*ம*ல்லாத* ஒன்று என* நீங்க*ள் ந*ம்புவ*துவும் உங்க*ளின் ப*குத்த*றிவே....!

நேற்று வரை ஒரு மனிதனை நல்ல மனிதனாக ஏற்று, ஆன்மீகவாதியாக அவற்றை போற்றி புகழ்ந்து வந்தோம். அதே ஆன்மீகவாதி கற்பழிப்பு வழக்கில் கைதாகி அடுத்த நாள் மாமியார் வீடு போகும் போது அதே மனிதனை காறி துப்பி அவனை போற்றியதற்காக வருந்துறோம். அது எப்படி..? அதே மனிதன் தான், அதே குணங்களுடையவன் தான். நேற்று போற்றிய நம் நடவடிக்கையில் ஏன் மாற்றம்.? காரணம், பகுத்தறிவின் அடுத்தபடிகளின் விளைவு அது..! கண்ணுக்கெதிரே இருக்கும் மனிதனை புரிந்து கொள்ள முடியாத நாம் அண்டவெளியில் உள்ள கண்ணுக்கு தெரியா கோள்களை ஆராயும் விஞ்ஞானிகளை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது.? அவர்களை விமர்சித்துவிட்டு அவர்கள் கண்டுபிடித்துக்கொடுத்த பொருட்கள் இல்லாமல் நீங்கள் வாழ்க்கை நடத்த முடியுமா உங்களால்..? வாழ்க்கை நரகமாகிப்போகும். தவமெல்லாம் வெறும் கப்ஸா..!!

முத*லில் ஜோதிட*த்தில் நீங்க*ள் சொல்லும் நெப்டியூன் புளுட்டோ இல்லை. விஞ்ஞான*த்தில் இல்லாத* ராகு கேது உள்ள*ன*. இத*ய*ம் அவ*ர்க*ளே எதையும் தெளிவாய் தெரிந்து கொண்டு ப*தியுங்க*ள்.

எனக்கு விஞ்ஞானமும் தெரியும், ராகு கேது பாம்பு விழுங்கும் சமாச்சாரமும் தெரியும். உங்களுக்கு என்னுடைய சவால் இது..! ஒரு உண்மையான (!) ஜோதிடரை கொண்டு வாருங்கள். எனக்கு அல்லது அடுத்தவர்களுக்கு என்ன நடக்கும் நாளை என்பதை சொல்லச்சொல்லுங்கள். நாளை காலையில் சூரியன் உதிக்கும், மக்கள் அனைவரும் உண்பார்கள் இந்த கதையெல்லாம் வேண்டாம்.! ஏன் ஒன்றுமில்லாத விஷயத்திற்காக அடுத்தவர்களுக்கு தவறான தகவல்களை கொடுக்கிறீர்கள். ஒருவனுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை.கெடுதல் செய்ய வேண்டாமே..!! ஜோதிடத்தை நம்பாத கலைஞர் ஆட்சிக்கட்டிலில் இருக்கிறார். நம்பூதிரிகளை நம்பி வாழ்ந்த ஜெ.கலக்கத்தில் இருக்கிறார். இது தான் யதார்த்தம்..!!

இதில் தெளிவாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது. சுமையுடன் பயணம் போனால் அந்த பயணம் கஷ்டமாய் இருக்கும் என்பதை படித்து, ஆராய்ந்தா தெரிந்து கொள்ள வேண்டும்..?

எல்லாம் என் கையில் உள்ளது என்பது வெறும் அகம்பாவம் மட்டுமே....இறைவ*ன் மிக*ப்பெரிய*வ*ன்.

நிச்சயமாக கடவுள் மிகப்பெரியவன். ஆனால், எல்லாம் என் கையில் அகம்பாவம் கொண்டு அலைகிறவர்களுக்கு அழிவு நிச்சயம் தான். அதை என்னிடம் சொல்லி பயனில்லை. நான் தான் கடவுள் என்று சொல்கிறவர்களுக்கும், அவர்களை வணங்கி வழிபடுகிறவர்களுக்கும் சொல்ல வேண்டிய செய்தி இது. விஞ்ஞானிகள் கடவுள் அல்ல. அப்படி சொல்லிக்கொண்டதும் இல்லை. எந்த கடவுள் மனிதனிடம் ஜோசியம், ஜாதகம் என்பவை உண்டு என்றோ, நம்ப வேண்டும் என்றோ சொல்லியிருக்கிறார்..? உங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை அடுத்தவர்களிடம் திணித்தல் ஆகாது. நான் இத்தனை மறுக்க காரணம், அந்த அறியாமையில் அழியும் மக்களுக்காகவும், அதை செய்து ஏமாற்றும் மோசக்காரர்களை ஒழிக்கவும் தான்.

ஜோதிட*ம் ஒரு ம*க*த்தான* விஞ்ஞான*மே... அதில் அனைத்தையும் கூற*முடியும்...ஒரு உண்மையான* ஜோதிட*க்கார*னால் ம*ட்டுமே அது சாத்திய*ம்...

யார் உண்மையான ஜோதிடக்காரன் என்று சொல்லுங்கள். இதற்கு முன் இருந்திருந்தாலும் சொல்லுங்கள். பிறகு இது பற்றி பேசலாம்.

leomohan
21-06-2007, 05:22 AM
ஜோதிடத்தை நம்பாத கலைஞர் ஆட்சிக்கட்டிலில் இருக்கிறார். நம்பூதிரிகளை நம்பி வாழ்ந்த ஜெ.கலக்கத்தில் இருக்கிறார். இது தான் யதார்த்தம்..!!

ஹா ஹா ஹா தமாஷூ தமாஷூ

leomohan
21-06-2007, 05:25 AM
இதை பற்றி தங்கள் கருத்து என்னவோ

ISLAM & ASTRLOGY

According to Islam, Astrology is the scientific study of stars for determining and fixing time division such as months and seasons and directions.In modern times, this is lawful because it is perceived by the senses and fixed calculations, which can help determine the times of prescribed prayers, and other religious duties that should be observed at certain times.

Allh has informed us of His intended purpose for the stars: to guide mankind in the right path and to drive away evil satanic forces that might disrupt one' life in this world of ours.

"And the Sun runneth on unto a resting place for him .That is the measuring of the mighty, the wise. And for the Moon, we have appointed mensions till she returns like an old shrivelled palm leaf. It is not for the sun to overtake the Moon, nor doth the nights outstrips the day. They float each in an orbit." (Surah X X X VI. verse 38,39,and 40). These verse prove the well ordained and well knit mechanism of Allah's creation.

At another place He says, "He is who appointed the Sun a splendour and the Moon a light and measured for her stages that he might know the number of the years, and the reckoning. Allah has created not (all) that save in truth.

We find that in the Holy Quran, in several verses, Almighty has asked and encouraged mankind to look into and ponder over the objects of his creation, including the heaven, the stars and the Moon, in orders the understand his signs and thereby his supreme might, glory and greatness.

Mention in regard to Astrology or the influence of planets and stars is found in the Holy Quran in connection with Pharaoh, who was warned of the birth of Prophet Moses.

As a consequence of the prediction by the court astrologers of King Namrood who Predicted birth of Prophet Ibrahim so much so that they predicted accurately the conception of Prophet Ibrahim in spite of the best efforts of the King Namrood to prevent it

http://www.findyourfate.com/astrology/astrology-religion.htm#islam

leomohan
21-06-2007, 05:33 AM
நேரம் இருந்தால் இதையும் படியுங்கள்.

இது தன்வர் சௌத்ரி எழுதிய புத்தகம். இதை விரைவில் மின்னூல் பகுதியில் ஏற்றுகிறேன்.

Allah's advice shows existence of Astrology

We Muslims know and do believe that Allah knows the laws of the universe best as he himself created everything and he knows that none can work against the rule of nature - and for this reason Allah told to do seven types of things in seven days. Our prophet Muhammad (SAW) told one of his companions that Allah has said that seven types of works are blessed to do in seven days. And this seven works in seven days exactly matches with astrology. In Indian astrology we know that seven main planets own seven days of a weak and each planet has it's own controlling areas. Which days Allah actually advised to choose for specific matters -

01. Go hunting - on Saturday
02. Start building own house - on Sunday
03. Go on a journey - on Monday
04. Hair cut and shave - on Tuesday
05. Start taking medicine - on Wednesday
06. Activities related to prayer - on Thursday
07. Marry and make love to a have child - on Friday

Now, if we look at the very basic principle of Astrology, then the relation becomes very clear and obvious-

01. Death and cruelness - ruled by Saturn - Day: Saturday
02. Fame, establishment - ruled by Sun - Day: Sunday
03. Journey, travels - ruled by Moon - Day: Monday
04. Hair - ruled by Mars - Day: Tuesday
05. Chemistry, science, medicine - ruled by Mercury - Day: Wednesday
06. Religion and related acts - ruled by Jupiter - Day: Thursday
07. Marriage, sexuality - ruled by Venus - Day: Friday

Now when we match Astrology principles and Allah's guidance then the relation between them becomes clearly visible. Then it indicates the existence of astrology from the Islamic view or approach. We can understand that Allah advised the follower of Islam to do the right thing on right time. This proves that astrology has a relation with the things happening around us - basically it is the principal on which the world and universe is going on.

The Prophet's (SAW) advice about lunar position

A great important phenomena in the Vedic Astrology is lunar position. In western system where the Sun sits at your birth time is called 'Your sign' but in Indian astrology the 'Your sign' is figured out from lunar position. The most effective way of finding out the timing of events in a person's life is Dasha, and the most common and appropriate Dasha is also calculated from lunar position.

The Moon has direct relation with our bodies and minds as I described earlier, and our great Prophet Muhammad (SAW) was very much aware of this. For this reason he used to fast in certain days of lunar calendar which is called Fast of Aiyaam Beiz. This is an optional worship (Mustahaab) for Muslims. Our Prophet Muhammad (SAW) has also been seen advising Ali (R) not to make love on the 15th of lunar calendar. Islam also did warn us if any woman conceives by making love on any of the first, middle or last days of the lunar calendar then the child must have any defect. These again show us the influence of lunar positions and indicate the importance of astrology.

We Muslims know that our Prophet Muhammad (SAW) had Agate gemstone in his finger. That is why wearing an agate is a Sunnaat to Muslims - means following the ideal of the Prophet. Among Muslims, Agate is believed to keep us away from sinful acts. Islamic view on gems can be easily understood by this when our Prophet himself used a gem. In Vedic Astrology, gem is a widely used way of remedies. The healing power of gems is mentioned in many Vedic Puranas.

In his young life before he became prophet, once he went to a different city with his uncle, he met a father named Bahira, who could understand who the young boy was, and told that he would be the last prophet. He instructed his uncle to take care of him and keep him safe from enemies.

Astrology in the Quran

Actually, many of the Muslims know only a little about what Islam actually is. Most of us do not know properly about Islam or the Quran. Most of us do not know that there is a Surah in the Quran named Buruj. In Arabic the word 'Buruj' means 'Constellation' or 'Zodiac sign'. Surah Buruj is the 85th Surah in the Quran. The starting of the Surah is like-

"I swear by the sky where there are buruj..."
(Allah swears by the sky where there is zodiac signs.)

"I have created buruj (Zodiac signs) on the sky and decorated them for viewers and I have also protected them from evils..." (16th line of Surah Hizr)

"How great he is, who has created buruj in the sky and placed the Sun and shining Moon over there..." (61st line of Surah Furkan)

Buruj is an Arabic words means constellation or zodiac signs. In Arabic Astrology, we find that the sign Leo is named 'Asad Buruj'. 'Asad' means a lion thus the Arabic name of Leo, which is represented by a lion, is 'Asad Buruj'. Similarly, Libra is named, 'Meejan Buruj'. The Arabic word 'Meejan' means a balance - which represents Libra sign.

I always see many Muslims do not say their 'must-do' prayers (Salaat it is called.) everyday, even they do not fast in the Ramadan, and do not do other compulsory Islamic activities. But they are 'too conscious' about Islam (!) and too good in advising people on what to do and what not do - not to practice Astrology. A very bright example of a so-called Muslim life!!!

An astrologer predicted about the birth of Musa (A.)

Almost all Muslims know the history of Prophet Musa (A.). He was born in a time when the King Pharaon was ruling the country with claiming that he was The God. Prophet Musa (A.) was sent to punish and destroy Pharaon. One day, before he was born, Pharaon's personal astrologer named Bal-am told him that soon a son will come to this earth to punish Pharaon who will destroy his throne and everything. Pharaon knew that he would be right, for sure. At last with the help of his Vizier Hamaan he decided that he would kill any and every male child that would take birth in his country. He thus killed thousands of children. Although, at last Prophet Musa (A.) was born and avoiding the keen watch of Pharaon's agents, he could live in this earth and could destroy Pharaon and his throne in his matured age for Pharaon did the most serious sin by claiming that he was the God. Thus Pharaon could not avoid the prediction of his astrologer, too. We all know this history from Islamic books and texts and thus Islam itself is the prove of this.

Some famous Muslim astrologers

Moghul monarch Humayun - He was a very pious man, famous and well known for his just. But he himself was very much devoted to astrology and used to practice it. It is evident from historical references.

Al-Biruni - Everyone knows about Muslim scientist Al-Biruni (973-1016) but does not know that he was the councilor astrologer of King Al-Mahmud, who regularly took his advices. Al-Biruni stayed in India for 12 years and learned this from Indians. He writes 'Kitab Al-Tafhim Li Awail Sina-at Al Tanjim', it was translated in to English by R. Ramsay Wright later. In this book Al-Biruni begins with geometry, arithmetic, astronomy, geography, astrolabe and then goes to the discussion of astrology.

Omar Khayyam - Omar Khayyam (1019-1135) was a famous poet but he was an astrologer of Khorasan. Omar was so perfect in his prediction that he even understood about his own death. He fasted on the day of his death, and when he was saying his prayer he said to Allah, "Oh Allah! I wanted you as best as I could. I beg that I should never be neglected from your kind." that was his life's last sentence.

Musa Al-Khwarizmi - The Muslim scientist Abu Abdullah Ibn Musa Al-Khwarizmi was the one who first developed algebra and trigonometry. The word algebra came from the name of his book 'Hisab Algibr Wa Al-Mukabila'. He created the ever first map of the world and gave the idea of seven continents. He also wrote many other books on mathematics, geography etc. He was very much devoted to astrology and translated the Indian classic Siddhant (by Mahaveer) from Sanskrit to Arabic. He also translated many other Indian classics for his research.

Ibn Sina - Ibn Sina (980-1037) the great Muslim scientist, developed 'Alchemy' from what the word 'Chemistry' came. He was also very much devoted to both astronomy and astrology and was was brilliant in it.

Others - Other renowned astronomers and astrologers were Al Battani (858-929), Al Fazari etc. Muslim scientists invented 'Astrolab' to figure out planetary positions. Sextant was also invented by a Muslim scientist named Al-Khuzandi. Muslim kings highly encouraged astronomy and astrology, during their reigns many new stars and many new things were discovered. For this reason, one-third of total astronomical words come from Arabic language!

இதயம்
21-06-2007, 05:58 AM
விஞ்ஞானம் பற்றி ஒரு முரண்பட்ட முடிவுக்கு வந்துவிட்ட உங்களிடம் விவாதித்து பயனில்லை என்று தான் தங்களுடன் விவாதிப்பதை தவிர்த்தேன். ஆனால், நீங்கள் அதை மீண்டும் தொடங்குகிறீர்கள். நம் முன்னோர்கள் சிலரை படித்த முட்டாள் என்று சொல்வார்கள். உண்மை இருக்கிறது. வெறும் ஏட்டுக்கல்வி அறிவையும், பகுத்தறிவையும், புத்திசாலித்தனத்தையும் கொடுப்பதில்லை. நீங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பது புரிகிறது. நான் பகுந்தறிவதில் ஆர்வம் உள்ளவன். எல்லாவற்றிலும் நன்மை தீமை இருப்பது போல் புத்தகங்களிலும் இருக்கிறது. ஒரு அன்னம் போல் இருந்து நன்மையை பிரித்து எடுக்க பாருங்கள்.

இணையம் என்பது மிக சக்தியுள்ள ஒரு ஊடகம். இது போல் ஒரு அறிவுக்களஞ்சியமும் இல்லை, தீமைகள் நிறைந்த குப்பை மேடும் இது போல் இல்லை. நீங்கள் கொடுத்தது போல் பல இணையப்பக்கங்களைப் போல் அந்த கருத்துக்கு எதிரான பல கருத்துக்களை அதே இணையத்திலிருந்து வெட்டி, ஒட்ட எனக்கும் தெரியும். இஸ்லாமின் மூலம் குரான் தான். அதைப்படித்த எனக்கு அதிலுள்ள விஷயங்களும் தெரியும். ஆனால், குரான் என்ற பெயரில், முஸ்லீம் என்ற பெயரில் சிலர் இடும் குப்பைகளை படித்து என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. நீங்கள் குரானில் உள்ளதை கொண்டு தெளிவுபடுத்த விரும்பினால் ஒரு குரானை கொண்டு அதன் ஆதார எண்களுடன் எழுதுங்கள். குப்பைகளை கிளராதீர்கள்.

இங்கு வெட்டி ஒட்டும் கருத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆங்கிலப்பதிவுகள். அப்படி நீங்கள் குறிப்பிட்டே ஆகவேண்டிய பட்சத்தில் அதன் சுட்டியை கொடுப்பது நலம். இது தமிழ் மன்றம். இங்கு தமிழில் சொந்தக்கருத்துக்களை இடுபவர்களுக்கே வரவேற்பு. மற்றவர்களுக்கு நீங்கள் மோசமான முன்மாதிரியாக இருக்காதீர்கள். நல்லது, கெட்டது எது என்பதை ஆராய்ந்து அறிவது தான் பகுத்தறிவு. புத்தகங்களில் எழுதியுள்ளதை படித்தறிவதல்ல..!! பகுத்தறிவதற்கும், படித்தறிவதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது..!!

leomohan
21-06-2007, 06:16 AM
நீங்கள் மிகச்சிறந்த அரசியல்வாதி. வாழ்த்துக்கள்.

அதில் உள்ள கருத்துக்கள் பொய் என்று சொல்லிவிடுங்கள் நான் எதுவும் கேட்க மாட்டேன் உங்களிடம்.

