PDA

View Full Version : உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்...

masan
15-06-2007, 02:40 PM
கரும்புலிகள் 2

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்-அட உலகுக்கெங்கே இதுபுரியும்
கருவேங்கைகள் விடைபெறும் வேளையில் நாம்படும்,
வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ...ஆ
வேதனை யாருக்கடா தெரியும்ம்......

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்-அட உலகுக்கெங்கே இதுபுரியும்
கருவேங்கைகள் விடைபெறும் வேளையில் நாம்படும்,
வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ...ஆ
வேதனை யாருக்கடா தெரியும்ம்......

போய்வருகிண்றோம் போய்வருகிண்றோம் எண்றிவர்
எம்மிடம்சொல்வார்கள்-
இவர் பூமுகம்பார்த்து போய்வரச்சொல்வோம் புன்னகையாலே கொல்வார்கள்

(உள்ளுக்குள்ளே...)
பொத்திப் பொத்தி கைகளிலிவரை பூவாய் வளர்க்கிறோம்
கரும்புலிகளுக்கெங்கள் உயிரினை ஊட்டிப் புயலாய் வளர்க்கிறோம்
காலம்வரையும் தோள்களிலிவரை சுகமாய் சுமக்கிறோம்
காலம்வரையும் தோள்களிலிவரை சுகமாய் சுமக்கிறோம்-இவர்
கைகளையாட்டி போனபின்னாலே மறைவாய் அழுகிறோம்

(உள்ளுக்குள்ளே...)
உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே உறவினை வளர்ப்பார்கள்-இந்த
உறவுகள் ஒருநாள் விலகவேநிண்று எரிந்திடப்போவார்கள்
பாட்டும் கூத்தும் பகிடியுமாக பால்குடி போலிருப்பார்
பாட்டும் கூத்தும் பகிடியுமாக பால்குடி போலிருப்பார்-பகை
மீதினிலிவர்கள் மோதிடும்போது ஞானிகளாயிருப்பார்.

(உள்ளுக்குள்ளே...)
வெடித்திடும்நாளை விரல்களில் எண்ணி கணக்கெடுத்திருப்பார்கள்
எந்தவேளையும் பகைவன் மீதினிலெரியும் நெருப்பினிலிருப்பார்கள்
அடிக்கடி எழுதும் வரிகளில் அண்ணன் முகத்தினைக் கேட்பார்கள்
அடிக்கடி எழுதும் வரிகளில் அண்ணன் முகத்தினைக் கேட்பார்கள்
வழியனுப்பிடும் கடைசி நொடியினில்லெங்கள் உயிரினில் பூப்பார்கள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்-அட உலகுக்கெங்கே இதுபுரியும்
கருவேங்கைகள் விடைபெறும் வேளையில் நாம்படும்,
வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ...ஆ
வேதனை யாருக்கடா தெரியும்ம்......

அக்னி
15-06-2007, 04:39 PM
மாசன் அவர்களே,
பாடலுக்குரிய விபரங்களையும் பதிவிடுங்களேன்.
அது, அவர்களுக்குச் செய்யும் சிறப்பு என்பதோடு,
தகவல்களை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளவும் உதவும்...

நன்றி!

masan
15-06-2007, 05:18 PM
அக்னி அவர்களே நான் வேறு ஒரு திரியில் கரும்புலிகள் பற்றி தரலாம் என நினைக்கின்றேன்

அக்னி
15-06-2007, 05:20 PM
அக்னி அவர்களே நான் வேறு ஒரு திரியில் கரும்புலிகள் பற்றி தரலாம் என நினைக்கின்றேன்
மாசன் பண்பட்டவர் பகுதியில் கொடுங்கள்...
அது வீண் சர்ச்சைகளைத் தவிர்த்துவிடும்...

அமரன்
15-06-2007, 06:35 PM
அக்னி சொல்வதுபோல் பண்பட்டவர் பகுதியில் பதியுங்கள்.