PDA

View Full Version : வான் விழியாள்ஷீ-நிசி
15-06-2007, 04:43 AM
நீல வானில் உலாவும்...
வெள்ளை நிறத்தில்
அந்த வெண்ணிலவு!

வெள்ளை வானில் உலாவும்....
கருமை நிறத்தில்
அவள் கண்ணிலவு!

யார் திட்டியது கடுமையாக?!
அந்த வெண்ணிலவு
அழுகிறதே கண்ணீராய்!

எந்த தேசம் வறுமையாக?!
அவள் கண்ணிலவு
பொழிகிறதே மழை நீராய்...

அவளின்.....

விழிகள் உறங்கும்
ஒவ்வொரு இரவும்
அமாவாசைதான்! -அன்று,
பவுர்ணமியே என்றாலும்!

அவளின்.....

விழிப்படலத்தில்,
செந்நிறத்தில் படர்ந்திருக்கும்
மரமில்லாமல் சில கிளைகள்....
மின்னல் கீற்றுகளாய்!

அவளின்.....

விழிகளின் மேலே
வளைந்திருக்கும்
ஒற்றை நிறத்தில்
வில்களிரண்டு!
அதிசய வானவில்லாய்!

அவளின்.....

விழிகளைச் சுற்றிலும்
இமை புற்கள்,
பெய்கின்ற மழையாக....

அவளின்....

ஒரு விழி
மிகப்பெரிய
அந்த வானமாய்!

இரண்டு மிகச்சிறிய
வானங்கள்
அவள் விழிகளாய்!

நீ!
மீன்விழியாள் மட்டுமல்ல
வான் விழியாளும் தான்!

Sendhilkumaar
15-06-2007, 05:09 AM
மிகவும் அருமை...

அக்னி
15-06-2007, 05:21 AM
விழிகளை வானுக்கு உருவகித்தது புதுமை... அருமை... அழகு...
நன்று ஷீ-நிசி...
விழியும் விழி சார்ந்த இடங்களுமாக எல்லாவற்றையும் தொட்டுப்போகும் கவிதை, கருத்தைக் கவர்கின்றது...
பாராட்டுக்கள்...

பிச்சி
15-06-2007, 05:45 AM
ஷீ அண்ணா. சுபெர் கவிதை அண்ணா. இயற்கையை நல்ல நனைஞ்சு எழுதறீங்க.. ரெயலி சூபெர்

ஷீ-நிசி
15-06-2007, 06:01 AM
நன்றி செந்தில், அக்னி மற்றும் பிச்சி.

அமரன்
15-06-2007, 09:31 AM
நிஷியின் கவிதைகளில் ஆழமான வித்தியாசமான சிந்தனை இருக்கும். அதனை அவர் எளிய உவமான உவமேயங்களுடன் திறம்படக்கூறுவார். இங்கேயும் அப்படியே.
மீன் விழியாள் வான் விழியாள் ஆகிவிட்டால் நிஷியின் பார்வை பட்டு..
ம்..ம்.. கொடுத்து வைத்தவள்(ர்)..
என் விழியும் வான் விளியாய் விரிகின்றது நிஷியின் திறன்கண்டு

ஷீ-நிசி
15-06-2007, 09:35 AM
அழகான விமர்சனம். நன்றி அமரன்.

சிவா.ஜி
16-06-2007, 05:01 AM
புருவம் ஒரு நிற கரு வில்லானாலும் அவளுடையது என ஆகும்போது ஏழு வர்ணம் காட்டும் வானவில்லாகிறது.'எந்த தேசம் வறுமையாக' அழகான வரிகள். 'அவள் கண்மூடினால் அமாவாசை' கவிச்சிந்தனை. அருமையான கற்பனை. மனம் நிறைந்த பாராட்டுக்கள் ஷீ.

ஷீ-நிசி
16-06-2007, 05:26 AM
புருவம் ஒரு நிற கரு வில்லானாலும் அவளுடையது என ஆகும்போது ஏழு வர்ணம் காட்டும் வானவில்லாகிறது.'எந்த தேசம் வறுமையாக' அழகான வரிகள். 'அவள் கண்மூடினால் அமாவாசை' கவிச்சிந்தனை. அருமையான கற்பனை. மனம் நிறைந்த பாராட்டுக்கள் ஷீ.

நன்றி சிவா.ஜி. நல்ல ரசனைக்காரர் நீங்கள்!

இளசு
16-06-2007, 06:43 AM
மீன் விழி கேட்டதுண்டு..
வாள் விழி கேட்டதுண்டு..

வான் விழி?
ஷீ - நிசி சொல்லும் கவித்துவ ஆதாரங்களால்
நிலைபெற்ற உவமை ஆகிவிட்டது..

எல்லாமே மெல்லிய செவ்வரி என்பதால்
மரமில்லா கிளையென்றும்
சிவா.ஜி சொன்னதுபோல் ஒரு வண்ணம் ஏழாகியதும்...

கேட்டவுடன் அட ஆமாம் என நம்மை
மயக்கி நம்பவைக்கும் ஷீ -நிசி
திறம்பட வடிக்கும் கவியானதே நமக்கு நல்லது..
(வழக்குரைஞர் ஆகியிருந்தால்????!!!!!)

வாழ்த்துகள் ஷீ!

( அமரன், சிவா.ஜி விமர்சனங்கள் நெஞ்சை கொள்ளை கொள்கின்றன...
பாராட்டுகள்!)