இணையத்தை reference ஆக கொள்வதில் தவறில்லை. குரான் நீங்கள் எழுதியது அல்லவே. அதை reference ஆக கொண்டுதானே அனைத்தும் பேசிகிறீர்கள்.

ஆனால் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் நீங்கள் வக்கீலாக முழு தகுதியும் உடையவர். எப்போது பதில் அளிக்க முடியவில்லையோ எதிராளியை தாக்கி தப்பிப்பதில் வல்லவர்.

ஆனால் உங்கள் உள் மனது இதில் எழுதியவை அனைத்தும் குரானில் உள்ளன என்று சொல்லும் - ஹா ஹா இது உங்கள் ஸ்டைல் தான்.

நீங்கள் இஸ்லாமியர். அதனால் குரானை மதித்து நடந்து கொள்வது உங்கள் நம்பிக்கை. அதில் உள்ள நல்ல விஷயங்களை பரப்புவது உங்கள் உரிமை.

அதே நேரத்தில் மற்ற மதங்கள் முட்டாள் மதங்கள் என்றோ உலகத்தில் உள்ள முட்டாள்த்தனம் எல்லாம் மற்ற மதங்களில் தான் உள்ளன என்றோ வாதிடுவதை நிறுத்துங்கள்.

இதயம்
21-06-2007, 06:33 AM
அரசியல் பண்ணுவது நான் அல்ல, நீங்கள் தான்..! அறிவுக்கு பொருந்தாத விஞ்ஞானம் தொடர்பில்லாத ஒரு விஷயத்தை அறிவியல் பகுதியில் இட்டு, அதைப்பற்றி நீங்கள் ஆதரித்து பேசுவது முதல் முரண்பாடு.

அறிவியல் ரீதியாக விவாதித்து கொண்டிருக்கும் இந்த விவாதத்தில் சம்பந்தமில்லாமல் மதங்களை கொண்டு வந்து புகுத்துவது இரண்டாவது முரண்பாடு. இதன் அடிப்படையில் நீங்கள் ஜோசியம், ஜாதகத்தை விஞ்ஞானக்கண் கொண்டு காணாமல் மெஞ்ஞானக்கண் கொண்டு காண்கிறீர்கள் என்கிறேன். மறுக்க முடியுமா உங்களால்..!

எந்த மதத்தையும் தாக்கும், பிற்படுத்தும் நோக்கமில்லாதவன் நான். உங்கள் கருத்தை எதிர்க்கிறேன் என்ற ஒரே காரணத்திற்காக கடைசியில் மதம் என்கிற அஸ்திரத்தை கையில் எடுப்பது மூன்றாவது முரண்பாடு. அது உங்களுக்கு வழக்கமாக இருக்கலாம். ஆனால், எனக்கு எங்கு எப்படி நடக்க வேண்டும் என்ற நாகரீகம் தெரியும்.

இந்த ஜோசியத்தை பற்றி நான் எதிர்ப்பு கூறக்கூடாது என்றால் ஒரு சுலபமான வழி இருக்கிறது. எந்த கேள்விக்கும் வாய்ப்பில்லாத ஆன்மீகப்பகுதிக்கு மாற்றிவிடுங்கள். எனக்கும் நேரம் மிச்சமாகும்.

இணையம் எப்படி தரக்கெட்டுப்போய் இருக்கிறது என்பதற்கு நம் மன்றத்தில் உள்ள "இணையத்தில் அடிவாங்காமல் இருக்க" திரி போதுமே. நல்லவற்றை தேடி பயன்பெறுங்கள்..!!

leomohan
21-06-2007, 06:37 AM

cool cool நண்பரே.

மதங்களை எடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை.

இந்த மூடநம்பிக்கைகள் இந்து மதத்தில் மட்டும் இருப்பதாக தாங்கள் கூறுவதாலேயே இந்த வாதங்கள்.

அனைத்து மதங்களிலும் மூடநம்பிக்கைள் உண்டு என்று நீங்கள் ஒப்புக் கொண்டால் வேறு பேச்சே இல்லை.

leomohan
21-06-2007, 06:39 AM
அறிவியல் ரீதியாக விவாதித்து கொண்டிருக்கும் இந்த விவாதத்தில் சம்பந்தமில்லாமல் மதங்களை கொண்டு

விஞ்ஞான மதம் பகுத்தறிவு மதம் என்று தாங்கள் தான் கூறினீர்கள் நண்பரே.

leomohan
21-06-2007, 06:43 AM
அது மட்டுமல்ல இதைச்செய்பவர்களும், பயன்படுத்துபவர்களும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த, சீக்கியர்கள் யாரும் கிடையாது. அப்படியென்றால் இது ஒரு குறிப்பிட்ட மதத்தோடு தொடர்புடையது போல் தெரியவில்லை..? இந்த காரணம் கூட நீங்கள் ஜாதகத்தை, ஜோசியத்தை, கைரேகையை கண்மூடித்தனமாக ஆதரிக்க காரணமாக இருக்கலாம். ..!!

இது தான் தாங்கள் எழுதியது.

இதயம்
21-06-2007, 06:50 AM
மதங்களை ஆராய்ச்சி செய்யும் உங்களைப்போல் அறிவுஜூவி (!) அல்ல நான். நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற காரணம் என்பதின் தன்னிலை விளக்கம், அந்த மதம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதால் அதை சரி செய்யும் ஒரு முயற்சி தான் நான் எழுதும் திரி. அதுவும் ஆன்மீக பகுதியில் தான். இந்து மதத்தை நான் தவறாக சொல்லவில்லை. சொல்லியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நீங்கள் உங்கள் மதத்தை மிகவும் நேசிப்பவர் என்பது உங்கள் திரிகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதற்காக நீங்கள் சொல்லும் கருத்துக்களை மதத்தோடு ஒப்பிட்டு கண்மூடித்தனமாக மூடநம்பிக்கைகளை அறிவியல் பகுதியில் ஆதரிப்பதை நான் எதிர்க்கிறேன். உங்கள் பதில் சொல்வதின் முக்கியத்துவத்தை விட என் பதிலால் நண்பர்கள் மனம் கஷ்டப்படுவார்கள் என்று எண்ணுவதால் என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

மதத்தையும், அறிவியலையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். முதலில் ஜோதிடம் விஞ்ஞானம் தொடர்புடையதா, அல்லது மதம் தொடர்புடையதா என்று முடிவுக்கு வாருங்கள். எகத்தாளமாக எழுதும் வார்த்தைகள் எல்லாம் உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பதை சொல்லிவிடாது. உங்கள் கருத்துக்களை கொண்டு அதை நிரூபியுங்கள். மீண்டும் சொல்கிறேன், மதத்தை இங்கே இழுத்து நல்ல திரியை நாசமாக்கிவிடாதீர்கள். ஜோதிடம் விஞ்ஞானம் தொடர்புடையது என்றால் அதை நிரூபியுங்கள். மதம் தொடர்புடையது என்றால் ஆன்மீகப்பகுதியில் இடுங்கள்.

இதயம்
21-06-2007, 06:55 AM
இது தான் தாங்கள் எழுதியது.

நடைமுறையில் நடப்பதை எழுதியது எப்படி தாக்கியது ஆகும்.?

என் கருத்தை கூட வாத்தியார் இப்படி

சந்தேகமே இல்லை இது முழுக்க முழுக்க இந்து மதம் சம்மந்தமுடையதுதான்.

ஒப்புக்கொண்டு விட்டார்.

ஓவியன்
21-06-2007, 06:59 AM
நண்பர்களே என்ன நடக்கிறது இங்கே?, ஜோதிடம் எந்த மதத்தினுடையது என்று அறிவது இந்த திரியின் நோக்கமல்ல என்று நம்புகிறேன், அது உண்மையானதா இல்லையா என்பதே இந்த திரியின் நோக்கம், உங்கள் விவாதங்கள் அதனை மட்டும் அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப் பட்டால் நலமாக இருக்குமே?

leomohan
21-06-2007, 06:59 AM
நீங்கள் தான் அந்த புத்தகங்களை படித்து வரவேண்டும் நண்பரே.

இஸ்லாம் மார்க்கத்தின் திரியில் நீங்கள் எழுதியுள்ளதை நான் மேற்கோள் காட்டுகிறேன். எங்கெல்லாம் இந்து மதம் சீண்டப்பட்டிருக்கிறது என்று.

அதுபோலவே இந்த திரியிலும்
- ஜோசியம் சாதகம் மூட நம்பிக்கை என்றும்
- அது இந்து மதத்துடன் தான் சம்பந்தப்பட்டது என்றும்

நீங்கள் ஆணித்தரமாக வாதிடுகிறீர்கள். அதற்கு உங்களிடம் ஏமாற்றும் ஜோசியர்களுக்கான செய்திகள் இருக்கிறதே தவிர வேறு ஆதாரமே இல்லை.

நான் பல ஆதாரங்களையும் மேற்கோள்களையும் தந்துவிட்டேன்.

மருத்துவம் ஒரு கல்வி, வி்ஞ்ஞானம்
போலி மருத்துவர் அந்த கல்வியை பயன்படுத்தி கிட்னி திருடுகிறார்
அதனால் மருத்துவம் மூட நம்பிக்கை ஆகிவிடாது

ஜோசியம் ஒரு கல்வி, விஞ்ஞானம்
போலி ஜோசியர் அந்த கல்வியை பயன்படுத்தி காசு பார்க்கிறார்
அதனால் ஜோசியம் மூட நம்பிக்கை ஆகிவிடாது.

இந்த விளக்கத்தை குழந்தை கூட புரிந்துக் கொள்ளும்

ஜோசியம் சாதகம் எதிர்காலம் கணிப்பது ஒரு மதம் சம்பந்தப்பட்டதோ மொழி சம்பந்தப்பட்டதோ இல்லை. இது மனிதன் சமூகம் சமபந்தப்பட்டது.

இதற்கு மேல் விவாதிக்க வேண்டும் என்றால் படித்து வாருங்கள். இல்லையென்றால் விரைவில் நான் சிலரின் உதவியுடன் ஒரு திரி துவங்குகிறேன்.

அதுவரையில் பாதி அறிந்த கருத்துக்கள் வெளியிடாதீர்கள். இது உறுப்பினர்களை அவமதிப்பது மட்டுமல்ல அவற்றை அவர்கள் மதத்தோடு சம்பந்தப்படுத்தி மத உணர்வுகளையும் காயப்படுத்ததுதல் ஆகும்.

இந்த திரிக்கு உடனடி பதில் எழுதாதீர்கள். சற்று நேரம் படித்துவிட்டு அமைதியான பின் நான் சொன்னது சரியென்று உணர்வீர்கள்.

அந்த விஞ்ஞானமோ புரூடாவோ நன்றாக அதை கற்ற பிறகு முடிவுக்கு வாருங்கள்.

உங்கள் பொறுமைக்கு நன்றி. வாழ்த்துகள்.

இதயம்
21-06-2007, 07:08 AM
நண்பர்களே என்ன நடக்கிறது இங்கே?, ஜோதிடம் எந்த மதத்தினுடையது என்று அறிவது இந்த திரியின் நோக்கமல்ல என்று நம்புகிறேன், அது உண்மையானதா இல்லையா என்பதே இந்த திரியின் நோக்கம், உங்கள் விவாதங்கள் அதனை மட்டும் அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப் பட்டால் நலமாக இருக்குமே?

ஓவியன்.. நம் நோக்கம் இங்கு ஜோதிடம், ஜாதகத்தின் நம்பகத்தன்மையை அறிவது. ஆனால், மோகன் அவராகவே குறிப்பிட்ட மதத்தினர் அதை பலமாக நம்புவதால் அதை அந்த மதத்தின் மீதான தாக்குதலாக கொண்டு சம்பந்தமில்லாமல் இஸ்லாத்தையும் இழுக்கிறார். இதல்ல என் நோக்கம் என்று பல முறை சொல்லியாகிவிட்டது. விஞ்ஞானம் தான் என்று சொல்லும் ஜோதிடத்தை ஆதாரம் கொண்டு நிரூபிக்க முயலாமல் மதத்தை துணைக்கழைக்கிறார். இது ஒரு தவறான முன்னுதாரணம். இன்றைய காலகட்டத்திலும் தாயத்து கட்டுதல், ஜோசியம் பார்த்தல், நாள் குறித்தல் போன்ற மூடப்பழக்கங்கள் இஸ்லாமிலும் உண்டு. இஸ்லாமில் சொல்லப்படாத ஆனால், இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் பழக்கம் இது. என் கருத்து இந்த மூட நம்பிக்கை கொண்டிருக்கும் எல்லா மத மனிதர்களுக்கானது. அதை ஒரு மதத்தை நோக்கிய தாக்குதலாக பார்ப்பது குறுகிய மனதையே காட்டுகிறது.

என் இஸ்லாம் பற்றிய திரியில் இஸ்லாமியர்களின் எவ்வளவோ மூடப்பழக்கங்களை கண்டித்து எழுதியிருக்கிறேன். அப்படியென்றால் நான் இஸ்லாத்திற்கு எதிரியா..? மக்களின் நல்வழிக்கு யாரும் தனக்கு தெரிந்ததை சொல்லலாம். அதைச் சொல்லும் போது அவர்கள் கொடுக்கும் விளக்கம், ஆதாரம் தான் அவர்களின் கருத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன். வேண்டாமே மதம் இங்கு..!!

leomohan
21-06-2007, 07:13 AM
நடைமுறையில் நடப்பதை எழுதியது எப்படி தாக்கியது ஆகும்.?

என் கருத்தை கூட வாத்தியார் இப்படி

ஒப்புக்கொண்டு விட்டார்.

வாத்தியார் ஒப்புக் கொண்டால் சரியாகிவிடுமா நண்பரே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அது அவர்களுடயை exposure, experience and expertise பொறுத்தது. நான் மற்ற மதங்களில் இருந்ததை பற்றி விளக்கியுள்ளேன். நன்றி

leomohan
21-06-2007, 07:18 AM
ஓவியன்.. நம் நோக்கம் இங்கு ஜோதிடம், ஜாதகத்தின் நம்பகத்தன்மையை அறிவது. ஆனால், மோகன் அவராகவே குறிப்பிட்ட மதத்தினர் அதை பலமாக நம்புவதால் அதை அந்த மதத்தின் மீதான தாக்குதலாக கொண்டு சம்பந்தமில்லாமல் இஸ்லாத்தையும் இழுக்கிறார். இதல்ல என் நோக்கம் என்று பல முறை சொல்லியாகிவிட்டது. விஞ்ஞானம் தான் என்று சொல்லும் ஜோதிடத்தை ஆதாரம் கொண்டு நிரூபிக்க முயலாமல் மதத்தை துணைக்கழைக்கிறார். இது ஒரு தவறான முன்னுதாரணம். இன்றைய காலகட்டத்திலும் தாயத்து கட்டுதல், ஜோசியம் பார்த்தல், நாள் குறித்தல் போன்ற மூடப்பழக்கங்கள் இஸ்லாமிலும் உண்டு. இஸ்லாமில் சொல்லப்படாத ஆனால், இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் பழக்கம் இது. என் கருத்து இந்த மூட நம்பிக்கை கொண்டிருக்கும் எல்லா மத மனிதர்களுக்கானது. அதை ஒரு மதத்தை நோக்கிய தாக்குதலாக பார்ப்பது குறுகிய மனதையே காட்டுகிறது.

என் இஸ்லாம் பற்றிய திரியில் இஸ்லாமியர்களின் எவ்வளவோ மூடப்பழக்கங்களை கண்டித்து எழுதியிருக்கிறேன். அப்படியென்றால் நான் இஸ்லாத்திற்கு எதிரியா..? மக்களின் நல்வழிக்கு யாரும் தனக்கு தெரிந்ததை சொல்லலாம். அதைச் சொல்லும் போது அவர்கள் கொடுக்கும் விளக்கம், ஆதாரம் தான் அவர்களின் கருத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன். வேண்டாமே மதம் இங்கு..!!

என் கருத்தை முன்பே எழுதிவிட்டேன் நண்பரே. ஜோசியம் சாதகம் கைரேகை போன்ற அனைத்தும் விஞ்ஞானத்தின் கிளைகள். விஞ்ஞானம் பொய்யாகும் என்றால் இவையும் பொய்யாகும். ஏனென்றால் இவை அனைத்தும் மனிதர்கள் படைத்ததே. மனிதன் தவறு செய்யும் வாய்ப்பு எப்போதுமே உண்டு.

நன்றாக படித்தவர்களிடம் போனால் சரியான கணிப்பு கிடைக்கும். தவறான போலிகளிடம் போனால் தவறான பதில்கள் கிடைக்கும். தவறான போலிகளிடம் போய் விஞ்ஞானம் தவறு என்று சொன்னால் அது நம்முடைய தவறு.

விஞ்ஞானம் உலகத்திற்கு பொதுவானது. மக்களுக்கு பொதுவானது. சமூகத்திற்கு பொதுவானது. அது மதம் மொழி இனம் சார்ந்தது அல்ல. அது போலவே தான் ஜோசியம் சாதகம் விட்ச்கிராஃப்ட் டாரெட் ரீடிங் எல்லாம்.

உலக நாடுகளில் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

எவ்வாறு அனுப்பு ராகெட் எல்லாம் சரியாக இலக்கை சென்று அடைவதில்லையோ அதுபோல நல்ல ஜோசியர்களின் கணிப்பும் பொய்ப்பதுண்டு. அது தான் இயற்கை.

கடைசியாக - எந்த மதமும் மற்ற மதத்தை விட சிறந்த மதம் இல்லை. மதமே மனிதனின் தற்காப்பின்மையை காட்டுகிறது. பகுத்தறிவு மதமோ விஞ்ஞான மதமோ இல்லை. வேண்டுமானாலும் ஒரு மதத்தின் பழக்கவழக்கங்களிலோ புனித நூல்களிலோ அறிவியல் சார்ந்த கருத்துக்கள் இருக்கலாம்.

இதுவே என் நிலைபாடு. நன்றி.

இதயம்
21-06-2007, 07:25 AM
வாத்தியார் ஒப்புக் கொண்டால் சரியாகிவிடுமா நண்பரே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அது அவர்களுடயை exposure, experience and expertise பொறுத்தது. நான் மற்ற மதங்களில் இருந்ததை பற்றி விளக்கியுள்ளேன். நன்றி

அதே வாத்தியாரை தான் நீங்கள் தகவல் சுரங்கம் என்று பாராட்டியிருக்கிறீர்கள்.!! உங்கள் கருத்துக்கு உடன்பட்டால் அவர் தகவல் சுரங்கம், உடன்படாவிட்டால் அரைகுறையா..? அரசியல்வாதி நானா, நீங்களா..? நீங்கள் சொல்வதை மட்டும் தான் அடுத்தவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்கள் கருத்தின் மதிப்பை குறைத்துவிடும்.

