PDA

View Full Version : மெழுகுவர்த்தி



கேசுவர்
14-06-2007, 02:29 PM
மாட்டிக்கொண்ட இருளில்
மாயாமல்
சுடர்தனை ஏற்றிக்கொண்டு
இருள் போக்க
புறப்பட்ட தமிழனிடம் கற்றுக்கொண்டாயோ !

leomohan
14-06-2007, 02:35 PM
அருமையான குறுங்கவிதை

புற்ப்பட என்று இருக்க வேண்டுமோ.

கேசுவர்
14-06-2007, 02:41 PM
அருமையான குறுங்கவிதை

புற்ப்பட என்று இருக்க வேண்டுமோ.
மிக்க நன்றி மோகன் அண்ணா (அண்ணா என்று கூப்பிடலாமா ?)
"போரிடப் புறப்படுதல்" இதில் வரும் புறப்படுதல் போல புறப்பட்ட என்று இறந்தக்காலத்திலே தொடங்கப்பட்டதாக கருதினேன்,
எதேனும் பிழையுள்ளதா .அண்ணா ?

அமரன்
14-06-2007, 02:45 PM
இருட்டில் ஜொலிப்பதைக் கற்றாயா
இருட்டை விரட்டுவதைக் கற்றாயா
அன்பென்றால் சுடராக இருக்கின்றாய்
வன்பென்றால் தீயாக எழுகிறாய்
உண்மைதான்
தமிழனிடம்தான் கற்றுக்கொண்டாய்.

தாமரை
14-06-2007, 02:47 PM
மாட்டிக்கொண்ட இருளில்
மாயாமல்
சுடர்தனை ஏற்றிக்கொண்டு
இருள் போக்க
புறப்பட்ட தமிழனிடம் கற்றுக்கொண்டாயோ !

நோயால் இறக்கும் மகனின் நெஞ்சைக் கீறி புதைப்பாளாம் தமிழன்னை. இருளில் மடிவதல்ல மெழுகுவர்த்தி.. செத்தாலும் ஒரு சிலருக்காவது ஒலி தருவேன் என்னும் தியாகச் செம்மலது.. என்ன! ஏத்தி விட ஒரு ஆள் வேண்டும்.. அவ்வளவுதான்;) ;) ;)

அமரன்
14-06-2007, 02:52 PM
நோயால் இறக்கும் மகனின் நெஞ்சைக் கீறி புதைப்பாளாம் தமிழன்னை. இருளில் மடிவதல்ல மெழுகுவர்த்தி.. செத்தாலும் ஒரு சிலருக்காவது ஒலி தருவேன் என்னும் தியாகச் செம்மலது.. என்ன! ஏத்தி விட ஒரு ஆள் வேண்டும்.. அவ்வளவுதான்;) ;) ;)
ஆமாங்க வலியைப் பொறுத்துக்கொண்டு ஒளி தருகின்றது.

கேசுவர்
14-06-2007, 03:00 PM
நன்றி தாமரையண்ணா , அமரன் ,
ஆமாம் ,
வலியை நல்வழியாக மாற்றும் பண்பும் இருப்பதில் பெருமிதம் தான்