PDA

View Full Version : காதலன்



அமரன்
15-06-2007, 06:57 PM
இடப்பக்கம்
இடந்தந்தேன்
முச்சந்தியில்
நிற்கின்றேன்
பிள்ளையார்போல

பென்ஸ்
15-06-2007, 07:07 PM
பிள்லையார் முச்சந்தியில் இருப்பதற்க்கான காறணமா நீர் முச்சந்தியில் நிற்க்க் காரணம்???
இடப்பக்கம் உமையவளுக்கு கொடுத்து தன்னில் பாதி அவள் ஆன பின் மறு பாதியை யாருக்கு கொடுக்க வீதியில் நிற்க்கிறீர்...???
கொசுறு: பெண்ணிடம் மனதை மட்டும் கொடுக்கவும், அதுவும் தவணை முறையில்.

அக்னி
15-06-2007, 07:13 PM
இடப்பக்கம்
இடந்தந்தேன்
முச்சந்தியில்
நிற்கின்றேன்
பிளையார்போல
இதயத்தக் கொடுத்து காதலித்ததால் வந்த நிலையைத்தானே கூறுகின்றீர்கள்?
அப்படியானால், நன்று...
அல்லது அறிஞர் சொல்வது போல வலப்பக்கம் அணைக்க நின்றால்,
நற நற... (பல் நெறுமும் சத்தம்)

பென்ஸ்
15-06-2007, 07:20 PM
ஒரு பெண் உன் இடப்பக்கத்தை பார்த்தால் உன் இதயத்தை பார்க்கிறள் என்று நினைக்கிறிங்களா அக்னி, கவணம் அவள் சட்டை பாக்கெடில் எவ்வளவு இருக்குன்னு பார்க்கலாம்.

அக்னி
15-06-2007, 07:41 PM
ஒரு பெண் உன் இடப்பக்கத்தை பார்த்தால் உன் இதயத்தை பார்க்கிறள் என்று நினைக்கிறிங்களா அக்னி, கவணம் அவள் சட்டை பாக்கெடில் எவ்வளவு இருக்குன்னு பார்க்கலாம்.
அதான் நான் பாக்கெட் வைக்காத சட்டை மட்டுமே போடுறனான்.

அமரன்
15-06-2007, 07:42 PM
ஒரு பெண் உன் இடப்பக்கத்தை பார்த்தால் உன் இதயத்தை பார்க்கிறள் என்று நினைக்கிறிங்களா அக்னி, கவணம் அவள் சட்டை பாக்கெடில் எவ்வளவு இருக்குன்னு பார்க்கலாம்.
பாக்கெட்டை பார்த்தாலும் காலி
இதயத்தை பார்த்தாலும் காலி
இடப்பக்கமென்றாலே காலிதான்

(கீப் இட் அப்)

இளசு
15-06-2007, 09:49 PM
தொன்மங்களை துணைக்கழைத்து
அமரன் சொன்ன புதுக்கவிதையும்
நண்பர்கள் தந்த நிதர்சன பின்னூட்டங்களும்
அருமை.. உண்மை!

தாமரை
16-06-2007, 02:48 AM
இடப்பக்கம் இடம் தந்து
அன்னை இதயம் பெற்றான்
தாயுமானவன்.
(திருச்சிக்காரங்களுக்கு சமர்ப்பணம்)
======================================
இடப்பக்கம் காலி வைக்காதே
வலப்பக்கம் வருவாள்
காளி
======================================

உள்ளொன்று வைத்து
புறமொன்றா
இருபுறமும் காலி
இடப்பக்கம்

======================================

முற்சந்திப் பிள்ளையார் முன்
நிற்சந்திப் பிழைகள்
ஒற்று மறந்தவர்
ஒன்ற மறந்தார்

சிவா.ஜி
16-06-2007, 04:30 AM
அவள் இடப்பக்கம் நுழைந்து மெல்ல முழுவதையும் ஆக்ரமித்து,மூளையிலும் அமர்ந்துவிட்டதால் நீங்கள் மூலையில் நிற்கவேண்டி வந்து விட்டதா?

அமரன்
16-06-2007, 06:26 AM
அவள் இடப்பக்கம் நுழைந்து மெல்ல முழுவதையும் ஆக்ரமித்து,மூளையிலும் அமர்ந்துவிட்டதால் நீங்கள் மூலையில் நிற்கவேண்டி வந்து விட்டதா?
இடப்பக்கம் பார்த்தவளை
இதயத்தில் இருத்தினேன்
குருதியைக் குடித்தாளோ
உயிரை வாங்குகின்றாள்.