அவர்கள் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களை கண்டு செய்வதை விட நம் பகுத்தறிவுக்கு வேலை கொடுத்து அதன் படி நடப்பது நலம். உலக நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் அதே அமெரிக்கா தான் உலகிலேயே அதிக பாலியல் பலாத்காரங்கள் நடக்கும் நாடாக உள்ளது. அதற்காக அதையும் நாம் பெருமையாக கருத முடியாது.

அவர்கள் குளிருக்காக உபயோகித்த ஜீன்ஸை நாம் குளிர் அதிகமில்லாத இந்தியாவில் அனல் வெயிலிலும் அணிந்து கொண்டு ஃபேஷன் என்கிற பெயரில் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். முட்டாள்கள், பைத்தியங்கள் எல்லா நாடுகளிலும் உண்டு. நன்மை, தீமையை தீர்மானிப்பவை அவர்களின் செயல்களால் உண்டாகும் விளைவுகள் தான். மதங்களை துணைக்கழைக்காமல் உங்கள் கருத்தை நிரூபியுங்கள் மோகன்.

ஷீ-நிசி
21-06-2007, 07:30 AM
7 பக்கம் தாண்டியும் இந்த திரியை ஆரம்பித்த பின் இன்னும் எனக்கு எதுவும் விளங்கவில்லை... இதற்கு முழுக்க காரணம் நம் மோகனும் இதயம் அவர்களும்..

ஜாதகம், ஜோசியம் என்பது உண்மையா? இதுதான் கேள்வி...

மோகன் சார்: சுருக்கமாக உங்கள் விளக்கம்/பதில் தாருங்கள்.

ஜாஃபர் சார்: சுருக்கமாக உங்கள் விளக்கம்/பதில் தாருங்கள்.

leomohan
21-06-2007, 07:35 AM
ஸ்ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ் ஷ்ப்பா கண்ணை கட்டுது பா

உங்களிடம் ஒரு விஷயத்தையும் புரியவைப்பது கடினமே. ஏனென்றால் வாதம் செய்யும் போது எதிர்தரப்பையும் சற்று கேட்டு அதில் சிலவற்றை எடுத்துக் கொண்டு அதற்கு மதிப்பு தருவது தான் வாதம் செய்வதற்கு அழகு.

1. நான் எல்லா நாடுகளிலும் இருந்தால் சரி தவறு என்று சொன்னேனா

2. நான் மேலை நாடுகளில் இருந்தால் பெருமை படும் விஷயம் என்று சொன்னேனா

3. ஒருவரை தகவல் சுரங்கம் என்று பாராட்டினால் அவர் கடவுளுக்கு நிகரானவர். தவறே செய்யாதவர் என்று பொருளா. சில விஷயங்களை புத்தகங்கள் பார்க்காமல் சட்டென்று எடுத்து சொல்லும் திறன் படைத்தவர் அவர் என்பதால் அவரை அவ்வாறு பாரட்டினேன்

4. ஆதி மனிதன் காலத்திலிருந்து இப்போது வரை வளர்ச்சியடையும் போது சில பழக்கங்கள் தொடர்கின்றன. சில பழக்கங்கள் தொடராமல் விடுகின்றன. அன்றைய பழக்கங்கள் இன்றைய மூட நம்பிக்கைகள் ஆகலாம். இன்றைய பழக்கங்கள் நாளைய மூட நம்பிக்கைகள் ஆகலாம்.

5. அதுபோலவே பல நல்ல கல்விகளும் பின்னால் வரும் சந்ததியருக்கு சரியாக சொல்லித்தராமல் போயிவிடுகின்றன.

6. பெரிய கட்டடங்கள் அந்த காலத்தில் அமைத்தனர். 5000 வருடங்கள் கூட நிலைத்து நிற்கி்ன்றன. இதுவே நம் முன்னோர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்று காட்டுகின்றன. இதுபோலவே சூரிய மண்டலம் சந்திர மண்டலம் இன்னும் பல விஷயங்களை அக்காலத்திலேயே துல்லியமாக அறிந்திருக்கிறார்கள். இக்காலத்தில் பல கருவிகள் உள்ளன.

7. இந்த விஞ்ஞான புத்தகங்கள் உள்ளன. எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன. நீங்கள் ஒரு நல்ல ஆராய்ச்சியாளர் என்றால் படித்து வாருங்கள். நான் திரும்ப திரும்ப கூறுவது இதை தான். இன்று இதிகாசகங்களை கிண்டல் செய்யும் பகுத்தறிவாளர்களும் அதை நன்கு படித்த பிறகு தான் அதில் உள்ள குறை நிறைகளை தட்டிக் கேட்கிறார்கள். அவ்வாறு இருக்க நீங்கள் படிக்காத ஒரு கல்வியை கேலி செய்வது தவறு. அதை படித்து வாருங்கள்.

8. மதங்களை reference காக கூறினேன். உங்களை பாதித்திருந்தால் மன்னிக்கவும். பிற மதங்களை சாடாமல், தரம் குறைக்காமல் நீங்கள் எழுதும் அனைத்து விஷயங்களை படிக்க காத்திருக்கிறேன்.

நன்றி

leomohan
21-06-2007, 07:39 AM
7 பக்கம் தாண்டியும் இந்த திரியை ஆரம்பித்த பின் இன்னும் எனக்கு எதுவும் விளங்கவில்லை... இதற்கு முழுக்க காரணம் நம் மோகனும் இதயம் அவர்களும்..

ஜாதகம், ஜோசியம் என்பது உண்மையா? இதுதான் கேள்வி...

மோகன் சார்: சுருக்கமாக உங்கள் விளக்கம்/பதில் தாருங்கள்.

ஜாஃபர் சார்: சுருக்கமாக உங்கள் விளக்கம்/பதில் தாருங்கள்.

நல்வரவு ஷீநிசி

1. ஜாதகம், ஜோசியம் விஞ்ஞானத்தின் கிளைகள்.

2. அந்த சூத்திரங்களை பயன்படுத்தி 5000 பேர் ஒரு சாதகத்தை கணித்தால் ஒரு ரிசல்ட் தான் வரும். அது தான் கணிதம்.

3. ஜோசியம் சொல்பவர்கள் எல்லாம் அந்த விஞ்ஞானத்தை நன்கு கற்றவர்களா என்றால் இல்லை. எப்படி 1ம் வகுப்பு 2ம் வகுப்பு பிஏ எம் ஏ உள்ளதோ அது போல கத்துக் குட்டிகளிலிருந்து எக்ஸ்பர்ட் வரையில் தேர்ச்சி நிலை வேறுபடும். போலிகளும் உண்டு. அவரிடம் போய் ஏமாந்தால் நான் பொறுப்பில்லை.

தெளிந்ததா.

lolluvathiyar
21-06-2007, 07:45 AM
அட 24 மனி நேரத்தில் இத்தனி தூரம் வளர்ந்து விட்டதா.

இந்த திரி மதத்தின் பக்கம் விவாதம் போய் கொண்டிருகிறது. யார் ஆரம்பித்தார் என்பதை விட
மோகன், இதயம், நான் மூவருமே இந்த திரியின் திசை மாறி போக காரனமானவர்கள்.
என்ன இதயமும், மோகனும் சற்று சூடாக இருகிறார்கள்.

இதயம் அவர்கள் முக்கிய கேள்வி இந்து திரி கல்வி அறிவியல் பகுதியில் இருக்கலாம் என்பது தான்.
இது ஆண்மீக சம்மந்தபட்டது என்பது, அதனால் இது ஆண்மீக பகுதியில் போடலாம் என்பது.

ஜோசியத்தில் வெறும் இரைவன், பேய், பூதம், மந்திரம் என்று மட்டும் வந்திருந்தால் அது ஆண்மீக பகுதிக்கு பொருந்தும்.
அதை மூட நம்பிக்கை என்று வெளிபடையாக கூறிவிடலாம். அதை நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்.
கிளி ஜோசியம், எலி ஜோசியம் இவை மூட நம்பிக்கைகள் என்று கூறலாம்

ஆனால் சாதகம் அடிபடையில் பார்கபடும் ஜோசியத்தை ஆண்மிக்க அடிபடையிலோ, மூட நம்பிக்கை அடிபடையிலோ எப்படி கூறமுடியும்.
ஏனென்றால் அவை இல்லாத விசயத்தை வைத்து சொல்லவில்லையே, கிரகங்கள் அடிபடையில் அல்லவா இருகிறது.
கிரகங்கள் அறிவியல் சம்மந்த பட்டது அல்லவா. அவை இருகிறதல்லவா.
அதனால் ஜோசியம் அறிவியால் சார்ந்து வரும் ஒரு செயல் தானே
அது மட்டுமல்ல அது ஒரு மனோதத்துவ கலை. (Phycharitic) . Phycharitic என்பது ஆண்மீகத்தின் அடிபடையில் வராது, அதுவும் கூட அறிவியல் அடிபடையில் வருவதே.

ஜோசியத்தை நம்பலாமா? விஞ்ஞானத்தை நம்பலாம்?
இதயம் அவர்களின் வாதம் விஞ்ஞானத்தை நம்பலாம். ஜோசியத்தை நம்பகூடாது. சரி
3000 வருடங்களாக புளோட்டோவை ஜோசியம் கிரக பட்டியலி சேர்த்து கொள்ள வில்லை.
100 வருட விஞ்ஞானத்தில் புளொட்டோ கிரகமாக இருந்தது. ஆனால் இல்லை என்கிறார்கள், அப்படி பார்த்தால் 100 வருடமாக நாம் படித்த விஞ்ஞானம் பொய்யா.

இதில் பகுத்தறிவு வேறு வருகிறது. பகுத்தறிவு என்பது பகுத்து அறிதல் விஞ்ஞான பூர்வமாக.

அந்த காலத்தில் டெலஸ்கோப் இல்லாமல் இந்த கிரகங்களை எப்படி மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்று உன்மையான பகுத்தறிவு உள்ள விஞ்ஞானி ஆராய்ந்தால் இன்னும் புலபடா விஞ்ஞான விசயங்கள் புலபடும்.

நான் ஜோசியத்தை நம்ப சொல்ல வில்லை. நான் நம்புவது இல்லை. ஆனால் நம்பும் மக்களை நான் தவறாக கருதவதில்லை.
ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வைத்தவர்கள் முன்னேறி கொண்டே இருகிறார்கள். இதுவும் உன்மை அல்லவா

ஸ்ரீராம் பெரிய பதிப்புகளை எகலப்பை மூலம படையுங்கள், எழுத்துரு பிழை வருகிறது

இதயம்
21-06-2007, 07:56 AM
என் கருத்தை முன்பே எழுதிவிட்டேன் நண்பரே. ஜோசியம் சாதகம் கைரேகை போன்ற அனைத்தும் விஞ்ஞானத்தின் கிளைகள். விஞ்ஞானம் பொய்யாகும் என்றால் இவையும் பொய்யாகும். ஏனென்றால் இவை அனைத்தும் மனிதர்கள் படைத்ததே. மனிதன் தவறு செய்யும் வாய்ப்பு எப்போதுமே உண்டு.

விஞ்ஞானம் தொடர்புடைய எதுவும் நடக்குமா, நடக்காதா என்ற காரணிகளை கொண்டிருக்காது. நான் சொல்கிறேன். விஞ்ஞானம் தன் நம்பகத்தன்மையை பல்வேறு வழிகளில் இன்று வரை நிரூபித்து வருகிறது. அதற்கு சாட்சியாக நான் வாழ்வில் பயன்படுத்தும் ஏறக்குறைய எல்லாவற்றையும் சொல்லலாம். ஒன்று மட்டும் வேண்டும் என்றால் கம்ப்யூட்டர். இப்படி செய்யலாம் என்று சிந்தித்தான். அதை நடைமுறைப்படுத்தினான். கம்ப்யூட்டரை கண்டுபிடித்தான். இன்று நம் கைகளில் கம்ப்யூட்டர் ஆதாரமாக இருக்கிறது.

நன்றாக படித்தவர்களிடம் போனால் சரியான கணிப்பு கிடைக்கும். தவறான போலிகளிடம் போனால் தவறான பதில்கள் கிடைக்கும். தவறான போலிகளிடம் போய் விஞ்ஞானம் தவறு என்று சொன்னால் அது நம்முடைய தவறு.

ஜோதிடம் விஞ்ஞானம் என்றால் அதை நிரூபிக்கும் ஒரு பொருள் அல்லது நிகழ்வு சொல்லமுடியுமா..? அரசியலுக்காக சொல்லவில்லை, உதாரணத்திற்காக சொல்கிறேன். இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடராக அறியப்படுபவர் உன்னிகிருஷ்ண பணிக்கர் என்கிற கேரள ஜோதிடர். அதனால் தான் செலவைப்பற்றி கவலைப்படாத ஜெ. தன் முடிவுகளை அவரைக்கொண்டே எடுப்பார். அவர் கணித்து சொன்னபடி செய்ததால் அவர் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றதாக சொல்லப்பட்டது. இந்த தேர்தலிலும் அவர் சொன்னபடி தான் செய்தார். அப்படி என்றால் ஜோதிடம் பொய்யா..? அந்த நம்பிக்கை பொய்யா..? ஜோதிடர் பொய்யரா..? முதலிரண்டு பொய் என்பதில் மோகன் முரண்டு பிடிப்பார். இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடராக கருத்தப்பட்ட அவரே போலியாக இருக்கும் போது மற்ற உண்மையானவர்களை எப்படி இனம் காண்பது.? உழைப்பையையும், உண்மையையும், நேர்மையையும் நம்பாமல் தன் வாழ்க்கையை செழுமையாக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான அரசியல் வாதிகள் ஜோதிடர்களை நாடுகிறார்கள். ஒரு அநியாயத்திற்கு துணை போகும் ஒரு தொழில் எப்படி நல்லதாக இருக்க முடியும்..? உலகில் உள்ள ஜோதிடம் நம்பாத மக்கள் செய்த ஜோதிடப்பொருத்தம் பார்க்காத திருமணங்கள் தோல்வியா அடைந்தன? ஜோதிடம் பார்த்த அனைத்தும் வெற்றியா அடைந்தன..? இவை மனிதன் தன் வாழ்க்கையை பற்றிய பய சிந்தனைகளின் போது அவனை திருப்திபடுத்த ஏற்படுத்தப்பட்ட விஷயங்கள். அவ்வளவு தான்

விஞ்ஞானம் உலகத்திற்கு பொதுவானது. மக்களுக்கு பொதுவானது. சமூகத்திற்கு பொதுவானது. அது மதம் மொழி இனம் சார்ந்தது அல்ல. அது போலவே தான் ஜோசியம் சாதகம் விட்ச்கிராஃப்ட் டாரெட் ரீடிங் எல்லாம்.

நீங்கள் சொல்வது சரிதான். விஞ்ஞானம் உலகத்திற்கு பொதுவானது. உலகின் பெரும்பாலான விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள் ஒரு குறிப்பிட்ட மதத்தினரால் செய்யப்பட்டவை. ஆனால், மத பாகுபாடு இல்லாமல் மனித சமுதாயம் அனைத்தும் பயன்படுத்துகிறது. காரணம், அது நல்ல விஷயம் என்பதால். மனிதனுக்கு நன்மை பயக்கும் விஷயம் எதை யார் செய்தாலும் அதை நாடு, மதம், மொழி, இனம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைப்பதை நான் கண்டிக்கிறேன். நான் இஸ்லாம் பற்றிய திரியில் எழுதும் நல்ல விஷயங்கள் அனைத்தும் இஸ்லாமியர்களோடு அவை நின்றுவிடாமல் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் வெளிப்பாடு தான். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம்.

விட்ச்கிராஃப்ட் என்பது ஒரு கலை வடிவம். உதா. மேஜிக். அது மனிதர்களின் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படுகிறது. அவை எல்லாம் இருப்பதை இல்லாதது போலும், இருப்பதை இல்லாதது போலும் காட்டி மக்களை ஏமாற்றுபவை. அதை செய்யும் கலைஞர்களே அதை ஒப்புக்கொண்ட பிறகு தான் நாம் அதை பார்க்கிறோம். ஜோசியத்தையும் ஏமாற்றும் ஒரு கலையோடு ஒப்பிட்டது சரி தான் என்றாலும் அதை விஞ்ஞானம் என்றும் வாழ்க்கைக்கு நன்மை பயக்குபவை என்று சொல்வதெல்லாம் முற்றிலும் முரணானது.
உலக நாடுகளில் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

எவ்வாறு அனுப்பு ராகெட் எல்லாம் சரியாக இலக்கை சென்று அடைவதில்லையோ அதுபோல நல்ல ஜோசியர்களின் கணிப்பும் பொய்ப்பதுண்டு. அது தான் இயற்கை.

ஒரு ராக்கெட்டை ஏவி அது கடலில் விழுந்தால் அது மனித அறிவில் ஏற்பட்ட குறைபாடு. ஒரு ராக்கெட்டை பங்களாதேஷிடம் கொடுத்து ஏவச்சொன்னால் கடலில் விழும் வாய்ப்பு அதிகம். அதே இந்தியாவிடமோ அல்லது இந்தியாவை விட விஞ்ஞான வளர்ச்சியில் உயர்ந்த நாட்டிடம் கொடுத்தால் அதன் வெற்றி சதவீதம் நிச்சயம் கூடுதலாக இருக்கும். ராக்கெட் என்பது மனித கண்டுபிடிப்பின் உச்சகட்ட பகுதி. அது இன்னும் நிறைவடையவில்லை என்பதால் இந்த குறைபாடு. இன்னும் 10 வருடங்கள் போனால் ஏவிய எல்லா ராக்கெட்டும் விண்வெளிக்கு போகும். ஆனால், பல நூறு இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் விஞ்ஞானம் என்று நீங்கள் வாதிடும் ஜோதிடம் சொல்லும் எதுவும் பலிக்கப்போவதில்லை.!!

இதயம்
21-06-2007, 08:03 AM
ஜாஃபர் சார்: சுருக்கமாக உங்கள் விளக்கம்/பதில் தாருங்கள்.

