PDA

View Full Version : கணக்கு உதைக்குது.



கலைவேந்தன்
14-06-2007, 02:31 PM
கணக்கு உதைக்குது.

எங்க கணக்கு வாத்தியார்
சரியாச் சொல்லிக்கொடுக்கலை...

வட்டம் மாவட்டம்
வரைஞ்சு காட்டலை...

வாக்குச் சதவீதம்
போட்டுக்காட்டலை...

வறுமைக் கோடு
கிழிச்சிக்காட்டலை...

புறம்போக்குப் புள்ளிவிபரம்
புரிய வைக்கலை...

ஸ்விஸ் பேங்கைப் பத்தி
சொல்லவே இல்லை...

எங்க கணக்கு வாத்தியார்
சரியாச் சொல்லிக் கொடுக்கலை...

தாமரை
14-06-2007, 02:39 PM
கணக்கு உதைக்குது.

எங்க கணக்கு வாத்தியார்
சரியாச் சொல்லிக்கொடுக்கலை...

வட்டம் மாவட்டம்
வரைஞ்சு காட்டலை...

வாக்குச் சதவீதம்
போட்டுக்காட்டலை...

வறுமைக் கோடு
கிழிச்சிக்காட்டலை...

புறம்போக்குப் புள்ளிவிபரம்
புரிய வைக்கலை...

ஸ்விஸ் பேங்கைப் பத்தி
சொல்லவே இல்லை...

எங்க கணக்கு வாத்தியார்
சரியாச் சொல்லிக் கொடுக்கலை...

பெட்டி கொடுக்கலை அய்யா நீங்க பெட்டி கொடுக்கலை
வட்டமும் மாவட்டமும் தேவையா என்ன
நமக்குத் தேவையானதை நாமதான் எடுத்துக்கனும்
வாக்குச் சதவீதம் எதுக்கையா
நம்ம (கள்ள) வாக்கு நம்ம கையில இருக்கறப்ப
வறுமைக் கோடு பார்
உன் ப்ரோக்ரஸ் ரிபோர்ட்ல சிவப்பு மையில
பொறம்போக்கு பொறம்போக்குன்னு
ஆயிரம் முறைத் திட்டித் திட்டிச் சொல்லியும்
நீதான் கேட்கலை, நினைச்சும் பார்க்கலே..
ஸ்விஸ் பேங்கு அப்புறமா
முதல்ல உள்ளூர் பேங்கில லோனப் போடுமய்யா...

---- அப்பாவிக் கணக்கு வாத்தியார்.

சுட்டிபையன்
14-06-2007, 02:41 PM
ஹா ஹா ஒரு வாத்தியார் என்னுமொரு வாத்தியார பற்றி இப்படியெல்லம் சொல்லக் கூடாது :D:D:D

அமரன்
14-06-2007, 08:00 PM
மொத்தத்தில அரசியல்கணக்கு சொல்லித்தரவில்லை உங்கள் கணக்கு வாத்தியார்.

விகடன்
14-06-2007, 08:31 PM
ஆரம்பக்கல்வியில்த்தான் ஒரு ஆசிரியரே சகல பாடமும் எடுப்பார். அதையே மனதில் வைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களை எதிர்பார்க்கக்கூடாது.

இளசு
15-06-2007, 12:04 AM
நாட்டு நடப்புக்கு நம் பாடத்திட்ட
ஏட்டுக்கல்வி தயார்ப்படுத்தவில்லை
என்னும் நையாண்டியை கலைவேந்தன்
சுவையாய்ச் சொல்ல ..

அப்பாவி வாத்தியார் சார்பாய்
நம் தாமரை விளைவுக்கவிதை தர..

படித்தேன்.. ரசித்தேன்...

கடைசிநாள் வரை உலகமே பள்ளிக்கூடம்..
கற்றுக்கொடுக்கும் அனைவருமே ஆசிரியர்...

இங்கே கலையும், தாமரையும் நமக்கு ஆசிரியர்களே!!

அக்னி
15-06-2007, 04:11 AM
இங்கே கலையும், தாமரையும் நமக்கு ஆசிரியர்களே!!
ஆமாம் கலைவேந்தனும் தாமரையும் கவர்வது புதிதல்லவே...

பிச்சி
15-06-2007, 05:48 AM
நல்ல சிந்தனை, நீங்க ரொம்ப நல்லா யோசிக்கிறீங்க

lolluvathiyar
15-06-2007, 08:42 AM
எங்க கணக்கு வாத்தியார்
சரியாச் சொல்லிக்கொடுக்கலை...



அத சொல்லி தர தான் நான் இருக்கேன்ல,
நான் பாடம் எடுக்கறேன், என்ன சந்தேகம் கேளுங்க

கலைவேந்தன்
08-04-2012, 03:27 PM
பெட்டி கொடுக்கலை அய்யா நீங்க பெட்டி கொடுக்கலை
வட்டமும் மாவட்டமும் தேவையா என்ன
நமக்குத் தேவையானதை நாமதான் எடுத்துக்கனும்
வாக்குச் சதவீதம் எதுக்கையா
நம்ம (கள்ள) வாக்கு நம்ம கையில இருக்கறப்ப
வறுமைக் கோடு பார்
உன் ப்ரோக்ரஸ் ரிபோர்ட்ல சிவப்பு மையில
பொறம்போக்கு பொறம்போக்குன்னு
ஆயிரம் முறைத் திட்டித் திட்டிச் சொல்லியும்
நீதான் கேட்கலை, நினைச்சும் பார்க்கலே..
ஸ்விஸ் பேங்கு அப்புறமா
முதல்ல உள்ளூர் பேங்கில லோனப் போடுமய்யா...

---- அப்பாவிக் கணக்கு வாத்தியார்.

அழகான கவிதைப்பின்னூட்டத்தில் அசத்தலான பின்னூட்டம் தாமரை அவர்களுடையது. மிக்க நன்றி தாமரை..!:)

கலைவேந்தன்
08-04-2012, 03:29 PM
சுட்டிப்பையன் அமரன் மற்றும் விகடனின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி..!

கலைவேந்தன்
08-04-2012, 03:30 PM
நாட்டு நடப்புக்கு நம் பாடத்திட்ட
ஏட்டுக்கல்வி தயார்ப்படுத்தவில்லை
என்னும் நையாண்டியை கலைவேந்தன்
சுவையாய்ச் சொல்ல ..

அப்பாவி வாத்தியார் சார்பாய்
நம் தாமரை விளைவுக்கவிதை தர..

படித்தேன்.. ரசித்தேன்...

கடைசிநாள் வரை உலகமே பள்ளிக்கூடம்..
கற்றுக்கொடுக்கும் அனைவருமே ஆசிரியர்...

இங்கே கலையும், தாமரையும் நமக்கு ஆசிரியர்களே!!

இளசுவின் இதமான பின்னூட்டம் என்றும் என் மனதை நிறைவிப்பது. மிக்க நன்றி இளசு..

( இன்னுமா உங்களை இளசுன்னு சொல்லிக்கிறீங்க..? என்ன ஒரு 80 வயது ஆகி இருக்காது இந்நேரம்..? :icon_rollout: )

கலைவேந்தன்
08-04-2012, 03:32 PM
அக்னி, பிச்சி,மற்றும் லொள்ளு வாத்தியார் ஆகியோருக்கும் மிக்க நன்றி..!