PDA

View Full Version : நம்பி(க்)கை தந்தாளே

அமரன்
14-06-2007, 07:16 AM
நம்பிக்கை தந்தாளே
ஒரு மங்கை
மனைவி

சிவா.ஜி
14-06-2007, 07:30 AM
நம்பிக்கை தந்தாளே
ஒரு மங்கை
மனைவி

தலைப்பில் சிலேடை அழகு.
நம்பிக்கைதான் இல்லறத்தின் அஸ்திவாரம்
அதன் மேல் அழகான மணமாளிகை அமைந்திட வாழ்த்துக்கள் அமரன்.

அமரன்
14-06-2007, 08:53 AM
தலைப்பில் சிலேடை அழகு.
நம்பிக்கைதான் இல்லறத்தின் அஸ்திவாரம்
அதன் மேல் அழகான மணமாளிகை அமைந்திட வாழ்த்துக்கள் அமரன்.
நம்பிக்கை இல்லாது இல்லறம் அஸ்தியாகிவிடும் என்கின்றீர்களா

சிவா.ஜி
14-06-2007, 08:56 AM
நம்பிக்கை இல்லாது இல்லறம் அஸ்தியாகிவிடும் என்கின்றீர்களா

அதே அதே. எத்தனை குடும்பங்கள் அப்படி ஆகியிருக்கின்றன.

ஓவியன்
14-06-2007, 08:59 AM
நம்பிக்கை தந்தாளே
ஒரு மங்கை
மனைவி

நம்பிக்கை தானே இல்லறத்திற்கே ஆணி வேர்!

வரிகள் நச்! - பாராட்டுக்கள் அமர்!.

அமரன்
14-06-2007, 09:02 AM
நம்பிக்கை தானே இல்லறத்திற்கே ஆணி வேர்!

வரிகள் நச்! - பாராட்டுக்கள் அமர்!.
என்ன செய்வது ஓவியன் உங்களுக்குப் புரிகின்றது. சிலருக்குப் புரிவதில்லையே..நச்சென்று ஆணி அடித்தாற்போல் சொன்னாலும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அச்சாணி என்று.

ஓவியன்
14-06-2007, 09:05 AM
என்ன செய்வது ஓவியன் உங்களுக்குப் புரிகின்றது. சிலருக்குப் புரிவதில்லையே..நச்சென்று ஆணி அடித்தாற்போல் சொன்னாலும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அச்சாணி என்று.

நம்பிக்கைதானே வாழ்க்கை அவர்களுக்கும் விரைவில் புரியுமென்று நம்புங்களேன்.:D

அமரன்
14-06-2007, 09:06 AM
நம்பிக்கைதானே வாழ்க்கை அவர்களுக்கும் விரைவில் புரியுமென்று நம்புங்களேன்.:D
அதுதானே இரண்டு கைகள் சேர்ந்தால்தானே ஓசை. நம்புகின்றேன்.

ஷீ-நிசி
14-06-2007, 09:37 AM
நம்பிக்கை தந்தாளே
ஒரு மங்கை
மனைவி

நம்பிக்கை இல்லாது இல்லறம் அஸ்தியாகிவிடும் என்கின்றீர்களா

என்ன செய்வது ஓவியன் உங்களுக்குப் புரிகின்றது. சிலருக்குப் புரிவதில்லையே..நச்சென்று ஆணி அடித்தாற்போல் சொன்னாலும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அச்சாணி என்று.

என்ன அமர், எது பேசினாலும் சிலேடையில்தான் பேசுவேன் என்று முடிவெடுத்துவிட்டீர்களா....
;)
அருமை! அருமை!

ஆதவா
14-06-2007, 09:53 AM
நம்பி கை தந்தவளை கைதேர்ந்தவளாக்கினோமா?
நம்பிக்கை தந்தவளை நல்லவளாய் நினைத்திருக்கிறோமா?

மனைவி என்பவள்
சிலர் விரும்பாமல் கை கொடுப்பார்கள்
சிலர் நம்பி கொடுக்க தயங்குவார்கள்.

ஆனால் எப்படி இருந்தாலும் அதை நம்பாமல் இருப்பது ஆண்களே
எல்லா ஆண்களையும் குறிப்பிட முடியாது. ஆனால் பெரும்பாலும் ஆண்கள்தான் காரணம் என்று சொல்லமுடியும்.