வாங்க ஷீ-நிசி சார்..! உங்களின், உங்கள் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக தான் நான் இங்கே தொண்டை கிழிய கத்திக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆற அமர வந்து சுருக்கமாக சொல்லுங்கள் என்கிறீர்கள். ஒரு வேளை நீங்கள் முதலிலேயே இந்த கருத்துப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். மிக.. மிக.. சுருக்கமாக சொல்கிறேன்.

பொய் + புரட்டு + பித்தலாட்டம் = ஜோதிடம்

leomohan
21-06-2007, 08:05 AM
விஞ்ஞானம் தொடர்புடைய எதுவும் நடக்குமா, நடக்காதா என்ற காரணிகளை கொண்டிருக்காது. நான் சொல்கிறேன். விஞ்ஞானம் தன் நம்பகத்தன்மையை பல்வேறு வழிகளில் இன்று வரை நிரூபித்து வருகிறது. அதற்கு சாட்சியாக நான் வாழ்வில் பயன்படுத்தும் ஏறக்குறைய எல்லாவற்றையும் சொல்லலாம். ஒன்று மட்டும் வேண்டும் என்றால் கம்ப்யூட்டர். இப்படி செய்யலாம் என்று சிந்தித்தான். அதை நடைமுறைப்படுத்தினான். கம்ப்யூட்டரை கண்டுபிடித்தான். இன்று நம் கைகளில் கம்ப்யூட்டர் ஆதாரமாக இருக்கிறது.

விஞ்ஞானம் எல்லா காரணிகளை கொண்டு தான் சோதனை சரியாக நடக்குமா நடக்காது என்றாகிறது நண்பரே. உதாரணம் விண்கலம் ஏவ தட்ப வெட்ப நிலை வானிலை இவையணைத்தும் சரியாக இருக்க வேண்டும். தெரியாத ஒரு பொருள் விண்வெளியில் இடித்துவிட்டால் கலம் சேதம் அடையும். ஆக பல ஆயிரம் காரணிகள் உண்டு.

ஜோதிடம் விஞ்ஞானம் என்றால் அதை நிரூபிக்கும் ஒரு பொருள் அல்லது நிகழ்வு சொல்லமுடியுமா..? அரசியலுக்காக சொல்லவில்லை, உதாரணத்திற்காக சொல்கிறேன். இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடராக அறியப்படுபவர் உன்னிகிருஷ்ண பணிக்கர் என்கிற கேரள ஜோதிடர். அதனால் தான் செலவைப்பற்றி கவலைப்படாத ஜெ. தன் முடிவுகளை அவரைக்கொண்டே எடுப்பார். அவர் கணித்து சொன்னபடி செய்ததால் அவர் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றதாக சொல்லப்பட்டது. இந்த தேர்தலிலும் அவர் சொன்னபடி தான் செய்தார். அப்படி என்றால் ஜோதிடம் பொய்யா..? அந்த நம்பிக்கை பொய்யா..? ஜோதிடர் பொய்யரா..? முதலிரண்டு பொய் என்பதில் மோகன் முரண்டு பிடிப்பார். இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடராக கருத்தப்பட்ட அவரே போலியாக இருக்கும் போது மற்ற உண்மையானவர்களை எப்படி இனம் காண்பது.? உழைப்பையையும், உண்மையையும், நேர்மையையும் நம்பாமல் தன் வாழ்க்கையை செழுமையாக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான அரசியல் வாதிகள் ஜோதிடர்களை நாடுகிறார்கள். ஒரு அநியாயத்திற்கு துணை போகும் ஒரு தொழில் எப்படி நல்லதாக இருக்க முடியும்..? உலகில் உள்ள ஜோதிடம் நம்பாத மக்கள் செய்த ஜோதிடப்பொருத்தம் பார்க்காத திருமணங்கள் தோல்வியா அடைந்தன? ஜோதிடம் பார்த்த அனைத்தும் வெற்றியா அடைந்தன..? இவை மனிதன் தன் வாழ்க்கையை பற்றிய பய சிந்தனைகளின் போது அவனை திருப்திபடுத்த ஏற்படுத்தப்பட்ட விஷயங்கள். அவ்வளவு தான்

நான் ஆரம்பத்தில் இருந்து சொல்வது இது தான். நீங்கள் தவறான உதாரணங்களையே எடுக்கிறீர்கள். இவர் தான் Authority என்று யாராவது சொன்னார்களா. போலி டாக்டர் போலி ஜோசியர் இதை நினைவில் கொள்ளுங்கள். எப்படி விஞ்ஞானம் பொய்க்கிறதோ அதுபோலவே ஜோசியமும் பொய்க்கலாம். இல்லாவிட்டால் எல்லா ஜோசியர்களும் இறைவன் ஆகிவிடுவார்கள்.

ஒரு ராக்கெட்டை ஏவி அது கடலில் விழுந்தால் அது மனித அறிவில் ஏற்பட்ட குறைபாடு. ஒரு ராக்கெட்டை பங்களாதேஷிடம் கொடுத்து ஏவச்சொன்னால் கடலில் விழும் வாய்ப்பு அதிகம். அதே இந்தியாவிடமோ அல்லது இந்தியாவை விட விஞ்ஞான வளர்ச்சியில் உயர்ந்த நாட்டிடம் கொடுத்தால் அதன் வெற்றி சதவீதம் நிச்சயம் கூடுதலாக இருக்கும். ராக்கெட் என்பது மனித கண்டுபிடிப்பின் உச்சகட்ட பகுதி. அது இன்னும் நிறைவடையவில்லை என்பதால் இந்த குறைபாடு. இன்னும் 10 வருடங்கள் போனால் ஏவிய எல்லா ராக்கெட்டும் விண்வெளிக்கு போகும். ஆனால், பல நூறு இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் விஞ்ஞானம் என்று நீங்கள் வாதிடும் ஜோதிடம் சொல்லும் எதுவும் பலிக்கப்போவதில்லை.!!

உங்கள் பத்தியில் பதிலும் இருக்கிறது.

பங்களாதேஷ் - ஆரம்பகால ஜோசியர். அவரிடம் போனால் தவறு நிகழலாம்
இந்தியா - சற்று அதிகம் கற்ற ஜோசியர் தவறு நிகழ்வது குறைவு

புரிந்ததா நண்பரே.

இதயம்
21-06-2007, 08:09 AM

ஒரு ராக்கெட்டை ஏவி அது கடலில் விழுந்தால் அது மனித அறிவில் ஏற்பட்ட குறைபாடு. ஒரு ராக்கெட்டை பங்களாதேஷிடம் கொடுத்து ஏவச்சொன்னால் கடலில் விழும் வாய்ப்பு அதிகம். அதே இந்தியாவிடமோ அல்லது இந்தியாவை விட விஞ்ஞான வளர்ச்சியில் உயர்ந்த நாட்டிடம் கொடுத்தால் அதன் வெற்றி சதவீதம் நிச்சயம் கூடுதலாக இருக்கும். ராக்கெட் என்பது மனித கண்டுபிடிப்பின் உச்சகட்ட பகுதி. அது இன்னும் நிறைவடையவில்லை என்பதால் இந்த குறைபாடு. இன்னும் 10 வருடங்கள் போனால் ஏவிய எல்லா ராக்கெட்டும் விண்வெளிக்கு போகும். ஆனால், பல நூறு இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் விஞ்ஞானம் என்று நீங்கள் வாதிடும் ஜோதிடம் சொல்லும் எதுவும் பலிக்கப்போவதில்லை.!!உங்கள் பத்தியில் பதிலும் இருக்கிறது.

பங்களாதேஷ் - ஆரம்பகால ஜோசியர். அவரிடம் போனால் தவறு நிகழலாம்
இந்தியா - சற்று அதிகம் கற்ற ஜோசியர் தவறு நிகழ்வது குறைவு

புரிந்ததா நண்பரே.

ஆதாரம் கேட்டால் கதை சொல்கிறீர்கள்..!! நீங்கள் நன்றாக கதை எழுதுவீர்கள் தெரியும்.. கதை விடுவீர்கள் என்பது இப்போது தான் தெரிந்தது..! நன்றி..!

leomohan
21-06-2007, 08:14 AM
ஆதாரம் கேட்டால் கதை சொல்கிறீர்கள்..!! நீங்கள் நன்றாக கதை எழுதுவீர்கள் தெரியும்.. கதை விடுவீர்கள் என்பது இப்போது தான் தெரிந்தது..! நன்றி..!

ஆதாரங்கள் - இது உங்களுக்கு வேடிக்கையாக இல்லையா நண்பரே.

உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை. நீங்கள் அந்த கலையை கற்று வாருங்கள். ஒரு அடிப்படை கல்வியாவது தெரிந்து வாருங்கள் பிறகு பேசுங்கள்.

ஆதாரங்கள் - இன்னும் ஆயிரமாயிரம் பேர் ஜோசியர்களிடம் சென்று வருவது தான். அவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. உலகில் 80 சதவீதம் முட்டாள்களாக ஆகிவிடுவார்கள்.

நீங்கள் பந்தை என் கோர்டில் விடுவதில் கூறியாக இருக்கிறீர்கள். நான் அதில் மாட்ட போவது இல்லை. உங்களுக்கு வாஸ்துவின் பலங்களை விளக்கிவிட்டேன். பிறகு Artificial Intelligence, Behaviour Analysis பற்றி விளக்கிவிட்டேன்.

கற்க விரும்புபவர்கள் இந்நேரம் கற்றிருப்பார்கள். கண்மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்றால் என்ன சொல்வது நான்.

நான் வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் உங்களுக்கு எழுதி விளக்கினால் தான் உண்டு.

உங்களை பொருத்த வரையில் அது பொய் புரட்டு. அவ்வாறே இருக்கட்டும். வாழ்த்துகள்.

இதயம்
21-06-2007, 08:22 AM
ஆதாரங்கள் - இது உங்களுக்கு வேடிக்கையாக இல்லையா நண்பரே.

விஞ்ஞானத்தின் 100% நம்பகத்தன்மைக்கு நான் கொடுக்கும் ஆதாரம்: விஞ்ஞானம் கொடுத்த கணிணி வழியாக என் பதிவை படிக்கலாம். இது ஆதாரம். இதை படித்தும் விட்டீர்கள். என் ஆதாரம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ஜோசியத்தின் 100% நம்பகத்தன்மைக்கு ஆதாரம் கொடுங்கள். நாளைக்கு எனக்கு என்ன நடக்கும்..? உங்களுக்கு தெரிந்த "உண்மையான" ஜோதிடர் கணித்து சொல்லட்டும். அது நடந்தால் உங்களிடம் நான் சரண்..! ஒரேஏஏஏஏஏஏஏஏ ஒரு ஜோதிடர் பெயரை மட்டும் சொல்லுங்கள் ப்ளீஸ்..!

காக்காய் உட்கார்ந்து பனம்பழம் விழுவதால் தான் ஜோதிட பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஞாபகமிருக்கட்டும்.

leomohan
21-06-2007, 08:37 AM
இந்த திரி உங்களுடைய ஈகோ பிரச்சனை ஆகிவிட்டது.

நீங்கள் நான் சொன்ன புத்தகங்களை படிக்க போவதில்லை. உங்களிடம் நீங்கள் படிக்காத, உங்களுக்கு தெரியாத ஒன்றை பற்றி பேசி பிரயோஜனமில்லை.

உங்கள் நம்பிக்கையில் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். எங்கள் நம்பிக்கையில் நாங்கள் தொடர்ந்து செல்கிறோம். உங்கள் கருத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள். எங்கள் கருத்தை நாங்கள் உங்கள் மீது திணிக்கவில்லை.

நன்றி. வணக்கம்.

lolluvathiyar
21-06-2007, 08:49 AM
விஞ்ஞானத்தின் 100% நம்பகத்தன்மைக்கு ஆதாரம்: நிரூபிக்கப்பட்டுவிட்டது.

விஞ்ஞானம் 100 % நம்பகதன்மை இருக்கிறதா அல்லது ஜோதிடம் 100 % நம்பகதன்மை இருக்கிறதா
என்ற விவாதத்திற்க்கு போகும் முன், இவ்விரண்டையும் கையாலுவது மனிதர்களே.

மனிதர்கள் என்றுமே 100% நம்பகதன்மை இல்லாதவர்கள். இரண்டிலுமே மனித தவறுகள் தான் ஏற்படுகிறது என்பது என் கூற்று.

விஞ்ஞானம் 100% நம்பகதன்மை உள்ளது என்கிறீர்கள் நான் ஒன்றை கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்.

Petrol -(கச்சா என்னை) -எரிபொருள்
Coal - (நிலகரி) - எரிபொருள்
எரிபொருள் என்றால் அது எரியும் தன்மை உள்ளது (Combustible Objects). இரண்டு எரிபொருளை சேர்த்து எரித்தால் அதுவும் ஒரு எரிபொருள் தான் ஆக வேண்டும் என்று விஞ்ஞானம் தெளிவாக கூறுகிறது.

அதாவது Petrol ,Coal இரண்டையும் சேர்த்து எரித்தால் எரியும் தன்மை கொண்டது.

ஆனால்
Hydrogen - எரியும் தன்மை உள்ளது
Oxygen - எரியும் தன்மை உள்ளது
இரண்டும் எரியும் தன்மை உள்ளது. ஆனால் இரண்டையும் சேர்த்தால் வருவது தன்னீர் (H 2 O).
இரன்று எரியும் தன்மை கொண்ட பொருள்களால் ஆன இந்த தன்னீருக்கு எரியும் தன்மை உள்ளதா. இல்லையே
இப்பொழுது விஞ்ஞானம் சொன்னது பொய்யாகி விட்டதல்லவா? அப்பொழுது விஞ்ஞானம் பொய்யா?

இந்து சூத்திரம் சாமின்ய மக்களுக்கு புரிவதில்லை. ஆனால் தன்னீர் எரியாது என்பது உன்மை.

அது போல தான் ஜோசியம் அது சாதர்ன மக்களுக்கு புரியாத ஆனால் ஒரு விஞ்ஞானமாக இருக்கலாம் அல்லவா?
அதை ஆராயாமல், எடுத்தேன் கவுத்தேன் என்று புறம் தள்ளுவது அவரவர் இஸ்டம்

ஓவரா குழப்பிட்டனோ

இதயம்
21-06-2007, 08:55 AM
இதயம் அவர்கள் முக்கிய கேள்வி இந்து திரி கல்வி அறிவியல் பகுதியில் இருக்கலாம் என்பது தான்.
இது ஆண்மீக சம்மந்தபட்டது என்பது, அதனால் இது ஆண்மீக பகுதியில் போடலாம் என்பது.

இந்த திரி எங்கு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை மோகனிடமே விட்டுவிடலாம். ஜோதிடம் விஞ்ஞானம் தான் என்று என் ஆதாரத்திற்கு ஈடாக நிரூபித்தால் இந்த திரி அறிவியல் பகுதியில் இருப்பதில் தவறில்லை.

நிரூபிக்கப்படாத விஷயம் விஞ்ஞானமில்லை என்பதால் அதை வேறு பகுதிக்கு மாற்றலாம். கேள்விகளுக்கு அவசியமில்லாத விஷயம் என்பதால் ஆன்மீகத்திற்கு மாற்றலாம் என்று சொல்வதில் நான் முரண்படுகிறேன். ஒரு வேளை நகைச்சுவை பகுதிக்கு மாற்றலாம் என்பது என் பரிந்துரை..!!

ஜோசியத்தில் வெறும் இரைவன், பேய், பூதம், மந்திரம் என்று மட்டும் வந்திருந்தால் அது ஆண்மீக பகுதிக்கு பொருந்தும்.
அதை மூட நம்பிக்கை என்று வெளிபடையாக கூறிவிடலாம். அதை நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்.
கிளி ஜோசியம், எலி ஜோசியம் இவை மூட நம்பிக்கைகள் என்று கூறலாம்

இந்தியாவின் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டையில் நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதவர்கள் நம்பவேண்டாம் என்று சொல்லும் கருத்தும் ஒரு காரணம். இது முழுக்க, முழுக்க சுயநலத்தை உள்ளடக்கிய ஒரு கருத்து என்பது வெட்டவெளிச்சம். ஒரு நிதி நிறுவனம் நம்பகத்தன்மையற்றது என்பதை நான் பல ஆதாரங்கள் மூலம் அறிய வந்தால் அதை நாட்டு மக்களுக்கு தெரிவித்து நடக்க போகும் தீமையை தடுக்க வேண்டியது ஒரு சிறந்த மனிதனின் கடமை. அதை விடுத்து அந்த நிதி நிறுவனம் நேர்மையானது என்று அடுத்தவர்கள் நம்பினால் நம்பட்டும் என்று நினைத்து சும்மா இருக்கலாமா..?

அப்படி தான் வெற்று நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த விஷயங்களை கண்டும் காணாது இருப்பதும். மனிதனின் நம்பிக்கைகளின் மூலம் அவன் சந்தோஷமும், திருப்தியடைவதும் இயற்கை தான். அந்த நம்பிக்கைகள் எந்த விதத்திலும் அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது. ஜோதிடத்தை பொருத்தவரை நம்பிக்கை கொண்டவருக்கும், அந்த நம்பிக்கையை அடுத்தவருக்கு பரிந்துரைப்பதன் மூலம் அடுத்தவர்களுக்கும் தீங்காக அமைகிறது.

என் தாயின் முகம் பார்த்து விட்டு தான் வெளியூர் போவேன் என்பது என் நம்பிக்கையாக இருந்தால் அதனால் யாருக்கும் எந்த தீங்கும் வர வாய்ப்பில்லை. அதுவே, அவர் சொல்வதை தான் வேதமாக எடுத்துக்கொள்வேன் என்பதை ஏற்கலாகாது. அவர் சொல்வது நடைமுறைக்கு புறம்பான, அடுத்தவர்களை தொந்தரவு செய்யும் விஷயமாகவும் இருக்கும் பட்சத்தில் அந்த நம்பிக்கை ஏற்க தகுந்தது அல்ல.

ஜோசியத்தை நம்பலாமா? விஞ்ஞானத்தை நம்பலாம்?
இதயம் அவர்களின் வாதம் விஞ்ஞானத்தை நம்பலாம். ஜோசியத்தை நம்பகூடாது. சரி
3000 வருடங்களாக புளோட்டோவை ஜோசியம் கிரக பட்டியலி சேர்த்து கொள்ள வில்லை.
100 வருட விஞ்ஞானத்தில் புளொட்டோ கிரகமாக இருந்தது. ஆனால் இல்லை என்கிறார்கள், அப்படி பார்த்தால் 100 வருடமாக நாம் படித்த விஞ்ஞானம் பொய்யா.

