Log in

View Full Version : 'உன் தேவை என் தேவையைவிட முக்கியமானது'



namsec
13-06-2007, 01:33 PM
ஒரு முக்கியமான போரில் சிட்னி கலந்து கொண்டு போரிட்டார். வீரர்கள் பலரும் குண்டடிபட்டு இறந்தனர். சிட்னியும் பலத்த அடிப்பட்டதால் இறக்கும் நிலையில் இருந்தார்.

அப்போது அவருக்கு மிகவும் தாகமெடுத்தது. 'தண்ணீர் தண்ணீர்' என்று தீனமான குரலில் வேண்டினார். ஒருவர் அவசரமாக நீர் கொண்டு வந்தார்.

அதை வாங்கிக் குடிக்கப் போகும்போது, அருகில் ம்ற்றொரு வீரன் தீனக்குரலில் நீர் வேண்டியது சிட்னிக்குக் கேட்டது.

உடனே சிட்னி சிறிதும் தயக்கமின்றி அவரிடம், 'Thy need is greater than mine' - 'உன் தேவை என் தேவையைவிட முக்கியமானது' என்று கூறி நீரை அவருக்கு வழங்கினார்.

குடித்தவர் உயிர் பெற்றார்; கொடுத்தவர் அமரரானார்.

உயிர்போகும் நேரத்திலும் ஓர் உயிரைக் காத்தகாரியம் செய்ததற்கு சிட்னியிடம் இருந்த அன்புதான் காரணமானது. அதுவரை சாதாரணப் புகழில் இருந்து வந்த சிட்னி இதன் பின் நிலைத்த புகழ் பெற்றார். அரசு சிட்னிக்கு 'சர்' பட்டம் வழங்கி கெளரவித்தது.

ஆகவே நண்பா, நீ பறக்க உனக்கு விரிந்த சிறகுகள் என்ற தலைமைப் பண்புகளும், திடமான கால்கள் என்ற அறிவுக்கூர்மையும், கவனமான கண்கள் என்ற அன்பும் இருக்கட்டும். இனி உனக்கு

ஒவ்வொரு வாய்ப்பு வரும்போதும்;

ஒவ்வொரு கடமை அழைக்கும்போதும்;

ஒவ்வொரு மனிதரை நீ காணும்போதும்;
ஒவ்வொரு பிரச்னையைச் சந்திக்கும்போதும் உன் முன்னே குறைத்துவிடு,
விரித்துக் கொள்,
மூடிவிடு
என்ற மூன்று நிலைகளும் தெரியட்டும்.

ஆனால் அடுத்த கணமே உன் மனம் விரியட்டும். அந்த மனனிலையே உன்னை வாழ்னாள் முழுவதும் சாதிக்கக்கூடியவனாக, வாழ்க்கையை உண்மையில் வாழ்பவனாக மாற்றிவிடும்.

னன்றி : ரமகிருஸ்ண விஜயம்.

rajaji
06-07-2007, 02:01 AM
நல்ல கருத்துக்கள் நண்பரே, மீளப் பதிந்தமைக்கு நன்றி.

அமரன்
06-07-2007, 08:07 AM
நல்ல கதை சித்தரே. நன்றி பகிர்ந்துகொன்டமைக்கு. ஆனாலும் தனக்குப்பின் தானம் என்கின்றார்களே. அது இங்கு பொருந்தவிலையே

பென்ஸ்
06-07-2007, 09:24 AM
நல்ல பயனுள்ள சம்பவம்...

தன் அன்றாட தேவைகளையே பூர்த்தி செய்ய தினம் தினம் நாம் போடும் வேடம்...
நம்மை காப்பாற்றி கொள்ள நாம் செய்யும் சுய நல செயல்கள்...
இவற்றிக்கு இது நல்ல சூடு..


தொடர்ந்து கொடுங்கல் நண்பரே....

namsec
06-07-2007, 12:38 PM
நல்ல கதை சித்தரே. நன்றி பகிர்ந்துகொன்டமைக்கு. ஆனாலும் தனக்குப்பின் தானம் என்கின்றார்களே. அது இங்கு பொருந்தவிலையே

தனக்கு மிஞ்சி தானம் இது பழமொழி ஆனால் தான் தண்ணீரை குடித்தாலும் உயிர் பெரப்போவது இல்லை அடுத்தவனுக்கு அது பயன்படும் எனில் அவனுக்குத்தான் முதலில் கொடுக்க வேண்டும் இதுவே அவர் செய்துள்ளார்

maxman
06-07-2007, 02:43 PM
நல்ல கருத்துக்கள், நன்றி கதை சித்தரே :)

விகடன்
29-07-2007, 05:01 AM
அற்புதமான அறிவுரை.
நன்றி

ஓவியா
09-08-2007, 12:50 AM
நல்ல பதிப்பு.

நன்றி : ராமகிருஷ்ண விஜயம்
நன்றி: நம்செக் அண்ணா.

ஓவியன்
09-08-2007, 01:58 AM
சாகும் நிலையிலும் மற்றவர்களுக்குத் தானம் செய்ய சாதாரணமானவர்களுக்கு முடிவதில்லை...............

அப்படிப்பட்ட ஒரு பெரியவர் அந்த சிடி!.

தகவலைப் பரிமாறியமைக்கு நன்றிகள் சித்தரே!.