ஷீ-நிசி
16-06-2007, 06:53 AM
வான் விழி?
ஷீ - நிசி சொல்லும் கவித்துவ ஆதாரங்களால்
நிலைபெற்ற உவமை ஆகிவிட்டது..

மிக மிக அருமை இளசு அவர்களே! ! ரசித்தேன் உங்கள் அழகிய விமர்சனத்தை!

ஓவியன்
17-06-2007, 08:58 AM
மீன் விழியாளை வான் விழியாளாக்கிச் சாதித்திருக்கிறது ஷீயின் அற்புத வரிகள், வழமைபோன்ற அழகான எதுகை மோனைப் பிரயோகம் இந்தக் கவியினதும் சிறப்பு!.

அருமை ஷீ!

ஷீ-நிசி
18-06-2007, 03:56 AM
மீன் விழியாளை வான் விழியாளாக்கிச் சாதித்திருக்கிறது ஷீயின் அற்புத வரிகள், வழமைபோன்ற அழகான எதுகை மோனைப் பிரயோகம் இந்தக் கவியினதும் சிறப்பு!.

அருமை ஷீ!

நன்றி ஓவியன்.....

ஆதவா
19-06-2007, 03:25 PM
வான் விழியாள்.. நல்ல கற்பனையான தலைப்பு..

நீல வானில் ஒரு வெண்ணீலா
கருமை நிறக் கண்ணிலா... (இரண்டாவது பத்தி சரியா?)

நல்ல எதுகைகள்..
அதோடு தேசம் வறுமை என்று சிறு வரியே வந்தாலும் ஒருவித சமூகத்தனம் நுழைந்திருப்பதாக உணருகிறேன். ரொம்ப நாட்களாக நானும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.. ஒரே காதல் கவிதையாக் போட்டுத் தாக்குகிறீர்கள்.

விழிப்படலத்தில்,
செந்நிறத்தில் படர்ந்திருக்கும்
மரமில்லாமல் சில கிளைகள்....
மின்னல் கீற்றுகளாய்!


இந்த வரிகள் கற்பனையின் உச்சம்... சில கவிஞர்கள் தான் இந்த மாதிரி கற்பனை செய்கிறார்கள்... (காதல் கவிதைகளில்....)

புருவ வில்களை (ஏற்கனவே நீங்களே எழுதிய ஞாபகம்) அறிமுகப் படுத்துதலும் பக்கா...

மொத்தத்தில் யாரோ ஒருத்தியின் விழியை போட்டு இப்படி வருணித்திருக்கிறீர்கள். (ஒருவேளை பழைய காதலியோ?)

மின்னலாக தோன்றும் வரியமைப்புகள்..
மழை ஊற்றாக நடை
அன்னமாய் கரு.
மதுக் கிண்ணமாய் படிப்பவர்கள் நிலை..
ஒரு விழியை எப்படியெல்லாம் வருணிக்க அதுவும் வான இயற்கையோடு முடியுமோ அந்த அளவுக்கு வருணித்திருக்க ஷீ-நிசியால் மட்டுமே முடியும். அதையும் இதையும் போட்டு எளீமையாக கவிதத எழுதி பேர் வாங்குகிறீர்கள்... நாங்கள் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்....

அட போங்கப்பா.... இவரை பாராட்டி பாராட்டி என்னோட கம்ப்யூட்டரே அழுகுது.

மனோஜ்
19-06-2007, 03:38 PM
சிறப்பு மிக்க கவிதை ஷீ
இயற்கை அவளின் அழகுக்கு இடுகொடுத்தது
ஒவ்வென்றையும் உருவக படுத்தியது அருமை

ஷீ-நிசி
20-06-2007, 05:29 AM
நன்றிப்பா ஆதவா...

இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப்பா ஆக நினைக்காத, எல்லா கவிதைகளுக்கும் விமர்சனம் வேண்டும் ஹி ஹி


நன்றி மனோஜ்.....

gayathri.jagannathan
22-06-2007, 09:54 AM
முதல்ல கைய கொடுங்க ஷீ... கவிதை ரொம்ப ப்ரமாதம்!!!.. அசத்திட்டீங்க...

நீல வானில் உலாவும்...

அவளின்.....

விழிகளின் மேலே
வளைந்திருக்கும்
ஒற்றை நிறத்தில்
வில்களிரண்டு!
அதிசய வானவில்லாய்!


இந்த கற்பனை சூப்பர்... நெஜமாலுமே அது அதிசய வானவில் தான்... ஏன்னாக்கா... வானவில்லில் 7 நிறங்கள்.. இந்த வானவில் ஒற்றை நிறம்.... அதுவும் நாம் என்ன முயன்றாலும் அந்த வானவில்லில் காண முடியாத கருமை நிறம் இந்த வானவில்லில் உள்ளதே!!!.... (உண்மை தானே!!!)

ஷீ-நிசி
22-06-2007, 10:10 AM
நன்றி காயத்ரி!

ஏற்கெனவே ஒரு குட்டி கவிதை எழுதியிருக்கிறேன். அதன் தாக்கமே இந்த வரிகள்.....


வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்!
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லைக் காண்கிறேன்!

அடியே!
உன் புருவங்களைத்தானடி சொல்கிறேன்!

நன்றி காயத்ரி (என்ன, ஆளையேக் காணோம். தொடர்ந்து வாங்க)