நான் நம்பும் விஞ்ஞானம் அடிப்படையிலான கோள்களின் பட்டியல் நான் முன்பே கொடுத்துவிட்டேன். ஆனால், நான் கேட்ட ஜோதிடம் அடிப்படையிலான கிரகங்களின் பட்டியல் கேட்டும் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது தெரிந்த பிறகு தான் இது தொடர்பான விவாதத்தை தொடர முடியும்.

இதில் பகுத்தறிவு வேறு வருகிறது. பகுத்தறிவு என்பது பகுத்து அறிதல் விஞ்ஞான பூர்வமாக.

அந்த காலத்தில் டெலஸ்கோப் இல்லாமல் இந்த கிரகங்களை எப்படி மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்று உன்மையான பகுத்தறிவு உள்ள விஞ்ஞானி ஆராய்ந்தால் இன்னும் புலபடா விஞ்ஞான விசயங்கள் புலபடும்.

டெலஸ்கோப் கொண்டு, விஞ்ஞான கருவிகள் கொண்டு கோள்களின் விபரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அது இவை எதுவும் இல்லாமல் கிரகங்களை அப்போதே எப்படி கண்டுபிடித்தார்கள்.? இதில் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன.

1. அவர்களாக தோன்றியதை சொன்னார்கள், எழுதி வைத்தார்கள்.
2. நவீன கருவிகள் இல்லாமல் அவர்கள் இதை கண்டுபிடித்திருந்தால் அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. ஏறக்குறைய இறைவனுக்கு நிகரானவர்கள். யார் அவர்கள்..? அவர்களின் தன்மைகள் என்ன..?

ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வைத்தவர்கள் முன்னேறி கொண்டே இருகிறார்கள். இதுவும் உன்மை அல்லவா

ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வைத்தவர்கள் முன்னேற முடியாது. படிப்பு, உழைப்பு, திறமை, ஒழுக்கம், தன்னம்பிக்கை போன்ற ஆக்க பூர்வமான விஷயங்களில் நம்பிக்கை வைத்தவர்கள் முன்னேறி இருக்கிறார்கள். உதா. வல்லரசு ஜப்பான் (நல்ல விஷயங்களுக்காக குறிப்பிடுவதில் எதிரியாக இருந்தால் கூட தப்பில்லை)

பொய், புரட்டு, கொலை, கொள்ளை, மது, இலஞ்சம், ஊழல், ஜோசியம், ஜோதிடம், மூட நம்பிக்கைகளில் நம்பிக்கைகளில் தன் நம்பிக்கைகளை வைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இதயம்
21-06-2007, 09:02 AM
இந்த திரி உங்களுடைய ஈகோ பிரச்சனை ஆகிவிட்டது.
நீங்கள் நான் சொன்ன புத்தகங்களை படிக்க போவதில்லை. உங்களிடம் நீங்கள் படிக்காத, உங்களுக்கு தெரியாத ஒன்றை பற்றி பேசி பிரயோஜனமில்லை.

உங்கள் நம்பிக்கையில் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். எங்கள் நம்பிக்கையில் நாங்கள் தொடர்ந்து செல்கிறோம். உங்கள் கருத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள். எங்கள் கருத்தை நாங்கள் உங்கள் மீது திணிக்கவில்லை.

நன்றி. வணக்கம்.

ஜோதிடம் பொய் என்று நிரூபித்து நீங்கள் அந்த தீமையிலிருந்து தப்பிப்பதால் மனதிருப்தியைத்தவிர எனக்கொன்றும் கிடைக்கப்போவதில்லை. அதனால், இங்கு ஈகோ வர வாய்ப்பே இல்லை. முகம் தெரியாமல் கணிணி முன் அமர்ந்து விவாதித்து அதன் மூலம் பெரியவர், சிறியவர் என்று நிரூபித்துக்கொள்வதால் நமக்கு ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லை.

நண்பரே.. நாம் குழந்தைகளல்ல..! இங்கு கருத்து திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. நம் கருத்தை இடுவோம். அவரவர் பகுத்தறிவு எது சரி என்று சொல்கிறதோ அதை செய்யட்டும். அதனால் வரும் விளைவுகளை அவரவர்கள் தான் அனுபவிக்கப்போகிறார்கள்?

ஷீ-நிசி
21-06-2007, 09:03 AM
வாங்க ஷீ-நிசி சார்..! உங்களின், உங்கள் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக தான் நான் இங்கே தொண்டை கிழிய கத்திக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆற அமர வந்து சுருக்கமாக சொல்லுங்கள் என்கிறீர்கள். ஒரு வேளை நீங்கள் முதலிலேயே இந்த கருத்துப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். மிக.. மிக.. சுருக்கமாக சொல்கிறேன்.

பொய் + புரட்டு + பித்தலாட்டம் = ஜோதிடம்

ஒரு வேளை நீங்கள் முதலிலேயே இந்த கருத்துப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் என்று நீங்களாக சொல்வது ஏற்கத்தக்கதல்ல..

எனக்கு என்றைக்குமே ஜோசியத்தில் நம்பிக்கை கிடையாது...
அதற்காக அது இல்லையென்றும் என்னால் மறுக்க முடியாது... பைபிளிலேயே வான சாஸ்திரிகள் என்று வருவதுண்டு!

மற்றபடி என்னிடம் ஆதாரங்கள் எல்லாம் இல்லை.. மறுத்து பேச...

இதயம்
21-06-2007, 09:08 AM

யாரையும் புண்படுத்த விரும்பாத பதிவு.

இந்த பதிவின் விவாதமே விஞ்ஞானம் என்ற அடிப்படையில் மோகன் சொன்னதால் தான் நடக்கிறது. இதில் மத நம்பிக்கைகள் சம்பந்தப்படவில்லை. அது மட்டுமல்லாமல் மதத்தை சம்பந்தப்படுத்தி ஜோதிடத்தை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் மறுக்கப்பட்டுள்ளது.

அக்னி
21-06-2007, 09:11 AM
ஜோதிடம் உண்மையா பொய்யா என்பது எனக்குச் சரியாக தெரியவில்லை.
தெரிந்து கொள்ள வந்து முழுவதும் குழம்பி விட்டேன்.
ஆனால்,
கிட்டத்தட்ட ஆசிய, ஐரோப்பிய நாடுகள் என்று பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் வசித்துவிட்டேன்.
எல்லா இடங்களிலும், ராசி பலன்கள், தினசரிகளில் வருவதுண்டு.
நம்புகிறார்களோ இல்லையோ கூடுதலானவர்கள் பார்வையிடுகிறார்கள்.
ஆக ஜோதிடம் தமிழ் மக்களிடம் மட்டும்தான் என்றில்லை.
உலகம் முழுவதும் ஜோதிடம் பார்க்கப்படுகின்றது.
நம்புவதும், நம்பாவையும் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது...

நன்றி!

இதயம்
21-06-2007, 09:24 AM
Hydrogen - எரியும் தன்மை உள்ளது
Oxygen - எரியும் தன்மை உள்ளது
இரண்டும் எரியும் தன்மை உள்ளது. ஆனால் இரண்டையும் சேர்த்தால் வருவது தன்னீர் (H 2 O).
இரன்று எரியும் தன்மை கொண்ட பொருள்களால் ஆன இந்த தன்னீருக்கு எரியும் தன்மை உள்ளதா. இல்லையே
இப்பொழுது விஞ்ஞானம் சொன்னது பொய்யாகி விட்டதல்லவா? அப்பொழுது விஞ்ஞானம் பொய்யா?

இந்து சூத்திரம் சாமின்ய மக்களுக்கு புரிவதில்லை. ஆனால் தன்னீர் எரியாது என்பது உன்மை.

அது போல தான் ஜோசியம் அது சாதர்ன மக்களுக்கு புரியாத ஆனால் ஒரு விஞ்ஞானமாக இருக்கலாம் அல்லவா?
அதை ஆராயாமல், எடுத்தேன் கவுத்தேன் என்று புறம் தள்ளுவது அவரவர் இஸ்டம்

ஓவரா குழப்பிட்டனோ

என்ன வாத்தியார்.. உங்களுக்கே குழப்பமா..?

Hydrogen - எரியும் தன்மை உள்ளது என்று சொன்னது விஞ்ஞானம்
Oxygen - எரியும் தன்மை உள்ளது என்று சொன்னது விஞ்ஞானம். இவை இரண்டும் சேர்ந்து வரும்
H2O (தண்ணீர்) என்பதை நமக்கு சொன்னதும் விஞ்ஞானம் தான்.

மூலங்களின் சேர்க்கையால் பல வினைகள் ஏற்பட்டு அதன் விளைவுகள் பல மாதிரியாக இருப்பது விஞ்ஞானம் அல்ல. அதை செய்து காட்டுவதும், அதன் விளைவுகளை மனிதர்களுக்கு நன்மைபயக்கும் வகையில் பயன்படுத்திக்கொள்வதும் தான் விஞ்ஞானம்.

ஒரு விஷயத்தின் நன்மை தீமைகளை சொல்பவை அவற்றின் விளைவுகள் தானே..? இவர் நல்ல ஜோதிடர் என்று ஒருவரையும் சுட்டிக்காட்ட முடியாத நிலையில் ஜோதிடத்தின் விளைவு எப்படி நன்மையாக இருக்கும் வாத்தியார்..?

சத்ரியன்
21-06-2007, 09:26 AM
ஜாதகம் என்பது அவரவர் மனதை பொறுத்தது.

ananthu123
21-06-2007, 09:42 AM
சாதகத்துக்கு சாதகமாய் சாதகம் பன்னுபவர்களை சாதகவாதிகளாகத்தான் சொல்லவேண்டியிருக்கிறது.

சி.அய்.ஏ,ரா,கே ஜி பி இவங்களுக்கு தேவையில்லாம அந்தந்த நாட்டு அரசு வெட்டியா சம்பளம் கொடுக்குது.

நம்ம நாட்டு ஜோஸியக்காரவுள வுட்டு சும்ம பத்து நிமிஸத்துல எந்த நாடு எந்த நாட்டுக்கு தீமை எங்கே எப்படி எதனால என சும்மா புட்டு புட்டு வச்சுரவாங்க.அதனால் எல்ல நாட்டுக்கும் நம்ம சாதகம் பாக்குறவவ்ங்கள அனுப்புங்கப்பூ......

pills11.com ;))

ananthu123
21-06-2007, 09:49 AM
அவனவன் ஏதோ வயித்து பொழப்புக்கு பன்னுறத இந்த படிச்ச மேதாவிங்க உண்மை என நம்புறதுக்கு அரசாங்கம் செலவழிச்சு கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கு புத்தம் புதிய அற்வியல் வளர்ச்சிக்கான பாடங்களையும் புதிய பாடத்திட்டங்கள அறிமுகப்படுத்தினா நீங்க படக பின்னால போறதுக்கு துடுப்ப போடறீங்க!சபாஷ்!

pills11.com ;))

இதயம்
21-06-2007, 10:00 AM

சபாஷ்..!!
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு குறைச்சலா ஆனந்த்..?!!

lolluvathiyar
21-06-2007, 10:01 AM
Oxygen - எரியும் தன்மை உள்ளது என்று சொன்னது விஞ்ஞானம். இவை இரண்டும் சேர்ந்து வரும்
H2O (தண்ணீர்) என்பதை நமக்கு சொன்னதும் விஞ்ஞானம் தான்.

நான் சொன்னது என்னவென்றால்
When we mix two Combustable Objects, It will Become other combustable object

இதை தான் விஞ்ஞானம் சொன்னது என்று சொன்னேன். அது பொய்யாகிவிட்டதல்லவா

இதயம்
21-06-2007, 10:01 AM
அவனவன் ஏதோ வயித்து பொழப்புக்கு பன்னுறத இந்த படிச்ச மேதாவிங்க உண்மை என நம்புறதுக்கு அரசாங்கம் செலவழிச்சு கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கு புத்தம் புதிய அற்வியல் வளர்ச்சிக்கான பாடங்களையும் புதிய பாடத்திட்டங்கள அறிமுகப்படுத்தினா நீங்க படக பின்னால போறதுக்கு துடுப்ப போடறீங்க!சபாஷ்!

pills11.com ;))

ச்ச்சே..! எனக்கு இது தோணாம போச்சே..!!

lolluvathiyar
21-06-2007, 10:35 AM
ஒரு வேளை நகைச்சுவை பகுதிக்கு மாற்றலாம் என்பது என் பரிந்துரை..!!

இதுவும் ஒரு ந*ல்ல* ந*கைசுவையாக* இருகிறதே

ஜோதிடம் அடிப்படையிலான கிரகங்களின் பட்டியல் கேட்டும் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.

ந*வ*கிர*க*ங்க*ள்
1. சூரிய*ன் (Sun)
2. ச*ந்திர*ன் (Moon)
3.ம*ங்க*ல*ன் (Mars)
4. புத*ன் (Mercury)
5. பிர*க*ஸ்ப*தி (Jupiter)
6. சுக்கிர*ன் (Venus)
7. ச*னி (Satrun)
8. ராகு
9. கேது

ராகு கேது என்ப*து ச*ரியாக* என்ன*வென்று தெரிய*வில்லை.
அவை Neptuen and Uranus ஆக* இருக்க*லாம்
இன்னும் இதுவ*ரை Neptuen and Uranus கிர*க*ங்க*ள் ப*ட்டிய*லிருந்து நீக்க* ப*ட*வில்லை. ஆனால் நிச்ச*ய*ம் ந*வ*கிர*க*ங்க*ளில் புளோட்டோ ஆரம்பத்திலேயே இல்லை.

டெலஸ்கோப் விஞ்ஞான கருவிகள் கொண்டு எதுவும் இல்லாமல் கிரகங்களை அப்போதே எப்படி கண்டுபிடித்தார்கள்.?
1. அவர்களாக தோன்றியதை சொன்னார்கள், எழுதி வைத்தார்கள்.

1. அது எப்படி மற்றவர்களுக்கு தோண்றாமல் அவர்களுக்கு மட்டும் தோண்றியது. பொய் தான் தோண்றியதை எழுத முடியும். உன்மை தோண்றியபடி எழுத முடியுமா?

2. நவீன கருவிகள் இல்லாமல் அவர்கள் இதை கண்டுபிடித்திருந்தால் அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. ஏறக்குறைய இறைவனுக்கு நிகரானவர்கள். யார் அவர்கள்..? அவர்களின் தன்மைகள் என்ன..?

அவ*ர்க*ளின் த*ன்மை தான் ஒருவேலை சம்ஸ்கிருதம் போண்ற பழைய நூல் அறிதல் மற்றும் ஆண்மீகம் அறிந்த* த*ன்மையாக* இருக்கும்.

இதயம்
21-06-2007, 11:01 AM
நான் சொன்னது என்னவென்றால்
When we mix two Combustable Objects, It will Become other combustable object
இதை தான் விஞ்ஞானம் சொன்னது என்று சொன்னேன். அது பொய்யாகிவிட்டதல்லவா

அது பொருளின் தன்மையால் உண்டாவது. இதற்கும், விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்..?

இதயம்
21-06-2007, 11:02 AM
1. சூரிய*ன் (Sun)

சூரியன் எப்படி கிரகமாகும்..?

lolluvathiyar
21-06-2007, 11:11 AM
சூரியன் எப்படி கிரகமாகும்..?

இதயம் அவர்களே இந்த கேள்விக்கு முன்னமே நான் பதில் தந்திருகிறேன்.
கிரகம் என்று பஞ்சாங்கம் அழைப்பது புமீக்கு அருகில் உள்ள Celestial Objects not Planetorial Objects . இரண்டும்க்கும் வித்தியாசம் ஆங்கிலத்தில் உண்டு. அதாவது Planetorial Objects are a part of Celestial Objects.
பஞ்சாங்க வழக்கு தமிழில் கிரகம் என்ற அர்த்தம் வேறு Celestial Objects.
அறிவில் வழக்கு தமிழில் கிரகம் என்ற அர்த்தம் வேறு Planetorial Objects

leomohan
21-06-2007, 11:47 AM
http://en.wikipedia.org/wiki/Astrology

leomohan
21-06-2007, 11:48 AM
http://en.wikipedia.org/wiki/Chiromancy

leomohan
21-06-2007, 11:49 AM
http://www.gutenberg.org/files/20480/20480-h/20480-h.htm

Palmistry for All by Cheiro

இலவச மின்னூல்.

leomohan
21-06-2007, 11:50 AM
http://en.wikipedia.org/wiki/Numerology

leomohan
21-06-2007, 11:53 AM
Linda Goodman இன் உலக புகழ் பெற்ற Sun Signs மின்னூல் இங்கே

http://www.esnips.com/doc/0e0dfb4d-5e7f-45e2-befd-57e6b4af4f28/Sun-Signs-Linda-Goodman

மேலும் Palmistry, Numerology பற்றிய புத்தகங்கள் www.esnips.com எனும் தளத்தில் தேடினால் கிடைக்கும். படித்தால் புரியும். படிக்காவிட்டால் புரியாது.

richard
20-08-2007, 06:11 PM
பகுத்த*றிவு என்றால் என்ன? பகுத்தறிவாளர்கள்யார்,இவர்களின் பூர்வீகம் எங்கே?இவர்கள் மனித இனத்தை சேர்ந்தவர்களா? இவர்கள் எத்தனை அறிவுள்ளவர்கள்?

தங்கவேல்
21-08-2007, 01:25 AM
இன்னும் நாம் அறிவு வளர்ச்சி பெறவில்லை என்பதை காட்டுகிறது இந்த பதிவு. சடங்குகள், ஜாதகம் என்பதெல்லாம் சும்மா ஜபர்தஸ்து. உலகை இயக்கும் சக்தி ஒன்று உண்டு. மற்றதெல்லாம் சும்மா. யாருக்கும் விளங்காததை வைத்து பிழைப்பு நடத்துவதுதான் கோயில், குளம், ஜாதகம் எனலாம். ஆன்மீக புத்தகங்கள் பலவும் படித்து இருக்கின்றேன். முடிவு என்ன தெரியுமா " மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை" என்பது தான். வாழ்வின் ஆதாரம் நம் மனத்தில் இருக்கின்றது. விவேகானந்தர் சொல்லியிருக்கின்றார். மனம் அதன் சக்தி மட்டுமே வாழ்வை நிர்ணயிக்கும். நாம் நினைக்காமல் எதுவும் நடக்கபோவதில்லை. இந்துமதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்து மதம், புத்த மதம் இவைகள் சமூகம் ஒருங்கினைந்து வாழ சில வழிகளை சொல்லுகின்றன. அவ்வளவுதான். தேவையின்றி சர்ச்சையினை தொடருவதை விட்டுவிட்டு நாம் எப்படி ஆக நினைக்கிறோமோ அப்படி ஆக காரியத்தில் ஈடுபடலாம்.... வாழ்க மனிதன்...

