PDA

View Full Version : கரையுமா ? கரையாதா ?



namsec
13-06-2007, 02:22 PM
ஆய்வுக்கூடத்தில் கூடியிருந்தார்கள் மாணவர்கள். ஆசிரியர் அமிலம் ஒன்றைப் ப்ற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அமிலம் இருந்த ஒரு குடுவையில் தமது ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றைப்போட்டார் ஆசிரியர். ஒரு மாணவனை அழைத்து, " இந்த நாணயம் கரையுமா? கரையாதா? " என்றார்.

அந்த மாணவன், "நாணயம் கரையாது" என்று கூறிவிட்டான். அவனிடம் காரணம் கேட்டார் ஆசிரியர்.

"அந்த ரூபாய் நாணயம் கரயும்னு தெரிந்தா அமிலத்துக்குள் போட்டிருக்க மாட்டீர்கள் சார்" என்றான்.

அனைவரும் சிரித்துவிட்டனர்.

அறிஞர்
13-06-2007, 02:32 PM
"அந்த ரூபாய் நாணயம் கரயும்னு தெரிந்தா அமிலத்துக்குள் போட்டிருக்க மாட்டீர்கள் சார்" என்றான்.

அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஹிஹி.. கஞ்ச வாத்தியாரை பற்றி மாணவன் நன்கு அறிந்துவைத்துள்ளான்.

சுட்டிபையன்
13-06-2007, 02:39 PM
ஹீ ஹீ!

அமரன்
13-06-2007, 02:56 PM
நாணயமும் கரையவில்லை
மணவனின் நா நயமும் குறையவில்லை.
அழகான சுவை. நன்றி சித்தர்.

namsec
13-06-2007, 02:58 PM
நாணயமும் கரையவில்லை
மணவனின் நா நயமும் குறையவில்லை.
அழகான சுவை. நன்றி சித்தர்.

அருமையான பின்னூட்டம் இட்டுள்ளீர் நன்றி வணக்கம்

lolluvathiyar
13-06-2007, 03:27 PM
ஹிஹி.. கஞ்ச வாத்தியாரை பற்றி மாணவன் நன்கு அறிந்துவைத்துள்ளான்.

பாத்தீங்களா சந்தடி சாக்குல என்னை இழுக்கராரு,
ஆனாலும் நான் கஞ்சன் அல்ல என்று நிருபிக்க அதே நானயத்தை நாம்செக்கு 1 இபணமா தரேன்

கேசுவர்
13-06-2007, 03:31 PM
வாத்தியாரே அது ....ஐந்து ரூபாய் நாணயம், ஒரு ருபாய் அல்ல.
ஐந்துக்கு ஒன்றா ?

namsec
13-06-2007, 03:32 PM
பாத்தீங்களா சந்தடி சாக்குல என்னை இழுக்கராரு,
ஆனாலும் நான் கஞ்சன் அல்ல என்று நிருபிக்க அதே நானயத்தை நாம்செக்கு 1 இபணமா தரேன்

வாத்தியார் நீர் கஞ்சம் என்பதை நிருபித்துவிட்டீர். பின்ன என்னவாம் 3394 ரூபாய் 97 காசு வைத்துகொண்டு 1 ரூபாய் கொடுத்தால் என்ன சொல்லுவது

மனோஜ்
13-06-2007, 03:35 PM
:4_1_8: :grin: :medium-smiley-002: :medium-smiley-115:

அக்னி
13-06-2007, 03:40 PM
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு...
:icon_36: :icon_36: :medium-smiley-002: :medium-smiley-002: :icon_36: :icon_36:

lolluvathiyar
13-06-2007, 03:42 PM
வாத்தியாரே அது ....ஐந்து ரூபாய் நாணயம், ஒரு ருபாய் அல்ல.
ஐந்துக்கு ஒன்றா ?

ஓ மன்னிக்கனும், இப்பவே நாம்செக் க்கு 5 இபணம் கொடுத்துவிடுகிறேன்.
என்ன 4 கொடுத்தா போதும்னு சொல்லரீங்களா, தவறுக்கு பனிஸ்மெண்டா 1 எக்ஸ்ட்ரா

தவறை சுட்டி காட்டிய் உங்களுக்கும் 2 இபணம் தருகிறேன்

namsec
13-06-2007, 03:45 PM
ஓ மன்னிக்கனும், இப்பவே நாம்செக் க்கு 5 இபணம் கொடுத்துவிடுகிறேன்.
என்ன 4 கொடுத்தா போதும்னு சொல்லரீங்களா, தவறுக்கு பனிஸ்மெண்டா 1 எக்ஸ்ட்ரா

தவறை சுட்டி காட்டிய் உங்களுக்கும் 2 இபணம் தருகிறேன்

வள்ளல் பெருந்தகையே நன்றி

விகடன்
31-07-2007, 05:46 AM
பாவம் வாத்தியார். குறைந்தது 5 நாட்களுக்கு நித்திரையே வந்திருக்காது