சிலேடைகளில் கவி படைக்கும் அமரனுக்கு வாழ்த்துக்கள்
மேன்மேலும் அதிக படைக்க வாழ்த்துக்கள்.

மனோஜ்
14-06-2007, 10:01 AM
நம்பிக்கையே வாழ்க்கை
அருமை அமரன்

அமரன்
14-06-2007, 10:04 AM
நம்பிக்கையே வாழ்க்கை
அருமை அமரன்

நம்பிக்கையே வாழ்க்கை. அருமை அமரன் என்கின்றீர்களா
நம்பிக்கையே வாழ்க்கை அருமை அமரன் என்கின்றீர்களா.

அமரன்
14-06-2007, 04:04 PM
நம்பி கை தந்தவளை கைதேர்ந்தவளாக்கினோமா?
நம்பிக்கை தந்தவளை நல்லவளாய் நினைத்திருக்கிறோமா?

நம்பித் தந்த வளை
நல்லவளாய் நினைக்கின்றோமே.
கைமாறிவிட்டாளே

ஆதவா
14-06-2007, 04:06 PM
நம்பித் தந்த வளை
நல்லவளாய் நினைக்கின்றோமே.
கைமாறிவிட்டாளே

நம்பி தந்த வளை
நல்ல வளையாக இருப்பின்
ஏன் வளைகிறாள்?

அமரன்
14-06-2007, 04:13 PM
நம்பி தந்த வளை
நல்ல வளையாக இருப்பின்
ஏன் வளைகிறாள்?
வளையில் வளை
கையிலிருப்பதற்கு
வலை(ளை) வீசுகின்றாள்

அமரன்
14-06-2007, 07:45 PM
என்ன அமர், எது பேசினாலும் சிலேடையில்தான் பேசுவேன் என்று முடிவெடுத்துவிட்டீர்களா....
;)
அருமை! அருமை!
நன்றிங்க. சிலேடை சில் ஓடைமாதிரி இருக்கா

தாமரை
15-06-2007, 04:00 AM
நம்பிக்கை தந்தாளே
ஒரு மங்கை
மனைவி

இதயம் தந்தது
நம்பியா நம்பாமலா?
-------------------------------
காலையில் நான் காட்டிய
அருந்ததி நட்சத்திரத்தைப்
பார்த்தேன் என்றாள்

மாலையில்
நிமிர்ந்து பார்க்காமலேயே
பிடித்திருக்கு என்றாள்

நம்பிக்கையை வியந்தேன்...

தொட்டுக் கூட பார்க்காமல்
கூட்டு அருமையென்றேன்
சாம்பார் ருசியென்றேன்
பிசைய ஆரம்பித்த போதே

வாயில் வைத்த பின்
வாழ்க்கை விளங்கியது

அமரன்
15-06-2007, 07:44 AM
தொட்டுக் கூட பார்க்காமல்
கூட்டு அருமையென்றேன்
சாம்பார் ருசியென்றேன்
பிசைய ஆரம்பித்த போதே

வாயில் வைத்த பின்
வாழ்க்கை விளங்கியது
விழித்திரையில் விழுவது
தலைகீழ் விம்பமடா
கண்களை நம்பாதே
கண்மணியையும் நம்பாதே
உயிரும் சொன்னது
தமிழும் சொன்னது
உறைக்கவில்லையே உனக்கு
நம்பிக்கை வத்தது யார்குற்றம்
நம்பி கை வைத்தது உன்குற்றம்

அக்னி
15-06-2007, 08:15 AM
அவ(ள்)நம்பிக்கை தந்தாள்...
புரியாததால்,
நம்பிக் கை வைத்தேன்...
விழித்திரையில்
விம்பம் தலைகீழானாலும்,
விழித்திருக்கையில்
தலைகீழாகவில்லையே...
இது
என் குற்றமா?

அமரன்
15-06-2007, 08:22 AM
அவ(ள்)நம்பிக்கை தந்தாள்...
புரியாததால்,
நம்பிக் கை வைத்தேன்...
விழித்திரையில்
விம்பம் தலைகீழானாலும்,
விழித்திருக்கையில்
தலைகீழாகவில்லையே...
இது
என் குற்றமா?
நம்பிக்கை வைக்காதே
விழித்திரையில்
மூளைக்கும் வேலை கொடு
துருப்பிடிக்காதிருப்பதிற்கு
மூளை மட்டுமல்ல
வாழ்க்கையும்