சக்திவேல்
21-08-2007, 01:31 AM
ஆகா இப்படி ஒரு அறிவுக்கு வேலை கொடுக்கும் அற்புதமான* திரியை இத்தனை நாளாக கன்டுக்காமல் விட்டுட்டேனே!!.

lolluvathiyar
21-08-2007, 05:44 AM
பகுத்த*றிவு என்றால் என்ன? பகுத்தறிவாளர்கள்யார்,இவர்களின் பூர்வீகம் எங்கே?இவர்கள் மனித இனத்தை சேர்ந்தவர்களா? இவர்கள் எத்தனை அறிவுள்ளவர்கள்?

வாங்க வாங்க உங்களை தான் எல்லாரும் தேடிட்டு இருக்காங்க. மொத்தம் 2 பதிவு தான் பன்னி இருக்கீங்க அதுவும் இத தேடி பிடிச்சிட்டீங்களா?
சும்மா இருந்த என்னவோ பன்னி கெடுத்தானாம்.
வருவாங்க மக்கள் காத்திருங்க*

வசந்தகுமார்
21-08-2007, 06:22 AM
ஜோசியம்,ஜாதகம் இவையெல்லாம் வெறும் பித்தலாட்டம். அவர்கள் சொல்லும் பலன்கள் அனேகமாக எல்லோருக்கும் பொறுந்தும். இவற்றால் பாதிக்கபட்டவர்கள், ஏமாற்றபட்டவர்கள் எண்ணிக்கை தான் மிக மிக அதிகம். பலனடைந்தவர்கள் கூட எதோ எதேச்சையாக நடப்பது தான். இவர்கள் ஒரு இயற்கை பேரழிவையோ அல்லது ஒருவரின் மரணத்தையோ தடுத்திருக்கிறார்களா?? இவைகள் உண்மையாக இருந்தால் இவர்கள்தான் உலகில் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்திருப்பார்கள். ஆட்சி,அதிகாரம் அனைத்தையும் இவர்கள் கையில்தான் இருந்திருக்கும். ஆனால் இவர்களின் நிலையோ வெறும் விளம்பரம் தேடுவதாக தான் இருக்கிறது.

richard
21-08-2007, 07:10 AM
ரிச்சர்ட் நல்ல விளக்க தருகிறீர்கள். ஆனால் உங்கள் பெயருக்கும் நீங்கள் கூறும் விசயங்களுக்கு துளியும் கூட சம்மந்தமில்லையே.
நீண்ட விளக்கங்கள் தர என்னினால் அதை விவாத பகுதியில் போடாமல் தனி திரியாக தந்தால் படிக்க ஏதுவாக இருக்கும்

அய்யா இது விவாத*ம் இல்லை விள*க்க*ம் தான்,தெறியாம*ல் இருப்ப*வ*ர்க*ள் தான் விவாத*ம் செய்வ*ர்,இது ப*ல* ஜோதிட*ர்க*ளின் க*ருத்துக்க*ள் ம*ற்றும் ஜோதிட* நூல்க*லின் தொகுப்பும் கூட* தெளிவு பெருவ*த*ற்க்காக* ம*ட்டும்

இதயம்
21-08-2007, 07:50 AM
வாத்தியார் சொன்னது போல் பெயருக்கும், உங்கள் பதிவுகளின் கருத்திற்கும் சம்பந்தமில்லை. காரணம், இந்த பெயரோடு தொடர்புடைய பிரிவினர் ஜோதிட காரியங்களை நம்பி அதன் படி நடப்பதில்லை. நீங்கள் ஒரு வேளை இந்த பெயரை புனைப்பெயராக வைத்துக்கொண்டிருக்கலாம் என்பதால் இது பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் இந்த திரியை முழுதும் படித்திருந்தால் இதற்கு முன்பே இந்த பொருள் பற்றி பெரிய வாக்குவாதம் நடந்திருப்பது தெரியும். உங்களின் பதிவுகளை காணும் போது நீங்கள் ஜோதிடம் என்ற கலையை கற்றவராக இருக்கலாம், இப்போது கற்றுக்கொடுப்பவராக கூட இருக்கலாம். நீங்கள் கொடுத்திருக்கும் விபரங்கள் விஞ்ஞானம் சம்பந்தப்பட்டது என்பதால் அதை ஏற்பதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், அதை ஜோதிடம் என்ற நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக கொண்ட கலையுடன் இணைக்கும் போது முன்னுக்குபின் முரணாக இடிக்கிறது. நண்பர்கள் சொல்வது போல் ஜோதிடத்தை நம்புவர்கள் ஏறக்குறைய எல்லா மதங்களிலும், எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள், குற்றவாளிகள், பகுத்தறிவு இல்லாதவர்கள் இருப்பதை போல..! ஆனால், உலக மக்கள் எண்ணிக்கையில் ஜோதிடத்தை நம்புகளின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருக்கிறது.

ஆனால், இது ஜோதிடத்தை உண்மையில்லை என்று சொல்வதில் அதிக ஆதரவை தராது. காரணம், நான் அடிக்கடி சொல்வது போல் ஒரு நம்பிக்கையை கொண்டவர்களின் எண்ணிக்கை அந்த நம்பிக்கையின் உண்மைக்கு எந்த வகையிலும் சாதகமாக இருக்காது என்பதால் தான். ஆனால், அறிவு பூர்வமான சிந்தனைகளாலும், ஜோதிடம் தொடர்பான நிகழ்வுகள் கொடுத்த விளைவுகளும் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கவே செய்கின்றன. அந்த அடிப்படையில் அமைந்த பல தொழில்கள் இப்போது அழிந்து ஜோதிடம் போன்ற சில மட்டும் குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்கிறது. வாழ்க்கை என்பது மிக வேகமாகிவிட்டது. உலகம் சுருங்கி விட்டது. நம்பிக்கையில் அடிப்படையில் அமைந்த பல கருத்துக்களை இப்போதெல்லாம் மக்கள் நம்ப தயாராயில்லை. காரணம், விஞ்ஞானம் என்ற அறிவியல் கொடுக்கும் அற்புத பயன்களால் உடனுக்குடன் அதன் பலன்களை அனுபவிக்கும் மக்கள், விஞ்ஞானம் என்று சொல்லிக்கொள்ளும் ஜாதகம் தன்னை நிரூபிக்க முடியாமல் திணறுகிறது. உங்களை போன்றவர்கள் அதை தலையை சுற்றி காதை தொடுவது போல் சுற்றி வளைத்து எதையோ சொல்லி நிரூபிப்பது மூலம் முயன்றாலும் எடுபடுவதில்லை. காரணம், நிரூபிக்க சொல்லும் உண்மைகள் ஏற்புடையதாக இருப்பதில்லை.

இதயம்
21-08-2007, 07:53 AM
ஜோதிடம் என்பது உண்மையிலேயே எதிர்காலத்தை கணிக்க கூடியதாக இருந்தால் அந்த ஜோதிடத்தில் வல்லவாராக இருப்பவர்கள் உலகை ஆளவும், அதை அதிகம் பயன்படுத்தும் நாடு உலகின் வல்லரசாகவும் இருந்திருக்கும். இந்தியாவின் "ரா", அமெரிக்காவின் "எஃப் பி ஐ" போன்ற உளவு அமைப்புகளுக்கு வேலை இல்லாமலேயே போயிருக்கும். அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலை அறிந்து அதை தடுத்திருக்கும். பின்லேடன் பிடிபட்டிருப்பார். இதெல்லாம் நடந்ததா..? இல்லையே ஏன்..? காரணம், ஜோதிடம் தொடர்பான நம்பிக்கைகள் வெறும் ஏமாற்றுத்தொழில் மட்டுமே.

நீங்கள் ஜோதிடம் சொல்வது எல்லாம் நடக்கும் என்றும் சொல்ல முடியாது என்றிருக்கிறீர்கள். நகைச்சுவையான விளக்கம். விஞ்ஞானம் என்று சொல்லிவிட்டு அது நடக்காமல் போக வாய்ப்பும் இருக்கிறது என்றால் அதென்ன விஞ்ஞானம்.? விஞ்ஞானத்தில் நடக்கமுடியாமல் போகும் குறைபாட்டிற்கு காரணம் அந்த கண்டுபிடிப்பை செய்யும் மனிதனின் குறை தான். இருந்தாலும் அதை நிறைவாக செய்து மனிதர்களுக்கு ஆக்க பூர்வமான வசதிகளை செய்து கொடுப்பதால் தான் விஞ்ஞானம் நம்பப்படுகிறது. காரணம், விஞ்ஞானம் 99% நம்பகத்தன்மை உள்ளது.

ஆனால், ஜோதிடம் அப்படியா..? அதன் பிழைப்பு ஒரு விஷயத்தை நடக்கும் என்று சொல்லும் போது அது "காக்கா உட்கார பனம் விழுந்த கதை"யாக நடக்கும் சம்பவ வாய்ப்புகளை கொண்டு தானே நடந்து கொண்டிருக்கிறது.? இது பற்றி முந்தைய பதிவுகளில் நிறைய விவாதித்தாகி விட்டது. மீண்டும் எழுதி அனைவரின் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. நேரம் கிடைத்தால் இந்த திரியை ஆரம்பம் முதல் படித்துவிடுங்கள். ஜோதிடம் உண்மை என்பது உங்களுடைய கருத்தாக இருக்கலாம், அல்லது உங்களுக்கு பயனளிக்கும் தொழிலாக கூட இருக்கலாம். அதற்காக அதை உண்மை என்பது போல் எழுதுவதும் தவறில்லை தான். ஆனால், அது உண்மை என்று நீங்கள் நிரூபிக்க முற்படும் பட்சத்தில் அதற்கான வலுவான ஆதாரங்களை கொடுக்காதவரை உங்கள் நோக்கம் வெற்றியடையாது.

இங்கே நாம் சொல்வதை எல்லாம் நண்பர்கள் நம்புவதில்லை. ஒரு விஷயம் சம்பந்தமான உண்மை நிலையை அவர்களின் பகுத்தறிவு, பெற்ற அனுபவம், ஆதாரங்கள் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அப்படி வந்தவர்கள் நம் மன்றத்தவர் மட்டுமல்ல, ஜோதிடத்தை நம்பாத பெரும்பாலான உலகமக்களும் தான்..! "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பதோடு மட்டுமல்லாமல் திருட்டு கொடுப்பவர்களும் எச்சரிக்கையாக இருந்தால் தான் திருட்டு ஒழியும் என்பதும் நிதர்சன உண்மை..!

lolluvathiyar
21-08-2007, 08:41 AM
அய்யா இது விவாத*ம் இல்லை விள*க்க*ம் தான்,தெறியாம*ல் இருப்ப*வ*ர்க*ள் தான் விவாத*ம் செய்வ*ர்,இது ப*ல* ஜோதிட*ர்க*ளின் க*ருத்துக்க*ள் ம*ற்றும் ஜோதிட* நூல்க*லின் தொகுப்பும் கூட* தெளிவு பெருவ*த*ற்க்காக* ம*ட்டும்

நன்பரே உங்கள் இந்த பதிவை தனி திரியாக போடலாமே. இந்த திரி விவாதம் பன்ன பட்ட திரி நன்பரே

richard
21-08-2007, 10:45 AM
நன்பரே தாங்கள் கூறியது போல் முழுவதும் படித்து தீர்த்தேன் திருவாளர் மோகனும் திரு்வாளர் இதயம் அவ்ர்களும் மோதிக்கொண்டது தேவையில்லாத ஒன்று நீங்கள் எது தேவையோ(ஜோதிடம் உன்மயா) அதைவிட்டுவிட்டு எமாற்றுகிறார்கள் பொய்,பித்தலாட்டம்,என்று போகத ஊர்களுக்கு வழியை கேட்டு கடைசியில் வேறுவழி மாறிசென்று இருட்டில் நின்றுகொண்டு வெளிச்சம் இல்லை என்கிறீர்

வாதங்கள*ள் ஒரு முடிவுகிட்டாது அதன் உன்மை நிலைஅறிந்தால் மட்டுமே ஒரு வழி மற்றும் தெளிவு உண்டாகும்

முதலில் ஜோதிஷம் என்றால் என்ன, இது எப்படி உண்டானது இதை எப்படி உபயோகபடுத்தினார்கள், இதை தெளிவு பெற்று தெளிவு கான்போம்

ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன் தான் குற்றவாளி ஆகையினால் எமாரற்றுபவனிடம் இருந்து விலகி இருப்பது அறிவுடையோர் இயல்பு, அவர்கள் யாரையும் நிந்திப்பதும் இல்லை,

நாம் (முதலாளி) இரும்பு கடைக்கு சென்று ஸ்டீல் அதாவது கம்பி வாங்க போகிறோம் கடைக்காரர் வேயிங் ஸ்கேலில் இட்டு எடைபோட்டு 2 டன் 600 கிலோ என்கிறார் பனம் கட்டி பொருள் எடுத்து வந்து பனியாளரிடம் கொடுத்தால் சார் எவ்வளவு கம்பி ன்னு கேட்டால் 2 டன் 600 கிலோ என்றால் சார் அந்த கடைக்காரன் உங்களுக்கு மோசம் பன்னி எமாத்திவிட்டான் 1 டன் 300 கிலோதான் இருக்குமென்று சரியான விளக்கத்தோடு சொன்னான், ஸ்டீல் வாங்கிவந்தவருக்கோ ஒறெ புலம்பல் அந்த கடைக்காரன் நம்மை சரியாக எமாற்றிவிட்டானே என்று
ஸ்டீல்கடைக்காரர், கம்பிவேலையால், முதலாளி, இவர் மூன்றில் யாரிடம் தவரு உள்ளது

வெண்தாமரை
21-08-2007, 12:37 PM
ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட உங்கள் பதிவுகளை பார்த்தால் படிக்க ஆர்வம் வரும். தகவல் தந்தமைக்கு நன்றி!

richard
21-08-2007, 01:35 PM
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்

http://www.chennaiiq.com/astrology/english_date_to_tamil_date_conversion.asp

richard
21-08-2007, 01:37 PM
தமிழ் நாட்காட்டி (காலண்டர்)
தமிழ் வருடம், மாதம், மற்றும் கிழமையுடன்.

Dynamic Tamil Calendar
with Tamil Year, Tamil Month, Tamil Day

http://www.chennaiiq.com/astrology/tamil_calendar.asp

தாமரை
21-08-2007, 03:19 PM
விஞ்ஞானம் என்றால் என்ன? நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மட்டுமா?

ஆராயும் நோக்குடன் செய்யப்படும் ஒவ்வொன்றும் விஞ்ஞானம் தான்.

ஜோதிடம் தோன்றிய கதை என்ன? எப்போது தோன்றியது ஏன் தோன்றியது?

குவி ஆடியும் குவி ஆடியும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் ஜோதிடம் தொன்றியிருக்கிறது. ஜோதிடம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் இருந்திருக்கிறது.
கிரேக்கர்களும், ரோமானியர்கலும் ஏன் எகிப்தியர்களும் ஜோதிடத்தை உபயோகித்தனர். அவர்கள் ஜோதிடத்தில் இல்லாதது ராகு கேதுக்கள் மட்டுமே.

அறிவில் மிகுந்தோர் வெற்றுக் கண்ணால் வானம் பர்த்து சனிக்கிரகம் எங்கிருக்கிறது என்று சொல்ல முயற்சி செய்து பாருங்கள்.. முடியாது.

ஆனால் ஆடியில்லாக் காலத்திலே சனிக்கிரகத்தின் பாதையை நிர்ணயித்தது கற்பனையா? ஆய்வா?

வான மண்டலத்து நட்சத்திரக் கூட்டங்களின் வடிவையும், கோடிக்கணக்கான ஒளிப்புள்ளிகளில் வெள்ளி, புதன், வியாழன், சனி, செவ்வாய் என்ற ஐந்து ஒளிப்புள்ளிகள் மட்டும் ஒரு ஒழுங்குடன் நகருவதையும் அவற்றின் ஒழுங்கையும் நிர்ணயித்தது கற்பனையா இல்லை ஆராய்ச்சியா?

கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கையில் அவற்றின் வட்டப் பாதையில் அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து பூமியில் இருந்து நொக்கும் பொழுது அவை சிறிது கலம் பின்னோக்கி செல்லுவதை கவனித்து பதிவு செய்தது ஆராய்ச்சியா இல்ல கற்பனையா?

இந்த கிரகங்கள் இந்த இடங்களில் இருக்கும் பொழுது இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்தன.. நடக்கின்றன எனப் பதிவு செய்வது ஆராய்ட்சியா இல்லை கற்பனையா?

புள்ளியியல் ஆராய்ட்சியும் ஜோதிட ஆராய்ட்சியும் ஒன்றுதானே!

தரக்கட்டுப்பாட்டுத்துறையைப் பாருங்கள். "ரிலையபிளிட்டி அனலிசஸ்" எப்படி செய்யப்படுகிறது. அதுவும் ஒரு கணிப்பு முறையே!.

இன்று ஜோதிடம் சரியான முறையில் கையாளப்படவில்லை என்பதற்காக அதை விஞ்ஞானம் இல்லை என்று சொல்லக் கூடாது..

ஜோதிடத்தின் உண்மை நோக்கம் என்னவென்றால், வானத்தை ஆராய்வது. இயற்கை நிகழ்வுகளுக்கும் வான் ஒளிப் புள்ளிகளின் அமைப்பிற்கும் உள்ள தொடர்பை அலசுவது,

இந்நோக்கம் தடம் மாறி மனிதனின் தனிவாழ்க்கைக்கும் அவன் பிறப்புக்கும் இருக்கும் தொடர்பை அறிய வாய்ப்பாக புள்ளி விவரங்கள் காட்டிய்பொழுது இரண்டாகப் பிரிந்தது.. வான் சாஸ்திரம் தன் பாட்டுக்கு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க ஜோதிடம் மனித வாழ்க்கையினை இதனுடன் இணைத்து ஆராய முற்பட்டது.

