PDA

View Full Version : உன்னால்



இனியவள்
15-06-2007, 07:45 AM
எல்லா நம்பிக்கைகளும்
உடைத்தெறியப்பட்டு
ஒவ்வொரு கணங்களும்
மிகவும் கனமான ஏக்கத்துடன்
தொடர்கிறது - உன்னால்

உண்மையான சந்தோஷத்தை
தொலைத்து விட்டு
போலியான சந்தோஷத்தை
முகத்தில் சுமந்து அலைகிறேன்
நாளும்- உன்னால் !

சலனமில்லாத இராத்திரியில்
தூக்கத்தை தொலைத்து
தினமும் தலையணை
நனைகிறேன் - உன்னால்.....!

அன்பும் அரவணைப்பும்
உறவுகளிடம் செத்துப் போன
பின்பும் வாழ்கிறேன்
எதனால் உன்னால்

அக்னி
15-06-2007, 08:02 AM
நம்பிக்கைகள்
உடைக்கப்பட்டது உன்னால்,
நம்பிக்கை தந்தது
நீ என்பதால்
உடைத்தாயோ..?

சந்தோஷம்
தகர்க்கப்பட்டது உன்னால்,
சந்தோஷம் தந்தது
நீ என்பதால்
தகர்த்தாயோ..?

ஆறுதல்
பறிக்கப்பட்டது உன்னால்,
ஆறுதல் தந்தது
நீ என்பதால்
பறித்தாயோ...?

இவ்வளவும்
எடுத்துவிட்டு
வாழச்சொன்னால்...,
நான் என்ன
கல்லறையா...
பிணம் சுமக்க..?

அழகான கவிதை பார்த்தேன்...
எனக்குள்ளும் வரிகள் எழுந்தன...
பாராட்டுகின்றேன்..,
சோகத்தை அல்ல,
சோகத்தில்
தெறித்து விழும்
கவிதையை...

அமரன்
15-06-2007, 08:11 AM
எல்லாம் தந்தது காதலா
தந்தவனே(ளே) எடுத்துக்கொண்டால்
அது கடவுளாமே
காதல் கடவுளா