இதனால் இது விஞ்ஞானமில்லை என்னும் மாயத்தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் புள்ளியியலைப் போல ஜோதிடம் என்பது தகவல் விஞ்ஞானம் என்பதே உண்மை.

தாமரை
21-08-2007, 03:24 PM
விஞ்ஞானம் தொடர்புடைய எதுவும் நடக்குமா, நடக்காதா என்ற காரணிகளை கொண்டிருக்காது. நான் சொல்கிறேன். விஞ்ஞானம் தன் நம்பகத்தன்மையை பல்வேறு வழிகளில் இன்று வரை நிரூபித்து வருகிறது. அதற்கு சாட்சியாக நான் வாழ்வில் பயன்படுத்தும் ஏறக்குறைய எல்லாவற்றையும் சொல்லலாம். ஒன்று மட்டும் வேண்டும் என்றால் கம்ப்யூட்டர். இப்படி செய்யலாம் என்று சிந்தித்தான். அதை நடைமுறைப்படுத்தினான். கம்ப்யூட்டரை கண்டுபிடித்தான். இன்று நம் கைகளில் கம்ப்யூட்டர் ஆதாரமாக இருக்கிறது.

விஞ்ஞானம் எல்லா காரணிகளை கொண்டு தான் சோதனை சரியாக நடக்குமா நடக்காது என்றாகிறது நண்பரே. உதாரணம் விண்கலம் ஏவ தட்ப வெட்ப நிலை வானிலை இவையணைத்தும் சரியாக இருக்க வேண்டும். தெரியாத ஒரு பொருள் விண்வெளியில் இடித்துவிட்டால் கலம் சேதம் அடையும். ஆக பல ஆயிரம் காரணிகள் உண்டு.

ஜோதிடம் விஞ்ஞானம் என்றால் அதை நிரூபிக்கும் ஒரு பொருள் அல்லது நிகழ்வு சொல்லமுடியுமா..? அரசியலுக்காக சொல்லவில்லை, உதாரணத்திற்காக சொல்கிறேன். இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடராக அறியப்படுபவர் உன்னிகிருஷ்ண பணிக்கர் என்கிற கேரள ஜோதிடர். அதனால் தான் செலவைப்பற்றி கவலைப்படாத ஜெ. தன் முடிவுகளை அவரைக்கொண்டே எடுப்பார். அவர் கணித்து சொன்னபடி செய்ததால் அவர் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றதாக சொல்லப்பட்டது. இந்த தேர்தலிலும் அவர் சொன்னபடி தான் செய்தார். அப்படி என்றால் ஜோதிடம் பொய்யா..? அந்த நம்பிக்கை பொய்யா..? ஜோதிடர் பொய்யரா..? முதலிரண்டு பொய் என்பதில் மோகன் முரண்டு பிடிப்பார். இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடராக கருத்தப்பட்ட அவரே போலியாக இருக்கும் போது மற்ற உண்மையானவர்களை எப்படி இனம் காண்பது.? உழைப்பையையும், உண்மையையும், நேர்மையையும் நம்பாமல் தன் வாழ்க்கையை செழுமையாக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான அரசியல் வாதிகள் ஜோதிடர்களை நாடுகிறார்கள். ஒரு அநியாயத்திற்கு துணை போகும் ஒரு தொழில் எப்படி நல்லதாக இருக்க முடியும்..? உலகில் உள்ள ஜோதிடம் நம்பாத மக்கள் செய்த ஜோதிடப்பொருத்தம் பார்க்காத திருமணங்கள் தோல்வியா அடைந்தன? ஜோதிடம் பார்த்த அனைத்தும் வெற்றியா அடைந்தன..? இவை மனிதன் தன் வாழ்க்கையை பற்றிய பய சிந்தனைகளின் போது அவனை திருப்திபடுத்த ஏற்படுத்தப்பட்ட விஷயங்கள். அவ்வளவு தான்

நான் ஆரம்பத்தில் இருந்து சொல்வது இது தான். நீங்கள் தவறான உதாரணங்களையே எடுக்கிறீர்கள். இவர் தான் Authority என்று யாராவது சொன்னார்களா. போலி டாக்டர் போலி ஜோசியர் இதை நினைவில் கொள்ளுங்கள். எப்படி விஞ்ஞானம் பொய்க்கிறதோ அதுபோலவே ஜோசியமும் பொய்க்கலாம். இல்லாவிட்டால் எல்லா ஜோசியர்களும் இறைவன் ஆகிவிடுவார்கள்.

ஒரு ராக்கெட்டை ஏவி அது கடலில் விழுந்தால் அது மனித அறிவில் ஏற்பட்ட குறைபாடு. ஒரு ராக்கெட்டை பங்களாதேஷிடம் கொடுத்து ஏவச்சொன்னால் கடலில் விழும் வாய்ப்பு அதிகம். அதே இந்தியாவிடமோ அல்லது இந்தியாவை விட விஞ்ஞான வளர்ச்சியில் உயர்ந்த நாட்டிடம் கொடுத்தால் அதன் வெற்றி சதவீதம் நிச்சயம் கூடுதலாக இருக்கும். ராக்கெட் என்பது மனித கண்டுபிடிப்பின் உச்சகட்ட பகுதி. அது இன்னும் நிறைவடையவில்லை என்பதால் இந்த குறைபாடு. இன்னும் 10 வருடங்கள் போனால் ஏவிய எல்லா ராக்கெட்டும் விண்வெளிக்கு போகும். ஆனால், பல நூறு இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் விஞ்ஞானம் என்று நீங்கள் வாதிடும் ஜோதிடம் சொல்லும் எதுவும் பலிக்கப்போவதில்லை.!!

உங்கள் பத்தியில் பதிலும் இருக்கிறது.

பங்களாதேஷ் - ஆரம்பகால ஜோசியர். அவரிடம் போனால் தவறு நிகழலாம்
இந்தியா - சற்று அதிகம் கற்ற ஜோசியர் தவறு நிகழ்வது குறைவு

புரிந்ததா நண்பரே.

குழந்தையை குப்புறப் படுக்க வைப்பதா, மல்லாக்க படுக்க வைப்பதா இல்லை பக்கவாட்டில் படுக்க வைப்பதா என்றே இன்னும் விஞ்ஞானம் முடிவு செய்யவில்லை. அதனால் குழந்தை வள்ர்ப்புத்துறையில் விஞ்ஞானம் இல்லை என்று சொல்ல முடியுமா?

ஆதவா
21-08-2007, 03:26 PM
அண்ணா. ஜோதிடத்தில் ஒரு கிரகத்தின் பாதையெல்லாம் சொல்லுகிறார்களா? (இதுவரை கிளி ஜோதிடம் கூட நான் பார்த்ததில்லை)

தாமரை
21-08-2007, 03:40 PM
அண்ணா. ஜோதிடத்தில் ஒரு கிரகத்தின் பாதையெல்லாம் சொல்லுகிறார்களா? (இதுவரை கிளி ஜோதிடம் கூட நான் பார்த்ததில்லை)

குரு வக்ரம், சனி வக்ரம் என்று கேள்விப் பட்டிருப்பிர்கள், இதன் காரணம் நீள்வட்டப்பாதையில் பூமி சுற்றி வரும் பொழுது சூரியனுக்கு அருகில் உள்ளபொழுது வேகமாய்ப் பயணிக்கும், தொலைவில் இருக்கும் பொழுது மெதுவாய்ப் பயணிக்கும். இதே போல்தான் மற்ற கிரகங்களும். இதனால் சிலசமயங்களில் கோள் நட்சத்திர மண்டலத்தில் பின்னோக்கி பணிப்பது போன்ற தோற்றப் பிறழ்வு இருக்கும். இதை கிரகத்தின் வக்ரகதி என்று அழைக்கிறோம்.

வானத்தைப் பார்க்கமலேயே ஜோதிட சாத்திரம் தயாரித்துள்ள சூத்திரப்படி எந்த கிரகம் எந்த னாளில் வானில் எங்கு இருக்கும் என்று கணிக்கலாம். இந்த சூத்திரத்தின் மூலமே ஜோதிட மென்பொருட்கள் த்யாரிக்கப் பட்டிருக்கின்றன. இதுவும் ஜோதிடம் என்பது விஞ்ஞானம் என்பதற்கு இன்னொரு ஆதாரம்

ஆதவா
21-08-2007, 04:00 PM

பல தகவல்கள் வெளியே வரும் போலிருக்கே??? ஆனால் எனக்கு இந்த வக்ர கதி சுக்ர கதியெல்லாம் தெரியாது... இதுநாள் வரை நான் தெரிந்துகொள்ளவும் இல்லை...

richard
21-08-2007, 06:12 PM
இந்த திரியிலிட்ட 3 ச்லாட் செய்தி நீக்கபட்டுள்ளது காரனம் காப்பி பேஸ்ட் என்ற் விளக்கம் அளித்துள்ளனர்

சுயமாக எழுதவேன்டுமாம் ,பொய்கவிதைகளா சுயமக எழுத,
புகழ்ச்சி பின்னோட்டமா சுயமமாக* எழுத,

இது ஜோதிடம் இதற்க்கு ஆதார பூர்வமான* நூல்களிலும் ஆதார பூர்வமான தளங்களின் சுட்டியை காட்டிதான் பதியமுடியும்

பொய்கவிதைகளையும் புகழ்ச்சி கேலியான* பின்னோட்டங்களையும் சுயமாக பதிக்கலாம்

richard
21-08-2007, 06:13 PM
காப்பியும் பேஸ்டும் நம்மோடு ஒன்றியது காலையில் எழுந்ததும் குளியளளுக்குமுன் பேஸ்ட் இருந்தால் தான் பல்விளக்கமுடியும் பிறகு குளித்து முடித்த பிறகு காப்பி வேன்டும் இப்போது காப்பியும் பேஸ்டும் தினந்தோறும் எவ்வளவு முக்கியம் என்று சர் விஷயத்துக்கு வருவோம் ஜோதிடம் எந்த அளவுக்கு பயன் படுத்தவேன்டும் ஜோதிடத்திற்க்கு ஒரு அளவு கோள் உள்ளது அது யாது எனில் காலத்தை அறியும் ஒரு கருவியாக சோதிடம் இருக்கிறது என்பது என் கருத்து.
சரியே. சோதிடம் ஒரு கைவிளக்கு. இரவில் செல்கிறோம். சாலையின் நடுவில் ஒரு பள்ளம் இருக்கிறது. கைவிளக்கு இருந்ததால் பள்ளம் தெரிகிறது. விலகிப்போய்விடுகிறோம். ஆனால் கைவிளக்கை ஜோதிடத்தை எப்பொழுது,எந்த அளவுக்கு நம்பிப்பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு சோதிடத்தைப் பயன்படுத்தினால் அறிவுடையவன். பயன் பெறுவான்

தாமரை
22-08-2007, 03:58 AM
இந்த திரியிலிட்ட 3 ச்லாட் செய்தி நீக்கபட்டுள்ளது காரனம் காப்பி பேஸ்ட் என்ற் விளக்கம் அளித்துள்ளனர்

சுயமாக எழுதவேன்டுமாம் ,பொய்கவிதைகளா சுயமக எழுத,
புகழ்ச்சி பின்னோட்டமா சுயமமாக* எழுத,

இது ஜோதிடம் இதற்க்கு ஆதார பூர்வமான* நூல்களிலும் ஆதார பூர்வமான தளங்களின் சுட்டியை காட்டிதான் பதியமுடியும்

பொய்கவிதைகளையும் புகழ்ச்சி கேலியான* பின்னோட்டங்களையும் சுயமாக பதிக்கலாம்

சுட்டியை ம*ட்டுமே ப*திப்ப*தே ந*ல்ல*து. அத*ற்குப் பெய*ர்தான் சுட்டித்த*ன*ம்.

பேஸ்டையும் காபியையும் உப*யோகிக்கிறோம். வாய் கொப்புளிக்கிறோம் தெரியும*ல்ல*வா? அதுபோல் சொந்த*க் க*ருத்துக்க*ள் வ*ர*வேண்டும்.

lolluvathiyar
22-08-2007, 07:46 AM
ஜோசியத்தை நான் இதுவரை நம்பவில்லை என்றாலும், ரிச்சார்டும் தாமரையும் த*ரும் விள*க்க*ங்க*ள் உன்மையில் ந*ன்றாக* இருகிற*து. ஏற்று கொள்ளும்ப*டியும் இருகிற*து. தொட*ருங்க*ள் ரிச்ச*ர்ட்

richard
22-08-2007, 08:49 AM
சுட்டியை ம*ட்டுமே ப*திப்ப*தே ந*ல்ல*து. அத*ற்குப் பெய*ர்தான் சுட்டித்த*ன*ம்.

பேஸ்டையும் காபியையும் உப*யோகிக்கிறோம். வாய் கொப்புளிக்கிறோம் தெரியும*ல்ல*வா? அதுபோல் சொந்த*க் க*ருத்துக்க*ள் வ*ர*வேண்டும்.

தாங்கள் காபியில் வாய் கொப்பளிப்பதை முத*ல் முறையாக கேள்வி படுகிறேன்

richard
22-08-2007, 08:53 AM
சுட்டியை ம*ட்டுமே ப*திப்ப*தே ந*ல்ல*து. அத*ற்குப் பெய*ர்தான் சுட்டித்த*ன*ம்.

பேஸ்டையும் காபியையும் உப*யோகிக்கிறோம். வாய் கொப்புளிக்கிறோம் தெரியும*ல்ல*வா? அதுபோல் சொந்த*க் க*ருத்துக்க*ள் வ*ர*வேண்டும்.

[COLOR="DarkRed"]ப*ல*ன் த*ரும் ப*ஞ்சாங்க* குறிப்புக*ள்

ஆல*ய*ம் த*ரும் ஆபூர்வ*வ* செய்திக*ள்[/COளோற்]

முழுவிப*ர*ம் பெற* சுட்டிக்கு செல்ல*வும்

http://www.vikatan.com/

ஜோதிட*த்தை ப*ற்றி மேலும் அறிய*

http://en.wikipedia.org/wiki/Main_Page

இந்திய வேதிக் ஜோதிடம்

http://www.indianvedicastrology.com/

வேதிக் ஜோதிடம்

http://www.vedicastrology.com/

அன்புரசிகன்
22-08-2007, 08:58 AM
ரிச்சர்ட் அவர்களே தேவையற்ற மேற்கோள்களால் உங்கள் பதிவுகளை நீக்கவேண்டிய அவசியத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தமாட்டீர்கள் என எண்ணுகிறேன்.

இதயம்
22-08-2007, 09:14 AM
தாங்கள் காபியில் வாய் கொப்பளிப்பதை முத*ல் முறையாக கேள்வி படுகிறேன்

ஐயா ரிச்சர்ட் அவர்களே..
ஆரம்பத்தில் உங்கள் பெயரே விமர்சனத்திற்குள்ளானது. பெயர் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்பதால் அதைப்பற்றி யாரும் விவாதிக்க விரும்பவில்லை. ஏற்கனவே ஜோதிடம் குறித்த கார, சாரமான கருத்துபோர் நிகழ்ந்து ஓய்ந்த நேரத்தில் நீங்கள் திடீரென்று இங்கு முளைத்து ஜோதிடம் பற்றிய பதிவுகள் இட்டீர்கள். உங்கள் பதில்கள் விலாவரியான விளக்கங்களை கொண்டிருந்ததால், ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஜோதிடத்தை மற்றவர்கள் நம்ப ஏதோ ஒரு கவரும் சக்தி இருக்கிறது என்று நினைத்தேன். அந்த எண்ணத்தில் மண் விழுவது போல் நீங்கள் எழுதியவை அனைத்தும் உங்கள் கருத்தல்ல, இணையத்திலிருந்து எடுத்து ஒட்டியவை எனத்தெரியவந்தது.

நம் மன்ற விதிப்படி முழுவதுமான ஆங்கில பதிவுகள், வெட்டி ஒட்டும் கருத்துக்கள் ஏற்கப்படுவதில்லை. சுயசிந்தனையில் உருவாகும் கருத்துகள் தான் படைப்பவரையும், படிப்பவரையும் ஊக்குவிக்கும். அந்த வகையில் மன்ற விதிக்கு மாறான வகையில் வெட்டி, ஒட்டிய கருத்துக்களை நீக்கியதில் எந்த தவறும் இல்லை. இது உங்கள் மீதும் மட்டுமல்ல, நீங்கள் தகவல்கள் அளித்த ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கையை குறைக்கும் என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை.? எண்ணிடலங்கா கருத்துக்குவியல்களை கொண்ட தகவல் சுரங்கம் இணையம். அதில் நாற்றமெடுக்கும் குப்பைகளும் உண்டு.

தமிழ் மன்றம் போன்ற பகிரும் களங்களில் பதிக்க தகவல்கள் இணையத்தில் எடுப்பதும், அதை இங்கே வெட்டி ஒட்டுவதும் மிக சுலபமானது. இதை மன்றம் ஆதரிப்பதில்லை. உங்களுடைய சொந்த படைப்புக்களை மட்டுமே எதிர்ப்பார்க்கிறது. இதை அறியாமல் யாரோ படைத்த படைப்புக்களை தன் பெயரில் இடுவது அடுத்தவர் உடமையை நாம் உரிமை கொண்டாடுவது போலாகிவிடும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அப்படி செய்தவர்களை மன்றம் கண்டித்த, நீக்கிய வரலாறுகள் உண்டு.

முடிந்தால் சுயமாக பதிவுகளை படையுங்கள். அல்லது படியுங்கள். அதை விடுத்து "பொய் கவிதை, புகழ்ச்சி, கேலி பின்னூட்டம் மட்டுமே சுயமாக இடமுடியும்" என்று கிண்டல் செய்வது சரியில்லை. அது மன்ற நண்பர்களின் திறமைகளை அவமதிப்பது போலாகிவிடும். இங்கே உயர்ந்த பதிவுகளை தரும் வைரங்கள் தான் அதிகம் உண்டு. கரிகளை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதை நீங்கள் சொல்லவும் அனுமதி இல்லை.!!

ஆன்மீகம் தொடர்பானவற்றை விவாதப்பகுதியில் இட்டு நம்பிக்கைகளை சர்ச்சைக்குள்ளாக்காதீர்கள். நீங்கள் புதியவர் என்பதால் மன்ற விதிகள், நடைமுறைகள் தெரியாது இருக்கலாம். எனவே மன்ற விதிகளை படியுங்கள். மற்றவர்களின் பதிவு முறைகளை நோட்டமிடுங்கள். புரிந்துவிட்டது என்ற நிலை வந்த பிறகு உங்கள் படைப்புக்களை அளியுங்கள். அதுவரை பொறுமை காத்திருங்கள்.! முக்கியமாக மன்ற நிர்வாகிகளை கிண்டலுரைப்பது, விதண்டாவாதம் பேசுவது நிறுத்துங்கள்..!

richard
22-08-2007, 09:27 AM
"பொய் கவிதை, புகழ்ச்சி, கேலி பின்னூட்டம் மட்டுமே சுயமாக இடமுடியும்" என்று கிண்டல் செய்வது சரியில்லை. அது மன்ற நண்பர்களின் திறமைகளை அவமதிப்பது போலாகிவிடும். இங்கே உயர்ந்த பதிவுகளை தரும் வைரங்கள் தான் அதிகம் உண்டு..

எந்த பகுதி என்று சுட்டி காட்டுங்கள்

இதயம்
22-08-2007, 09:29 AM
சுயமாக எழுதவேன்டுமாம் ,பொய்கவிதைகளா சுயமக எழுத,
புகழ்ச்சி பின்னோட்டமா சுயமமாக* எழுத,

இது ஜோதிடம் இதற்க்கு ஆதார பூர்வமான* நூல்களிலும் ஆதார பூர்வமான தளங்களின் சுட்டியை காட்டிதான் பதியமுடியும்

பொய்கவிதைகளையும் புகழ்ச்சி கேலியான* பின்னோட்டங்களையும் சுயமாக பதிக்கலாம்

இது நீங்கள் பதித்தது தானே..?!!

richard
22-08-2007, 09:32 AM
இது நீங்கள் பதித்தது தானே..?!!

இங்கே உயர்ந்த பதிவுகளை தரும் வைரங்கள் தான் அதிகம் உண்டு..

நான் கேட்ட*து உய*ர்ந்த* ப*திவுக*ளின் சுட்டியை

இதயம்
22-08-2007, 09:34 AM
இங்கே உயர்ந்த பதிவுகளை தரும் வைரங்கள் தான் அதிகம் உண்டு..

நான் கேட்ட*து உய*ர்ந்த* ப*திவுக*ளின் சுட்டியை

வைரங்களை அடையாளம் காணமுடியாதது உங்கள் அறிவீனம். அதை நான் சொல்லியும் ஒன்றும் ஆகப்போவதில்லை.!!

இதயம்
22-08-2007, 09:38 AM
"பொய் கவிதை, புகழ்ச்சி, கேலி பின்னூட்டம் மட்டுமே சுயமாக இடமுடியும்" என்று கிண்டல் செய்வது சரியில்லை. அது மன்ற நண்பர்களின் திறமைகளை அவமதிப்பது போலாகிவிடும். இங்கே உயர்ந்த பதிவுகளை தரும் வைரங்கள் தான் அதிகம் உண்டு..

எந்த பகுதி என்று சுட்டி காட்டுங்கள்

இம்மன்றத்தில் கதை, கவிதை, கட்டுரை, அறிவியல், கல்வி, இலக்கியம், விவாதம், வணிகம், பொருளாதாரம், கணினி, இணையம், விளையாட்டு, அரசியல், ஆன்மீகம், நூல், பண்பட்டவர் பதிவுகள் என்று ஒவ்வொரு பகுதிகளும் வைரங்கள் இறைந்து கிடக்கும் அற்புத சுரங்கம், அதை அறியாது "எங்கே இருக்கிறது?" என்று கேட்ட உங்கள் மேல் அனுதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை எனக்கு..!!

அமரன்
22-08-2007, 09:55 AM
அன்பு நண்பர் ரிச்சட்டுக்கு.
இங்கே பல வைரங்கள் உண்டு என்ற இதயம் அவர்களின் கூற்று மிக சரியானது. அவற்றின் சுட்டிகள் கொடுக்கவேண்டுமானால் எத்தனையோ சுட்டிகள் கொடுக்கவேண்டி வரும். மன்றத்தை சுற்றிப்பாருங்கள். நீங்களே கண்டுகொள்வீர்கள். புரிந்தும்கொள்வீர்கள். ஏலவே சுற்றிப்பார்த்து வைரங்களின் ஜொலிப்பு உங்களுக்கு பிடிபடவில்லையாயின் என்ன செய்வது. பார்வைகளின் தரங்களே ஒவ்வொன்றையும் தரப்படுத்துகிறது. உங்கள் பார்வையின் தரம் மிக்க அதிகமாக இருக்கலாம்.
நிற்க,
உங்கள் பிரச்சினை என்ன? உங்கள் பதிவுகளை அகற்றியமைதானே. அதற்கான காரணம் வெட்டி ஒட்டியமை என்பதை நீங்கள் கண்டிக்கின்றீர்கள். அதற்கு நீங்கள் சொல்வது

ஜோதிடம் அப்படியில்லை மாதம் சித்திரை என்றால் சிதிரை மாதம் என்று கூருவார்கள்,ஆடி மாதம் என்றால் ஆடி மாதம் தான் எந்த தமிழ் வெப்தளங்களிளும் யாரும் வேறு பெயர்களை பதிப்பதில்லை இதற்க்கு காப்பிரைட் கிடையாது இது உலக பொது நூல்.

என்னும் வாதம். மன்றத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தமிழ் தட்டச்சை ஊக்கப்படுத்தல் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சித்திரை என எங்கோ இருப்பதை அப்படியே வெட்டி ஒட்டும்போதா ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்யும்போதா மன்றத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது?

எந்த ஒரு படைப்பாளியையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்குவதையும் அவர்கள் திறமைகளை குறைத்து கொச்சைப்படுத்துவதையும் மன்றம் என்றுமே அனுமதிப்பதுமில்லை. மன்றம் அதைச் செய்வதுமில்லை.

இத்துடன் இவ்விவாதத்தை முடித்துக்கொண்டு புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றேன்.
நன்றி.
அன்புடன்
அமரன்

lolluvathiyar
22-08-2007, 11:26 AM
ரிச்சர்ட் காப்பி பேஸ்ட் பன்னினால் இந்த மன்றத்தில் இடம் இருக்காது. அதை தவிர்த்து விடுங்கள்.
நல்லதோ கெட்டதோ சொந்தமாக படையுங்கள். முதலில் மன்றத்தை சுற்றி பாருங்கள் நன்பர்களை அமைத்து கொள்ளுங்கள். பிறகு படைக்க ஆரம்பியுங்கள்
வாழ்த்துகள்

வெண்தாமரை
22-08-2007, 12:00 PM
உயாந்த பதிவுகள் நிறையவே இருக்கிறது.. அப்படி உயர்ந்த பதிவுகள் இருந்ததால்தான் இந்த மன்றத்தில் எத்தனை பேர் உறுப்பினராக இருக்கிறார்கள். தாங்கள் ஒரு தடவை மன்றத்தை வலம்வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.. தேவையில்லாமல் கோபம் கொள்ள வேண்டாம். மற்றவர்களை கிண்டல் செய்யவும் வேண்டாம்.

அன்புடன்
வெண்தாமரை

richard
22-08-2007, 01:00 PM
இம்மன்றத்தில் கதை, கவிதை, கட்டுரை, அறிவியல், கல்வி, இலக்கியம், விவாதம், வணிகம், பொருளாதாரம், கணினி, இணையம், விளையாட்டு, அரசியல், ஆன்மீகம், நூல், பண்பட்டவர் பதிவுகள் என்று ஒவ்வொரு பகுதிகளும் வைரங்கள் இறைந்து கிடக்கும் அற்புத சுரங்கம், அதை அறியாது "எங்கே இருக்கிறது?" என்று கேட்ட உங்கள் மேல் அனுதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை எனக்கு..!!

ந*ன்றி ந*ன்ப*ரே ஒரு முறை எல்லாவ*ற்றையும் பார்வையிட்டு
என்க*ருத்தையும் ப*திகின்றேன் ந*ன்றி

இதயம்
22-08-2007, 01:01 PM
ந*ன்றி ந*ன்ப*ரே ஒரு முறை எல்லாவ*ற்றையும் பார்வையிட்டு
என்க*ருத்தையும் ப*ட்கிகின்ற*ன் ந*ன்றி

நன்றி உங்கள் புரிதலுக்கு..!

richard
22-08-2007, 02:30 PM
அன்பு நண்பர் ரிச்சட்டுக்கு.
இங்கே பல வைரங்கள் உண்டு என்ற இதயம் அவர்களின் கூற்று மிக சரியானது. அவற்றின் சுட்டிகள் கொடுக்கவேண்டுமானால் எத்தனையோ சுட்டிகள் கொடுக்கவேண்டி வரும். மன்றத்தை சுற்றிப்பாருங்கள். நீங்களே கண்டுகொள்வீர்கள். புரிந்தும்கொள்வீர்கள். ஏலவே சுற்றிப்பார்த்து வைரங்களின் ஜொலிப்பு உங்களுக்கு பிடிபடவில்லையாயின் என்ன செய்வது. பார்வைகளின் தரங்களே ஒவ்வொன்றையும் தரப்படுத்துகிறது. உங்கள் பார்வையின் தரம் மிக்க அதிகமாக இருக்கலாம்.
நிற்க,
உங்கள் பிரச்சினை என்ன? உங்கள் பதிவுகளை அகற்றியமைதானே. அதற்கான காரணம் வெட்டி ஒட்டியமை என்பதை நீங்கள் கண்டிக்கின்றீர்கள். அதற்கு நீங்கள் சொல்வது

என்னும் வாதம். மன்றத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தமிழ் தட்டச்சை ஊக்கப்படுத்தல் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சித்திரை என எங்கோ இருப்பதை அப்படியே வெட்டி ஒட்டும்போதா ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்யும்போதா மன்றத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது?

எந்த ஒரு படைப்பாளியையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்குவதையும் அவர்கள் திறமைகளை குறைத்து கொச்சைப்படுத்துவதையும் மன்றம் என்றுமே அனுமதிப்பதுமில்லை. மன்றம் அதைச் செய்வதுமில்லை.

இத்துடன் இவ்விவாதத்தை முடித்துக்கொண்டு புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றேன்.
நன்றி.
அன்புடன்
அமரன்

நம் பழம் பெரும் ஜோதிட நூல்களான காலபிரகாசிக,
ஜாதக பாரிஜாதஹ, பிருகுஸூத்ர, பிரஹத்ஜாதஹ, பலதீபிஹ,
பிரஹத் ப்ராசர ஹோர சாஸ்த்ர,உத்ரகாலம்ரத சராவளி போன்ற நூல்கக்ளான எழுதிய வராஹர்,வாக்படர்,ஸ்ரக் போன்றவர்களாளே நான் எழுதிய கட்டுரையை உரிமை கொண்டாட முடியாது ஏனென்றால் அவர்கள் எழுதியது சமஸ்கிருதம், நான் எழுதியது மொழியாக்கப்பட்ட தமிழில் ஜோதிடத்தை பற்றி எந்த ஒரு ஞானமும் இல்லாமல் அதை என் நீக்கவேண்டும் தவரு செய்வதை செய்துவிட்டு என்னை ஏன் குற்றம் சொல்லவேண்டும் உங்களுக்கு யார் சொன்னது நான் எழுதியது தவரூ உள்ளது என்று அப்படி தவரு இருந்தால் எனக்கு தெறிவித்தால் நான் விளக்கம் தெறிவித்து மறு மொழிகூறி இருப்பேன் இது போன்ற ஈனமான தொழிலை எந்த கற்றரிந்தவரும் செய்யமாட்டார்கள், இதற்க்கு மேலும் மன்றத்தில் மிரட்டல்கள் வருகிறது இது கற்றரிந்தவர்கள் செய்யும் தொழிலா ஒரு நல்ல படைப்பை கருத்தாழமிக்க பதிவை
தமிழில் பதிக்கலாம் என்றால் இப்படி ஒரு போர் மூள்கிறது முதலில் வந்தவறை வரவேற்க்க கற்று கொள்ளுங்கள், ஜோதிடத்தைன் பற்றி தெறியாமல் ஒருகட்டுரை எழுத முடியுமா காப்பி பேஸ்ட் செய்யமுடியுமா? நான் பல சுட்டிகளை தருகிறேன் உங்களாள் காப்பி பேஸ்ட் செய்து தொகுத்து வழங்கமுடியுமா முடியாது ஏனென்றால் எந்த தொழிலும் அதை பற்றி தெறிந்தால் தான் தொகுத்து வழங்கமுடியும் எதுவும் தெறியவில்லை என்றால் பதிவை பொறாமை குனம் கொன்டு நீக்கததாம் முடியும்,கோழிகளுக்கு தேவை கம்பும் தினையும் தான் அதற்க்கு விலைமதிப்புள்ள வைரத்தையோ நவரத்தின கற்க்களையோ போட்டால் அது என்ன செய்யும் பாவம் அதற்க்கு தேவை கம்பு,தினை கேழ்வரகு,நெல்மனி அரிசி இவைதான் அதுதான் இங்கு ந*ட*ந்துள்ள*து

lolluvathiyar
23-08-2007, 05:33 AM
கோழிகளுக்கு தேவை கம்பும் தினையும் தான் அதற்க்கு விலைமதிப்புள்ள வைரத்தையோ நவரத்தின கற்க்களையோ போட்டால் அது என்ன செய்யும்

நன்பரே நாங்கள் கோழியாகவே இருக்கிறோம், எங்களுக்கு நெல்லும் கொல்லும் போதும்.

கோப படாதீர்கள் நன்பரே காப்பி பேஸ்ட் தானே பன்ன வேண்டாம் என்கின்றனர். பொருமையாக உங்கள் கருத்துகளையும் விளக்கங்களையும் கலந்து உங்கள் படைப்புகளை தாருங்கள். யாரையும் அனாவிசியமாக திட்டாதீர்கள். அதனால் எந்த பயனும் இல்லை

ஓவியன்
23-08-2007, 05:42 AM
ரிச்சர்ட் மன்றத்திலிருந்து தனாகவே விலகிவிட்டார்.........

இனி நாம் அவரது பதிவுகளை மறந்து மற்றைய விடயங்களைக் கவனிக்கலாம் நண்பர்களே.....! :natur008:

இதயம்
23-08-2007, 05:47 AM
ரிச்சர்ட் மன்றத்திலிருந்து தனாகவே விலகிவிட்டார்.........

இனி நாம் அவரது பதிவுகளை மறந்து மற்றைய விடயங்களைக் கவனிக்கலாம் நண்பர்களே.....! :natur008:

அது உண்மையான ரிச்சர்ட் இல்லை..! ரிச்சர்ட் என்ற பெயரில் ஒரு உள்நோக்க தந்திரத்துடன் வந்த மந்திர ஆசாமி என்பது எனக்கு தெரியும்..!! தந்திரம் பலிக்கவில்லை என்று தெரிந்தவுடன் தலைமறைவாகிவிட்டார்..!! ;) இது போன்ற நிழல் மனிதர்களின் செயல்பாடுகள் மன்றத்தில் அதிகரித்து வருகின்றன.!!

விடுங்கள்.. வேறு ஏதாவது பயனுள்ள விஷயத்தை பற்றி பேசுவோம்..!

தங்கவேல்
24-08-2007, 02:13 AM
சின்ன விஷயத்துக்கு இப்படியா ? வருத்தம் தான் வருகின்றது..

மாதவர்
24-08-2007, 03:10 AM
புலவர்கள் மோதிக்க்கொள்ளக்க்கூடாது.
வாதம் செய்யலாம்
பிடிவாதம் வேண்டாம்
அன்பர்களே!!!

இன்பா
24-08-2007, 04:47 PM
ரிச்சர்ட் மன்றத்திலிருந்து தனாகவே விலகிவிட்டார்.........

இனி நாம் அவரது பதிவுகளை மறந்து மற்றைய விடயங்களைக் கவனிக்கலாம் நண்பர்களே.....! :natur008:

ஜாதகம் சரியா தவற என்பதெல்லாம் தெறியாது, ஆனால் கடந்த மாதம் நாடி ஜோதிடம் பார்க்க போயிருந்தேன், அதில் ஒரு சில விடயங்கள் திகைக்க வைத்தது.

அதைப் பற்றி தங்கள் கருத்துக்கள் தெறிவியுங்களேன்....

உதயசூரியன்
24-08-2007, 05:02 PM
எல்லாம் எழுத பட்ட ஒன்று என்றால்.. இங்கே இருக்கு என்று சொல்வது வியப்பு.. அதை விட.... அதை பிரபல படுத்துவற்கு செய்யும் விளம்பரங்கள் அதை விட நகைப்பு...
இதற்காக எனது நண்பர்கள் ஒரு முஸ்லிம் பையனை அழைத்து சென்றோம்....
எல்லாம் 0 வாகிவிட்டது

மற்றதெல்லாம் ஒரு குன்ஸா சொல்றது தான்

வாழ்க தமிழ்

இன்பா
24-08-2007, 05:09 PM

சிலவைகள் வியாபாரமாக இருந்தாலும், ஒரு சிலவை ஆச்சர்யப்பட வைக்கிறது, குறிப்பாக என் பெயர் மற்றும் என் சொந்த ஊரை கண்டுப்பிடித்து....

இது எப்படி சாத்தியம் நீங்களே சொல்லுங்கள்...

உதயசூரியன்
24-08-2007, 05:14 PM
சிலவைகள் வியாபாரமாக இருந்தாலும், ஒரு சிலவை ஆச்சர்யப்பட வைக்கிறது, குறிப்பாக என் பெயர் மற்றும் என் சொந்த ஊரை கண்டுப்பிடித்து....

இது எப்படி சாத்தியம் நீங்களே சொல்லுங்கள்...

அதை தான் சொன்னேன்.....
அதில் பாருங்க... நம்ம பேரை முழுவதும் சொல்ல மாட்டார்கள்...
அதை நம்ம வாயாலேயே சொல்ல வைத்து சொல்வார்கள்...

என்ன சரி தானே..

பக்குவ பட்டால் எல்லாம் சரியாகி விடும்....

வாழ்க தமிழ்